• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 4

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai

பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 4

நாட்டியம்

மறுநாள் காலை, நிறைமதி ஆபீஸுக்கு தாமதமாக வந்தடைந்தாள். படிகட்டுகளில் ஏறும் பொழுது, அவளின் இந்த தாமதத்திற்கு காரணமான தன் தாயை நினைத்தவளுக்கு மன வேதனையாக இருந்தது. அவள் தாமதத்திற்கான காரணத்தை பார்க்கலாம்.....

கடிகாரம், 7 மணி என்று அலறியவுடன்.. எழுந்து அமர்ந்த நம் நிறைமதி.. தன் இரு கரங்களையும் உரசி, அதில் வந்த வெப்பத்தை அவள் கண்களில் ஒற்றியெடுக்கும் போதே.. கீழே அவள் தாய் வள்ளியின் வசைப்பாடும் சத்தம் கேட்டு பெருமூச்சு விட்டாள்..

"காலையில் எழுந்திருச்ச உடனே எப்படி நம்ம அம்மா-னால இவ்வளவு குதுகலமாக திட்டமுடிகிறது..?? சரி என்ன-னு கேட்டுவிட்டு வருவோம்.."

என்று நினைத்தவள், கீழே உள்ள சமையல் அறைக்கு சென்று வள்ளியிடம்,

"அம்மா.. எதுக்கு இப்போ காலை நேரத்திலேயே இப்படி வசைப்பாடுறீங்க? யாரை வசைப்பாடுறீங்க? கொஞ்சம் சொல்லுங்க. தெரிஞ்சுப்போம்." என வினவியவளுக்கு 'ஏன்டா வினவினோம்??!!' என்று நினைக்கும் அளவிற்கு வள்ளியிடம் இருந்து பதில் வந்தது.

"உனக்கு என்னடி மகராசி..? காலையில் சொகுசா 7 மணிக்கு எழுந்திருச்சு 10 மணிக்கு ஆபீஸ் போயிடுவ. அங்க போய் என்ன வேலை செய்ய போற? சும்மா உட்கார்ந்த இடத்திலேயே எதையாவது எழுதிட்டு அப்பறம் சாவகாசமாக 7 மணிக்கெல்லாம் வீடு வந்திடுவ. வந்து உன் அப்பாவிடம், இன்று ஆபீஸில் நடந்ததையெல்லாம் சொல்லுவ. மேடம் உங்களுக்கு காபி வேற நான் தான் கலந்து கொண்டு வர வேண்டும். காபி குடித்தவிட்டு 9.30க்கு டிபன் சாப்பிட்டு விட்டு, உன் அறைக்கு போய் தூங்கிடுவ. ஆனா நான் அப்படியா? காலையில் உங்கள் எல்லோருக்கும் முன்னாடி 6 மணிக்கெல்லாம் (!!) எழுந்திருத்து, எல்லோருக்கும் மதியத்திற்கும் சேர்த்து சாப்பாடு சமைத்துவிட்டு உன் அப்பாவிற்கு சில பல பணிவிடைகள்(!) செய்துவிட்டு உட்காருவதற்கு மணி 10.30 ஆகிவிடும். அப்பறம் நீங்க 7 மணிக்கு வந்ததும் உங்களுக்கு காபி குடுப்பதற்கு நான்ன்ன்ன்ன் சென்று கலக்க வேண்டும். நீங்களா கலந்துக்க மாட்டீங்க. உனக்கும், உன் அப்பாவுக்கும் பணிவிடை செய்யுறதிலேயே என் காலம் ஓடிக்கொண்டிருக்கு." என்று நீண்ட நெடிய பிசங்கம் பண்ணினார் வள்ளி..

இதைக்கேட்டு சற்று ஆதங்கமானவள், "அம்மா..!! இது அநியாயம்.. நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால், நான் எதையுமே செய்யாமல் சும்மா தூங்கி எழுந்திருப்பதைப் போல் இருக்கிறது.."

"உண்மை அது தானே?"

"அம்மா..!! இந்த வீட்டை முழுவதும் சுத்தமாக வைத்திருப்பது நான். உங்கள் துணியையும் சேர்த்து நான் தான் கையில் துவைக்கிறேன். இதையெல்லாம் நான் பணிவிடை செய்யுறதாக நினைக்கலை. நம் குடுப்பத்திற்கு நான் செய்கிறேன். பணிவிடைனு நினைத்தால், எல்லாம் கஷ்டம் தான். வீட்டில் 10.30 மணிக்கே அனைத்து வேலையையும் செய்து முடிச்சிருவீங்க. நான் அங்கே சும்மாவும் இல்லை ம்மா. நீங்கள் மிஞ்சிப் போனால் எங்கள் இருவரை ம்டும் தான் சந்திருப்பீங்க. ஆனால் நான் அங்கே வெவ்வேறு ஆட்களை சந்திக்க வேண்டும். அதற்காக நீங்கள் சும்மா இருக்கீங்கனு சொல்லலை. நானும் உழைக்கிறேன்னு தான் சொல்லுறேன்." என்று கூறினாள்..

"சரி பா. நீ உழைக்கிறாய் தான். ஆனால், உன் காலை டிபனை நீயே சமைப்பதற்கு என்ன? அதையும் நான் தான் செய்யணுமா?" என்று நிறைமதியை கடித்து துப்பினார் வள்ளி.

"இப்போ உங்கள் பிரச்சனை என்ன? என் டிபனை நான் சமைக்கணும்.. அதுதானே? சரி.. இன்னையிலிருந்து உங்கள் எல்லோருக்கும் சேர்த்து நான் டிபன் சமைத்து வைத்துவிட்டு ஆபீஸ் போறேன்." என்று டிபன் செய்வதற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினாள்.

இதை நினைத்துக்கொண்டே ஆபீஸினுள் அவள் நுழையும்போது மணி 9.30 என்றது கடிகாரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
மணி காலை 8.45.. தன் கம்பனிக்கு காரில் பறந்துக்கொண்டிருந்தான் ஸ்ரீபரன். அவனை அறியாமல் தன் காரை மெரினா கடற்கரைக்கு செலுத்தினான். 'எப்படி இங்கு வந்தோம்?' என்ற யோசனையிலேயே காரை விட்டு இறங்கியவன், கடற்கரை மணலில் கால் வைத்தான். அங்கே ஆள் நடமாட்டமே இல்லை. பரனிற்கு ஆச்சரியமாக இருந்தது. பட்டபகலில் அதுவும் மெரினா கடற்கரையில் ஆள்நடமாட்டம் இல்லை என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். மெதுவாக நடந்து மணலில் நடந்து சென்றவன், கடல் அலை அடிக்கும் இடத்தைவிட்டு சற்று தள்ளி உட்கார்ந்தான்.

கடற்கரை காற்றை அனுபவித்தவனுக்கு, திடீரென்று தன் முதுகுக்கு பின்.. சலங்கை அணிந்த கால்கள் நடந்து போவது போன்ற சத்தம் கேட்டது. 'யாரோ ஒரு பெண் கடற்கரைக்கு வருகிறாள் போல' என்று எண்ணியவன் கடல் அலையை ரசிக்கத் தொடங்கினான். ஆனால் அந்த சலங்கை அணிந்த கால்கள், நடனம் ஆடுவது போல் ஒலி வரவே, டக்கென்று பின்பக்கம் திரும்பினான் ஸ்ரீபரன்.

ஆனால், அந்த பக்கம் யாரும் இருப்பது போன்ற சுவடே இல்லை. சற்று குழப்பம் அடைந்தவன்,

"யாரு..?" என்று சத்தமாக வினவினான். ஆனால் அந்த சலங்கை சத்தமோ நின்றபாடில்லை. மனதளவில் பயமிருந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு, சத்தம் கேட்கும் திசையில் ஓடினான். எவ்வளவு ஓடியும் அந்த சலங்கை நடனமாடும் சத்தத்தை தவிர வேறு எதையும் அவனால் காண இயலவில்லை.

மூச்சிரைத்தவன் 'எங்கு வந்திருக்கிறோம்.' என்று பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது, தன் காரை விட்டு வெகு தூரம் வந்துவிட்டதை உணர்ந்தான். சற்று நடைதூரத்தில் ஒருவர் ஐஸ்க்ரீம் விற்பது தெரிந்தது. அவரிடம் சென்று இச்-சலங்கை சத்தத்ததை பற்றி விசாரிக்கலாம் என்று முடிவுக்கு வந்தான். நேரடியாக ஐஸ்க்ரீம் கடைக்காரரிடம் சென்ற பரன்,

"அண்ணா..!! இந்த பக்கம் யாரேனும் வருவதை பார்த்தீங்களா?"

"ஆங்..? யாரும் வரல.. இப்ப நீ தான் இங்க வந்துருக்க. ஐஸ் சாப்பிடுறியா? ருசியா இருக்கும். சில்லுனு இருக்கும்."

'யாரும் வரவில்லை என்றால் இவனுக்கு அச்-சத்தம் கேட்கவில்லை என்று தானே அர்த்தம்?' என்று எண்ணியவன் கடைகாரருக்கு பதிலளிக்கும்படியாக,

" ம்ம்.. ஒரு ஸ்டராபெரி ஐஸ் தாங்க ண்ணா. இங்கே கடை வச்சுர்க்கீங்களே, நல்லா வியாபாரம் ஆகுமோ..???!!" என ஸ்ரீபரன், ஐஸ்கடைக்காரரிடம் வினவினான்..

"நல்ல வியாபாரமா?? சுமாரான வியாபாரம் கூட ஆகாது இங்க. அனேகமா நீ தான் இன்னைக்கு வந்த முதல் போனி & கடைசி போனினு நினைக்குறேன்."

"அப்ப இந்த பக்கம் யாருமே வருவதில்லையா?"

"இல்ல பா.. அப்படி வந்தால் நான் இந்நேரம் பெரிய கடை வச்சிருப்பேன்."

இதை கேட்டதும் யோசனையில் ஆழ்ந்தான். கடற்கரைக்கு அருகில் யாரும் வராது இருப்பது ஆச்சரியம் தானே..??!! பதிலேதும் கூறாமல் ஐஸ்க்ரீம் கடைக்காரரிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு தன் காரில் ஏறினான்.

1640538103872.png

--------------------------------------------------------------------------------------------------------------------
ஆபீஸினில் நுழைந்த நிறைமதி, தனது அறைக்கு சென்றாள். வந்ததும் அவள் மனம் ஏனோ ஸ்ரீபரனை தேடியது.. சாலரி செக்சனில்(salary section) வேலைப் பார்க்கும் ரஞ்சனி நிறைமதிக்கு நல்ல தோழியாகி விட்டாள். நிறைமதி ஆபீஸ் வந்ததை பார்த்தவள், அவள் அறை கதவை தட்டி உள்ளே செல்ல அனுமதி கேட்டாள். அறைக்கு வெளியே இருப்பது தனது தோழி என்பதை அறியாதவளாக,

"யெஸ்.. கம் இன்." என்று பைல்-களை(Files) அலசியப்படி கூறினாள். உள்ளே வந்த ரஞ்சனி,

"மேடம் பிசியோ..??", என்று கிண்டலாக கேட்டாள்.

"ஹேய் ரஞ்சனி.. என்னடி காலையிலேயே கிண்டலா?", என்று ரஞ்சனியின் தோளில் லேசாக அடித்தபடி தன் இருக்கையில் அமராமல்.. அதற்கு அருகில் அவள் எழுதுவதற்காக வைக்கப்பட்ட டேபிள் (table) மேல் உட்கார்ந்தாள் நிறைமதி. சிரித்துக்கொண்டிருந்த ரஞ்சனியை தன் இருக்கையில் அமர வைத்தாள். டக்கென்று எழுந்த ரஞ்சனியை கேள்வியாக நோக்கினாள் நிறைமதி.

"இல்லடி.. பரன் சார் சொல்லுவது போல , 'அலுவலக வேலை வேற.. சொந்த விஷயம் வேற.' அதனால் நான் இந்த நாற்காலியிலேயே உட்கார்ந்துக்குறேன்." என்று வேறு நாற்காலியில் அமர்ந்தவள்.. தன் கைபை-யிலிருந்து(handbag) சில புகைப்படங்களை எடுத்து நிறைமதியிடம் நீட்டினாள். அது ரஞ்சனி பரதநாட்டியம் ஆடியபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். அதனை பார்த்தும் நிறைமதியின் கண்களில் ஆசை கலந்த மகிழ்ச்சி தெரிந்தது.

"ஹேய்.. ரஞ்சு.. உனக்கு பரதம் தெரியுமா??" என்று புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தப்படி கேட்டாள்.

"நான் கிலாசிக்கல் டான்ஸர்(classical dancer) டி... இது போன மாதம், கோயிலில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில் எடுத்தது. நேற்று தான் இந்த புகைப்படங்களை வாங்கினேன். உன்னிடம் நல்லா இருக்கா-னு கேட்பதற்கு கொண்டு வந்தேன். நல்லா இருக்கா..??" என்று முகமலர கேட்டாள் ரஞ்சனி.

" சூப்பர் டி. எனக்கும் பரதம் ஆடனும்-னு ஆசை. ஆனால் என் அம்மா அதற்கு சம்மதம் சொல்லலை. அப்பாவும் அம்மா சொல்வதை கேட்டுக்கொண்டு என்னை பரதம் கற்றுக்கொள்ள அனுமதி தரலை." என்று நிறைமதி சோகமாக கூறினாள்.

"ஏன் தான் உன் வீட்டில் இப்படி நடக்கிறதோ..?" என்று தலையில் கை வைத்துக்கொண்டாள்.

"அது அப்படி தான் விடு.. ஆமா, சார் எங்கடி..? " என்று நிறைமதி பரனை பற்றி கேட்டாள்.

"ஓஓஓஓஓ... அவரா...??" என்று பெருமூச்சு விட்டபடி வழிந்தாள் ரஞ்சனி.

"ஏய் ஏய்.. என்னடி... என்ன..? ரொம்பவும் ஓவரா இருக்கு... பரன் சார்-அ சைட் அடிக்கிறாயா?"

"நான் மட்டுமா..? ஆபீஸில் பாதி பேருக்கு அவர் மேலே ஒரு கண்ணு.. ஒரு கண்ணுனு இல்லை.. ரெண்டு கண்ணு, சைடு கண்ணுனு எல்லா வகையான கண்ணும் நம்ம பரன் சார் மீது தான்." என்று மீண்டும் வழிந்தாள்.

இதை கேட்டதும் நிறைமதி க்கு புகைந்தது.

"எனக்கு ஒன்னும் அப்படியெல்லாம் தெரியலை" என்று பொறாமை பொங்க கூறினாள்.

"நான் நிருபிக்கட்டுமா?" என்று ரஞ்சனி வினவ..

"சரி டி. பார்ப்போம்.." என்று நிறைமதி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்கு வெளியில் பரனின் குரல் கேட்டது.

"ஹேய் பரன் சார் வந்துட்டார் போல. அறைக்கு வெளியே தான் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்." என்றவள் அறைக்கதவை லேசாக திறந்து அதனை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டவளாக.. "ஹேய் நிறைமதி. நான் சொன்னதை இப்பவே நிரூபிக்குறேன். வா என்னோடு." என்றபடி நிறைமதியின் கையை இழுத்துக்கொண்டு அறைக்கு வெளியே கூட்டிச் சென்றாள் ரஞ்சனி.

அன்று ஸ்ரீபரன், கோட் அணியாமல், நீள நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையின் ஒரு புறத்தில் மட்டும் கட்டம் போட்ட டிசைன் இருந்தது. அது என்னவோ தெரியாது.. நீள நிற சட்டையில் ஸ்ரீபரன் 'பளிச்' என்று தெரிவான்.. யாரோ தனக்கு பிடித்த நபர், இந்நிறம் அவனுக்கு மிகவும் எடுப்பாக இருப்பதாய் கூறுவது போல் தோன்றுவதால் கூட ஸ்ரீபரனின் இந்த பளிச்-ற்க்கு காரணமாக இருக்கலாம். அவனின் அந்த பளிச்.. அலுவலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் கவர்ந்தது.. நிறைமதிக்கு ஏனோ மனதளவில் ஓர் சந்தோஷம்.. தனக்கு பிடித்த நிறத்தில், தான் கூறியதால் மட்டுமே அவன் இந்நிற சட்டையை அணிகிறான் என்ற மகிழ்ச்சி அவளுக்கு. ஆனால், அவள் தான் இதுவரை ஸ்ரீபரனிடம் தனக்கு பிடித்த விஷயத்தை பற்றி எதுவும் கூறவில்லையே..?!! பரனின் மீது மயய்யம் கொண்ட நிறைமதியின் கண்கள், வேறு எந்த திசை பக்கமும் திரும்பவில்லை. சற்று சுயநிலைக்கு வந்தவள்..,,

ஸ்ரீபரன் ஆபிஸினுள் வந்ததும், வாசலில் இருந்து மூன்றாவது கேபின்-ல்(cabin) வேலைப் பார்க்கும் ஒரு இளம்பெண், தான் வரையும் கட்டிடவரைப்படத்தில் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தாள். அதனை சுட்டிக்காட்டிய ரஞ்சனி,

"பாத்தியா..? என்று கேட்டாள்.

"இதில் என்ன டி இருக்கு.? அவள், Drawing-ல் சந்தேகம் கேட்டுக்கொண்டிருக்கிறாள்." என்று தன் இடபக்க புருவத்தை மட்டும் உயர்த்தியபடி கேட்க.. அதற்கு ரஞ்சனி நிறைமதிக்கு மட்டும் கேட்கும் வகையில் சிரித்தாள்..

"ஹாஹாஹா.. போ டி லூசு. அவள் கேட்கும் சந்தேகம் சாதாரண சந்தேகம். அதை பக்கத்து கேபினில் வேலை செய்பவளிடம் கேட்டாலே போதுமானது. அதற்கு பரன் சாரே தான் வரணும்னு அவசியம் இல்லை. இதற்கு மேல ஒரு விஷயம்.. அங்கே அவள் கையை கவனி.. அவள் வெறும் சந்தேகத்தை மட்டும் கேட்கலை. பாரு.. அவள் கையை..." என்று சந்தேகம் கேட்கும் அப்-பெண்ணின் கையை காட்டினாள். அந்த பெண், பரன் வரைபடத்தில் விரல் வைக்கும் பொழுது.. அவன் விரல் மீது தன் விரலை வைத்தாள். டக்கென்று தன் விரலை விடுவித்தவன்..

"ரூம்-ஓட உயரம் 10 அடி இருக்கு. அதனால ஒவ்வொரு படியோட உயரம் 6அங்குலம் வைத்தால், 20 படிகட்டுகள் வரும்.. 9அங்குலம் உயரம் வைத்தால், 18 படிகட்டுகளில் முடிந்துவிடும். எதுனாலும் சரி தான். கமர்ஷியல் இடமாக இருந்தால், 6அங்குலம் தான் சரியாக வரும். ஏனென்றால், அது பொதுமக்கள் வந்துபோகும் இடம். படியின் உயரம் கம்மியாக இருந்தால் தான் சோர்வடைய மாட்டார்கள். ஆனால் இது residential drawing (வீடு கட்டுவதற்கான வரைபடம்). எதுனாலும் ஒத்துப்போகும்." என்று வரைப்படத்தில் மீண்டும் விரல் வைத்து பரன் விளக்கிக்கொண்டிருக்க.. அப்-பெண் அதனை கவனிக்காமல் பரனின் விரல் மீது விரல் வைத்து,

"அப்போ 6அங்குலம்-மே வைக்குறேன் சார்..." என்று பரன் விரல் மீது தன் விரலை வைத்தபடி கேட்டாள்.

"அப்போ சரி. நான் கிளம்புறேன்." என்று வெடுக்கென தன் விரலை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கி விரைந்தான்.

இதனை சுட்டிக்காட்டிய ரஞ்சனி, "பார்த்தியா? இப்போ என்ன சொல்லுற..?" என்க.....

அவள் கூறியது நிறைமதியின் காதில் விழவே இல்லை. அவள் நினைவெல்லாம் அப்-பெண் ஸ்ரீபரனின் விரல் மீது விரல் வைத்த நிகழ்விலேயே இருந்தது..அதனை எண்ணி வெகுண்டவளாக,

"சரி டி.. நீ உன் அறைக்கு போ. வேலை நேரம் ஆரம்பிச்சுடுச்சு. இதை பற்றி interval நேரத்தில் பேசிக்கொள்வோம். நான் கிளம்புறேன். பை..." என்று நடையின் வேகத்தின் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் நிறைமதி. இதனை கண்ட ரஞ்சனி,
'இவள் எதற்கு இவ்வளவு கோபம் ஆகுறாள்? ஒன்னும் புரியலை. சரி நம்ம வேலையை பார்ப்போம்.' என்று மனதில் எண்ணியப்படியே தன் அறைக்குச் சென்றாள்.

கோபத்தின் உச்சத்தில் இருந்த நிறைமதி, தன் அறைக்கதவை 'படார்ர்' என திறந்துக்கொண்டு உள்ளே சென்றாள். அவள் கதவை திறந்த விதத்திலேயே நிறைமதியின் கோபத்தை உணர்ந்த ஸ்ரீபரன்,

"என்ன கோபம்? ஏதேனும் பிரச்சனையா? யாரேனும் வம்புக்கு இழுத்தார்களா? சொல்லு... தூக்கிடுவோம்." என்று தன் சட்டை கையை மடிக்க...

"ஆமாம்.. போய் என்ன-னு கேட்டு விடுவீங்களாக்கும்..??" என்று தன் உதட்டை சுழித்துக் கேட்டாள்.

"யாருனு சொல்லு.. finish பண்ணிடலாம்.."

"வேண்டாம் ஐயா... வேண்டாம்... நீங்கள் எப்படி finish பண்ணுவீங்கள்னு எனக்கு தெரியும்."

" என்ன உளருற? சொல்லு. என்ன ஆச்சு..?"

"எல்லாம் உங்களால் தான்." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அவளருகில் தன் நாற்காலியை வைத்து, அதனில் உட்கார்ந்த பரன்..

"ஹேய்.. என்னைய பாரு.. நான் உன்னைய hurt பண்ணுற மாதிரி ஏதேனும் செய்துட்டேனா..?"

1640538250463.png

"ஆமாம்..." என்று கண்ணில் நீர் வழிந்ததை பரனிற்கு தெரியாதவாறு துடைத்துக்கொண்டாள். ஆனால் அதனை பரன் கவனித்துவிட்டான்..

"ஹேய்.. ஏன் அழுகுற..? மதி ம்மா.. சொல்லு.. என்ன டா ஆச்சு..?" என்று தன்னை முதன்முதலில் பரன், மதி என்று அழைத்ததை கேட்டதும் நிறைமதியால் தன் அழுகையை நிறுத்த முடியவில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,

"என் வாழ்க்கையிலேயே நீங்கள் ஒருவர் தான் என்னை மதி-னு அழைத்திருக்கீங்க. அந்த உரிமையில் உங்கள்ட்ட ஒன்னு சொல்லட்டுமா..?"

"மதி... என்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. புரியுதா? என்கிட்ட நீ எதுனாலும் கேட்கலாம்..சொல்லலாம்... மத்தவங்கள் வேற.. நீ வேற. உனக்குனு ஒரு தனி இடம் என் மனதில் இருக்கு. சோ, நீ எதுனாலும் சொல்லு..."

"பரன்.... ப்ளீஸ்... இனிமேல் உங்களை யாரையும் தொட அனுமதிக்க வேண்டாமே.. முக்கியமாக பெண்கள்... என்னால் தாங்க தாங்கிக்க முடியலை."

"சரி டா. ஆனால் இதுவரை யாரையும் நான் தொட அனுமதித்ததில்லையே...!! நீ எதை வைத்து இப்படி சொல்லுற ம்மா?"

இதைக் கேட்டு லேசாக மூக்கை உறிஞ்சியப்படி, "வெளிய இப்போ ஒருத்தி......" என்று இழுக்க... சற்று சிந்தித்தவன்,

"ஹேய்..லூசு.. அவள் அப்படி தான். அதான் நான் கையை எடுத்துட்டேனே..?? பின்ன ஏன் அதை எண்ணி வருத்தமடையுற? இங்கே கவனி மதி ம்மா.. ஆயிரம் பேர் என் பின்னே வந்தாலும், நான் அவர்களிடம் எப்படி react பண்ணுறேன்-னு பாரு. அவர்களை நம்மால் எதுவும் மாத்த முடியாது. அவள் அப்படி நடந்துகிட்ட முறை கோபத்தை கொடுத்தாலும், அதனை வெளிக்காட்டாமல் நான் இருக்குறது தான் சரியான முறை. இப்போ நான் கோபத்தை காட்டியிருந்தால்.. அது அவளுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்ததாகிவிடும். கண்டுக்காமல் நான் வந்ததால், அவள் அதனை நினைத்துக்கொண்டு என்கிட்ட இருந்து விலக வாய்ப்பிருக்கு. புரியுதா டா ம்மா?"

"ம்ம்ம்.." என்றவாறு திரும்பி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டவளின் அருகே சென்று நின்றான். நிறைமதி நிமிர்ந்து பார்த்ததும், அவள் தலையை தன்மேல் சாய்த்து கண்மூடி நின்றான். அவன் மேல் சாய்ந்ததும் சற்று நிம்மதியானவள் அப்படி சாய்ந்தபடியே உட்கார்ந்தாள்.

ஆனால் பரனிற்கு நிறைமதி தன்மேல் தலை சாய்ந்ததும், மீண்டும் சலங்கை ஒலி கேட்க.. கண்விழித்து தன் அறையை, கண்ணால் நோட்டமிட்டான். சற்று நேரத்தில் சரியாகிய நிறைமதி, அவனை விடுவிக்க.. பரனும் யோசித்தவாறு தன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆனால் பரனிற்கு தெரியாது, நிறைமதிக்கும் அந்த சலங்கை ஒலி கேட்டு தான் விலகி உட்கார்ந்தாள் என்று....
___________________________________________________________________________________________________

நிறைமதிக்கும் ஸ்ரீபரனிற்கும் கேட்கும் சலங்கை ஒலி யாருடையது? ஏன் இவர்கள் இருவருக்கு மட்டும் அச்-சத்தம் கேட்க வேண்டும்...? அந்த சலங்கை ஒலி-க்கும் நிறைமதி-பரனிற்கும் என்ன சம்பந்தம்..?

இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்...

___________________________________________________________________________________________________


 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
Mathikum kekudhu andha salangai sound🤔..andha sound yarodadhu??yen avanga rendu perukkum matum kekudhu??ipdi ella questions um nengale ketuta readers nanga enna kekradhu🤨.
அதுதானே எல்லா கேள்வியும் சகோ கேட்டுட்டா நாம என்ன கேட்குறது, நல்லா கேளுங்க சகி 😃😃😃😃😃😃