• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

புதுமனை புகுவிழா (அத்தியாயம் 17)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
புதுமனை புகுவிழா


அத்தியாயம் 17


கங்காதேவி வெயிலில் காத்துக்கிடந்தாள்.. எந்தவொரு பஸ் கிடைக்காமலும்.. ஆட்டோவுக்காக நின்னுக் கொண்டிருக்க… அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த சமயத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றதைக் கார்த்திகேயன் கவனிக்க…


நம்ம அம்மா தானா!..என்று அருகில் போய் பார்த்தான்.. நம்ம அம்மாவே தான்… இவங்க வீடு எங்க இருக்குதுனு தெரிஞ்சுக்கனும்னா!..முதலில் இவங்க எந்த ஆட்டோவில ஏறுகிறார்கள் என்பதைச் சற்று அருகில் நின்னு கவனிக்கனும்…


கங்காதேவி ஆட்டோவில் ஏறிய பின்பு.. அவங்க அம்மாவைப் பின் தொடர்ந்தேன்….பைக்கில் செல்கிறான்.. ஒரு வழியாக அவங்க அம்மாவின் வீட்டைக் கண்டு பிடித்து விட்டான்…


ஆட்டோவில் இறங்கி,பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்…


அப்பாடா!.. அம்மாவும்,அப்பாவும் இங்கு தான் இருக்கிறார்கள்…பிறகு வந்து அம்மா அப்பாவைச் சந்திக்கலாம் என்ற யோசனையில் கிளம்பினான்… நம்ம மேடம் கொடுத்த வேலையை முடிச்சுட்டு அப்புறம் வந்து பேசுவோம் என நினைத்து திரும்பிச் சென்றான்..


தினேஷ் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் அவங்க அப்பா ஜெயச்சந்திரன்.. அவனுடைய கார் வந்து நின்றது.. தினேஷ் வருவதை பூ போட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்…


அப்பா!.. எதுக்கு இந்த வரவேற்பு ...என்றான்.. தினேஷ்…


டேய்.. நம்ம கடைக்கு முதன்முதலில் வருகிறாய்… இத செய்யனும்ல அது தான் மரியாதை என்றார்…


கடையில் வேலை பார்க்கும் நபர்கள் இவ்வளவு தானா!..என்றான் தினேஷ்…


ஆமாம்.. டா.. மகனே…


தினேஷ் மனசுக்குள். ச்சே எந்த பொண்ணும்மே அவ்வளவா நல்லா இல்லையே!..ஒரு தமிழ்நாட்டுப் பெண் என்ற கலாச்சாரம் இருந்தால் மட்டும் போதுமா…கண்ணுக்கு அழகாக இருக்க வேண்டாம்மா மனதில் பேசிக் கொண்டான்…


அவங்க அப்பா, அவனது தோள்பட்டையை தொட்டதும்,.. ம்ம்ம். சொல்லுங்க!..பா. வா. வந்து இந்த சேரில் உட்காரு என்றதும் அவனும் அமர்ந்தான்…


ரேஷ்மா!.. கடையல் பணிபுரியும் எல்லாரும் வந்துட்டாங்களா!..

.

ஐயா,.. சாந்தினிகா மட்டும் வரல…


ஏம்மா!.. அவளை போய் கூட்டிட்டு வா, அதுவும் நான் வரச் சொன்னேன் சொல்லி அழைத்து வா என்றார்..


அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு இவங்க எல்லாரும் நல்லா வேலைப் பார்ப்பாங்க!.. இவங்கள விட மிகப்பெரிய டிசைன் வேலையை செஞ்சு முடிக்கிறது சாந்தினிகா.. அவளால் தான் இந்த டெக்ஸ்டைல் கடை முன்னேறியது…


சாந்தினிகா என்று கூப்பிட்டதும் வந்து நின்றாள்… அவளைப் பார்த்த தினேஷ் .அவளது அழகை கண்டு வியந்து போய் இப்படியும் ஒரு அழகான தேவதையை பார்த்தது இல்லையே… எதுவும் பேசாமல் இருந்தான்…


சார்.. வணக்கம்.. வணக்கம் என சொல்ல அவனே அழகை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க பேசுவதை கவனிக்காமல் திகைத்து போய் இருந்தான்…


பிறகு ஜெயச்சந்திரன் தினேஷ் என சத்தமாக அழைத்ததும் சுய நினைவுக்கு வந்தான்…


ம்ம்ம்.. வணக்கம்… உங்க பேரு..


டேய்!.. இவளுடைய பெயர் சாந்தினிகா… இவள் செய்யும் டிசைன் அவ்வளவு அருமையாக இருக்கும் எனப் பெருமையாக சொன்னார் ஜெயச்சந்திரன்…


ஓ.. கோ.. உங்க கடையிலே இப்படி ஒரு திறமையான பொண்ணு இருக்கிறாங்களோ!.. வெரி குட் ஜாப் என்று கை கொடுத்தான்…


ஆனால் சாந்தினிகா கையெடுத்து கும்பிட்டு நன்றி.. சார்… என்றாள்

..அவளது பணியைத் தொடர சென்றாள்…


ம்ம்ம்.. வெரி.. நைஸ்.. அண்ட் வெரி பியூட்டிபுல்.. என்று மனதில் நினைத்தான்… அனைவருக்கும் பிரேக் விட்டதும்.. காபி, பிஸ்கட், மிக்சர்.. எல்லாமே இருந்தது.. ஆனால் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் காபி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தாள்…


ரேஷ்மா,சிவானி இருவரும் காபி, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டே பேச… தினேஷ்யைக் கவனித்து கொண்டு இருக்க, அவரது பார்வை சாந்தினிகாவின் மேல் பட, அதை கண்டு கொள்ளாமல் மாடிக்குச் சென்றாள்…


சேலையில் ஒர்க் செய்வதை ஆரம்பிக்க, தினேஷ் கடையைச் சுத்தி பார்த்துட்டு வருகிறேன் என மெதுவாக மாடிக்குச் செல்கின்றான்…


கார்த்திகேயன் உள்ளே நுழைய அவரை பார்த்ததும் அமருங்கள் என்று கூற ,பிறகு ஜெயச்சந்திரனிடம் விவரத்தைக் கேட்டுக்கொண்டிருக்க.. ஒர்க் பண்றவங்கள நேராக எங்க கடையில் வந்து செஞ்சு கொடுத்துட்டு போவாங்களா! என்று மேடம் கேட்கச் சொன்னார்கள்…


அவள் எப்போதும் வேறோரு கடைக்குப் போய் டிசைன் செய்தது கிடையாது.. நேராக இங்கேயே கொடுத்தால் செஞ்சு முடித்து விடுவாள்.. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை என்பதால் அன்று மட்டும் அவள் வீட்டிலேயே தான் இருப்பாள்… நீங்க எத்தனை சேலை செய்யனும் ..எந்த மாதிரி ஒர்க் என்கின்ற detail சொல்லுங்க.. அதன்படி அவளிடம் பேசிக்கிறேன்…


அதற்கு கார்த்திகேயன் சார்.. எங்களுக்கு இப்போது 100 சேலைகள் வேணும்.. அதுக்கு எவ்வளவு ஆகும்.. அட்வான்ஸ் எம்புட்டு கொடுக்கனும் என்று தெளிவாக சொல்லிட்டீங்கனா எங்க மேடத்துக்கிட்ட சொல்றதுக்கு ஈஸியாக இருக்கும்…


சிவானி ...போய் சாந்தினிகாவை அழைத்து வா எனக் கூற, அவளே கீழே இறங்கி வந்தாள்..


இதோ, சாந்தினிகாவே வந்து விட்டாள்… .வாம்மா!.. இவங்க நுங்கம்பாக்கம் ஏரியாவில் இருக்ககூடிய சங்கீதா டெக்ஸ்டைல்ஸ் சூப்பர்வைசர் எனச் சொன்னதும் வணக்கம் அண்ணா என்றார்…


அந்த பெண் யாரென்று தெரியாது. அவள் என்னை அண்ணா என்று அழைக்கும் போது என்னம்மோ என்னோட தங்கேயே நேரில் அழைப்பது போல உணர்வு தோன்றுகிறது…


அண்ணா!..வணக்கம்… எனச் சொன்னதும்…


ஆமாம்.. மா..


சொல்லுங்க ஐயா… இந்த மாதிரி நூறு சேலைகளுக்கு ஒர்க் பண்ணனும்மா!..அது எவ்வளவு ரேட் என்பதை தெளிவாக சொல்லி விடு…


ஐயா!.. எப்போதும் நீங்க தானே சொல்வீங்க!.. அப்படியே பேசுங்க!.என்று சாந்திக்கு சொல்ல, அவரும் அதன்படியே.. ஒரு சேலையோட ரேட் 500 ரூபாய்.. இதுவே அவள் வேலையைப் பொறுத்து இருமடங்காகும்.. அதனால் 800ரூபாய்….



சார் எனக்கு ஒரு டவுட்… சேலை நாங்க தான் கொடுகக போகிறோம்… அப்புறம் எதுக்கு சேலைக்கு ரேட் தேவையில்லையே!.. அவங்க ஒர்க் பண்றதுக்கு மட்டும் சொல்லுங்க என்றான்…


ஓ.. கே.. ஒர்க் பண்றதுக்கு மட்டும் 600ரூ வரும்… ஏனென்றால் அவள் வேலை செய்யும் நேரத்தைக் கணக்கில் கொண்டு சொல்கிறேன்… 60,000 வரும் என்று முடிவாக கூறினார்…நீங்க அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அப்படியே கொடுங்க என்றார்…


ஓ.. கே.. சார்.. நான் மேடத்திடம் பேசிட்டு மாலையில் வருகிறேன் என்றான் .


தினேஷ் மாடியிலிருந்து கீழே இறங்கி வர.. சாந்தினிகாவைப் பார்த்து, இவ என்ன நம்ம மாடிக்குச் சென்றால் இவ வேலை செய்யாமல் கீழே வந்து நிக்கிறா.. ஒரு வேளை நம்ம அவளைப் பார்க்கிறத பார்த்துட்டாளோ என்று சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது…


சாந்தினிகா, மனதிற்குள்ளே தினேஷ் சார் கீழ வந்துட்டாங்க,நம்ம அப்படியே மாடிக்குப் போவோம் என நைசாக நழுவினாள்…


ஏய்!.. நில்லும்மா.. எனக்கு ஒரு மரியாதை கொடுக்கமாட்டேங்கிறாங்க என்றான் கோபமாக…


டேய்!.. தினேஷ் என்னடா ஆச்சு… சாந்தினிகாவை ஏன் திட்டுற…


அப்பா.. அவங்க டிசைன் பண்றத பார்க்க மாடிக்குச் சென்றேன்.. ஆனால் சாந்தினிகா.. டிசைன் செய்யாமல் கீழே வந்துட்டாங்க.. பா..


தினேஷ், அவளை நான் தான் வரச் சொன்னேன்… இப்ப என்ன அவ டிசைன் பண்றத நீ பார்க்கனும்.. அவ்வளவு தானே…


சாந்தினிகா… நீ போய் சேலையை எடுத்துட்டு கீழ வந்து ஒர்க் பண்ணும்மா!.. என்றதும்..வேண்டாம்ப்பா… .அவங்க மாடியிலேயே வேலை பார்க்கட்டும் நானே அப்புறம் பார்த்துக்கிறேன் என்றான்…


சரிடா. தினேஷ். அப்பா வீட்டுக்குப் போய்ட்டு உனக்கு சாப்பாடு கொண்டு வரச் சொல்லட்டும்மா!.. நீயே வந்துடுவியா..


இல்லப்பா!.. என்னால் இந்த வெயிலில் வர முடியாது.. நீங்க போய்ட்டு வரும் போது சாப்பாடு கொண்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தான்…


பவத்திரன் அவளைத் தேடி அலைந்து கொண்டு தான் இருந்தான்.. அப்போது அவளுடைய தங்கை அர்ச்சனா போன் செய்தாள்…



பவித்திரன் பட்டனை அழுத்தி.. சொல்லும்மா,, அர்ச்சனா நல்லா இருக்கியா.. டா…


ம்ம்ம். நல்லா இருக்கிறேன்… .நீ எப்படி அண்ணே இருக்கிறாய்?....நானும் ஏதோ இருக்கிறேன்… அண்ணே நீ எங்க இருக்குற, அத்தை சொன்னதுக்கப்புறம் தான் விஷயமே தெரியும்…


அங்க வேலை முடிஞ்சதா என்று கேட்டாள்… அதற்கு பவித்திரனும் இல்லம்மா!.. இன்னும் முடியல…


சீக்கிரமாக வேலையை முடிச்சுட்டு வா.. நீ இல்லாமல் வீடே நல்லா இல்ல… என்றாள் கவலையோடு…


அர்ச்சனா இந்த மாதிரி நேரத்துல நீ எதை நினைத்தும் வருத்தப்பட கூடாது.. அண்ணன், எப்படியாவது வேலையை முடித்து விட்டு சீக்கிரமாக வர முயற்சி செய்கிறேன்… அதனால்.. நீயும் மாசமாக இருக்கிறாய்,..உன்னோட உடம்ப நல்லபடியாக பார்த்துக்கொள்… நேரத்துக்கு நேரம் நல்லா சாப்பிடு ரெஸ்ட் எடு என்றான்… அர்ச்சனாவிடம் பேசி முடித்து விட்டு போனை வைத்தான்… .


பவித்திரனின் அடுத்ததாக சிந்திக்க.. சாந்தினிகா எப்போதும் போல மாரியம்மன் கோவிலுக்கு வருவாள்.. அந்த கோவிலுக்குச் சென்று வரலாம் எனக் கிளம்பினான்…


சாந்தினிகா வேலைப்பார்ப்பதை ரசிப்பதற்காக மாடிக்குச் சென்றான்… கீழே உள்ள ரேஷ்மா, சிவானி இருவரும்.. கிசுகிசுவென பேசினார்கள்…

தினேஷ் நின்னுக் கொண்டிருக்க ,சேலையில் செய்யும் அழகை பார்த்துக் கொண்டிருந்தான்…ஏம்மா.. ஒரு சேலையில் பண்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டான்..


அப்போது சாந்தினிகா..சார் ஒரு சேலையில் பண்றதுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம் இல்ல இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்…

சேலைக்கும் டிசைன் வைக்கிறத பொறுத்து தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்…


ஓ.. கே.. நீ வேலையை செய்யும்மா என்றான்…


சாந்தினிகா ஓரக்கண்ணால் தினேஷ்யை நோக்க… அவனும் பார்த்தான்….

சாந்தினிகா,மனசுக்குள்ளேயே,. ச்சே.. இவரு வந்ததில் இருந்தே என்னை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்.. பேசாமல் நம்ம ஐயா வருவதற்குள் சாப்பிட்டு வந்திடலாம் என்று நினைத்து அந்த சேலையில் வேகமாக எம்பிராய்டரி செய்துக் கொண்டிருந்தாள்…


தினேஷ் வேற சேலையை பார்ப்பது போல் அவளை நோக்கினான்… அப்போது அவள் சட்டென்று எழுந்தாள்..


என்னம்மா!.. எங்க போற…


சார், மணி இரண்டு மணி ஆயிடுச்சு… சாப்பிட போகிறேன் என்று சொல்லிட்டு கீழே இறங்கி ரேஷ்மாவுடன் சாப்பிட அமர்ந்தாள்…


ரேஷ்மாவும், சிவானியும் அவளை கிண்டலாக பேசினார்கள்… ஏய்!.. சாந்தினிகா..தினேஷ் சார் வந்ததில் இருந்தே உன்னை தான் பார்த்துட்டே இருக்கிறாரு.. உம் பின்னாலேயே சுத்தி சுத்தி வருகிறாரு.. என்னடி எதுவும் உங்களுக்குள்ள அப்படி இப்படினு இருக்கா!..


ஏன்டி.. உங்களுக்கு என்ன?.. கிண்டலாக இருக்கா.. என்று சொல்லி கண்ணீர் விட்டாள்..சாந்தினிகா...


சாந்தினிகா,.. நாங்க சும்மா தான்டி பேசினோம்… அழாதே.. டி.. என்னடி. ஆச்சு.. நீ இப்படி அழுததைப் பார்த்ததில்லையே.. உங்க வீட்டுல எதுவும் பிரச்சினையா!..எனக்கேட்டாள் ரேஷ்மா…


இல்லடி… தினேஷ் சார்.. பார்வையே சரியில்ல… என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்...அவர் அப்படி பாக்கிறது எனக்கு ஒரு மாதிரியாக இருக்குதுடி.. மாடியில் ஒர்க் செய்யும் போது வந்து தொந்தரவு பண்றாரு...இந்த கடையில் வேலை பார்க்கவே இஷ்டமில்லை…. என்று சொல்லி அழுகிறாள்…


மாடியிலிருந்து கீழே வந்து சாந்தினிகா என்று கூப்பிட்டான் தினேஷ்..அவளோ பதில் எதுவும் கூறாமல் இருந்தாள்… .


மீண்டும் வருவாள் சாந்தினிகா…. .
















.
 
Top