பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 2
நேர்க்காணல்
அன்று சாயங்காலம் வரை ஸ்ரீபரன் அந்த காட்சியின் நினைவாகவே இருந்தான். வீடு திரும்பியவனை சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஸ்ரீபரனின் தாயாரும் சூர்யக்குமாரின் மனைவியுமான ராகினி..
"ராஜூ.. அப்பா எல்லாத்தையும் சொன்னாங்க டா. ஒருவழியா நம் நிறுவனத்துக்கு நீ GM ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் டா. வா உள்ளே வா. அப்பா உள்ளே தான் இருக்காங்க." என்றவர் உள்ளே ஹாலில் உள்ள சோபாவில் உட்காந்திருந்த சூர்யக்குமாரிடம் 'காபி வேண்டுமா?' என்று விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்களை கடந்து சென்ற ஸ்ரீபரனின் மனது அங்கே இல்லை என்பதை அறிந்த சூர்யக்குமார் அவனை அழைத்தார்.
"ராஜூ.. இங்க வந்து என் பக்கத்துலே உட்கார். உன்னிடம் ஒன்னு கேட்கணும். " என்று தன் அருகில் அவனுக்கு இடம் விட்டு உட்கார்ந்தார்.
அவர் அருகில் உட்கார்ந்த ஸ்ரீபரனின் தோளில் கைப்போட்டு பேச தொடங்கினார்.
"ராஜூ, அப்பா உனக்கு நல்லது தான் செய்வேன் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்குல?"
"ஹான்.. இருக்கு ப்பா." என்றான் யோசனையான முகத்துடன்.
"பின்ன ஏன்டா இப்படி சோகமாக இருக்கிற? அப்பா உன்னைய GM ஆக்குனது பிடிக்கலையா..?" என்று ஸ்ரீபரனின் முகத்தை கூர்ந்து கவனித்தபடி கேட்டார் சூர்யக்குமார்.
இக்கேள்வியை சற்றும் எதிர்பாராத ஸ்ரீபரன், "அப்பா.. அப்படிலாம் இல்ல. எனக்கு சந்தோஷம் தான்." என்றான்.
"அப்பறம் ஏன் டா உம்முனு இருக்கிற?"
"கொஞ்சம் டயர்டு ப்பா" எனக்கூறியபடி தலையில் வலியுள்ளதால் நெற்றிப்பொட்டில் கைவைத்தான்.
"சரி டா.. அப்போ போய் தூங்கு. காபி ஏதாவது..??" என்று சூர்யக்குமார் இழுக்க..
"இல்ல வேண்டா ப்பா.. நான் தூங்கி எந்திரிச்சா சரி ஆகிடும். "
"சரி ராஜூ. போய் தூங்கு. நாளை காலை சரியான டைம் க்கு ஆபீஸ் வந்துடு டா. பை... குட் நைட்.."
"டைம் க்கு ஆபீஸ் வந்திடுவேன் ப்பா.. அப்பறம், கேட்கணும்னு நினச்சேன். எனக்கு பி.ஏ யாரு ப்பா? அவங்க இருந்தால் கொஞ்சம் work load கம்மி ஆகும். அவங்க பெயர் மட்டும் சொல்லுங்க."
"இதுக்கு முன்னாடி இருந்த GMக்கு பி.ஏ-வா இருந்த பொண்ணு... கஷ்யாணம் ஆகி வேலையை ராஜினமா பண்ணிட்டாள். இனி புதிதாக இன்டர்வியூ வைத்து தான் உனக்கு பி.ஏ-வை தேர்ந்தெடுக்கணும். ஏற்கனவே பத்திரிக்கைகள்-ல விளம்பரம் கொடுத்தாச்சு டா. இன்டர்வியூ வருகிற வெள்ளிக்கிழமை வைக்கிறோம்.. நீ, நான் அப்பறம் லோகநாதன் தான் இன்டர்வியூ எடுப்போம். இது மாதிரி ஏதாவது சந்தேகம், தேவைகள் இருந்தால் கேட்டு விடு. சரியா..?"
"சரி ப்பா. தேங்கஸ்.. குட் நைட் ப்பா.. குட் நைட் ம்மா." என்று சூர்யக்குமாரிடமும், ராகினியிடமும் விடைப்பெற்று.. முதல் தளத்தில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டினான்..
சிறு குளியல் ஒன்றை போட்டு உடை மாற்றி படுத்தவனை ராகினியின் குரல் உசுப்பியது.
"ராஜூ.. சாப்பிட்டு போய் படு டா"
கண்களை கசக்கிவிட்டு எழுந்தவன், "இதோ.. வரேன் ம்மா.." என்று கீழே டைனிங் டேபிளுக்கு வந்து சாப்பிட உக்கார்ந்தான். அவனுக்கு எதிரே உள்ள நாற்காலியில் சூர்யக்குமார் தன் உணவை உண்டு கொண்டிருந்தார். சாப்பிட வந்த தன் மகனின் முகத்தில் தெளிச்சி தெரியவும்...
"தலைவலி சரியாகிடுச்சா?" என்று சூர்யக்குமார் கனிவுடன் கேட்டார்.
குளித்துக்கொண்டிருக்கும் போதே அக்காட்சிகளை பற்றி தனது சிந்தனையை மறந்தவனின் முகத்தில் தெளிச்சி தெரிந்தால், அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
அதனால் சூர்யக்குமாரின் கேள்விக்கு, "ஹூம்.. சரியாகிடுச்சு ப்பா.." என்று மலர்ந்த முகத்துடன் கூறினான் ஸ்ரீபரன்.
சாப்பிட்டு முடித்து தன் அறைக்குச் சென்று உறங்கினான். மறுநாள் காலை எழுந்து தன் நிறுவனத்திற்கு சென்று அவனுக்கு வந்த வேலைகளை செவ்வனே செய்து முடித்தான். ஸ்ரீபரன் துருதுருவென இருந்தான். அவன் நடையும் பேச்சும் பார்ப்போரை கவர்ந்தன. ஆண், பெண் என்றில்லாமல் அனைவரையும் தன் செய்கையினால் கவர்ந்திழுத்தான். அவனுக்கு வந்த வேலைகளை வேகமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்தான்.
இப்படியே நாட்களும் ஸ்ரீபரனைப் போன்று வேகமாக நகர்ந்தது. இல்லை இல்லை.. பறந்தது...
வெள்ளிக்கிழமை.. ஸ்ரீபரனிற்கு பி.ஏ இடத்திற்கான இன்டர்வியூக்கான நாள்.. அந்த இன்டர்வியூவிற்கு 50 பேர்க்கு மேல் வந்திருந்தனர். ஒவ்வொருத்தராக அழைத்து, துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகளை போல.. தன் கேள்வி கனைகளை வீசினான் ஸ்ரீபரன்.. அக்கேள்விகளில் சிலர் திக்கு முக்காடினர். வெகு சிலரே திணராமல் ஓரளவு சரியான பதிலை கொடுத்தனர். கடைசியாக ஒரு பெண் மட்டும் மீதம் இருந்தாள். அவளை லோகநாதன் உள்ளே வரும்படி பியூனிடம் சொன்னார்.
உள்ளே வந்த அப்பெண், கதவை தட்டி, "Excuse me sir..உள்ளே வரலாமா?" என்று மிக்க மரியாதையுடன் கேட்டாள். அதுவரை வேகமாக செயல்பட்ட ஸ்ரீபரனிற்கு வியர்க்க ஆரம்பித்தது.
அந்த பெண்ணை உள்ளே வந்து, இருக்கையில் அமரும்படி லோகநாதனும்..சூர்யக்குமாரும் சொன்னார்கள். அந்த பெண் உள்ளே வந்து அமரும் வரை ஸ்ரீபரன் அப்பெண்ணை பார்க்கவில்லை.. அவன் கண் முன் பற்பல காட்சிகள் காற்றை விட வேகமாக வந்துப்போயின.
அவள் வந்து அமர்ந்ததும் லோகநாதன், "உங்க சர்டிபிகேட்ஸ் கொடுங்க" என்று அவள் கொடுத்த file-ஐ வாங்கிப்படித்தார்.. அதனை படித்து விட்டு சூர்யக்குமாரிடம் கொடுத்தார்.. சூர்யக்குமார் அப்பெண்ணிடம், "உங்கள் பெயர்?"என்று தன் முதல் கேள்வியைக் கேட்டார்.
அதற்கு அவள், "என் பெயர் நிறைமதி." என்று அவள் பதிலை, சுருக்கமாக கூறாமல் வாக்கியமாக கூறிய விதம்.. சூர்யக்குமாருக்கும், லோகநாதனுக்கும் மிகவும் பிடித்துப்போனது. இருவரும் தங்கள் பார்வையை பரிமாறிக்கொண்டனர். இதை எதையும் கவனியாது இருந்த தன் மகனை, மெதுவாக தட்டிவிட்டு, 'உன் கேள்விகளை கேள்' என்பது போல சைகை செய்தார் சூர்யக்குமார்.
அப்பொழுது தான் சுயநினைவு வந்தது போல திடுக்கிட்ட ஸ்ரீபரன்.. நிறைமதியிடம், "உங்கள் பெயர்?" என்று அதே கேள்வியை மீண்டும் கேட்டான். அதை கேட்ட சூர்யக்குமார்.. மிக ரகசியமாக, "அத தான் நான் கேட்டுவிட்டேனே.. அவள் பெயர் நிறைமதி-யாம். வேறு கேள்விகளை கேள்." என்று மெல்லியக்குரலில் பரனிற்கு மட்டும் கேட்கும் வகையில் கூறினார்.
இதனைக் கேட்டவன் சற்று செருமிக்கொண்டு, "அஹேம்... ம்ம்.. வெல்.. உங்களுக்கு இன்டீரியர் டிசைனிங் தெரியும்னு உங்கள் ரெசியும்(resume) -ல் எழுதிருக்கீங்க. தெரியும்னா எந்த அளவுக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா மிஸ்.நிறைமதி?" என்று தன் ஒரு பக்க புருவத்தை மட்டும் மேலே தூக்கி கேட்டான் ஸ்ரீபரன்.
"இக்காலத்திற்கு ஏற்ற நல்ல மாடர்னான இன்டீரியரை பர்ஃபக்ட்(perfect)-ஆக செய்வேன். 'டிராஃப்டிங்' (drafting) நல்லா பண்ணுவேன். அதில் சர்டிபிகேட்டும் வாங்கிருக்கேன் சார்." என்றாள்.
அவள் 'சார்' என்று தன்னை அழைக்கவும் ஏதோ ஒரு காட்சி மீண்டும் பரனின் கண்முன் தோன்றியது.
அதில் ஒரு பெண், "குமார சக்கரவர்த்தி..!!" என்றழைத்தது போன்ற காட்சி அவனுக்கு வந்தது.. சிலை போல அசையாது உட்காந்திருந்த தன் மகனை மீண்டும் உலுக்கிய சூர்யக்குமார், "ராஜூ... உனக்கு உடல் நலம் தானே? ஏன் அப்பப்போ அமைதியாகிடுற? முடியலைனா, இதுவரைக்கும் வந்தவர்களிலேயே யார் பெஸ்ட்-னு பார்த்து உனக்கு பி.ஏ-வாக நியமிச்சிடலாம்.." என்றார் கவலைத் தோய்ந்த குரலில்.
"நோ.. நோ.. ப்பா. இவங்களோட கல்வி தகுதி மிக சிறந்ததாக இருக்கு. எனக்கு future-ல் ஏதேனும் நம் தொழில் சம்மந்தமான சிறு உதவினாலும் இவங்கனால ஈசியாக பண்ண முடியும். சோ, இவங்களையும் நேர்காணல் செய்துவிடுவோம். இது போன்று சிறு காரணத்திற்காகவெல்லாம் ஒரு நல்ல ஊழியரை நாம் இழந்துவிடக்கூடாது. நம்ம கன்டினியூ செய்யலாம் ப்பா." என்றான் தெளிவான குரலில் கூறினான்.
அதன்பிறகு ஸ்ரீபரன் எதை பற்றியும் யோசிக்காமல் தன் கேள்விகளை முச்சுவிடாமல் சரவெடி போல வெடித்து தள்ளினான். நிறைமதியும் அக்கேள்விகளுக்கு எவ்வித தயக்கமின்றி விறுவிறுவென பதிலுரைத்தாள். அவளின் இந்த கெட்டிக்காரத்தனமும், படிப்பறிவும் ஸ்ரீபரன் உட்பட நேர்க்காணல் நடத்திய சூர்யக்குமாருக்கும், லோகநாதனுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. மூவரும் கூடிபேசி, இறுதியில் நிறைமதியை ஸ்ரீபரனின் பி.ஏ-வாக நியமித்தனர்.
"வாழ்த்துக்கள், மிஸ்.நிறைமதி. உங்களை என் பி.ஏ-வாக நியமிக்கிறோம்." என்று நிறைமதியின் கண்களுக்குள் பார்த்தவாறே கூறினான்.
அவன் தன் கண்களுக்குள் பார்ப்பது நிறைமதிக்கு ஏதோ செய்யவே.. அவனின் கண்களை நோக்காமல், தன் நன்றியை தெரிவித்தாள்.
"நீங்கள் நாளை முதல் இந்நிறுவனத்திற்கு வேலை பார்க்க வாங்க. 9 மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்திருக்க வேண்டும். தாமதமாக வருவது என் மகனுக்கு பிடிக்காத ஒன்று. " என்றார் சூர்யக்குமார் எச்சரிக்கும் தோணியில்.
"நான் timeக்கு சரியா வந்திடுவேன் சார். அப்பறம், நான் கிளம்பலாமா சார்?" என்று சூர்யக்குமாரை பார்த்து கேட்டாள்.
"ஹும் சரிம்மா. எங்களிடமிருந்து உங்கள் சர்டிபிகேட்ஸ்-ஐ வாங்கிட்டீங்கள்-ல?"
"சர்டிபிகேட்ஸ் என்னிடம் இருக்கு ப்பா." என்றவாறு அவளின் file-ஐ கொடுக்கப்போனவனின் கை, நிறைமதியின் கையை லேசாக உரசவே.. மின்சாரக் கம்பத்தை தீண்டியது போல ஸ்ரீபரனிற்கு தூக்கிப்போட்டது. அதனைக் கண்டு சூர்யக்குமார், லோகநாதன், நிறைமதி.. மூவரும் பதறியடித்தவாறு அவனிடம் பேசினர்..
"ராஜூ.. என்ன டா ஆச்சு? ஏன் இப்போ நெருப்பில் கை வைத்தவன போல தூக்கிப்போட்ட? சொல்லுடா.." என்றார் சூர்யக்குமார் பதட்டத்துடன்.
"ராஜூ தம்பி.. பதில் சொல்லுங்க.. ஒன்னும் ஆகலியே?" என்று கவலையுடன் வினவினார் லோகநாதன்.
ஸ்ரீபரன் ஏதோ அதிர்ச்சியிலிருப்பதை உணர்ந்த நிறைமதி, தான் கொண்டு வந்த குடிநீரை ஸ்ரீபரனிடம் கொடுத்து, அதனை குடிக்குமாறு கேட்டுக்கொண்டாள். ஸ்ரீபரனோ அவளை யோசனையுடன் பார்த்தவாறே அத்தண்ணீரை வாங்கி குடித்தான். தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தவன் நிறைமதியின் கண்களைப் பார்த்தான். அவள் கண்களில் பயம் கலந்த கவலையை பார்த்தவனுக்கோ அவளை சீண்ட வேண்டும் என்றுத் தோன்றியது. யாரும் அறியா வண்ணம் மெல்ல சிரித்தவன், அவளின் தண்ணீர் பாட்டிலை அவளை நோக்கி நீட்டினான். அதனை நிறைமதி வாங்கப் போன பொழுது, அவன் திரும்பவும் அதில் தண்ணீர் குடிப்பதை போன்று நடித்தான். இப்படியே இரண்டு முறை செய்யவும், சூர்யக்குமார் அப்-பாட்டிலை ஸ்ரீபரனிடமிருந்து கிட்டத்தட்ட பறித்துக் கொடுத்தார். நிறைமதி அதனை வாங்கி, அவர்கள் மூவரிடமிருந்தும் விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பிய பிறகு, ஸ்ரீபரனிடம் திரும்பிய சூர்யக்குமார்,
"அந்த பெண்ணை இப்ப ஏன் டா வம்பிழுத்த?" என்றார்.
"தெரியலை ப்பா. ஆனா, நிறைமதியிடம் ஏதோ நிறைய வருஷம் பழகுன feel இருக்கு ப்பா. அதான் கொஞ்சம் சீண்டி பார்த்தேன்." என்றான் சிரித்துக்கொண்டே..
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கவே, நிறைமதிக்கும் அப்படி ஓர் உணர்வு தனக்கும் வந்திருப்பதை உணர்ந்தாள். ஸ்ரீபரனின் முகம் அவள் நினைவில் வந்துப்போக.. ஒரு சிறு வெக்கப் புன்னகை ஒன்றை உதிர்த்தவள், 'சே.. ஒரு நிமிடம் எப்படிலாம் யோசிட்டேன்? அவர் உயரம் எங்கே..? என் உயரம் எங்கே..? இனி இவ்வாறெல்லாம் எண்ணக்கூடாது' என்று தனக்கு தானே கூறிக்கொண்டாள் நிறைமதி.
_____________________________
நிறைமதி எண்ணியதைப் போல்.. அவளால் பரனை நினைக்காமல் இருக்க முடியுமா?
_____________________________
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..