அத்தியாயம் 37
காலை ஏழு மணி அளவில் சிவா கண்களை திறக்க அருகில் அவனவள்.
பார்த்ததும் புன்னகைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட, அசைவு கூட இல்லை அவளிடம்.
அப்படி ஒரு களைப்பான உறக்கம். தூங்கும் பொழுது மணி மூன்று இருக்குமா? நினைத்தவன் "அம்மு!" என்று அழைத்து அவள் நெற்றியில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட, அந்த குரலுக்கு சின்ன அசைவு அவளிடம்.
"மகி!" என்று காதுக்குள் அழைக்க,
"ம்ம்ஹும்ம்! நான் தூங்கணும்!" தூக்கத்தோடே சொல்ல, அந்த அர்த்தத்தில் இன்னுமாய் புன்னகை சிவாவிடம்.
"சரி தூங்கு!" என்றவன் எழுந்து குளித்து கீழே வர வீட்டில் யாரும் இருப்பதாய் தெரியவில்லை.
"எல்லாரும் எங்க ம்மா?" என சமையலறை சென்றான் சிவா.
"மகி வீட்டுக்கு தான் போயிருக்காங்க டா.. இப்ப தான் கிளம்பினாங்க!"
"ஓஹ்! அப்பா, பாட்டி?"
"அவங்க இங்க தானே இருந்தாங்க. ரூம்ல இருப்பாங்க!" என்றவர்,
"நீ தான் வருவன்னு நினச்சேன்! இந்த பிளாஸ்க்ல காபி இருக்கு. மேல கொண்டு போ! பத்து மணிக்கு மகி வீட்டுல இருந்து வருவாங்க. மத்த எல்லாரும் கோவிலுக்கு நான் கூட்டிட்டு போய்டுவேன்.. நீங்க ரெண்டு பேரும் வர்றவங்க கூட வாங்க!" என்று சொல்ல,
"ம்ம் போலாமே!" என்றவன்,
"நீங்களும் எங்களோட வாங்க ம்மா!" என்றான்.
"உன் பாட்டி அங்க போய் பொங்கல் வைக்குற இடத்துல எதாவது பேசிட்டு இருக்கும். நான் அவங்ககிட்ட பேச மாட்டேன்னாலும் நான் இருக்கறேன்னு தெரிஞ்சா தான் அமைதியாவாச்சும் இருப்பாங்க" என்று சொல்ல,
"ம்ம்!" என்றவனிடம் சொல்வதா வேண்டாமா என தயங்கினார்.
"எதாவது சொல்லனுமா ம்மா?" சிவா கேட்க,
"ஒண்ணுமில்ல சிவா!" என்றுவிட்டார். நிச்சயம் கவலை கொள்வான். இப்பொழுதே ஏன்? மாலை சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
"சரி நீ போ! அவ தூங்கட்டும். அவசரமில்ல" என்று சொல்ல, தலையசைத்து புன்னகைத்து மேலே வந்தான்.
கொஞ்சமும் இடம் மாறாமல் தூங்கும் மனைவியினை அப்படியே அள்ளி நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, கண்விழித்து அவனைப் பார்த்தவள்,
"விடிஞ்சுடுச்சா மாமா!" என்றாள் தனக்கு வாகாய் அவன்மேல் சாய்ந்து கொண்டு.
"இல்லையே! நேரமிருக்காம். தூங்க சொல்லி தான் அம்மா சொன்னாங்க" என்றவன் பாதி பதிலிலேயே அவள் தூங்கி இருந்தாள்.
"எப்படி டி இப்படி இருக்க? சான்ஸே இல்ல போ" என்றவன் வலிக்க கன்னத்தை இழுத்து முத்தம் கொடுக்க,
"ஆஆ!" என்று வலியோடு அவனை கண் விழித்துக் கண்டாள்.
"பசிக்குது அம்மு!" என்றவன் சொல்லில் உறக்கம் கலைய ஆரம்பித்தது.
"நான் தான் சமைக்கணுமா?" என்றவள் கேள்வியே அவள் உறக்கம் முற்றிலுமாய் கலைய காரணம்.
"ஆமானு சொல்லிடாதீங்க மாமா. சொல்லி குடுத்தா கத்துக்கிட்டு உங்களுக்கு தோசை ஊத்தித் தரவே ஒரு மாசம் ஆகுமே! ஏன் அத்தை இல்லையா வீட்ல?" என்றவள் அவனில் இருந்து எழ, மீண்டும் தன் மேல் சாய்த்தான்.
"நான் சொன்னது வேற பசி!" என்றவன் ரகசிய சொல்லில் அவன் வாயை மூடியவள்.
"நான் டாபிக் மாத்தினா நீங்களும் மாறிடனும். இல்ல அடி தான்!" என்றவள் சிவந்த முகத்தினை மறைக்க முயன்று பேச்சினை வளர்க்க, அவள் கைக்குள் அத்தனை முத்தம் நொடியில்.
"கூசுது மாமா!" என்றவள் எழுந்து கொள்ளவும் வழி இல்லை.
"தூங்கவும் விடாம எழுந்துக்கவும் விடாம!" என்று நொடித்துக் கொண்டவள் ஏதோ நியாபகத்தில் சட்டென வாயில் கைவைத்தாள்.
"அவ்வா! எவ்ளோ சேட்டை பண்றீங்க நீங்க! உங்களுக்கு ஆபீஸ்ல சிடுமூஞ்சி சித்தப்பானு பேரு! தெரியுமா உங்களுக்கு?" என்று சொல்லி முடித்தபின் தான் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
"சாரி சாரி சாரி மாமா!" என அவளே சென்று அவன் கைகளுக்குள் அமர்ந்து கொள்ள இன்னுமே முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.
"சத்தியமா இந்த பேர் அவங்க வைக்கல!" என்றதும் அவன் கேள்வியாய் புருவங்களை சுருக்க,
"அது.." என்று அவள் இழுக்கும் பொழுதே புரிய ஆரம்பித்தது சிவாவிற்கு.
"இப்ப இல்ல மாமா! நான் ஜாயின் பண்ண புதுசுல உர்ருனு இருப்பிங்க இல்ல ஆபிஸ்ல.. அப்ப நானா தான் வாய் தவறி சொன்னதை... அவங்க எல்லாம்...கண்டின்யூ பண்ணிக்கிட்டாங்க" என்று பாவமாய் கூறி, அவளே அவன் கைகளை எடுத்து தன்னைக் கட்டிக் கொள்ள செய்து,
"நான் உங்க செல்லம்ல? சாரி! இனிமேல் செய்ய மாட்டேனாம்!" என குழந்தையாய் சமாதானம் செய்கிறேன் என விளையாடுபவள் மேல் முன்பை விடவும் அத்தனை பிடித்தம் வந்தது சிவாவிற்கு.
"வாய் வாய்!" என்றவன் அவள் இதழ்களுக்கு தன் இதழ்கள் வழி தண்டனையைக் கொடுத்து மன்னிப்பை அவனுக்கு வேண்டிய விதமாய் பெற்றுக் கொண்டான்.
இருவருமாய் எழுந்து மகிமா குளித்து வரவும் மீண்டுமொரு முறை சிவா குளிக்க செல்ல, மகிமா படுக்கையினை சுத்தம் செய்தாள்.
பூவை எடுத்து மொத்தமாய் ஒரு கவரில் போட்டு அவள் வைக்க, குளித்துவிட்டு வந்தவன்,
"அந்த கவர் இங்கேயே இருக்கட்டும் அம்மு! அப்புறமா நாம எடுத்து போட்டுடலாம்!" என்று சொல்ல, அவனைக் காணாமலே தலையசைத்தாள்.
மகிமாவோடு சேர்ந்தே தயாராகி அவளை சீண்டி வம்பிழுத்து என சிவா அவளை கீழே அழைத்து வர, ஈஸ்வரியும் வள்ளியும் மட்டுமே வீட்டில்.
"கிளம்பலையா ம்மா?" என்று அன்னையிடம் சிவா கேட்க,
"உன் பாட்டி வர்லனு சொல்லிட்டாங்க சிவா! அதான் நீ வந்ததும் போகலாம்னு நானும் இருந்துட்டேன்!" என்ற அன்னையைப் பார்த்து சிரித்தான் அவன்.
"உனக்காக தான் டா!" என்று அன்னையும் கண் சிமிட்ட, இன்னும் பலமாய் சிரித்தான்.
"மாமா எங்க த்த?" என்ற மகிமா ஈஸ்வரியுடனும் பேசிக் கொண்டே சிவாவிற்கு பரிமாற எடுத்து வைக்க, அதற்குமே கிண்டலும் சிரிப்பும் தான் அவனுக்கு.
"பாருங்க த்தை!" என வள்ளியிடம் மகிமா முறையிட,
"ஏன் டா!" என்றார் அன்னை.
"ம்மா! காமெடி பண்றா! மாலா த்தை சொல்லி தான் அனுப்பிருக்காங்க போல நான் சாப்பிட்ட பின்னாடி சாப்பிட சொல்லி!" என்றதும் அவள் விழிக்க,
"என்ன மாட்டிக்கிட்டியா?" என்றான் சிவா.
"அது இருக்கட்டும் மாமா! இதெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறிங்க?" என்று அதிதீவிரமாய் மகிமா கேட்க,
"அப்போ அவன் சொன்னது உண்மையா அம்மு?" என்ற வள்ளி அவளை இழுத்து அவனருகே அமர வைத்தார்.
"இங்க அப்படியெல்லாம் இல்ல. பசிச்சா சாப்பிடணும். அவ்வளவு தான். சிவா அவனுக்கு வேணும்னா அவனே போட்டு கூட சாப்பிட்டுக்குவான். மாலா சொல்றதெல்லாம் கேட்டு அப்படியே வந்து என்கிட்ட சொல்லு. நான் வேணுமா வேண்டாமா சொல்றேன்!" என்று வள்ளி சொல்ல,
"ம்ம் சரி த்தை!" என்றாள் உடனே.
"சரியா போச்சு! ம்மா! இனி நிக்கிறதுக்கும் நடக்குறதுக்கும் உங்ககிட்ட பெர்மிஸ்ஸன் கேட்பா. நீங்க வேற!" என்று சிரித்த சிவா முகத்தின் மகிழ்ச்சியில் தான் நிம்மதி கொண்டது அன்னை மனம்.
ஈஸ்வரிக்கும் மகிமாவின் குணம் பிடித்திருந்தாலும் வள்ளி மகிமாவின் ஒட்டுதல் அவ்வளவு பிடித்தமில்லை என்பதில் அமைதியாய் இருந்தார்.
சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களில் எல்லாம் "அத்தை!" என்று வனிதா திவாகருடன் உள்ளே வர, அவர்களை வரவேற்று அமர வைத்தார் கனகவள்ளி.
சிவா திவாகருடன் பேசிக் கொண்டு அமர, மாலா வீட்டில் நேற்று நடந்ததை பேசிக் கொண்டிருந்தாள் வனிதா மகிமாவிடம்.
மீண்டும் இவர்கள் மட்டுமாய் கிளம்பி கோவிலுக்கு வந்து சேர, புதுமனத் தம்பதிகளுக்கு வரவேற்பு அதிகமாய் இருந்தது.
வாழவந்தான் அருகே வினோதன் அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
"நீ போய் மாலாத்தைகிட்ட உட்காரு அம்மு!" என்ற சிவா சென்று வாழவந்தான் வினோதன் அருகே திவாகருடன் நின்று கொண்டான்.
"மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான்!" மகிமா நினைத்து சிரித்து பெருமையும் கொண்டாள்.
சொந்தங்கள் சிலரும் அங்கே வந்திருக்க, அவர்களும் கதை பேசி பொங்கலை தயாரித்து தெய்வம் முன்பு வைத்து வழிபட்டு அங்கேயே சாப்பிட்டு மீண்டும் அனைவரும் வள்ளியின் வீடு வந்து சேர ஒரு மணி ஆனது.
"என்னை தேடினியா அம்மு?" என்று மாலா மகிமாவிடம் கேட்க,
"ஆமா சொல்லவா இல்லைனு சொல்லவா?" என அன்னையிடமே கேட்டு புன்னகைத்தவள் பார்வையில் மனம் மகிழ்ந்தது மாலாவிற்கு.
"நான் தேடினேன் அத்தை உன்னை" என அவளுக்கு போட்டியாய் வந்து நின்றான் சிவா.
மாலாவிடம் முன்பும் உரிமையாய் பேசுவான் தான். இப்பொழுதும் கூட அதே போல அப்படியே தான் அவன் பேசியது என்றாலும் மற்றவர்கள் முன்பும் வணக்கம் மாறிடவில்லை என்பதில் ஒரு பெருமை மாலாவிற்கு.
"மாமா! சும்மாவே அம்மா உங்களை சொல்லி தான் என்னை வீட்டுல திட்டும். இப்படிலாம் ஐஸ் வச்சீங்க... அம்மா வீட்டோட மாமியாரா வந்துடுவாங்க!" என்றாள் மகிமா.
"அடி கழுதை! வாயை பாரு!" என மிரட்டினாலுமே சிரித்தார் மாலா.
சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஒவ்வொருவராய் சொல்லிக் கொண்டு கிளம்ப, நேற்று கூட தோன்றாத பிரிவு துயரம் இன்று அதிகமாய் தாக்கியது மகிமாவை.
காலையில் இருந்து சகோதரி அன்னையுடன் இருந்துவிட்டு அவர்கள் கிளம்பும் நேரம் கண்ணீர் வரும் போலானது.
"இங்க தான டா இருக்க போறோம்?" என்று மாலா சொல்ல,
"நேத்து தெரிலயா டி நாங்க இங்க இல்லைனு?" என்று கிண்டல் செய்தாள் வனிதா.
சமாதானம் செய்துவிட்டு கிளம்பி இருந்தனர் அனைவரும். மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் தான்.
"நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு டா!" என மகிமாவை மேலே வள்ளி அனுப்பி வைத்த அரை மணி நேரத்திற்குள் எல்லாம் சிவாவின் சத்தம் தான் வீட்டை எதிரொலித்தது.
என்னவோ என்று மேலே நின்று மகிமா எட்டிப் பார்க்க,
"ஏன் ம்மா இப்படி? இதுக்கு தான் நான் முதல்லயே வேண்டாம்னு சொன்னேன்! கேட்டீங்களா நீங்க? கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு என்னை போட்டு பந்தாடுறிங்க!" என்றவன் சொல்லில் மகிமா முதலில் புரியாமல் விழித்தவள் அவன் பேச்சினில் அதிர்ந்து நின்றுவிட்டாள்.
"ஏன் டா இப்படி பேசுற?" என்ற வள்ளிக்குமே கண்ணீர்.
ஈஸ்வரி, வள்ளி, சிவா மட்டுமே அங்கே நின்றிருந்தனர்.
"அப்பா பொண்ணு பாக்குறேன்னு சொன்னார். சரினு வந்தேனா இல்லையா? உங்களுக்கும் அத்தைக்கும் எங்களோட கல்யாணம் நடந்தா நல்லாருக்கும் சொன்னிங்க. நானும் சரினு சொன்னேனா இல்லையா? ஏன்? எல்லாத்தையும் விட இப்ப வர அங்க ஒருத்தி உங்களுக்கு நான்னா பிடிக்கும் மாமானு தான் சொல்றாளே தவிர்த்து உங்களுக்கு என்னை பிடிக்குமானு கேட்கவே இல்லை!" என்றவன்,
"உங்க எல்லாருக்காகவும் தான் நான் பார்த்து பார்த்து நடந்துக்குறேன். ஆனா எனக்காக எதுவுமே பண்ண மாட்டிங்களா?" என்றவன் தொய்ந்து அமர, அவனை ஓடி சென்று அருகில் அமர்ந்து தோள் தாங்கிக் கொண்டார் வள்ளி.
"என்ன டா பேசுற நீ? நான் இருக்கேன் டா. அப்டிலாம் விட மாட்டேன்.. அம்முக்கு நான்...." என்ற வள்ளியின் வார்த்தைகள் நின்றுவிட, அவரைக் கண்டவன் அவர் பார்த்த திசையில் தானுமாய் பார்த்தவனுக்கு திக்கென்றானது.
எப்பொழுது வந்தாளோ என நினைத்து "அம்மு!' என்றவன் வா என்பதாய் தலையசைக்க, பின்னால் நகர்ந்தவள் வேகமாய் அறைக்குள் சென்றுவிட்டாள்.
தொடரும்..