அத்தியாயம் 9
கையில் கோவில் பிரசாதம் புளியோதரையை வைத்துக் கொண்டு அமைதியாய் மகிமா அமர்ந்திருக்க, அருகில் மாலாவும் கனகவள்ளியும் பேசிக் கொண்டிருந்தனர்.
"சிவா வரலையா அண்ணி? ஆட்டோல வந்திங்க?" மாலா கேட்க,
"அவனுக்கு கிளம்புற நேரத்துல வேலை குடுத்துட்டாங்க. முடிச்சுட்டு கோவிலுக்கு வர்றேன் நீங்க போய்ட்டு இருங்கனு சொன்னான்!" என்றார் வள்ளியும்.
"சிவா சரியாகிட்டானா அண்ணி? எதாவது சொன்னானா?"
"அவனை தெரியாதா உனக்கு? என்ன நினைக்கிறான்னு தெரியல. நான் கேட்டதுக்கும் பொண்ணு பாக்குறது இனி உங்க வேலை. நான் கல்யாணம் பண்ணிக்குற அன்னைக்கு பொண்ணை பாத்துக்குறேன்னு சொல்றான். உண்மையா சொல்றானா சும்மா சொல்றானா ஒன்னும் புரியல" என்ற வள்ளி,
"எதையும் வாயை திறந்து கேட்கவும் தெரியாது பேசவும் தெரியாது. இவனுக்கு வர போற பொண்ணு எப்படி இருக்க போகுதோன்னு இருக்கு மாலா. கொஞ்சம் கூட கோவம் வரல. அதட்டி பேச தெரியல. இவ்வளவு அமைதியா இருக்கான். எனக்கு பயமா இருக்கு. பொண்ணை பெத்தவங்க கூட இப்படி பயப்பட வேண்டாம் போல!" என்று சொல்ல, மகிமா அத்தனை தீவிர சிந்தனையில் இருந்தாள்.
"பொண்ணாவது ஆம்பளையாவது. இது பண்ணாத கூத்தா?" என்று மகிமாவை காட்டிய மாலா,
"கிழக்கு பார்த்து நில்லுன்னு சொன்னா பேந்த பேந்த முழிக்கிறா... நின்னுட்டே கனவு காணுறா. வனி கல்யாணத்துக்கு கூட நான் அசரல.. இப்ப இவ கேட்குற கேள்வி எல்லாம் பார்த்தா இவ என்னனு வாழ போராளோ!" என்று சொல்ல, வள்ளி புன்னகைக்கவும்
"நான் அவ்வளவு மோசமா த்தை?" என்றாள் மகிமா பாவமாய் பார்த்து வள்ளியிடம்.
"சும்மா இரு மாலா! சின்ன பொண்ணை என்னலாம் சொல்ற நீ! அதெல்லாம் கல்யாணம் ஆகிட்டா தானா தெரியும். இவளுக்கு என்ன? என் தங்கப் பொண்ணுக்கு!" என அவளை கட்டிக் கொண்டவர்,
"அம்மாக்கு வேற வேலை இல்ல. நீ எதையும் நினைச்சுக்காத டா!" என்று சொல்ல,
"நீங்க ரொம்ப செல்லம் குடுக்குறீங்க அண்ணி!" என்றார் மாலாவும்.
அதுவரையுமே அத்தனை சிந்தனைகள் மகிமாவிடம். வீட்டிலேயே நேற்று முழுதும் யோசித்தது தான்.
இப்பொழுது மாலா தன்னை கூறியது, வள்ளி சிவாவை கூறியது என அத்தனையும் மண்டைக்குள் ஏற்றிக் கொண்டு ஒரு பெரும் முடிவை கூற முன் வந்தாள்.
"ம்மா! உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணு தோணவே இல்லையா?" என்றாள் மகிமா இருவரையும் பார்த்து.
"என்ன?"
"நானும் பல வருஷமா பாக்குறேன். இப்படியே காலத்தை ஒட்டிடலாம்னு பாக்குறீங்களா? லவ்வர்ஸ் வீட்டுக்கு தெரியாம மீட் பண்ணிக்குற மாதிரி காலங்காலமா பண்றீங்க நீங்க ரெண்டு பெரும்"
"என்னவோ தெரியாத மாதிரி கேட்குறீயே அம்மு! எல்லாம் விதி!" என்றார் வள்ளி.
"நான் சொன்னேன்ல! இவ திருந்தவே மாட்டா. கல்யாணம் ஆக போகுது. புத்தியோட நடந்துக்கனு சொன்னேன். இப்படி புத்திகெட்டத் தனமா பேசிகிட்டு திரியுறா!" என்று முறைத்தார் மாலா.
"இனியாவது வாயை குறை மகி! இல்லைனா உன் அப்பாகிட்ட இன்னும் அடி வாங்குற மாதிரி போற இடத்துல புருஷன்கிட்டயும்...." என்று சொல்லும் முன் பட்டென்று மாலாவின் மேல் ஒரு அடி வைத்தார் வள்ளி.
"புள்ளைய என்ன சொல்லுததுன்னு இல்ல!" என்று. மகிமாவும் அமைதியாகி இருந்தாள் அன்னை கூறிய வார்த்தைகளில். இதை தானே அன்று அவன் கூறினான் என்று மனதுள் தோன்றாமல் இல்லை.
"ப்ச்! என்னவோ ஒரு நினைப்புல சொல்லிட்டேன்! மனசுல வச்சுக்காத அம்மு!" என்று கொஞ்சலாய் மாலா மகளின் கண்ணம் வழிக்க,
"நான் சொன்னது சரி தானே? அதை முதல்ல சொல்லுங்க!" என்று ஆரம்பித்த இடத்தில் வந்து நின்றாள் மகிமா.
"சரி தான் அம்மு! ஆனா உன் அப்பாவும் மாமாவும் தான் பேசவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்களே!" வள்ளி.
"அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா? நீங்க ரெண்டு பேரும் ஓகே! இதோ இப்படியே நாளை கடத்தி ஓட்டிடுவீங்க. நான், வனி, சிவா மாமா எல்லாம் என்ன பண்றதாம்? கல்யாணத்துக்கு அப்புறம் எப்ப எல்லாரையும் ஒன்னா பாக்குறதாம்?" என்ற கேள்வி நியாயம் தானே என்று இருவரும் அமைதியாகினர்.
"கேட்டா சிவா மாமாக்கு வர்ற பொண்ணையும் இதே மாதிரி கோவிலுக்கு கூட்டிட்டு வர்றேன்னு சொல்றிங்க. எல்லாரும் உங்களை மாதிரியே இருப்பாங்களா? வர மாட்டேன்னு சொல்லிட்டா? நீங்க பேசிக்குறதை வீட்டுல சொல்லி பிரச்சனை பண்ணிட்டா?" என்று சொல்ல, நெஞ்சை கவ்வியது பயம் இருவருக்கும் அவள் பேசிய விஷயமும் பாவனையும்.
என்னவோ நடந்து விட்டதையே போன்று மாலா பயந்தவர், "இப்ப என்ன டி பண்ணனும்ங்குற? வாயை திறந்து நல்ல வார்த்தை சொல்றியா! அதை சொன்னா வேற ஏழு முழத்துக்கு நீட்டிகிட்டு வருது கோபம்!" என்றார் படபடத்த இதயத்தோடு.
"பயமா இருக்குல்ல? உங்க வயசுக்கு இப்படியே இருந்து காலத்தை ஓட்டிட்டிங்க சரி. எங்க காலத்துக்கு நாங்க என்ன பண்ணனும்? நான் கல்யாணமாகி கண்காணாத தூரத்துக்கு போய்ட்டா வள்ளி அத்தைக்கு எல்லாம் என் நியாபகம் வருமா? இல்ல மாமாக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா வள்ளி அத்தை உன்னை பார்க்க இப்படி நினைச்ச நேரத்துக்கு வந்து உக்கார முடியுமா?" என்று சொல்ல, இப்பொழுது உயிருக்குள் என்னவோ ஓடுவது போன்று கைகால்கள் எல்லாம் பயத்தில் உறைந்துவிட்டது கனகவள்ளிக்கு.
"இப்ப என்ன டி சொல்ல வர்ற? அதை சொல்லு! இங்கேயே படுத்துருவேன் போல நீ பேசுறதை கேட்டா!" என்றார் நெஞ்சை நீவியபடி வள்ளி.
தண்ணீரை எடுத்து திறந்து அவர் கையில் கொடுத்தவள் தான் எடுத்த அந்த முடிவை இருவரிடமும் கூற தயாரானாள்.
"இவ்வளவு எல்லாம் நாங்க நினைக்கல மகி. யாரும் எப்படியும் இருக்கட்டும். அண்ணியும் நானும் இப்படி தான். எங்களால வீட்டை எதிர்த்து பேசி எல்லாம் ஜெயிக்க முடியாது. இது ஒரு வழி கிடைச்சது. சரினு இப்படியே இருந்துட்டோம்! இல்ல அண்ணி?" என்றார் மாலா.
"அதான் கேட்குறேன் ம்மா! எவ்வளவு நாள்? நாளைக்கே எனக்கு ஒண்ணுன்னு ஹாஸ்பிடல்ல போய் படுத்தேன்னா..."
"என்ன டி பேசுற நீ?" என்று வள்ளி தடுக்க,
"பேச்சுக்கு தான் த்தை!" என்றவள்,
"சரி அதை விடுங்க. நாளைக்கு வனிதாக்கு குழந்தை பிறக்கும். அத்தைனு முன்னாடி வந்து நின்னு அவ பிள்ளைக்கு நீங்க செய்யனுமா இல்லையா? அதையும் ஒளிச்சு வச்சு தான் செய்ய போறிங்களா?"
"ஆத்தீ! அம்மு இவ்வளவு எல்லாம் பேசாத. நினைக்க நினைக்க பதறுது எனக்கு. நான் சுகர் மாத்திரை வேற போடல!" என்று வள்ளி சொல்ல,
"எங்களுக்கும் ஆசை தான்!" என்றார் மாலாவும்.
"அந்த ஆசை மட்டும் தானாம்மா? சம்மந்தி ஆகணும்னு எல்லாம் நீங்க நினைக்கலையா?" என்று கேட்டுவிட, வள்ளியும் மாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழி விரித்துக் கொண்டனர்.
சுத்தமாய் அப்படி ஒரு நினைப்பே இருவரிடமும் கிடையாது இதுவரை. அப்படி நினைக்கும் வாய்ப்பும் வரவில்லையே.
இருவருமே மற்றவர் அவரவர் வீட்டிற்கு போய் வந்து என்று இருந்திருந்தால் அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமோ என்னவோ ஆனால் இத்தனை காலங்களில் தனித்தனியே இரு திருமணங்களைப் பற்றி அவ்வளவு பேசியிருக்கிறார்களே தவிர்த்து ஒற்றை திருமணமாய் நினைத்ததே இல்லை. நினைக்கும்படியா அந்த வீட்டு ஆண்கள் இருக்கிறார்கள்.
"அம்மு!" என்ற வள்ளிக்கு நெஞ்செல்லாம் விம்மியது. இவ்வளவு நாளும் இல்லை என்றாலும் அவள் கேட்ட நொடியில் மனம் தாளாமல் தள்ளாடியது.
அப்படி ஒன்று நடக்குமா என்ன? அதற்கு தான் விதி இல்லையே! என்று நினைக்கும் பொழுதே மகிமாவைவின் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டவருக்கு கண்ணீர் வந்து அருவியாய் விழ,
"அய்யோ அத்தை!" என்று மகிமாவே பதறிவிட்டாள்.
"அதுக்கெல்லாம் எங்களுக்கு குடுத்து வைக்கலையே மகி! இல்லைனா சிவா மாதிரி பிள்ளையை இப்படி ஊரான் வீட்டு பொண்ணு ஏமாத்துற அளவுக்கு நான் பார்த்துட்டு இருப்பேனா?" என்றார் மாலாவும் கலங்கிப் போய்.
"அய்யோ! ஏன் இப்படி ரெண்டு பேரும் கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கு இப்படி நடந்தா சந்தோசமா இல்லயா அதை சொல்லுங்க!" என்று சொல்ல, இரு பெண்கள் முகத்திலுமே அது நடந்துவிடாதா எனும் ஏக்கம் தான்.
"இதெல்லாம் பகல் கனவு. எங்களை உயிரோட கொல்ற மாதிரி பேசிகிட்டு இருக்குற நீ!" என்றார் வள்ளி.
"அத்தை! எனக்கு சிவா மாமாவை கட்டிக்க சம்மதம். உங்களுக்கு?" என்று நேராய் அவளே கேட்க, இது இன்னுமாய் அதிர்ச்சி இருவருக்கும்.
கை காலெல்லாம் புல்லரித்து நடுக்கமே கண்டுவிட்டது மாலாவிற்கு.
"மகி! என்ன பேசுற நீ?" என்று மாலாவும்,
"அம்மு! என்ன டி நீ?" என்று கலங்கி போய் வள்ளியும் அழைக்க,
"ம்மா! ஏன் உனக்கு சிவா மாமாவை பிடிக்காதா?" என்றாள் மகி அன்னையிடம்.
"நடக்காது டி! ஏன் டி எங்க நெஞ்சுல இப்படி நெருப்பை வச்சு கொல்ற? மனசெல்லாம் எரியுது. நாங்க இதெல்லாம் நினைக்கவே இல்லையே! நிம்மதியா இருந்தோமே! நடக்காத ஒன்னை நினைக்க வச்சு...." என்று மாலா பேசும் பொழுதே,
"ஏன் ம்மா நடக்காது? நடக்கும். உங்களுக்கு என்னை பிடிக்கும்ல அத்தை?" என்ற மகிமா,
"ம்மா உனக்கும் சிவா மாமாவை பிடிக்கும் தான? அப்போ எங்களுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.. அவ்வளவு தான் நாம எல்லாரும் எப்பவும் ஒன்னா இருக்கலாம்!" என்றாள் எளிதாய்.
இருவருமே பேச்சற்ற நிலையில் அதிர்ச்சி மீளாமல் அமர்ந்திருக்க, "மாமாக்கு என்னை பிடிக்குமாம்மா?" என்று அடுத்தடுத்த கேள்விகளால் திணறடித்தாள்.
"ம்மா!" இவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் இருந்து சிவா அழைக்கும் சத்தத்தில் மூவருமே திரும்ப, புன்னகையோடு அவர்களை நோக்கி சிவா நடந்து வந்து கொண்டிருந்தான்.
"மாமா வந்துட்டாங்க.. நானே மாமாகிட்ட கேட்குறேன்!" என்று எழுந்து அவன்புறம் ஓடினாள் மகிமா.
"மகி, அம்மு!" என இருவரும் அதிர்ந்து ஒரே நேரத்தில் அழைக்கும் முன்பே பிரசாதத்தை அன்னை மடியில் போட்டுவிட்டு ஓடியவள் அவன் முன் சென்று நின்றுவிட்டாள் மகிமா.
"பொண்ணு பார்த்துட்டு போனவர் டெல்லிக்கே போயிருப்பார். நீ என்ன இன்னும் ஆபீஸ் பக்கம் வராம சுத்திட்டு இருக்குற? ஆபிஸ் வர கூடாதுன்னு அவர் சொல்லிட்டாரா?" என்று கிண்டலாய் சிவா கேட்க,
"அவன் என்ன சொல்றது?" என்ற மகிமா,
"நீங்க சொல்லுங்க மாமா!" என்றாள் மூச்சு வாங்க.
"என்ன சொல்லணும்?" என்று எப்பொழுதும் போல அவன் புன்னகையுடன் கேட்க,
"நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?" என்றவள் கேள்வியில் புன்னகை மறைந்து அங்கேயே நின்றுவிட்டான் சிவா.
தொடரும்..