• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூக்கள் _1

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
ஏய் கரியா..."

"எங்க ஒங்கப்பன் ?"

" பெரிய வீட்டம்மா சாவுக்கு கட்டை அடுக்காம தண்ணியப் போட்டுட்டு படுத்துட்டானா ?"

"சீக்கிரம் வந்து வேலைய
முடிக்கச்சொல்லு"

"வருவானா இல்லை
வேற ஆளு பார்க்கணுமா ?"

"இல்ல நீ வந்து கட்டை அடுக்கி அந்தம்மாவுக்கு காரியத்தை முடிச்சுக்கொடு" என்றதும்

"நான் காலேஜ் போகணுங்க எசமான்".

"ஆமா தொற படிச்சு கலெக்டர் உத்தியோகத்துப் போகப்போறாரு"

"போடா போயி வேலயப்பாரு " நக்கலாகச் சொல்ல..

"இல்லங்க எசமான் இன்னிக்கு செமஸ்டர் இருக்கு" என்றான் கரியன்.

"அட சொல்ல சொல்ல எதிர்த்தா பேசுற ?"
"அப்பறம் ஒங்க குடும்பத்த ஒதுக்கி வச்சு இனி வேலயே கிடைக்காம பண்ணிருவேன் ஜாக்கிரதை..."
மீசய முறுக்கிபடி நாட்டாமை வேலு சொல்ல..

கண்ணீர் தாரை தாரையாக
வழிய..நா..தழுதழுக்க..
பேச வந்தததைத் தொண்டைக்குழிக்குள் விழுங்கியவாறே ..

"சரிங்க எசமான் "..
என்றபடி தனது பேக்கை வீட்டிற்குள் எறிந்துவிட்டு இடுகாட்டை நோக்கி நடந்தான் கரியன்.
**********

அடுக்கிய கட்டைகளைச் சரிசெய்து எரியூட்டுவதற்குத் தயார் படுத்தலானான் கரியன்.

கீழ்சாதிக்காரன் படித்து முன்னேறுவதற்கு எத்தனை தடைகள் .

சாதியையும் வேலையையும் கேவலமாக எண்ணும் இந்த சமுதாயம் எப்போது மாறப்போகிறதோ ?
எனத் தனக்குத்தானே பேசியபடி
அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான்.

கரியன் ...

ஊரின் வடக்குபுறத்தே பிணங்களை எரிக்கும் குலத்தொழில் செய்யும் சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னன் _மாதங்கிக்கு மூத்தமகன்.

ஆர்த்தி குணவதி மாரி எனத் தங்கைகள் மூவர் ,

பொழுதன்னைக்கும் குடித்துக் குடித்துக் குடலை வேகவைத்து எங்காவது ரோட்டாரதில் தான் வளர்க்கும் பன்றிகளோடு கிடந்து உழலும் அப்பாவி ஜீவன் அப்பா.

எதிர்த்துப்பேசினால் எங்கே அடிவிழுமென்று தனக்குள்ளே அழுவதைத்தவிர ஒன்றமறியா பேதையாய்க் கொண்டு வருவதைக் கொண்டு சமைத்துப்போடும் வெகுளியாய் அம்மா.

தாய்மாமன் வேடியப்பன்_மருளாயியின் மகளாகப்பிறந்து அத்தை மகனையே கட்ட வேண்டுமென பின்னாலே அலையும் மரிக்கொழுந்தை சின்சியராகக் காதலிப்பவன்

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தாலும் தன்மானம் இழந்துவிடக்கூடாதென
தன்னை வருத்திப் படித்து இன்று இளங்கலை மூன்றாம் ஆண்டின் இறுதியில் இருக்கும் மாணவன்.

இப்போது இறந்த பிணத்தின் இறுதிச்சடங்கினை முடிக்க இதயம் வெடித்துக் காத்திருக்கிறான்
சுடுகாட்டில்....

******

ஊரில் உள்ள மலர்களை எல்லாம் மொத்தமாக எடுத்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு சொர்க்க ரதத்தை அலங்கரித்து பெரிய வீட்டு அம்மா ரேணுகாவை
பாடையில் ஏற்றி வானவேடிக்கை முழங்க வரும் பாதை முழுவதும் பூக்களைத்தூவி ..
நாலைந்து குடிக்காரர்கள் ஆடிவர
எடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

எரியப்போகும் உடலுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா ?
இத்தனை பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருந்தால் பத்து குடும்பங்கள் பசியாறியிருக்கும் ஒருமாதகாலத்துக்கு.
என்ன செய்வது இயலாமை.. தனக்குள் எழுத்ததைத் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு காத்திருக்கலானான்.
தன் கடமையை முடிக்க ..
கருகப்போவது ரேணுகா மட்டுமல்ல..
தன் கனவும் என்பது அப்போது அவன் அறிந்திருக்கவில்லை...
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அச்சச்சோ... கரியன் செமஸ்டர் தேர்வு எழுதப் போக முடியாதோ?