• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
இப்போது தான் முதன்முறையாக இந்தரின் வீட்டிற்கு வருகிறாள் மிர்லா. வீடு முன்கூட்டியே நிரந்த நிலையில் இருக்க, சந்தேகத்தோடு உள்ளே எட்டிப் பார்த்திட திடுக்கிட்டாள் அவள்.

உள்ளே இருந்தவர்களோ அவளின் முகமாற்றத்தைச் சற்றும் கண்டுகொள்ளாது, ஆரத்தித் தட்டோடு வந்து தாராவை ஒரு புறம் பிடிக்கச் சொல்லி இந்தர், மிரு இருவரையும் சேர்ந்து நிற்கச் சொல்லி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
மிர்லாவோ கபி, இந்தர், யோகன் என மூன்று பேரையும் மாற்றி மாற்றி நோட்டமிட, மூவரும் வேலை செய்து கொண்டிருந்த படியே அவளைப் பார்த்து பதுங்கி பம்மினர்.

கபியை அடுக்களையில் தனியாக மடக்கியவள், "இது உன் வேலையா டா?" என்று முறைத்தபடி வினவிட,

அவனோ 'மாட்னடா மவனே!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "இல்லயே... எனக்கு வேற வேலையில்லே பார். உன்னை இந்தர்கிட்ட தள்ளிவிட்டுட்டு இனிமே தான் என் லைஃப்-ஐ பாக்கனும்... இதுல உங்களை சேத்து வைக்கிற வேலை வேற பாப்பேனாக்கும்" என்று அசட்டையாக பதிலுரைப்பதாக நினைத்து வசமாக சிக்கிக் கொண்டான்.

"இல்லேன்ற வார்த்தையோட நிறுத்தியிருந்தா கூட நம்பிருப்பேன். அதுக்கு பின்னாடி ஒரு பெர்ஃபாமென்ஸ் கொடுத்தியே அதுலயே தெரியுது இது உன் வேலைனு" என்று அவனை முறைத்துவிட்டு வெளியேறினாள்.

"ஐயோ தெய்வமே!!! இனி எத்தனை வர்ஷத்துக்கு பேசாம இருக்கப் போறானு தெரியலேயே!!!" என்று புலம்பியபடி கிரைண்டரை அட்டையில் இருந்து பிரித்து இடம் பார்த்து வைத்துக் கொண்டிருந்தான்.

கீழ் தளத்திற்கு வந்தவள், அங்கே பொருள் இறக்குவதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்த யோகனின் அருகில் வந்து, "மாமா நீங்க தான் ஊர்ல இருந்து எல்லாரையும் வர சொல்லியிருந்திங்களா?" என்று சிடுசிடுப்பாக வினவிட,

"சுந்தரி!!!" என்று சந்தோஷமா கத்தியவன், "நீ என்கிட்ட பேசினதுக்கே, ஊருக்கே கடா வெட்டி விருந்து வெக்கனும். ஊருக்குப் போனதும் மொதோ வேலை அதான்...." என்றபடி சந்தோஷத்தில் விசிலடித்திட, "இப்போ உண்மைய சொல்லப் போறிங்களா இல்லேயா?" என்று மிரட்டிட,

"நீ மாமானு கூப்பிட்டதுக்காக உண்மைய சொல்றேன். உப்பிலி சொன்னான், நான் செஞ்சேன்..." என்றிட, அப்போது அங்கே வந்த இந்தர்,

"அடப்பாவி நீயெல்லாம் அண்ணனா டா... துரோகி டா நீ..." என்று யோகனை திட்டிவிட்டு உள்ளே செல்லப் பார்க்க, இந்தரின் பின் சட்டையை கொத்தாகப் பிடித்திருந்தாள் மிர்லா.

"சரி... சரி... என்ன தான் நீ என் தம்பியா இருந்தாலும் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவுல நான் வந்தா நல்லா இருக்காது... பாத்து பத்திரமா வீடு வந்து சேருடா" என்று இந்தரிடம் கூறிவிட்டு யோகன் உள்ளே சென்றுவிட்டான்.

யோகன் நகர்ந்து செல்லவும், இந்தரை முறைத்தாள் மிர்லா. 'சும்மாவே கோவை சரளா ரேஞ்சுக்கு சுவத்துல பறந்து பறந்து அடிப்பா இப்போ என்ன செய்ய காத்திருக்காளோ!!!' என்று யோசித்தபடி மீண்டும் அவளைப் பார்க்க, அவளது கண்கள் கலங்கி இருந்தது.

"ஹேய் சுண்டு... ஏன் டி அழறே... எவ்ளோ அடிக்கனுமோ அடி டீ அழாதே டீ..." என்றிட,

"உன்கிட்ட தானே என் ஃபீலிங்ஸ் எல்லாம் சொன்னேன்.... நீ கூட என்னை புரிஞ்சுக்கலேல!!!" என்று விசும்பல் இல்லாமல் கண்ணீர் மட்டும் வடித்தாள்.

"நமக்கு மேக்கொண்டு அதை நெனச்சு அவங்களும் அழுதுட்டாங்க டீ... நம்ம கல்யாணம் என்ன காரணத்துக்காக நடந்ததுனு தெரியுமா?"

அவனை புரியாத பார்வை பார்த்து, கண்களை துடைத்துக் கொண்டவளிடம்,

"யோகன் என்னை மாப்பிள்ளையாக்கினதுக்கு காரணம், நான் தான் உனக்குப் பொருத்தமானவனு நெனச்சான், அவனை விட நான் உன்னை வசதியா வாழ வைப்பேனு நெனச்சான். உன் அப்பாவும், அம்மாவும் கூட அதே தான் நெனச்சிருப்பாங்க... எல்லாரோட விருப்பமும் நீயும் நானும் சந்தோஷமா இருக்கனும்றது தான்.

அவங்க ஆசைப்பட்டபடி இனி நாம கண்டிப்பா சந்தோஷமா இருப்போம். அதுல எந்த சந்தேகமும் இல்லே. ஆனா அதை பாக்கனும்னு ஆசைப்பட்டவங்களை ஒதுக்கி வச்சா நம்ம வாழ்க்கை எப்படி டீ ஃபுல்பில் ஆகும்!!! இதுக்கும் மேல நான் செஞ்சது தப்புனு நெனச்சா எனக்கு என்ன தண்டனைனாலும் கொடு" என்றிட, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளை நகர்த்தி நிற்க வைத்து "மொதோ எல்லா திங்க்ஸையும் எடுத்து வைப்போம்... சரியா!!" என்று ரெம்ப பொறுப்பாகக் கூறிட, சரியென தலையசைத்து, மளிகைப் பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு நகர்ந்தவளை அழைத்தான்.

"சுண்டு அதை வெச்சிடு... இந்தா இதை எடுத்துட்டு போயி என் ரூம்ல வை" என்று கூறியவனை முறைத்து, "உன் ரூம்மா?" என்றாள்.

"நம்ம ரூம்னு தான் சொன்னேன் டீ" என்று அப்படியே மாற்றிக் கூறினான். "அந்த பயம் இருக்கட்டும்" என்று கூறி பழுப்புக் காகிதம் சுற்றப்பட்டிருந்த பெரிய ஃப்ரேமை எடுத்துச் சென்றாள்.

இந்தர் அவள் பின்னாலேயே மளிகைப் பொருள் பெட்டியை எடுத்துச் சென்றவன்,எதிரில் வந்த தாராவின் கையில் திணித்துவிட்டு, தன் மனையாளை பின் தொடர்ந்தான்.

அறைக்குள் சென்ற மறுநிமிடம், "கட்டிப்பிடிக்கிற வேலைலாம் வெளிய வெச்சாடி செய்வாங்க!!" என்றபடி அவளை பின்னால் இருந்து அணைத்தான். அதனை எதிர்பார்த்திடாதவள்,

"சரியான ஃப்ராடு டா நீ... இதுக்கு தான் என்னை ரூம்முக்கு தள்ளிட்டி வந்தேயா?" என்றபடி கையில் இருந்த ஃப்ரேமை கட்டிலில் தூக்கி எறிய, "ஏய் பாத்து டீ" என்று அவளை விடுத்து ஃப்ரேமை எடுத்து பிரித்துக் காண்பித்தான்.

அதில் அவர்கள் திருமணத்தின் போது இந்தர் மிர்லாவின் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைக்கும் போது எடுத்தப் புகைப்படத்தை சற்று பெரிசு செய்து ப்ரேம் செய்திருந்தான்.

"எல்லா ஃபோட்டோலேயும் ரெண்டு பேரும் உம்முனு தான் இருந்தோம்... இந்த ஃபோட்டோ கொஞ்சம் ரொமான்டிக்காத் தெரிஞ்சது.... அதான் இதை ஃப்ரேம் பண்ண சொன்னேன்... உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப...." என்றபடி மீண்டும் அவன் அருகே அவன் தோளை அணைத்தபடி நின்றாள். அவளின் தலையில் முத்தமிட்டவன், அவளுடன் இணைந்து அந்த புகைப்படத்தை எங்கே மாட்டுவது என்று இடம் பார்த்து மாட்டிவிட்டான்.

அறையைவிட்டு வெளியே வந்தபொழுது, தாராவின் அன்னை, தந்தை மற்றும் தம்பியும் உள்ளே நுழைந்தர். அவர்களை வரவேற்ற மிர்லா தன் தந்தையின் அருகே சென்று,

"அப்பா இது தாராவோட அப்பா, அம்மா, தம்பி" என்று சகஜமாகப் பேசிட, அவரோ வந்தவர்களை கவனிக்காமல் இரண்டு வருடங்கள் கழித்து தன்னோடு பேசும் மகளைக் கண்டு கண் கலங்கியபடி அணைத்துக் கொண்டார். மிர்லா தந்தையோடு சேர்த்து தாயையும் அணைத்துக் கொண்டாள்.

மிருவின் தந்தை வந்தவர்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு அவர்களுடன் பேச அமர்ந்தார். ருக்கு வெளியே சிரித்தாலும் இதே போல் ஒருநாள் தன் மகனும் கோபம் தனிந்து தன்னோடு பேசிவிடுவான் என்ற நம்பிக்கையை தனக்குத் தானே கூறிக்கொள்ள, கலங்கிய கண்களை துடைக்க ஆளின்றி தனித்து சென்று தன் துயரம் கரைக்க முற்பட்டார்.

அதனைக் கண்ட கபி அவரின் அருகே செல்ல நினைக்க அதற்கு முன்பாகவே தாரா ருக்குவை பின் தொடர்ந்திருந்தாள். அதனைக் கண்ட நொடி கபியின் மனதில் என்னவள் என்ற பெருமிதம் அளவில்லாமல் விரிந்தது.

தாரா ருக்குவுடன் இணைந்து கொள்ள, கபி தாராவின் தம்பியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

அன்றைய பொழுது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவே கரைந்திட, தாராவின் குடும்பம் அவர்கள் இல்லம் திரும்பிவிட, மற்றவர்களை கபி தன்னோடு அழைத்துச் செல்வதாகக் கூறினான்.

"எல்லாரும் இங்கேயே இருங்களேன்... கபி நீயும் ஆன்டியும் கூட இங்கேயே இருங்க... ப்ளீஸ்" என்றாள் மிர்லா.

"நாளைக்கு காலைல வரோம்... அதுக்குள்ள எங்களுக்கு காஃபி, ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் ரெடி பண்ணி வை... கும்பகரணி மாதிரி தூங்காதே..." என்று அவளுக்கு விளையாட்டாக பதில் கூறியவன், இந்தரின் அருகே வந்து

"ஆல் தீ பெஸ்ட் மச்சான்... இன்னைக்கு ஒரு நைட்டாவது அவகிட்ட அடிவாங்காம இரு...." என்று அவன் காதை கடித்துச் சென்றான். கபி கூறிய தோரணையில் இந்தர் எச்சில் கூட்டி விழுங்கி அதனையே தான் தன் மனதிலும் நினைத்துக் கொண்டான்.

அனைவரையும் கீழே பார்க்கிங் வரை வந்து வழியனுப்பியவள், திரும்பிப் பார்க்க அங்கே இந்தர் இல்லை. "எல்லாரும் போற வரைக்கும் நின்னா என்ன ராஸ்கல்..." என்று திட்டியபடி வீட்டிற்குள் நுழைய வீடு முழுதும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

"உப்பேன்" என்றபடி விளக்கு சொடுக்கியில் கை வைக்கச் செல்ல அவள் கையைப் பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன், அவளைப் பேசவிடாதபடி அவள் இதழ்களைச் சிறை செய்திருந்தான்.

'அப்பாடா திட்டு வாங்காம தப்பிச்சாச்சு... அய்யோ... அடிப்பாவி முத்தத்தைக் கூட ரசிச்சு கொடுக்க முடியாதபடி பயந்து பயந்து கொடுக்க வெச்சுட்டாளே!!!' என்றது அவனது மனசாட்சி.

அடுத்த நொடி அவளை கையில் ஏந்திக்கொண்டு அறைக்குள் நுழைந்தான். அங்கே இசைக்கருவியின் உதவியில் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது.

வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா....

ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட
ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு
கூறும் என் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக...

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

இதுக்கு மேல அங்கே இருந்தா இந்தரே அடிச்சு தொரத்திடுவான் வாங்க போயி கபிய பார்க்கலாம்...

கபியின் அறையில் யோகனும் அவன் மனைவியும் படுத்துக்கொள்ள, ருக்குவின் அறையில் மிர்லாவின் தந்தையும், கூடத்தில் பெண்கள் மூவரும் உறங்கினர். கபி வெகு நாட்களுக்குப் பின் மொட்டைமாடியில் நிலவைப் பார்த்தபடி இயர்பட் உதவியுடன் இசையில் மூழ்கிக் கிடந்தான்.

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் அங்கு குடியேருமோ
கொஞ்சம் நடித்தேனடி
கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..


காலைப்பொழுதில் இருந்து தன்னவளோடு தான் வம்பு வளர்த்ததையும் அதற்கு பிரதிபலிப்பாக வெட்கம் கொண்டு சிவந்த பெண்ணவளின் வதனத்தையும் நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தான்.



-தொடரும்​
 
Top