அத்தியாயம் 30
"கல்பனா! அகி எங்க மா?" மகேஸ்வரி கேட்க,
"குளிச்சுட்டு வர்றேன்னு மேல போனாங்க இன்னும் காணும் நான் போய் பாக்குறேன் த்த!" என்ற கல்பனாவிடம்,
"தர்ஷி வீட்டு ஆளுங்க எல்லாம் வந்தாச்சு.. என்ன பண்ணுறான்?" என்று கேட்க,
"கையோட கூட்டிட்டு வந்துடறேன் த்த.. ரெண்டே நிமிஷம்.. நீங்க இந்த பாயசத்தை மட்டும் கிளறி விட்டு ஆஃப் பண்ணிடுங்க.." என்று கூறிவிட்டு, தன்னறைக்கு சென்றாள்.
வீடேங்கும் தோரணம் கட்டியிருக்க, வீட்டின் நடுவே மலர் மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த அழகிய தேக்குமர தொட்டில் தயாராய் இருந்தது. அதுவும் ரகு தேர்வு செய்து வாங்கி வைத்திருந்தது.
"இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க? தர்ஷி கூட கிளம்பி இருப்பா?" என்று அறைக்குள் வரவும் கணவனைப் பார்க்க, அகிலன் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி தான் அமர்ந்திருந்தான்.
"ப்பா! மாப்பிள்ளை ரெடியா தான் இருக்கீங்க போலயே! கீழ வர்றதுக்கு என்னவாம்? நிஜமா மாப்பிள்ளைனு நினைப்பா? பொண்ணு வேணா பார்த்திடலாமா?" என்று கூறி கணவன் சிகையை கலைத்துவிட்டு கேட்க, அவள் கைகளைப் பற்றி திருப்பியவன் மார்போடு அவள் தலையை லேசாய் வளைத்து சாய்க்க,
"அடடா! இந்த பொண்ணே போதுமோ?" என்று கூறி, மேல்நோக்கி பார்த்து சிரித்தவள்,
"ஆத்தி! அத்தை திட்ட போறாங்க.. எல்லாரும் வந்தாச்சு.. வாங்க போகலாம்!" என அவனில் இருந்து பிரிய, அவன் கைகள் இறுக்கமாய் பிணைந்திருந்தது அவள் இடையினில்.
"என்னாச்சு உங்களுக்கு?" இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே! என்று நொடியில் கண்டு கொண்டவள் அவன்புறம் திரும்ப முயல, அதுவும் முடியவில்லை.
"அகி! உங்களை தான்! கையை எடுங்க!" என்று அவளும் முயல, இன்னும் அவள் கழுத்தினில் புதைந்தான்.
"அகி!" என்று மீண்டும் அழுத்தி அழைக்க,
"உனக்கு கஷ்டமா இருக்கா கல்பனா?" என்றவன் கேள்வியில்,
"என்னை பாருங்க முதல்ல!" என்றாள் கைகளை இழுத்து. அதில் முன்வந்து அவன் நிற்க,
"என்ன நீங்க? என்னவோ மாதிரி இருக்கீங்க?" கேட்டவளுக்கும் விடை கிடைத்திட,
"என்ன பேசுறீங்க நீங்க?" என்றாள்.
"எனக்கு கஷ்டமா இருக்கு டி..!" என்றான் அவளை அணைத்துக் கொண்டு.
"அகி!" என்றவளுக்கும் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.
"எனக்கு தெரியும் கல்பனா.. நீ எதையும் காமிச்சுக்க மாட்ட.. உனக்குள்ளயே வச்சுக்குறது தான் எனக்கு தண்டனையா இருக்கு!" என்றவன் கலங்கிய குரலில் சுதாரித்துக் கொண்டாள்.
"அய்யோ விடுங்க! என்ன பேச்சு இது? தர்ஷிக்கு தெரிஞ்சா பீல் பண்ண போறா.. குழந்தை எல்லாம் கடவுள் கொடுக்குறது.. இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கனு உங்களையும் என்னையும் விட்டு வச்சிருக்கார்.. அப்புறம் பாருங்க.. என்கிட்ட கதை சொல்லிட்டு பேங்க்கு ஓடுற மாதிரி எல்லாம் ஓடிட முடியாது.. பாப்பாக்கு நீங்க டைம் குடுத்து தான் ஆகணும்!" என சமாதானத்தை மிரட்டல் போல கூற, பட்டுப்புடவையில் கலங்கிய கண்களை சமாளித்து தன்னை அதட்டும் மனைவியை நினைத்து மனமெல்லாம் வலித்தது.
கல்பனா போகாத கோவிலும் இல்லை இருவரும் ஏற்காத மருத்துவமும் இல்லை.
"இங்க பாரு கல்பனா! அங்க யாரும் உன்னை எதுவும் பேச மாட்டாங்க.. நந்தா மாமா அப்படி விட மாட்டாங்க தான்.. ஆனா எந்த காரணத்துக்கும் நீ ஒதுங்கிட கூடாது ம்ம்ம்?" என்று அகிலன் பேசயில், கல்பனா கணவனை அணைத்துக் கொண்டாள் இறுக்கமாய்.
இருவருக்குமே சிறிது நேரம் தேவைப்பட்டது தங்களை நிதானித்துக் கொள்ள.
"தர்ஷினியே என்னை அப்படி எல்லாம் ஒதுங்கி போக விட மாட்டா.." என்று பேசி கல்பனா கண்களை துடைக்க,
"டேய் அகி!" என்று கதவைத் தட்டினார் மகேஸ்வரி வந்து.
"நீ போ!" என்றவன் பாத்ரூம் உள்ளே செல்ல,
"ப்ச்! நீங்க வேற.. சும்மா போன என்னை கூப்பிட்டு.. இப்ப பாருங்க அத்தை கண்டுபிடுச்சுடுவாங்க!" என்றவள் கண்களை நன்கு துடைத்துக் கொண்டு,
"அவங்க இப்ப தான் குளிச்சு முடிச்சிருக்காங்க த்த! ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. அவங்க வரட்டும்.. நீங்க வாங்க!" என்றவள் அவரின் முகம் பார்க்காமல் பேசியபடி சென்று படிகளில் இறங்க, வயதான ஒரு தாய்க்கு புரியாதா என்ன!.
"தர்ஷி! ரகு இன்னும் வரலை.. ஒரு போன் பண்ணு!" என்ற நந்தா குழந்தையை தன் கைகளில் வைத்திருக்க, தயாரான தர்ஷினியும் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர, நந்தாவும் உடன் வந்தான்.
"ரிங் ஆகுது பிக் பண்ணல.. வந்துட்டு இருப்பான்.." என்றாள் தர்ஷினி.
"பிக்கப் பண்ண வர்றேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்லிட்டான்!" என்ற நந்தா குழந்தை பிறந்த அன்று வந்தது.
இன்று நாற்பது நாட்கள் ஆகி இருக்க, இன்று குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா. வெளிநாடு சென்ற ரகுவும் இன்று தான் வரவிருக்கிறான்.
நந்தா தன் தாயிடம் குழந்தையை தந்துவிட்டு மனைவி அருகே வந்து நின்று மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, அகிலனும் வந்துவிட்டான்.
"மாமா! நில்லுங்க.. நான் எடுக்குறேன்.." என்றவன் கேமராவை எடுத்துக் கொண்டு அவர்கள் அருகில் வர,
"சும்மா தான் மச்சான்.. இப்ப வேண்டாம் ஃபன்க்ஷன் ஸ்டார்ட் பண்ணிட்டு எல்லாருமே எடுத்துக்கலாம்" என்று சொல்ல, ரகுவும் வந்து இறங்கினான் கேட் அருகே.
பக்கத்து வீட்டிற்கு சென்ற பார்வையை திருப்பியது தன் வீட்டில் இருந்த கூட்டம். ஒரு நொடி அதில் கண்களை விரித்தவன் பின் சிரித்தபடி உள்ளே நுழைந்துவிட்டான்.
உள்ளே நடந்து வரும் பொழுதே அத்தனை உற்சாகம்.. விழாவிற்கு என வந்தவர்கள் அங்கேயும் இங்கேயுமாய் நிற்க, வரும் வழி எங்கும் வந்தவர்களிடம் பேசியபடி உள்ளே வந்தான்.
வீட்டினரிடமும் சொல்லிக் கொண்டு தன் அறைக்கு சென்றவன் முதல் வேலையாய் பால்கனி கதவினை திறக்காமலே கண்ணாடிக் கதவின் வழி எதிர் வீட்டினை பார்க்க, அது அவளில்லாமல் இருக்கவும் வெளியே பார்க்க, அவள் வண்டியையும் காணவில்லை.
'ஆபீஸ் போயிருக்க மாட்டாளே! இங்க ஃபன்க்ஷன்னு தெரியும் தான?' என நினைத்துக் கொண்டிருக்க,
"எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என்று வந்தான் நந்தா.
"வாங்க மாமா!" என்றவன் குளிக்க தயாராக,
"மேல வந்து இவ்வளவு நேரமா அங்க தான் நின்னுட்டு இருந்தியா?" கிண்டலாய் நந்தா கேட்க,
"என் நிலைமை! அங்க தான் ஒன்னும் காணுமே!" என்றவன் அடுத்து ரகு பேசும் முன்,
"டூ மினிட்ஸ் மாமா!" என்று குளிக்க சென்றுவிட,
"ஸ்மார்ட் எஸ்கேப் டா மாப்பிள்ள!" என்று சிரித்த நந்தாவும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அவன் வரும்வரை.
"டைம் ஆயிடுச்சா!" என்று வந்து கிளம்பி தயாராக, "நல்ல நேரத்துக்கு இன்னும் ஹால்ஃப் அன் ஹவர் இருக்கு.. பொறுமையா கிளம்பு!" என்ற நந்தா,
"போன வேலை எல்லாம் சக்ஸஸா?" என நந்தா கேட்க,
"அல்மோஸ்ட் மாமா.. இனி அவங்க ஒர்க் தான்.. பாக்கலாம்.. இருபது நாள்ல கிளம்பிடலாம்னு தான் நினச்சேன்.. பட் ஒர்க் கம்ப்ளீட் ஆக எக்ஸ்ட்ரா டென் டேஸ் ஓடிடுச்சு.. அப்புறம் அவங்களையும் பார்க்கணுமே! அதான்.. ஏஞ்சலை சரியா பார்க்கவே இல்ல.. இங்க எல்லாம் ஓகே தான மாமா? அகி பார்த்துகிட்டான் இல்ல?" என்று ரகு.
"ம்ம்ம் இங்கேயும் எல்லாம் ஓகே தான்.. என்ன நைட்டெல்லாம் உன் ஏஞ்சல் நைட் ஷிப்ட் பார்க்க விட்டு பகல் எல்லாம் தூங்க விட்டுட்டா.. எனக்கு டில்லி போய் ஒர்க் பண்ண ஈசியா இருக்கும்!" என்று சொல்லி சிரிக்க,
"எனக்கு தான் நீங்க இங்க இருக்கும் போது கூட இருக்க முடியல..!" என்றான் நிஜமாய் வருந்தி.
"நான் வேணா கூட ஒரு மாசம் லீவ் எஸ்ட்டென் பண்ணவா என் மாப்பிள்ள பீல் பன்றான் மாமியார் வீட்டுல இருக்குறேன்னு?" என அதற்கும் நந்தா கேலி பேச,
"மாமா!" என்று முறைத்தவன் கிளம்பி இருக்க,
"வாங்க போகலாம்!" என்றான் சிரித்தபடி.
"அண்ணனும் தம்பியும் எப்ப டா பிளான் பண்ணீங்க? சேம் ஷர்ட் சேம் வேஷ்டி.. ம்ம்ம் கலக்குறீங்க போங்க!" என்று இறங்கி வர, மகேஸ்வரி, கல்பனா, தர்ஷினி மூவரையும் ஒன்றாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான் அகிலன்.
விழா இனிதாய் ஆரம்பம் ஆக பெரியவர்கள் முறைப்படி ஆரம்பித்து வைக்க, குழந்தை அகிலனின் கைக்கு கொண்டு வந்து கொடுத்தாள் தர்ஷினி.
"தாய்மாமா தான் பேரை முதல்ல குழந்தை காதுல சொல்லணும்.. கல்பனா நீயும் சேர்ந்து நில்லு!" என்றது நந்தாவின் அன்னை.
கல்பனாவும் புன்னகையுடன் சேர்ந்து கொள்ள, "ண்ணா டேய்! இங்க பாரு!" என்று கூறி அவர்களை அப்படியே புகைப்படம் எடுத்தது ரகுராம்.
"சொல்லுங்க!" கல்பனா கூற, தர்ஷினி சொல்லியிருந்த படிக்கு பெயரை கூறினான் அகிலன்.
"சிவ நந்தினி!" என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் அகிலன் கூற, அடுத்து கல்பனா கூறி சக்கரை நீரை துளியாய் மட்டும் கொடுத்தாள். அதன்பின் ரகுவை அழைத்தான் நந்தா.
ரகுவும் குழந்தையை வாங்கி கையில் கிள்ளி முத்தமிட்டவன் மூன்று முறை அதன் காதில் கூறிட, அடுத்து தர்ஷினி கைகளில் வந்தது குழந்தை.
ஒவ்வொருவரும் வந்து பெயரை சொல்லி ஆசிர்வாதம் செய்து செல்ல, ரகுவின் பார்வை முழுதும் வாசலில் தான்.
ஒரு மணிக்கெல்லாம் வந்த கூட்டம் கலைந்து கொண்டிருக்க, ரகு விஷாலுக்கு அழைத்தான்.
"விஷால்! இன்னைக்கு ஆபீஸ்ல எத்தனை பேர் லீவ்?" என கேட்க,
எதற்கு என புரியாவிட்டாலும், "டூ மினிட்ஸ் சார்!" என்று கூறி உடனே செக் செய்து "ரெண்டு பேர் சார்" என்றான்.
"ஓஹ்!" என்றவன் சிறிது இடைவெளி விட்டு,
"யாரெல்லாம்?" என்று கேட்க,
"சார் எனி ப்ரோப்லேம்?"
"நோ நோ! நத்திங்.. தெரிஞ்சுக்க தான்!" என்றதில் இருவர் பெயரையும் விஷால் கூற, அதில் ஆராத்யா இல்லை.
"ஓகே!" என்றவன், முறைத்தபடி நிற்க, நந்தா அழைத்தான் குடும்பப் புகைப்படம் எடுக்க,
நந்தா அவன் தாய்,தந்தை, தர்ஷினி, குழந்தை என அவர்கள் முதலில் எடுக்கவும், அடுத்து மகேஸ்வரியோடு குடும்பமாய் இவர்கள் தங்கள் நியாபகங்களை சேர்த்து புன்னகைத்து சேமித்துக் கொண்டனர் புகைப்படத்தை.
"க்கா! ஆரா வர்ல?" என்று தனியாய் தர்ஷினியிடம் ரகு கேட்க,
"ம்ம் எவ்வளவோ சொல்லிட்டேன் டா.. ஃபன்க்ஷன் சொந்தம் எல்லாம் வருவாங்க.. நான் ஈவ்னிங் வர்றேன்னு சொல்லிட்டா.." என்றதும்,
"நீயும் சரினு சொல்லிட்டியா?" என்றான் அக்காவிடம் முறைத்து.
"ஓஹ்! வர போற வைஃப்காக என்னையே கோச்சுக்குறியா?" என்று தர்ஷினி சத்தமிட,
"ஷ்ஷ்!" என்றவன்,
"போ! தெரியாம கேட்டுட்டேன்!" என்றவன் சொல்லிய பாவனையில்,
"எப்படி டா நாப்பது நாள் அங்க தாக்கு பிடிச்ச?" என்று சிரித்தபடி சென்றாள் தர்ஷினி.
மாலை நான்கு மணிக்கு அலுவலக பெர்மிஸ்ஸனோடு ஆராத்யா வந்து சேரும் வரை ரகு தன் உடையை மாற்றிக் கொள்ளாமல் இருக்க, அவள் வரும் நேரம் குடும்பமாய் அமர்ந்திருந்தனர் ரகுவை தவிர்த்து.