• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 33

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 33

கார் வரும் சத்தம் கேட்டு வேகமாய் கல்பனா வெளியே வர, "ஆரா! நான் பண்ணினது தப்புன்னா என்னை மன்னிச்சு பெரிய மனசு பண்ணி விட்டுடு.. அதுக்காக எல்லாம் என்கிட்ட பேசாம இருக்க கூடாது பார்த்துக்கோ!" என்று தர்ஷினி கறாராய் சொல்ல எதுவும் பேசாமல் ஆராத்யா இறங்கி செல்ல, ரகுவுக்கும் பாவமாய் இருந்தது தன்னவளின் நிலை.

தர்ஷினி குழந்தையோடு இறங்க, கூடவே ரகுவும் கல்பனாவை முறைத்துக் கொண்டு இறங்க, கண்களால் நாத்தனாரிடம் கபடி ஆடினாள் கல்பனா.

"பரவால்ல கேளுங்க அண்ணி! ஆரா வந்தாளா? பிளான் என்னாச்சு? இதை கேட்க தான வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? " என்று நேராய் கல்பனாவிடம் வந்து கேட்க, திருட்டு விழி விழித்தாள் கல்பனா.

கோபமாய் அவன் முதலில் உள்ளே செல்ல, "என்ன நடந்துச்சு தர்ஷி?" என்று மெதுவாய் தர்ஷினியிடம் கேட்டபடி உள்ளே வந்தாள் கல்பனா.

"ஹாஸ்பிடல்ல கூட்டமா ரகு? ஏன் இவ்வளவு நேரம்? பாப்பா அழுதாளா?" என்று மகேஸ்வரியும் வந்து குழந்தையை தொட்டுப் பார்க்க,

"ம்மா! நான் போய் பாப்பாவை தூங்க வைக்குறேன்.. லைட்டா ஏங்கிட்டே இருக்கா!" என்று தர்ஷினி கிளம்பப் பார்க்க,

"ம்மா! பாப்பாவை வாங்கிட்டு போய் தூங்க வைங்க.. மாமா அக்காகிட்ட கொஞ்சம் பேச சொன்னாங்க.. நான் பேசிட்டு வர்றேன்.. க்கா வா நீ!" என்றவன் கல்பனாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.

"ஏன் தர்ஷி கோவமா போறான்? அங்க சண்டை எதுவும் போட்டீங்களா?" என்று மகேஸ்வரி அப்பாவியாய் கேட்க,

"உனக்கு சின்ன மருமகளை கொண்டு வர ட்ரை பண்ணேன்.. அது கொஞ்சம் ரூட் மாறி போச்சு போல.." என்று முழுதாய் சொல்லாமல் குழந்தையை கொடுத்துவிட்டு கல்பனா கையை தர்ஷினி பிடிக்க,

"இந்தா தர்ஷி! நம்ம பழக்க வழக்கம் எல்லாம் ப்ளனோட முடிஞ்சது.. இந்த எக்ஸ்ட்ரா கிளாஸ்க்கு எல்லாம் என்னை கூப்பிடாத.. என் புருஷனுக்கு நான் ஒரே பொண்டாட்டி.. என்னை விட்ரு!" என்று தப்பிக்கப் பார்த்த கல்பனாவை இழுத்து செல்ல,

"என்னவோ பண்ணி இருக்குங்க.. எல்லாமே விளையாட்டா போச்சு.. இவன் திட்டினா மட்டும் ரெண்டும் திருந்தவா போகுது.." என்று தனக்குள் புலம்பிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே சென்றார் மகேஸ்வரி.

"ரகு! நீ திட்றதுக்கு முன்னாடி நாங்க சொல்றதை கேளு.. ஆராக்கு உன்னை புடிச்சிருக்கு டா.. நந்து பாப்பாக்கு பெயர் வைக்குற ஃபன்க்ஷன் அப்ப ரொம்ப பேசிட்டா.. அப்பவும் முதல்ல அவ என்ன சொன்னா தெரியுமா? அவளுக்கு உன்னை புடிக்குமாம் ஆனா வேண்டாமாம்.. அவ தாய் மாமன் என்னவோ சொன்னான்னு அதே மாதிரி தான் எல்லாரும் பேசுவாங்கன்றா.. உன்கிட்ட சொன்னா நீ கோபப்படுவ இல்ல கஷ்டப்படுவன்னு தான் சொல்லாம நானும் அண்ணியும் உன் மாமாவை சம்மதிக்க வச்சு இந்த மாதிரி ஒன்னு பிளான் பண்ணினோம்.." என்று தர்ஷினி கூற,

"இப்ப என்ன? திட்றத்துக்கு நாங்க ஒன்னும் தப்பா பண்ணலையே.. ஆரா உங்களை தேடி வந்ததே உங்களுக்கு புரியலையா நார்?" என்று கல்பனாவும் கேட்க,

"பேசி முடிச்சிட்டீங்களா?" என்றான் முறைத்து.

"நீ கோபப்படுறது எல்லாம் நியாயமே இல்லை டா.. நாளைக்கு ஈவினிங் ஸ்ருதி அவ ஹஸ்பண்ட் கூட ஃபாரின் கிளம்புறாங்க.. அம்பிகா ஆண்ட்டி இன்னும் ஒரு வாரத்துல அவங்க ஊருக்கு போய்டுவாங்க.. பாவம் டா ஆரா! தனியா இருக்கவே புடிக்காத பொண்ணு. ஏங்கி போய்டுவா.. அதான் ஒர்க்அவுட் ஆகும்னு இப்படி பண்ணினோம்.. அவ ஒண்ணுமே சொல்லாம போய்ட்டா!" என்றாள் தர்ஷினி.

"ஆமா ரகு! இன்னும் ரெண்டு மாசத்துல தர்ஷினியை அவங்க அத்தை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க.. தர்ஷினி இல்லாம ஆராகிட்ட எப்படி பேச? நீங்களும் ரெண்டுல ஒன்னு கேட்க மாட்டுறிங்க!" என்றாள் கல்பனா.

"அய்யோ நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது.. ஆனா நான் என்ன பண்றது? அவளுக்காக அவளுக்கும் சேர்த்து யோசிச்சு தான் நான் தள்ளி நிக்குறேன்.. அவ என் பக்கமா ஒரு பார்வை பார்த்தா கூட போதும் நான் அடுத்த ஸ்டெப் மூவ் ஆக.. புடிச்சாலும் எனக்கு வேண்டாம்னு வீம்பு பண்றவளை நான் என்ன பண்ண?" என்றான் ரகு.

"பேசாம தட்டை தூக்கிட்டு பொண்ணு பாக்க அம்மாவை கூட்டிட்டு போயிடுவோம் அண்ணி!!" தர்ஷினி கூற.,

"ஆமா! எங்க ரகுவை கட்டிக்கோ இல்ல வேற மாப்பிள்ள பாக்குறோம் அதை கட்டிக்கிட்டு போ'னு சொல்லுவோம்.. மிரட்டினா தான் ஆரா சரியா வருவா!" என்றாள் கல்பனா.

ஆராவை கட்டாயப்படுத்தவும் முடியாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் என ரகு தவித்து நிற்க, இருவரும் பேசுவதைக் கேட்டு மீண்டும் முறைத்தான் ரகு.

"உங்களுக்கு ஹெல்ப்பா இருக்குமேனு தான்.." கல்பனா கூற,

"லாஸ்ட்டா ஒரு டைம் நான் பேசுறேன்.." என்று தீவிரமாய் ரகு சொல்ல,

"ரகு, தர்ஷி, ஏய் கல்பனா சீக்கிரம் வாங்க!" என்ற மகேஸ்வரி குரலில்,

"பாப்பா முழிச்சுட்டா போலயே!" என்று தர்ஷினி ஓட, கல்பனாவும் வர, ரகு அங்கேயே அமர்ந்தான் அசட்டையாய்.

"ஹாய் தர்ஷினி!" என்று அழைத்து அங்கே அமர்ந்திருந்தது ஸ்ருதி உடன் அவள் கணவன், தாய் அம்பிகா.

"ஹாய் ஸ்ருதி! எங்க அஜய் கானும்?" நாளை கிளம்ப இருப்பதால் சொல்லிக் கொள்ள வந்திருகிறார்கள் என நினைத்து தர்ஷினி பேச, கல்பனாவும் அப்படி தான் நினைத்தாள்.

"அஜய் நம்ம பொண்ணு கூட வீட்டுல தான் இருக்கான்!" ஸ்ருதி கூறியதும் கல்பனாவிற்கு மண்டைக்குள் விளக்கெறிய,

"ஹான்?" என்று அர்த்தமாய் பார்த்தவளைப் பார்த்து, ஆம் என்று ஸ்ருதி தலையசைக்க,

"ரகுவை வர சொல்லு தர்ஷி! நல்ல விஷயம் சொல்ல வந்திருக்காங்க!" என்றார் மகேஸ்வரி.

"நான் கூப்பிடுறேன்! நான் கூப்பிடுறேன்!" என்று கல்பனா மேலே செல்ல,

"என்ன ம்மா?" என்று அன்னை அருகே வந்து தர்ஷினி கேட்க,

"ஆரா கல்யாணத்துக்கு பேச சொல்லி அனுப்பி இருக்கா தர்ஷி!" என்றார் மகேஸ்வரி முகமெல்லாம் புன்னகையாய்.

"எது?" என்று விழித்த தர்ஷினி நிஜமா என்று ஸ்ருதி புறம் திரும்ப,

"எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு தர்ஷினி.. ரொம்ப பயமா இருந்துச்சு அவளை தனியா விட்டுட்டு போக.. இன்னைக்கு ஆபீஸ் கிளம்பி போனவ அப்பவே வந்துட்டா.. என்னனு கேட்டா! எனக்குன்னு நீங்க தானே இருக்கீங்க! ராம் சார் வீட்டுல போய் பேசுங்க கல்யாணத்துக்குன்னு சொல்றா.. என்னால நம்பவே முடியல.." என்று சொல்லவும் தர்ஷினி துள்ளி குதித்து ஸ்ருதி அருகே வர,

"என்கிட்ட எல்லாம் சொல்லலைனாலும் உங்க தம்பிக்கு ஒரு இன்ட்ரெஸ்ட் ஆரா மேலனு தெரிஞ்சிகிட்டேன்.. பெருசா ஆரா இந்த விஷயத்தை என்கிட்ட ஷேர் பண்ணல.. ஆனா ஆராவே இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கான்னா அவ முழு மனசோட தான் சொல்றானு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.. உங்களை எல்லாம் நம்பி தான் நாங்க வந்திருக்கோம்!" என்றாள் ஸ்ருதியே!

"அய்யோ ஸ்ருதி! ஆரா எங்களுக்கு இன்னொரு நந்துகுட்டி.. நாங்க இருக்கோம் அவளுக்கு.. எவ்வளவு ஹாப்பி நியூஸ் சொல்லி இருக்கீங்க!" என்று கொஞ்ச,

"இதை முதல்ல சாப்பிடுங்க!" என்று மகேஸ்வரி இனிப்பு கொண்டு வந்து தர,

"மாப்பிள்ள வந்தாச்சு!" என்று கல்பனா குரலில் அனைவரும் பார்க்க, அவர்கள் பேசியதை கேட்டபடி தான் முகம் முழுதும் விகசிக்க, கண்கள் பளிச்சிட புன்னகை முகமாய் இறங்கி வந்தான் ரகுராம்.

ஸ்ருதி கணவன் அருகே சென்று கை கொடுத்து இருவரும் பேசிக் கொள்ள, "ம்மா! உடனே உடனே.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடனே கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணுங்க ம்மா.. இந்த ஆராவை எல்லாம் நம்ப முடியாது!" தர்ஷினி சொல்ல,

"ஆமா ஆமா! ஸ்ருதி நீங்க கல்யாணம் முடிச்சி கிளம்பலாமே?" என்று கல்பனா கேட்க,

"ரொம்ப நாள் முன்னாடியே பிளான் பண்ணினது.. சட்டுனு ஸ்டாப் பண்ண முடியாதே!" என்ற ஸ்ருதி,

"நான் இல்லைனாலும் அம்மா இருப்பாங்க.. நான் வரும் போது இந்த வீட்டு பொண்ணா ஆரா இருக்கனும்.." என்றாள் ஸ்ருதி.

"நாளைக்கு நாங்க கிளம்புறோம்.. அத்தை கொஞ்ச நாள் ஆராத்யா சிஸ்டர் கூட இங்க இருப்பாங்க.. நீங்களும் கூட இருக்கீங்கன்ற தைரியம் நம்பிக்கையோட நாங்க கிளம்புறோம்!" என்று ஸ்ருதி கணவன் சொல்லி செல்ல,

"நானும் ஆராவை பார்த்து சும்மா ரெண்டு வார்த்தை பேசிட்டு வர்றேன்!" என்று தர்ஷினி கிளம்ப,

"நானும் நானும்!" என்று கல்பனாவும் கிளம்ப,

"உதை படுவீங்க! சும்மா அவளை போய் கிண்டல் பண்ணிட்டு வர பாக்கிங்க.. நாளைக்கு நல்ல நாள்.. நாளைக்கே போய் பூ வச்சு பேசி கல்யாண நாளை முடிவு பண்ணிடுவோம்.. காலைல சிம்பிளா பண்ணிட்டா இவங்க ஊருக்கு கிளம்பவும் வசதியா இருக்கும்" என்று கூறிய மகேஸ்வரி,

"அப்புறமா உங்க விளையாட்டை வச்சுக்கோங்க!" என்று சொல்லிவிட, சந்தோசமாய் சம்மதம் கூறி ஸ்ருதி குடும்பம் விடைபெற்று சென்றனர்.

அவர்கள் சென்றதும் ரகு அருகே தர்ஷினியும் கல்பனாவும் வர, "ஹெலோ!" என்று வராத அலைபேசியை ரகு காதில் வைத்து தன் அறைக்கு திரும்ப,

"டேய் டேய்! நடிக்காத டா.. எங்ககிட்டயவா?" என்றாள் தர்ஷினி.

"பார்த்திங்களா எங்க பிளான் எப்படி ஒர்க்அவுட் ஆகி இருக்கு.. ஆரா க்ளீன் போல்ட்!" என்ற கல்பனாவிற்கு தலைக்குள் என்னவோ சுழல்வதை போலா தெறிய ஒரு நொடி பயந்தவள் ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்ள,

"நீங்க அப்படி நினைக்குறிங்களா? எனக்கு என்ன தோணுது தெரியுமா?" என்றவன் அமைதியில் இருவரோடு மகேஸ்வரியும் மகனைப் பார்க்க,

"அவ ரொம்ப பயந்துட்டா.. என்ன வந்தாலும் பரவாயில்லைனு அவளுக்கு தோணிடுச்சு.." என்றான் அமைதியாய்.

"அதான் டா சொல்றோம்.. இந்த பிளான்னால தானே?" தர்ஷினி கேட்க,

"சரி தான் க்கா.. பயமுறுத்தி இதுவே பெட்டர்னு நினைக்குற அளவுக்கு வந்துடுச்சு!" என்றவன் பேச்சில்,

"நார்! நாங்க பண்ணினது உங்களுக்கு தப்புனு தோணுதா?" என்றாள் புரியாமல் கல்பனா.

"அப்படி சொல்லல அண்ணி! தப்போ சரியோ! இனி வேற சாய்ஸ் எனக்கும் இல்ல.. இவ்வளவு தூரம் வந்துட்டா இல்ல.. இது போதும்.. இனி நான் பார்த்துக்குறேன்.. ம்ம்ம்?" என்று தலையசைத்து புன்னகையுடன் ரகு கேட்க,

"கல்யாண நாள் மட்டும் நீங்க குறிச்சா போதும்னு சொல்றான் ம்மா உங்க புள்ள.. ரைட் ரைட்! என்னவோ டா.. அக்கா ஆசீர்வாதத்துல உனக்கு ஒரு நல்லது நடந்துடுச்சு.. உன் புள்ளைக்கு என் பேர் தான் இப்பவே சொல்லிட்டேன் பார்த்துக்கோ..." என்று தர்ஷினி சொல்லிக் கொண்டு இருக்க, அருகில் நின்ற மகேஸ்வரி மேல் சாய்ந்திருந்தாள் கல்பனா.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
கல்யாணத்திற்கு ஓகே கண்மணி.....
கல்பனா தாய்மை அடைந்து
விட்டாங்க போல....
கலாட்டா ஆரம்பம் தான்
கச்சேரி கலைகட்டும்🤩🤩🤩
 
  • Love
Reactions: sivaguru and Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
கல்யாணத்திற்கு ஓகே கண்மணி.....
கல்பனா தாய்மை அடைந்து
விட்டாங்க போல....
கலாட்டா ஆரம்பம் தான்
கச்சேரி கலைகட்டும்🤩🤩🤩
அதே அதே