• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 1

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 1 ====== GM

cover.png
அட்டைப் படம்

30 வருடங்களுக்கு முன்...

'பரன் கன்ஸ்டரக்சன்ஸ்' (Bharan constructions) அது சென்னையில் மிக பிரபலமான கட்டிட நிறுவனம்.

"எல்லோரும் இங்கே கவனிங்க. நம் ஓனரோட ஒரே மகன்.. தன்னோட மேற்படிப்பை முடிச்சுட்டு இன்னைக்கு நம்ம அலுவலகத்துக்கு முதல் தடவை வரார். சரியாக 11 மணிக்கு இங்கே இருப்பார். இப்போ மணி 10.30... அவர் வரும் நேரத்தில சேட்டை, அரட்டை-னு அவர டிஸ்டர்ப் பண்ணுற மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க." என்று சீஃப் என்ஜீனியர் (chief engineer) லோகநாதன் தன்னுடைய staff-களிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

"சாரோட பெயர்?" என்று ஒரு பெண் staff கேட்க..

"நம் அலுவலகமே அவர் பெயரில் தான் ம்மா இயங்கி வருது.." என்றார் லோகநாதன் சற்று கேலியாக...

"அப்போ அவர் பெயர் பரன்-ஆ?" என்று மற்றோரு staff கேட்க...

அதற்கு பதில் வேறு திசையில் கேட்டது..

"ஸ்ரீபரன்.." என்று அக்கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஓர் கம்பீரக் குரல் கேட்டது.

"சின்னவர் வந்துட்டாரு..." என்ற வண்ணம் லோகநாதன், ஸ்ரீபரனிடம் சென்று அவனை மிகவும் மரியாதையாக வரவேற்றார்..

" வாங்க சார்.. பெரியவர் உள்ளே ஒரு வேலையாக இருக்கார். அது வரைக்கும் நீங்க GM அறையில் உட்காருங்க." என்ற லோகநாதனின் குரலில் பணிவு தெரிந்தது. இருவரும் GM அறைக்கு சென்றனர்.

லோகநாதன் அந்நிறுவனத்தில் பதினைந்து வருடத்திற்கு மேல் வேலை பார்க்கும் ஓரு நேர்மையான பொறியாளர். ஸ்ரீபரனிற்கு 10 வயதிலிருந்தே அவரை நன்கு தெரியும்.. இருவரும் நெருங்கி பழகினர். 'மேற்படிப்பிற்காக வெளியூர் சென்றவன், நமக்கு எங்கே மரியாதை தரப்போகிறான்? நம்மலையும் ஒரு சாதாரண அலுவலகத்தினராக தான் பார்ப்பான்' என்ற எண்ணத்தில் அவனை மிக மரியாதையோடும், பணிவோடும் பேசிக்கொண்டிருக்கும் லோகநாதனை பார்த்து..

"அங்கிள்.. என்னது இது? எதுக்கு இப்போ யாரிடமமோ பேசுவதை போல பேசிட்டிருக்கீங்க? நான் இப்பவும் அதே ராஜூ தான். முதல்ல என்னைய இப்படி சார்-னு கூப்பிடுறத நிறுத்துங்க." என்றான் ஸ்ரீபரன் சிறு கோபத்துடன்.

ஸ்ரீபரனை வீட்டில் செல்லமாக ராஜூ என்று அழைப்பது வழக்கம். லோகநாதன் அந்நிறுவனத்தில் பல வருடமாக பணிப்புரிவதால், அவரும் அதே பெயரை வைத்து தான் ஸ்ரீபரனை அழைப்பார். தன் குடும்பத்தை தவிர வேறு யாரையும் தன்னை இப்பெயர் கூறி அழைக்க அவன் அனுமதிக்க மாட்டான். லோகநாதன் ஒருவருக்கு மட்டுமே அதற்கு அனுமதி உண்டு.

ஸ்ரீபரன் பேசியதைக் கேட்ட லோகநாதனிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'ராஜூ தம்பி மாறல.. இன்னும் அதே மாதிரி தான் இருக்கு..' என்று மனதிற்குள் எண்ணி சந்தோஷப்பட்டார் அந்த 40 வயது மதிக்கத்தக்க சீஃப் பொறியாளர்.

"என்ன ஒன்னும் பேச மாட்றீங்க? இப்ப நீங்க உங்க வாயால ராஜூ-னு கூப்பிடலைனா நான் உங்கட்ட பேச போவதில்லை. உங்க பேச்சு கா.." என்று பொய் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

" ஹாஹா.. சரி.. ராஜூ தம்பி.. நீங்க இங்க உட்காருங்க.. நான் போய் உங்களுக்கு கூல்டிரிங்க் வாங்கி வர சொல்லுறேன். அப்பா வேலைய முடிச்சுட்டு free ஆனதும் உங்கள்ட்ட சொல்லி அனுப்புறேன். 'இன்னைக்கே உங்கள்ட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும்'-னு பெரியவர் சொல்லிருந்தார். அப்பா கூப்பிடும் வரை உங்களுக்கு எதுவும் தேவைன்னா, என்னைய கூப்பிடுங்க. உடனே வந்திடுவேன். இப்போ போய் கூல்டிரிங்க் சொல்லுறேன்." என்றுக் கூறி அவ்விடத்தை விட்டு நகரப் போனவரை பார்த்து ஸ்ரீபரன்..

"அங்கிள்.. ஐ நீட் காபி.. நாட் கூல்டிரிங்க்ஸ். உங்களுக்கே தெரியும் எனக்கு காபி தான் ரொம்ப இஷ்டம்னு. ஸோ, காபிக்கு சொல்லி அனுப்புங்க.. அப்புறம்.. நீங்களே நேரில் போய் சொல்லாமல், பியூனை இங்க வர சொல்லுங்க. அவனிடம் நானே சொல்லிக்குறேன். நீங்க உங்கள் அறையில் போய் உட்காருங்க." என்றான் ஸ்ரீபரன்..

அவனை திரும்பி பார்த்தவர் கண்ணில் பாசம் பொங்கியது. சிறு புன்னகையுடன் அவ்வறையை விட்டு சென்று பியூனிடம் ஸ்ரீபரனை பார்த்துவிட்டு வருமாறு கூறி, தன் அறைக்கு சென்றார் லோகநாதன்.

சிறிது நேரத்தில் ஸ்ரீபரனின் தந்தை சூர்யக்குமார், தன் பெல்-ஐ அழுத்தினார். அச்சத்தம் கேட்டு பியூன் சம்பூர்ணம், அவர் அறைக்கு விரைந்தான். பியூன் அவர் அறைக்கு சென்றதும், கோபத்தில் கத்தினார் சூர்யக்குமார்.

"சம்பூர்ணம்... என் மகன் எங்கே? 11 மணிக்கு வரேன்னு சொன்னவன் இன்னும் வரலை. மணி எத்தனைனு பாரு. 12 மணி ஆக பத்து நிமிஷம் தான் இருக்கு. ஆபீஸுக்கு டைம்க்கு கூட வர மாட்டேங்கிறான். முதல் தடவை வரான்.. டைமிற்கு வர வேண்டாமா? டைம்-ஐ கூட மேனேஜ் பண்ண தெரியவில்லை. இவனை நம்பி..." என்று இழுத்தவர்.. "வீட்டிற்கு போன் செய்து 'அவன் கிழம்பி விட்டானா?'-னு கேளுங்க.

"ஐயா.. நான் கொஞ்சம் பேசலாமா?" என்றான் சம்பூர்ணம்.

"ம்ம்.."

"பரன் சார் 10.30 மணிக்கெல்லாம் வந்துட்டார். 'நீங்க கூப்பிடும் வர காத்திருக்கிறேன்'னு சொன்னார்." என்றார் சம்பூர்ணம்..

"ராஜூ.. சாரி.. சாரி..பரன் வந்துட்டானா..? இத ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்லல? அவன் வந்ததும் என்னைய பார்க்க அனுப்பியிருக்கலாம்ல?" என்றார் சூர்யக்குமார் சற்று கடினமான குரலில்..

"நீங்க வேலையா இருந்தீங்க ஐயா.."

"சரி.. போ.. போய் பரனை வரச்சொல்லு."

பியூன் சம்பூர்ணம், ஸ்ரீபரனிடம் சூர்யக்குமார் அழைப்பதாக கூறி தன் இடத்திற்கு சென்றுவிட்டான்.

சூர்யக்குமாரின் அறைக்கதவை, மெதுவாக தட்டி, "உள்ளே வரலாமா?" என்ற ஸ்ரீபரனின் குரலில் குறும்பு பொங்கி வழிந்தது...

"ம்ம்..உள்ள வாங்க.." என்ற சூர்யக்குமாருக்கு தன் மகனின் சேட்டை தெரிந்தது.

"உட்காரலாமா?" என்றான் சற்று கேலி சிரிப்புடன்..

"வேண்டாம்.. அப்படியே நில்லு."

"சரி.. அப்பறம் வாயில விரல் வைக்கணுமா?"

"செய்.." என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

வேறு எதுவும் பேசாமல் நின்றுக்கொண்டே கையை கட்டி வாயில் விரல் வைத்து நின்ற தன் மகனைப் பார்த்த சூர்யக்குமாருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறுவலிக்க சிரித்தப்பின்..

"ராஜூ.. போதும்.. வாயிலிருந்து விரலை எடுத்துட்டு, இங்க என் பக்கத்துல உட்காரு. வா." என்றபடி மகனுக்கு தன் அருகிலேயே நாற்காலியை போட்டு உட்கார வைத்தார் சூர்யக்குமார்.

"சரிங்கப்பா.. என்னைய எதுக்கு இங்கே வர சொன்னீங்க? நான் இரண்டு நாளுக்கு முன்னாடி தானே இங்க நம் ஊருக்கு வந்தேன்? அதுக்குள்ள எதுக்கு ப்பா கூப்பிட்டீங்க? எதுவா இருந்தாலும் வீட்டிலையே பேசிருக்கலாமே?" என்றான் ஸ்ரீபரன் கேள்வியாக..

"ஒரு நிமிஷம்.." என்று பெல்லை அழுத்தினார். அப்போது அங்கே வந்த சம்பூர்ணத்திடம்..

"லோகநாதனை வரச்சொல்லு" என்றார் சூர்யக்குமார்

கதவை தட்டி உள்ளே வந்த லோகநாதனிடம், "ஆபீஸ் staffs எல்லோரையும் board roomக்கு வர சொல்லுங்க. ஒரு முக்கியமான மீட்டீங்." என்றார் சூர்யக்குமார்.

15 நிமிடத்தில் ஆபீஸ் staffs அனைவரும் board roomல் இருந்தனர். MD இருக்கையில் சூர்யக்குமார் அமர்ந்திருக்க, அவருக்கு மிக அருகில் ஸ்ரீபரன் அமர்ந்திருந்தான். சூர்யக்குமாரை விட்டு சற்று தள்ளி லோகநாதன் அமர்ந்திருந்தார்.

"எல்லோரும் வந்தாச்சா?" என்று கேட்ட சூர்யக்குமாரிடம் அனைவரும் 'ஆமாம்' என்றனர்.

சூர்யக்குமார் தன் இருக்கையிலிருந்து எழுந்து,
"ஓகே. உங்க எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போறேன். இப்ப... இந்த Second-லிருந்து என்னோட சன்(son) மிஸ்டர்.ஸ்ரீபரன் நம்ம நிறுவனத்தின் GM..அதாவது General Manager ஆக பொறுப்பேற்றுவிட்டார். எல்லோரும் அவருக்கு சந்தோஷத்தோட உங்கள் வரவேற்ப்ப தெரியபடுத்துங்க."

இதனை கேட்டதும் ஆபீஸ் staffs அனைவரும் கை தட்டி வரவேற்றனர். ஆனால் ஸ்ரீபரனிற்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்தது. அதிர்ச்சியில் அவன் வியர்த்து விறுவிறுத்துப் போனான்.

"அப்பா.. என்ன... ஏன் இப்ப திடீர்னு..?" என்று சூர்யக்குமாருக்கு ம்டும் கேட்கும் விதமாக வார்த்தையை மென்று முழிங்கி கேட்டான் ஸ்ரீபரன்.

"ஆமா பரன். நீ வளர்ந்து பெரிய ஆளாக வந்திட்ட. உன் கையில ஒரு பொறுப்ப கொடுக்கணும்னு நினைச்சேன். அதான் இப்படி. இப்ப இருந்து நீ தான் நம் நிறுவனத்தின் GM" என்றார் சூர்யக்குமார் கனிவான குரலில்.

1638445913964.png

ஆனால் ஸ்ரீபரனிற்கு ஏனோ தலை வலிப்பதைப் போல் தோன்றியது. மீட்டீங் முடிந்ததும் GM அறைக்கு சென்று, தன் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான் ஸ்ரீபரன்.

வலிப்பொறுக்காமல் கண்களை முடியவனுக்கு ஏதோ காட்சிகள் வந்துப்போயின.. சட்டென்று விழித்தவன், சம்பூரணத்தை வரவழைத்து தலைவலி மாத்திரை கொண்டுவர சொன்னான். தலைவலி மாத்திரை உட்கொண்டவன், stress அதிகமாகிப்போனதால், அப்படியே உட்கார்ந்த வண்ணம் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்தான் ஸ்ரீபரன்..

அப்போது அவன் கண்களுக்குள் ஓர் நிழற்படம் போல் காட்சிகள் தோன்றின...

"மக்களே..!! இன்று முதல் நம் நாட்டின் இளவரசனாக என் அருமைப் புதல்வன் முடி சூடப்போகிறான். உங்கள் நல்லாசி அவனுக்கு நிச்சயம் தேவை. "
என்று அந்நாட்டின் சக்கரவர்த்தி கூறுகிறார். அதனை கேட்ட மக்களின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது. மகிழ்ச்சியில்,

"இளவரசர் வாழ்க..!! வருங்கால சக்கரவர்த்தி வாழ்க..!!" என்று கோஷமிட்டனர்.

தூக்கத்திலிருந்து சட்டென விழித்தான் ஸ்ரீபரன்..

"என்ன கனவு இது? இளவரசர் இளவரசர்-னு சொல்லும் போதெல்லாம் நான் அந்த இளவரசனாக இருப்பத போல் உணருரேனே??!! யார் அந்த சக்கரவர்த்தி? அவர் பெயர் என்ன? எந்த நாட்டோட சக்கரவர்த்தி அவர்? ஒன்னும் புரியலை." என்றவன் தன் முகத்தை கழுவி தன் இருக்கையில் உட்கார்ந்தான்.
_________________________________

யார் அந்த இளவரசன்? இவனுக்கு ஏன் அப்படி கனவு வரவேண்டும்.? அந்த சக்கரவர்த்தி யார்? இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்..

__________________________________
 

Ramya(minion)

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 27, 2021
405
191
63
India
பேச்சு கானு சொல்ற குழந்தையவ gm ஆக்கணுமானு யோசிங்க சூர்யகுமார் அவர்களே🤗🤗🤣.gm,ilavarasan nu nalla link agudhu..Nice beginning bro..
 
  • Love
Reactions: Priyamudan Vijay

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
பேச்சு கானு சொல்ற குழந்தையவ gm ஆக்கணுமானு யோசிங்க சூர்யகுமார் அவர்களே🤗🤗🤣.gm,ilavarasan nu nalla link agudhu..Nice beginning bro..
Thanksalot 🥰
 
  • Love
Reactions: Ramya(minion)