வேனிற் பூக்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நமக்குத்தான் எல்லாம் ஒரே மாதிரியாகத்தெரிகிறது நமக்கு மட்டுமே சரியான நேரத்தில் தவறான விசயங்கள் நடக்கிறது என்று கரியன் எண்ணிக்கொண்டிருந்த அதே வேளையில்....
அந்த அரசு மருத்துவமனை பிணவறை முன் நிறைந்த கூட்டம் இன்ஸ்பெக்டரைக் கோபப்படுத்த ...
ஏட்டை அழைத்து
"ஏன் இவ்வளவு பேரை இங்கே நிக்க விடுறீங்க? "
'ஏற்கனவே கொரானா அதுயிதுனு மனுசங்க செத்துட்டு இருக்கானுக" "இதில் ஆக்ஸிடென்ட் வேறு "
" இவனுக என்னடான்னா பிக்னிக் வந்தமாதிரி மாஸ்க் கூட போடாமல் வந்து நிக்கிறானுக ."
" பர்ஸ்ட் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இங்க நிக்க அனுமதினு அனுப்பி விடுங்க சொந்தம் பந்தம் எல்லாம் வீட்டோடு வச்சிக்க சொல்லுங்க " என்றார்.
" ஓகே சார் " என்றபடி ஒரு சல்யூட்டை அடித்து விட்டு தனது லத்தியோடு கிளம்ப ...
"யோவ் ஏட்டு கையேதும் வச்சிடாத பிரஸ்ஸூ அதுஇதுனு போயிடப்போறானுக கொஞ்சம் சத்தம்போட்டு மட்டும் சொன்னா போதும் சரியா " என்றார் .
ஏட்டு மனதுக்குள் சிரித்தபடி இந்த ஆளுக்கு வேற வேலையில்லை பண்ணுனு சொல்லிட்டுப் பார்த்துனு வேற சொல்றாரு.
" வேணும் சொல்ராறா இல்லை வேணா சொல்ராறா "
ஒன்னும் புரியாமல் குழப்பத்தோடு அங்கிருந்த பிணவறைக் காவலாளியிடம் போய்க் கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்ல கூட்டத்தில் சிலர் சரியென்பதுபோல கிளம்பத் தொடங்க அப்பாடானு இருந்தது.
வண்டிக்குள்ளிருந்து இன்ஸ்பெக்டர் கையைக்காட்டி ஏட்டை
கூப்பிட ஓடிவந்தார் .
"அந்த ஆக்ஸிடென்ட் பார்டியைத்தேடி யாராவது வந்தானுகளா கேட்டுக்கோ
எப்போ போஸ்ட்மார்ட்டம் முடியும்னு கேட்டு வா "என்றதும்
"ஓகே சார் "என்று மீண்டும் மார்ச்சுவரி நோக்கி ஓடினார்.
அங்கிருந்த காவலாளி "ஏன் சார் அங்கயும் இங்கயுமா ஓடுறீங்க ?"
" என்கிட்ட சொன்னா கேட்டுட்டு வரமாட்டனா"
" இந்த வயித்தைத்தூக்கிகிட்டு எப்படித்தான் இப்படி ஓடுறீங்களோ?" என்றதும்
" இவன் நமக்காக வருத்தப்படுறானா இல்லை தொப்பையைக் கிண்டல் பண்றானா "தெரியாமல் முறைக்க...
" என்ன சார் அப்படி பாக்குறீங்க ?"
"உண்மையைத்தான் சார் சொல்றேன் .பாவம் நீங்க
நீங்க ஓடுறது கஷ்டமா இருக்கு."
" சரி சரி அதைவிடு , பாடியைக்கேட்டு எவனாவது வந்தானுகளா எப்போ போஸ்ட்மார்ட்டம் முடியும்னு கேட்டு வரச்சொன்னார் இன்ஸ்பெக்டர்.
உள்ள கேட்டுச் சொல்லுறியா?" என்றதும்
"சார் நீங்க எந்த பாடியைக் கேட்குறீங்க ?
கேரளா காரன் மாதிரி ஒருத்தன் கார் ஆக்ஸிடென்ட்ல கொண்டுவந்தாங்களே அவனையா? "
" ஆமாபா ஏன் ஏதும் விசயம் இருக்கா ? " எனக்கேட்க
"சார் அது பெரிய இடத்து விவகாரம் போல தெரியுது."
"அவன் செத்துட்டானு மார்ச்சுவரில கொண்டுவந்து போட்ட இரண்டு மணி நேரம் கழித்து அவன் கண்முழிச்சுட்டான்."
" போஸ்ட்மார்ட்டம் பண்ணப்போன டாக்டர்கள் விழுந்தடிச்சு ஓடப் பிறகு மத்த டாக்டர்கள் வந்து செக்கப் பண்ணிக் கடைசியில் அவன் சாகலைனு கன்ஃபார்ம் பண்ணி பெரிய களேபரமே ஆகிடுச்சு."
" ஏய் என்னப்பா சொல்ற ? ஹாஸ்பிடல்ல இருந்து அவன் செத்துட்டான் நாளை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தரோம்னு சொன்னதாகல இன்ஸ்பெக்டர் சொன்னார்"
"நீ புதுக்கதை விடுற "
" ஐயோ சார் நிசமாவே சொல்றேன் ." " நம்ம டீன் இன்ஸ்பெக்டருக்கு பலமுறை கால் பண்ணி பாத்துட்டு ஸ்டேஷனுக்கும் பண்ணிட்டு கடைசியில் எஸ்.பிக்கு போன் போட கேரளா போலீஸ்கிட்ட பேசி அவங்க ஆளுங்க வந்து ஐடண்டிபை பண்ணிக் கூட்டிப்போயிட்டாங்க. "
" அதை ஏன் இவ்வளவு நேரம் சொல்லல."
" அது எனக்கு தெரியாது சார் ஆனா அந்த ஆளு பெரிய பேக்ரவுண்ட் காரன்னு மட்டும் தெரியுது நம்ம எஸ்.பியே நேர்ல வந்து கை குலுக்கி அனுப்பி வச்சார்னா பாத்துக்கோங்க."
"அப்புறம் நீங்க இந்த கேஸ் விசயமாக வந்தீங்கனு எனக்கு எப்படி தெரியும்.?"
" சரிதான் போ இதை இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னா என்னை நாலு கேள்வி கேட்பாரு.நீயே வந்து சொல்லு "ன்னு சொல்ல...
அவ்வாறே அந்த காவலாளி ஒப்பிக்க டென்ஷனான இன்ஸ்பெக்டர்
"ஐ வான்ட் டு சீ தி டீன் ஆஃப் திஸ் ஹாஸ்பிடல்" என்று கத்த...
டீனுக்கு கால் போட்டு விசயத்தைச் சொல்ல டீன் ரவுண்ட்ஸ் போயிருப்பதாகவும் வந்ததும் சொல்றேனு நர்ஸ் சொல்லவும் போனைத் துண்டித்து வண்டியைவிட்டுக் கீழிறங்கி நேராக ஹாஸ்பிடல் உள்ளே போனார் இன்ஸ்பெக்டர்.
டீன் அப்போதுதான் ரவுண்ட்ஸ் முடித்து வந்து அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் வணக்கம் போட்டபடி உள்ளே நுழைந்தார்.
" வாங்க இன்ஸ்பெக்டர் உட்காருங்க , என்ன விசயம் ? " என்று கேட்க ..
" என்ன சார் நீங்க இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு எனக்கு தெரியப்படுத்தாம ஏதேதோ பண்ணி இருக்கீங்க "
" ஐ ஆம் ரியலி அப்செட் யூ நோ" என்றார்.
"ஹௌ கேன் ஐ எக்ஸ்பிளைன் யூ மிஸ்டர்."
"உங்களுக்கும்,ஸ்டேஷனுக்கும் 10 ,15 முறை கால் பண்ணியும் எடுக்கல "
"பிறகு எஸ்.பிக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு பார்த்தா அந்தாளு கேரளாவில் மாபெரும் செல்வாக்குடைய புள்ளினு தெரிஞ்சது."
" ஏதோ அங்க கட்சியில் முக்கிய பொறுப்புல இருக்காராம்.
அதான் நீங்கள் வராமலேயே அனுப்பிட்டாங்க."
" உங்களுக்கு எஸ்.பி தகவல் கொடுத்துருப்பார்னு நினைச்சேன் ."
"அந்த ஆளு யாரா வேணா இருக்கட்டும் எப்படி சார் எனக்கு சொல்லாம ? " என்று இழுக்க..
"எதா இருந்தாலும் நீங்கள் எஸ்.பி.கிட்ட கேட்டுக்கோங்க சார் "என் டீன் சொல்ல
வேறு ஏதும் சொல்லாமல் கிளம்பி வெளிவந்து காரை எடுக்கச் சொல்ல டிரைவர் ஓடிவந்து எடுக்க வண்டி நேராக எஸ்பி ஆபிஸை நோக்கிப் போனது.