பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 3
கேடி
கடிக்காரம் அலாரம் அடித்தும், அதனை அமர்த்திவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் நிறைமதி. கீழ் தளத்தில் இருந்தாலும் தன் தாய் அவளை வசைப்பாடுவது அவள் காதினில் விழுந்தது.
"எருமைய எவ்வளவு கடனை வாங்கி, படிக்க வைத்திருக்கிறோம்..? படித்த படிப்புக்கு இரண்டே மாசத்தில் வேலை கிடச்சுடுச்சுனு நேற்று தான் சந்தோஷப்பட்டேன். ஆனா கழுதை.. இன்னும் எழுந்திருக்காம, வேலைக்கு சேர்ந்த முதல் நாளே லேட்-ஆ ஆபீஸுக்கு போக போகுது. என்ன தான் திட்டுனாலும் கண்டுக்க மாட்டேங்குது எருமை. திட்டி திட்டி என் தொண்டை தான் வறண்டு போகுது. அடியே...நிறைமதி...!!! எழுந்திரு டி மாடே..!! உன் அப்பா, ஊருல இருக்குற எல்லாரிடமும் கடனை வாங்கி படிக்க வைத்திருக்கிறார். வேலைக்கு போய்.. நீ தான் கடனையெல்லாம் அடைக்கணும். எழுந்து தொலை.. மணி எட்டு ஆகிவிட்டது." என்று நிறைமதியின் தாய் வள்ளி சத்தம் போட.. பதறியடித்து படுக்கையிலிருந்து எழுந்த நிறைமதி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி, காலை 7.30 என கூறியது.
"உஷ்.. ஹப்பா... இந்த அம்மா-க்கு இதே வேலை. டைம்-ஐ மாற்றிக் கூறி எழுப்புவது. அதையும் திட்டிக்கொண்டே எழுப்புவது... காலையிலேயே இப்படி பதறியடித்தால், அன்றைக்கு நாள் எப்படி போகும்..? எவ்வளவு சொன்னாலும் கேட்கிற பாடில்லை." என்று அவ்வறையில் தான் மட்டும் இருக்கிற தைரியத்தில் வெளிப்படையாகவே புலம்பினாள் நிறைமதி.
எவ்வளவு கத்தியும் நிறைமதியிடமிருந்து ஒரு பதிலும் வராததால், அவள் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்றெண்ணிய வள்ளி... தம் கட்டி, தன் மொத்த சக்தியையும் பிரயோகித்து, "அடியேஏஏஏஏஏஏ....... நிறைமதி..... இன்னுமாஆஆஆ எழுந்திருக்கவில்லை??? ஏன் டி எங்கள் பிரானனை எடுப்பதற்கே பிறந்து தொலைச்சியா? எழுந்திருடி கழுதை...." என்று சற்று அறட்டினார் வள்ளி.
"எழுந்து பல் துலக்குறேன் ம்மா.." என்றாள் வாயில் பிரஸ்-ஸை வைத்தப்படியே.
"அதை சொல்லித்தொலைய வேண்டியது தானே..? இப்படி என் ஜீவன் போயிருக்காதுல?" என்று சற்று சாந்தமாக கூறியவாறே டிபன் சமைத்துக்கொண்டிருந்தார் வள்ளி.
அதைக் கண்டுக்கொள்ளாமல் தோள்களை குலுக்கியபடி தன் பல் துலக்கும் வேலையில் மும்முரமாகினாள் நம் கதாநாயகி. அழகிய மஞ்சள் நிற சுடிதாரில் ஆபீஸிற்கு கிளம்பியவள், கீழே டிபன் உண்ண வந்தாள். அங்கே தன் தந்தை ஏற்கனவே தனது டிபனை சாப்பிட்டுக்கொண்டுருப்பதை கவனித்த நிறைமதி, 'எப்படியாவது அப்பாவிடம் இன்று திட்டு வாங்காமல் ஆபீஸ் கிளம்பி ஓடிவிட வேண்டும்.' என்று மனதில் எண்ணியவாறே தன் தந்தை லட்சுமிபதியின் அருகே உட்கார்ந்தாள். நிறைமதிக்கு தன் தந்தையிடம் எப்பவும் ஒரு பயம் இருக்கும். சில நேரம் குறும்பாக பேசி..லட்சுமிபதியிடம் நன்றாக திட்டு வாங்குவாள். இல்லையேல் ஏதேனும் சிறு சேட்டை செய்து தாய்-தந்தை இருவரிடமுமே சேர்ந்து திட்டுவாங்குவாள். ஒரே பிள்ளை தான். ஆயினும் கண்டிப்பு என்ற பெயரில் நிறைமதியை திட்டுவதும் அடிப்பதுமாக இருப்பார்கள். லட்சுமிபதி-வள்ளி தம்பதியரிடம் இருக்கும் ஒரே நல்ல விஷயம், தன் மகளை படிக்க வைத்தது....
எவ்வித சத்தமும் இன்றி தன் தந்தை அருகே, சாப்பிட அமர்ந்தாள் நிறைமதி. அவள் உட்காருவதை தன் ஓரக்கண்ணில் பார்த்த லட்சுமிபதி, "என்னமா? முதல் நாள் ஆபீஸ் கிளம்புற போல?" என்று இட்லியை பிய்த்து தன் வாயில் போட்டுக்கொண்டே கேட்டார். அவர் கேள்வி காதில் விழுந்தும் நிறைமதி, அதற்கு பதிலளிக்கவில்லை. அவள் கவனம் முழுதும் இட்லியிலேயே இருந்தது.
'இன்றும் இட்லியா?' என்று மனதளவில் சலித்துக்கொண்டாள்.
நிறைமதியிடமிருந்து பதில் வராமல் போகவே.. "நிறைமதி....!!!" என்று அதற்றினார் லட்சுமிபதி. தன் தந்தையின் அரற்றும் குரல் கேட்டு தூக்கிவாறி போட்டவளாக, தன் தந்தை புறம் திரும்பி, "அப்பா......." என்றாள் பயந்து போனவளாக.
"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ எதை நினைத்துக்கொண்டு பேசாமல் இருக்க?"
"இல்லப்பா.. இன்னைக்கும் அம்மா இட்லியையே வைத்திருக்காங்க. அதை தான் நினைத்தேன்" என்றாள் வெளிப்படையாகவே.
"போட்டதை திங்க கற்றுக்கொள். அப்பறம் குறை கூறலாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."
'ஐயோ.. என்ன கேட்டு வைத்தார்-னு ஞாபகமில்லையே..??!!' என்று மனதிற்குள் புலம்பியவளுக்கு, சட்டென்று லட்சுமிபதி கேட்ட கேள்வி ஞாபகம் வர,
"ஹும்.. ஆமா ப்பா. இன்னைக்கு தான் முதல் நாள்." என்று இட்லியை சாப்பிட்டவாறே பதிலுரைத்தாள் நிறைமதி.
"ம்ம்ம்ம்.. சரி.. நான் சொல்லுறதை நல்லா கவனி. இப்போ சொல்லுறதை எப்பவும் மறந்திடாதக்கூடாது."
"சரி ப்பா.."
"அப்பா உன்னைய கடன் வாங்கி படிக்க வச்சதே, நீ.. நம்ம குடும்பத்தை மேலோங்கி நிறுத்துவ என்கிற நம்பிக்கையில் தான். வேலைக்குப் போய் நான் வாங்கியிருக்கும் கடனையெல்லாம் தீர்த்து வைச்சிட்டு, நம்ம குடும்ப கௌரவத்தை பாதுகாக்கும் விதமா... நான் பார்க்கும் பையனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டும். ஆபீஸில் உன் மனதை கலைக்கும்படி எந்த விசயம் நடந்தாலும், நம் குடும்ப கௌரவத்தை மனசில வைத்துக்கொள். நம் கௌரவத்தை கெடுக்கும் விதத்தில் ஏதாவது காரியம் செய்தனு தெரிஞ்சதுனா, நாங்கள் உயிரோடு இருக்கமாட்டோம். மனதில் பதிஞ்சு வை." என்றார் கண்டிப்பாக.
"ஹய்யோ அப்பா. இப்படியெல்லாம் பேசி என் மனச கஷ்டபடுத்தாதீங்க. எனக்கு நீங்கள் இரண்டு பேரு மட்டும் தான் முக்கியம். வேறு யாரையும் நான் முக்கியமாக கருதமாட்டேன்."
"ம்ம்ம். அப்படியே இருமா. எக்காரணத்துக் கொண்டும் மாறிடாதே."
"இல்ல ப்பா. நம்ம குடும்ப கௌரவம் கெடும் வகையில நான் நடந்துக்க மாட்டேன்."
"ஹும்ம். அதை எப்பவும் மறந்திடாத. வேகமாக கிளம்பி ஆபீஸ் போ."
"சரிப்பா", என்றவள் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பினாள். தந்தையும் மகளும் பேசும் வரையில் அமைதி காத்த வள்ளி, நிறைமதி கிளம்பும் சமயத்தில்..
"ஏன்டி..? ஆபீஸ் முதல் நாள் அதுவுமா இப்படி சுடிதார் போட்டுட்டா போவ? அழகா அம்சமா சேலையை கட்டிக்கொண்டு போகலாம்ல?" என்று கூறினார் அவள் தாயார் வள்ளி.
"எனக்கு சுடிதார் தான் ம்மா வசதி. அதுவும்.. yellow color சுடிதார்-னா எனக்கு கொள்ளை இஷ்டம். சோ, முதல் நாள் என் ஆசைப்படி ஆரம்பித்தால்.. அதன் பின்னே வருவது எல்லாம் என் ஆசைப்படி நடக்கும். நான் வரேன் ம்மா பை... பை ப்பா.." என்று கைக்காட்டியவாறு வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த தன் சைக்கிளை கிளப்பிக் கொண்டு போனாள்.
இப்போது தான் பெண்கள் ஸ்கூட்டி-யிலிருந்து, கார், பிளைட் வரைக்கும் ஓட்டுகின்றனர். ஆனால் , 30 வருடத்திற்கு முன்னாள்.. பெண்கள் நடந்தோ அல்லது சிட்டி பஸ்-ஸிலோ தான் பயணள் செய்தனர். வெகு சிலரே நம் நிறைமதியைப் போல் சைக்கிளில் பயணம் புரிந்தனர்.
30 மணி நேரத்தில் தன் ஆபீஸை வந்தடைந்தாள் நிறைமதி. சைக்கிளிலிருந்து இறங்கியவள் தன் வாட்சு-ஐ பார்த்தாள். நேரம் சரியாக காலை 8.45 என்றது. தன்னைத் தானே மனதிற்குள் மெச்சிக்கொண்டவளை, பியூன் அழைத்தான்.
"மேடம், நீங்க யாரை பார்க்கணும்?" என்று வினவ..
"நான் இன்னையில் இருந்து ஜி.எம் சார்-க்கு பி.ஏ-வா வேலை செய்ய போகிறேன்." என்று நிறைமதி பதிலுறைக்கவும்..
"ஓ.. மன்னிச்சுடுங்க மேடம்." என்று பியூன், நிறைமதிக்கு வழிவிட..
"என் அறை எங்கேஇருக்கிறது-னு சொல்ல முடியுமா?" என்ற நிறைமதியின் கேள்விக்கு..
"சின்னவரோட அறை தான் மேடம் உங்களுக்கும்" என்றான் பணிவாக.
"சின்னவரா? அது யார்?"
"நம் ஜி.எம் தான் மேடம்"
"ஓஹோ.. அப்போ பெரியவர்...?"
"அவர் தான் ஜி.எம் சாரோட அப்பா. சூர்யக்குமார் சார். நம்ம கம்பனியோட எம்.டி" என்றவன் நிறைமதியை ஸ்ரீபரன் அறையில் விட்டுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.
அறைக்குள் நுழைந்தவள் ஸ்ரீபரனை தேடினாள். அங்கே ஸ்ரீபரனிற்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் அவனுடைய கோட் (coat) மாட்டியிருந்தது. அதனை கவனித்தவள், 'அவன் அறையை விட்டு வெளியே பக்கத்தில் எங்கேயோ சென்றிருக்க வேண்டும்.' என்று யூகித்தவளாய் தனக்கான இறுக்கையில் அமர்ந்தாள். அமர்ந்தவள், தன் கைப்பை-யிலிருந்து தன் குடும்ப போட்டோவை எடுத்து தன் டேபிளில் வைத்தாள். அவள் இருக்கையிலிருந்து சற்று அருகில் ஸ்ரீபரனின் இருக்கை இருந்தது. அதனை பார்த்துக் கொண்டிருந்தவளை..
"உய்ய்ய்...." என்று ஸ்ரீபரன், நிறைமதிக்கு பின்னே வந்து அவளை பயமுறுத்தும் விதமாக கத்தினான். அவனின் இச்செய்கையில் மிரண்டாள். பின், வந்தது ஸ்ரீபரன் என்று தெரியவும், "காலை வணக்கம் சார்"என்று தன் மனதை சாந்தப்படுத்தியவாறு கூறினாள்.
"அதெல்லாம் இருக்கட்டும். முதலில் தண்ணீர் குடி. முகமெல்லாம் வியர்த்து விட்டது உனக்கு." என்று சிரித்துக் கொண்டே சொன்னவனை,
'ஆங்..? இப்படி பூதம் போல் பின்னாடி வந்து கத்தினால், பயத்தில் வியர்க்காமல் குளுகுளு என்றா இருக்கும்?' என்று அவனை முணுமுணுத்தவாறே தண்ணீரைக் குடித்தாள். அவள் என்ன தான் முணுமுணுத்தாலும் ஸ்ரீபரனின் பாம்பு காதுகளுக்கு அது கேட்டுவிட.. வெடித்து சிரித்தான். அதனைக் கண்டவள் அவனை கேள்வியாக நோக்கவே...
"ஒன்னுமில்லை. உன் mind voice ஓட volume-ஐ கம்மி செய்துக்கோ. எனக்கு நீ பேசியது நல்லா கேட்டுவிட்டது", என்றான் சற்று சிரிப்பை அடக்கிக்கொண்டு.
"அப்படியா? சந்தோஷம் சார்." என்று அவனுக்கு நன்றாக கேட்கும்படியே சத்தமாக கூறிவிட்டு தனக்கான வேலைகளை ஸ்ரீபரனிடமிருந்து கேட்டு, அவைகளை செய்யத் தொடங்கினாள்.
சிறிது நேரம் கழித்து கடிகாரத்தை பார்த்தான். 11.30 மணி என்றது கடிகாரம். அது இடைவேளை நேரம் என்பதால் மற்ற staffs அனைவரும் canteen-க்கு சென்றனர். அது இடைவேளை என அறிந்தும் தன் வேலையில் மும்முரமாக இருந்த நிறைமதியை, கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். தன் வேலையை செய்துக்கொண்டிருந்தவள், வெகு நேரமாக தன்னை ஸ்ரீபரன் பார்த்துக்கொண்டிருப்பது போல் நிறைமதிக்கு தோன்ற.. அவனை ஏறிட்டாள். அவள் பார்க்கவும் தன் குரலை சரி செய்துக்கொண்டு பேசலானான்..
" அஹேம்... மிஸ்.நிறைமதி... இது இடைவேளை நேரம். கீழே தான் கான்டீன் இருக்கு. காபி, டீ எதுனாலும் போய் குடித்து, சாப்பிட்டு வாங்க. உங்கள நீங்க strain பண்ணிக்காதீங்க." என்றான்.
"நோ சார். ஐயம் ஓகே." என்றாள் நிறைமதி.
"அப்போ நான் காபி குடித்ணுவிட்டு வரேன். நீங்க உங்கள் வேலையை தொடருங்க. ம்ம்..? நம் அறையிலேயே wash room இருக்கு. அண்ட்.. என்னை சார்-னு கூப்பிட வேண்டாம். Just call me பரன்."
"டிரை பண்ணுறேன் பரன்" என்றாள்.
" தட்ஸ் குட். சரி. நான் வரேன்.." என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து அறைக் கதவை மூடிவிட்டு சென்றான். அவன் செல்வதை பார்த்தவள்..
'மவனே.. என்னையவா பயமுறுத்துற? இரு உனக்கு இருக்கு.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
காபி குடித்தவன் நேராக தன் அறைக்கு திரும்பினான். அறைக்கு வெளியே இருந்து பார்க்கும் பொழுது, தன் அறையில் lights off-ஆகி இருப்பது தெரிந்தது. 'நிறைமதி உள்ளே இருக்க, lights எப்படி offஆகியிருக்கும்?' என்ற யோசனையோடு அறைக் கதவை திறக்க.. அங்கே நிறைமதி, அவள் இருக்கையில் இல்லாமல் தரையில் மயங்கிய நிலையில் படுத்திருந்தாள். பதறியவன்.. " மதி... மதி.. என்ன ஆச்சு?" என்று தரையிலிருந்தவளை தன் மடியில் படுக்க வைத்து, அவள் முகத்தை தட்டி கேட்டான். அவள் முகத்தில் அசைவு தெரியாமல் போகவே.. தன் டேபிள் மேலிருக்கும் ஜாடியில் உள்ள தண்ணீரை எடுக்கப் போனவனை..
"உய்ய்ய்ய்...." என்று அவன் பின் வந்து கத்தினாள். மிரண்ட ஸ்ரீபரன், பின்னே சிரித்தப்படி நின்றுக் கொண்டிருந்த நிறைமதியை புருவம் சுருக்கி பார்த்தான்.
"எப்படி என் ஷாக்? பயந்துட்டீங்களா?? ம்ம்ம்.... அது... இந்த நிறைமதியவே பயமுறுத்துறீங்களா? எங்கள விட்டா இந்த ஊரையே அலறவிடுவோம். அவ்வளவு பவர் எங்களுக்கு.. அதெல்லாம் வெளிய தெரிஞ்சா, வீண் பப்ளிசிட்டி ஆகிவிடும்னு பவய்-ஐ அடக்கி கொண்டு இருக்கோம். இனிமேல் இப்படி zoo காட்டாதீங்க பரன் சார்.." என்று பீத்தலாக கூறியவளைக் கண்டு வாயைப் பிளந்தான்.
"அடிக் கேடி..!!"
"யார கேடினு சொல்லுறீங்க? நானா? கேடித் தனம் பண்ணுனது நீங்க தான். நான் அப்பாவியாக வந்தேன். நீங்கள் தான் முதலில் பயமுறுத்துனீங்க. அதான் நானும் உங்களுக்கு குறைந்தவள் இல்லைனு காட்ட இப்படி பண்ணுனேன்.. எப்படி...???!!!" என்றவளைக் கண்டு சிரிக்கத் தொடங்கினான்.
"இப்போ என்ன வேண்டும் உனக்கு? நான் பயப்படணும். அவ்வளவு தானே? பயந்துட்டேன் போதுமா? இனிமேல் பவர்-கவர் னு இப்படி காமெடி பண்ணாதே. புரியுதா?" என்று தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவனை முறைத்துவிட்டு தன் இருக்கையில் உட்கார்ந்து தன் வேலையைத் தொடர்ந்தாள்.
சிரித்து முடித்தவன் நிறைமதியைப் பார்த்து, தனக்கு சரிசமமாக சேட்டை செய்து வம்பிழுக்கும் அவளை ரசித்தபடி சிரித்தான். தன்னையறியாமல் அவன் மனம் நிறைமதியின் பின்னே செல்வதை உணர்ந்தவனாக சின்ன வெட்க சிரிப்புடன் தன் ஆபீஸ் வேலையை செய்ய தொடங்கினான்.
________________________________________________________________________________________________________
ஸ்ரீபரன் தன் மனதை நிறைமதியிடம் தொலைத்துவிட்டானா?

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.