• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூக்கள் _2

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
பூக்கள் _2
*******

"என்னடா கரியா
அப்படி திருதிருனு முழிச்சிட்டு நிக்குற ?"

"ஆகவேண்டியதப் பாரு
சீக்கிரம்" என அவசரப்படுத்தினார் நாட்டாமை.

கிடையாட்டைப் பத்திக்கொண்டு பட்டியில் அடைத்துவிட்டுத் திரும்பிய மாயன் (கரியனின் சின்ன அப்பப்பா மகன் சித்தப்பா முறை)
கரியன் சுடுகாட்டில் நிற்பதைக் கண்டுப் பதறிப்போய் ஓடிவந்தான்.

"என்ன கரியா நைட்புல்லா பரிட்சைக்கு படிக்கிறேனு கண்ணு முழிச்சு படிச்ச இப்போ
இங்கநிக்குற ? "

" அண்ணன் எங்கே ?
இந்த வேலையை யாரு பாக்கச்சொன்னா ? "

"அப்பா வழக்கம் போல எங்க விழுந்து கிடக்கோ "

"இப்போ பெரிய வீட்டு அம்மா காரியம் பண்ணனும்ல அதான் சித்தப்பா நான் வந்தேன்."

"அட என்ன பையன்டா நீ"

"என்னைக் கூப்பிட்டு விட்டுருக்கலாம்ல"

"சரி சரி நீ கெளம்பு நான் பாத்துக்கிறேன் "
என்றவனை
வழிமறித்து நாட்டாமை

"மாயா வேலபாக்குறவன எதுக்கு தடுக்குற ?"

"அவன் அப்பன் பண்ணுன காரியத்துக்கு புள்ளதா சரி பண்ணனும்
நீ ஒன்வேலைய போயி பாரு."

"ஐ...யா " என ஏதோ சொல்ல முயன்றவனை

" போடா இவரு பெரிய இவரு ,
என்னடா மசமசனு நின்னுட்டு இருக்க ?
போயிவேலையப்பாரு."

" சரிங்க எசமான் " .

" சித்தப்பா நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் "
என்றபடி..
தூரத்தே ஹாரன் அடித்தபடி போகும் கல்லூரி வாகனத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

" மாயா தெக்கே கடற்கரைத்தோப்புல தண்ணிபாச்சாம தென்னங்கன்று வாடிப்போச்சு எம்மவன் சொன்னான்
பாத்திய சரி செஞ்சு இன்னிக்கு தண்ணி பாய்ச்சிடு ""

மத்தியானம்
வேலைக்காரன் மணி சாப்பாடு கொண்டாந்து தருவான் "

" நீ சாப்பிட போறேன்னு உன்வயித்துக்கு தண்ணி பாய்ச்சப்போகாம வேலயப்பாரு , இல்ல தொலைச்சுப்புடுவேன்." என்றார் நாட்டாமை

"சரிங்க ஐயா" என்று கரியனையே பார்த்தபடி நகர்ந்தான்

படிக்கிற பையனை இப்படி படிக்க விடாம பண்ணுறதுல இந்த
மனிதருக்கு அப்படி என்னதான் கிடைக்குமோ ? என மனதிற்குள் எண்ணியபடியே...

கரியன் தன்வேலையைத் தொடர்ந்தான்.
பெரிய வீட்டு அம்மா மங்கலகரமாக முகமெல்லாம் மஞ்சளைப்பூசித் தூங்குபவரைப்போல
பாடையில் தீர்க்க சுமங்கலியாகப் படுத்திருக்க ..
கரியனின் கண்களில் கண்ணீர் தானாகவே கசிந்தது.

காரணம்..
சாதியில் உயர்ந்திருந்தாலும் எல்லோரையும் சமமாகப் பாவித்த நல்ல குணம் படைத்தவர் அவர்.
அவ்வப்போது தோட்டத்தில் வேலை பார்க்கும் போதும் ஏதாவது பொருள் வாங்கிவரச்சொல்லும் போதும் நூறுரூபாயைக் கையில் கொடுத்து
நல்லா படிக்கணும் கரியா என்று அவர் சொன்னதும் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது

இனி யார் இப்படி
சொல்ல இருக்கிறார்கள்.
மகராசி இப்படி சீக்கிரம் செத்துபோகச் செஞ்சிட்டாரே மனசாட்சி இல்லாத கடவுள் என்று தன்னையும் மறந்து கடவுளைத் தீட்ட ஆரம்பித்தான்.

" நாவிதன் எங்கப்பா ?"
நாட்டாமை கேட்க.

" இந்தா வந்துட்டேன் ஐயா "என்றபடி ஓடிவந்தான்.

" தொரைய கூப்பிட்டாதா வருவீகளோ ?" எனத் தனது கோபத்தை நாவிதன் மேல் காட்ட..

தனது துண்டையெடுத்து இடுப்பில் கட்டியவாறு பவ்வியமாகக் குனிந்து நின்றான் நாவிதன்.

" இராமலிங்கம் ஓவேலயச் சீக்கிரம் பண்ணு ".

" சரிங்க ஐயா "
என தன்வேலையைத்
தொடங்கினான்.

" வாக்கரிசி போடுறவங்க வாங்க"என பெரிய வீட்டு அம்மா நெற்றியில் ஒத்த ரூபாயை ஒட்டி ஒரு துண்டை எடுத்து அந்த அம்மாவின் மேல் விரித்து அரிசியைக் கொடுக்க ஒவ்வொருவராக வந்து பத்து இருபது ஐம்பது என ஆளாளுக்குப் போட பணம் நிறைய இராமலிங்கத்திற்கு
முகம் மலர ஆரம்பித்தது.

" கடைசியா யாராவது போடணும்னா போட்டுடுங்க
மூடிடலாமா ?"

" சரி சரி போதும் "
" நீ வேற வேலையப்பாரு "
என்றதும் படையில் இருந்து தூக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகின் மீதுஏற்ற வரட்டிகளைக்
கொண்டு மூட ஆரம்பித்தான் கரியன்.

" கடைசியாக முகத்தைப் பார்ப்பவர்கள் பார்த்துக்
கொள்ளுங்கள் "எனச் சொல்ல ..

"ஆகவேண்டியதப் பாரு இராமலிங்கம்" என்றதும் முகத்தை மூடினான்

சடங்குகள் என்ற பெயரில் குருநாதனே கொள்ளிபோடத் தலையில் மண்குடத்தைச் சுமக்க.. பின்னால் சங்கை ஊதிக்கொண்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு ஓட்டையெனத் தன் கையிலிருந்த அரிவாளால் கொத்தியபடி வர..

மூன்று சுற்று முடிந்ததும் குடத்தைத் தலைப்பக்கத்தில் வந்து உடைத்ததும்
கரியன் தீப்பந்தத்தை எடுத்து குருநாதன் கையில் கொடுத்தான்.

அதுவரை அமைதியாக இருந்த குருநாதன் நெஞ்சில்
எரிமலை வெடித்தது போலக் கதறிஅழுதார். நெருப்பு
ரேணுகா அம்மாவை விழுங்க காவலுக்கு நின்றான் கரியன்..

"ஷபொன்னும் பொருளும் சேர்த்து வைச்சு
புகழ் போதைக்கு தான் மயங்கி
மண்ணாப்போகும் உடலுக்கு மரியாதை தாங்கேட்டுப்
புண்ணாப்போகும் மாந்தர்க்கு
போக்கிடந்தான் இல்லையே "

தன்புத்தியில் தோன்றிய பாடலொன்றைப் படித்தவாறே சிரித்தான் நெஞ்சில் வலிகளைச்சுமந்தபடி...

நெருப்புமூள ஆரம்பித்ததும் கரியன் " சரி ஐயாக்க மாருங்க கிளம்புங்க என்னோட வேலையைப் பார்க்கணும் " என்றதும் நாட்டாமை எல்லோரையும் போகச் சொன்னார்.

நெருப்பு எல்லா பக்கமும் இருந்து அவனைக் கக்க ஆரம்பித்தது.

தொடரும்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இந்த அத்தியாயம் ஆரம்பிச்ச உடனேயே முடிஞ்சு போச்சே சகோ 😒
 
  • Like
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
குட்டி குட்டியா இருக்குங்க எபி 😔
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
கரியன் போல இன்னும் எத்தனை பேர் வெளிய தெரியாம இருக்காங்களோ