• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 5

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் -5

மீண்டும் தோன்றும் காட்சிகள்
தனக்கு கரெக்ஷன்-காக வந்த drawings-ஐ சரி பார்த்தவன்.. தனது ஓரக்கண்ணால் நிறைமதியைப் பார்த்தான். அவள் செய்துக்கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்தியதால், பரன் அவளை பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. அதை பார்த்து புன்முறுவல் உதிர்த்தவனாக..


'இவளுக்கு என் மேல பிரியம் இருக்கா-னு எப்படி தெரிஞ்சுக்குறது..?' என்று யோசித்துக்கொண்டிருந்தான். நேரடியாக நிறைமதியிடமே கேட்டுவிடலாம் என்று தன் மனதை தயார் படுத்திக்கொண்டு..


"Excuse me..!" என்றான்.. 'யாரோ கதவிற்கு வெளியில் நின்றுக்கொண்டு இவர்கள் இருக்கும் அறைக்கு வர அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணியவள்,


"உள்ளே வரலாம்.." என்று எழுதிக்கொண்டிருந்ததில் கவனம் செலுத்தியபடி, நிமிர்ந்து பார்க்காமலே கூறினாள் நிறைமதி..

ஸ்ரீபரனிற்கு ஒன்றும் விளங்கவில்லை.


'யார உள்ளே வர சொல்றா இவ?' என்று திரு திரு என்று முழித்தவன்.. அவள் அப்படி கூறியதிற்கான காரணம் அறிந்ததும் தன் வாயை பொத்தி சிரித்தான். பரன் சிரிப்பதை பார்த்தவள்,


"என்ன சார் சிரிக்கிறீங்க??" என்று புன்னகைத்தப்படியே கேட்டாள். அவள் சார் போட்டு கூப்பிட்டதில் மட்டுமே ஸ்ரீபரனின் கவனம் சென்றது.. சட்டென்று அவன் முகம் கடுக்க..


"உன்னைய எத்தனை முறை சார்-னு கூப்பிடாத-னு சொல்லிருக்கேன்.. எதற்கு இப்ப சார்- னு கூப்பிட்ட?? " என்று சிடுசிடுத்தான்.


"ஓ.. சாரி பரன்.. இனிமே அப்படி கூப்பிடல."


"சரி. சரி.. சாரி-லாம் வேண்டாம்.."


"அப்போ ஓகே.. அப்போது எதுக்கு சிரிச்சீங்க பரன்...?"


"அதுவா..?? என் பள்ளி நண்பன் ஒருத்தனை நினைத்து சிரித்தேன். அது ஒன்னும் பெரிய காரியம் இல்லை. நீ உன் வேலையை பார்.. நான் என் வேலையை பார்க்கிறேன்." என்றவாறு தன் வேலையில் மூழ்கியவனுக்கு telephone-ல் call வந்தது. அதனை எடுத்து, "ஹலோ.. பரன் ஹியர்.. " என்றான். மறுமுனையில் அவன் தந்தை சூர்யக்குமார்,


"ராஜூ.. அப்பா தான் பேசுறேன்." என்க...


"சொல்லுங்க ப்பா.. உங்க அறைக்கு வரணுமா?"


"இல்லை..இல்லை.. வேண்டாம்.. நீ உன் வேலையை செய்துட்டே நான் சொல்வதை கவனி..உன் நண்பன் புலிவேந்தன் கூப்பிட்டான் டா. அவன் பெங்களூரில் இருந்து இன்னைக்கு தான் சென்னைக்கு வந்தானாம். எக்மோர் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்குற அந்த உயர்தர ஹோட்டலில் தான் தங்கிருக்கானாம். இன்னைக்கு சாயங்காலம் நேரத்தில், அவனை போய் பார்ப்பாயாம். சொல்ல சொன்னான். நீ வீட்டில் இருப்பனு, நம்ம வீட்டிற்கு call பண்ணிருக்கான்.. அம்மா தான் எடுத்தாளாம். அவள் எனக்கு போன் பண்ணி சொன்னா."


"சரி ப்பா.. நான் போய்
பார்த்துக்குறேன்."


"டேய்.. டேய்..டேய்... கட் பண்ணிராத.. ஆமாம்..உன் நண்பன் என்ன படிச்சுருக்கான்..?"


"பி.ஈ. சிவில் (BE., CIVIL) ப்பா.. ஏன் கேட்குறீங்க?"


"இல்ல டா.. நமக்கு ஒரு கன்ஸ்டரக்ஷன் work (construction) வந்திருக்கு..."


"சரி ப்பா.. என்ன கன்ஸ்டரக்ஷன் ப்பா?"


"5 ஸ்டார் ஹோட்டல் கட்டணுமாம்.. இந்த வொர்க்-அ நான் பாக்குறதை விட நீ பார்த்தால் உனக்கு அந்த பெருமை கிடைக்கும். அதனால, நீயே அந்த கன்ஸ்டரக்ஷன்-அ பொறுப்பு ஏத்துக்குறியா ராஜூ?"


"சரி ப்பா.. நீங்க எங்கிட்ட சம்மதம் கேட்க வேண்டாம். சொன்னாலே கேட்டுப்பேன். அதற்கும் புலிவேந்தன் படிப்பு தகுதிக்கும் என்ன ப்பா சம்மந்தம்?"


"அவனையும் உன் கூட சேர்த்து பண்ணினா, உனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்ல? அதுனால தான் கேட்டேன்."


"ஹய்யோ.. அதெல்லாம் வேண்டாம் ப்பா..நானே பாத்துப்பேன்."


"டேய் ராஜூ.. அப்பா-காக பண்ணு டா.. உன் நண்பனும் நீயும் பண்ணினா, உனக்கு கொஞ்சம் வேலை பழு குறையும்.. உதவியாவும் இருக்கும். எடுத்ததும் நீ இவ்வளவு பெரிய பொறுப்ப எடுத்துகிட்டா, குழப்பம் வர வாய்ப்பு இருக்கு. அப்போ இவன் மாதிரி BE படித்தவன் கூட இருந்தால், உனக்கு வசதியா இருக்கும்.. கொஞ்சம் யோசி டா."


"சரி ப்பா..நான் அவன்கிட்ட கேட்டு பார்க்குறேன்."


"சந்தோஷம் டா.."


"ஆங்.. அப்பறம் அப்பா..அந்த 5 ஸ்டார் ஹோட்டல் எந்த ஏரியா-ல ப்பா கட்ட சொல்லிருக்காங்க?? "


"மாமல்லபுரம் பக்கத்துல டா.."


மாமல்லபுரம்.. பெயர் கேட்டதும் ஸ்ரீபரனிற்கு, அவ்-விடத்திற்கும் தனக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது போன்ற உணர்வு எழுந்தது. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அவன் மனதில்..


"என்ன பெயர் ப்பா சொன்னீங்க?"


"மாமல்லபுரம் டா... உனக்கு அந்த இடம் தெரியாதா?"


"எனக்கா அந்த இடம் தெரியாது??!!" என்று தன்னையறியாமல் கூறினான்.


"அப்போ சரி டா. புலிவேந்தன் கிட்ட பேசிட்டு எங்கிட்ட சொல்லிடு."


"சரி ப்பா" என்று போன்-ஐ வைத்தவன். தலையில் கை வைத்து கண்களை மூடினான்.. அவனுக்கு மாமல்லபுரத்தின் சிற்பங்கள் சில.. காட்சிகளாக வந்து போயின.. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவனுக்கு ஓடியக் காட்சிகள் மெதுவாக தெரிய ஆரம்பித்தது.. அக்காட்சியில்....


மாமல்லபுரம் ஆனது இப்போது போல் இல்லாமல் வெறும், ஐந்து சிறு குன்றுகளாக காணப்பட்டது. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்துக்கொண்டிருந்தனர்.


அக்குன்றுகளுக்கு அருகில் கடல் அலைகள் மெதுவாக பாறைகளின் மேல் மோதிச் சென்றது.


சிற்ப வேலைகள் நடந்துக்கொண்டிருந்த அவ்விடத்திற்கு நடுவில் ஒரு யானை சிற்பம் கம்பீரமாக நின்றது..





தன் அருகே.. இளவரசரும், அவரது தந்தையும் நின்றுக்கொண்டிருப்பதாய் ஸ்ரீபரனிற்கு தோன்றியது.. ஏனோ.. ஸ்ரீபரனிற்கு அந்த குமாரசக்கரவர்த்தியிடம் ஏதோ உறவு உள்ளதைப் போல் உணர்ந்தான். இளவரசரிடம் சக்கரவர்த்தி,
"மகனே.. இந்த யுத்தம் நம் ராஜ்ஜியத்திற்கு ஆபத்து தரக்கூடியதாய் இருந்தாலும்.. எனக்கு அதில் அச்சம் ஏதும் இல்லை.. அதனை நாம் வென்றுவிடலாம்.. ஆனால், இந்த மாமல்லபுரத்தின் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ என்று தான் கவலையாக இருக்கிறது." என்று சக்கரவர்த்தி, பரனிடமே கவலை கொள்வது போல், ஸ்ரீபரனிற்கு காட்சிகள் தோன்றிக்கொண்டிருந்தது.


ஸ்ரீபரன் வெகு நேரமாக தலையில் கை வைத்தப்படி கண் மூடியிருப்பதை கண்ட நிறைமதி.. பதறியவளாக ஸ்ரீபரனிடம் வந்து அவன் தோள்களை உளுக்கினாள். அவள் உளுக்கியதில் அவன் கண்ட காட்சிகள் மாயமானது.. சற்று திடுக்கிட்வனாக அதிர்ந்தான். நிறைமதி அதனை கண்டதும்,


"என்ன ஆச்சு பரன்..? ஏன் இப்படி அதிர்ச்சி ஆகுறீங்க? ஏதேனும் உடம்பு சரியில்லையா? ஏன் தலையில் கை வச்சுட்டு உட்கார்ந்துருக்கீங்க?" என்று கேள்விகளை அடுக்கினாள்.


"ஒன்றுமில்லை மதி. கொஞ்சம் தலைவலி. அவ்வளவு தான்."


"அச்சோ பரன்.. இருங்க.. எங்கிட்ட அமிர்தான்ஜன் பாம் (amirthanjan balm) இருக்குதா-னு பார்க்குறேன்." என்று தன் டேபிளுக்கு ஓடியவளை பார்த்து ரசித்து சிரித்தான். பரனிடம் வந்து அதனை கொடுத்தவளை,


"மதி..." என்று அழைத்து நிறுத்தினான்.


"என்ன பரன்??"


"எனக்கு தலைவலி வந்தால், நீ ஏன் இவ்வளவு பதட்டம் ஆகுற??" என்று வினவியவனிடம்..


"உங்கள் மேல் சிறு கீறல் வந்தாலும் என்னால தாங்கிக்க முடியாது பரன்.." என்று தன்நிலை மறந்து சோகமாக கூறினாள்.


"ஏன்....?" என்று ஸ்ரீபரன் அவளை கேள்வியாக பார்க்க..


ஸ்ரீபரன் இப்படி கேட்டதும் சுயநிலைக்கு வந்தவள், "நீங்க எனக்கு மேலிடத்தில் இருப்பவர். அந்த மரியாதையில் தான்.." என்று கூறிவிட்டு தன் இடத்திற்கு திரும்பியவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஸ்ரீபரன். அதனை உணர்ந்த நிறைமதி திடுக்கிட்டவளாக,


"பரன்..!!! என்ன இது புதுசா..?"


"உண்மையாவே நீ சொன்னது தான் காரணமா?" என்று ஆழ்ந்த குரலில், அவள் கண்ணை பார்த்து கேட்க.. நிறைமதி நிலை தடுமாறினாள். அவன் கண்ணைப் பார்க்க தவிர்த்தவளாக,


"ஆமாம் பரன். என் கையை இப்போ விடுங்க. "


"சரி விட்டுட்டேன்" என்றபடி அவள் கையை விடுவித்தான்.


நிறைமதி அவள் இருக்கையில் அமர்ந்து தன் கைப்பையை குடைந்துக் கொண்டிருந்தாள்..


'இவள் எதை இப்போது தேடிக்
கொண்டிருக்கா?' என்று எண்ணியவன், அவள் அருகில் நாற்காலியை போட்டு உட்கார்ந்தான்..





"என்ன தேடிட்டு இருக்க?" என்று பரன் கேட்கவும், நிறைமதி தன் கைப்பை-யிலிருந்து தண்ணீர் பாட்டில்-ஐ எடுக்கவும் சரியாக இருந்தது..





"ஓ... தண்ணீர் வேண்டுமா? குடி குடி", என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே பாட்டிலில் இருந்த தண்ணீரை பரனின் முகத்தில் ஊற்றினாள்..





"ஹேய்.." என்றபடி முகத்தை கை வைத்து துடைத்தான். கண்களை முதலில் துடைத்தவன், நிறைமதியைப் பார்க்க.. அவள் அமைதியாக அவன் முகத்தை கண்களில் சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தாள்.





"ஏன் லூசு தண்ணியை ஊத்தின..?" என்று பரன் கேட்க





"பின்ன? ஒரு ஆண் என் கையை பிடிச்சா, இப்படி தான் ஊத்துவேன்.." என்று கண்களில் சிரிப்போடு நிறைமதி கூற பரனும் சிரித்துவிட்டான்.








வெகு நேரம் சிரித்தவர்கள், தன்னை மறந்து ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் தன் உணர்வு வந்த பரன், தன் தந்தை தன்னிடம் கூறியது ஞாபகம் வர,





"மதி.. நமக்கு ஒரு முழு கன்ஸ்டரக்ஷன் வொர்க் கிடச்சுருக்கு. 5 ஸ்டார் ஹோட்டல்.. நீ தான் அதற்கு இன்டீரியர் டிசைன் பண்ணனும். சரியா?"





"ஐஐஐஐ.. சூப்பர் பரன்.. அண்ட் தேங்க்ஸ் பரன்.. என்னைய நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுத்ததுக்கு.." என்று முகமலர கூறினாள் நிறைமதி.





"தேங்க்ஸ் லாம் வேண்டாம் மதி.. அப்பறம் இது சம்மந்தமா நாம இன்னைக்கு என் நண்பன் புலிவேந்தன்-அ பார்க்க போறோம். நீயும் வா.."





அந்த புலிவேந்தனின் பெயரை கேட்டதும் ஏனோ நிறைமதிக்கு பிடிக்கவில்லை.. காலம் காலமாக அப்-பெயரை அவள் வெறுப்பதாக உணர்ந்தாள்.. அந்த வெறுப்பு அவள் முகத்தில் வெளிப்பட, அதனை கண்டுக்கொண்ட ஸ்ரீபரன்.,





"ஏன் ஒரு மாதிரி இருக்க?"





"இல்ல பரன். உங்கள் ப்ரண்டை பார்க்க நான் வரலை. நீங்கள் போய் வாங்க."





"ஏன்-னு சொல்லு"





"பிடிக்கலை உங்கள் ப்ரண்டோட பெயர்.."என்று முகம்
சுழித்தவளைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான்..


"ஹாஹாஹாஹாஹா....மதி.. மதி.. எங்களுக்கும் இவன் பெயரை முதன்முதலில் கேட்டதும் பிடிக்கவில்லை. வித்தியாசமான பெயர்-ல? அப்படி தான் தோன்றும். மத்தபடி பையன் தங்கம்..ரொம்ப நல்லவன்..திறமைசாலி.. உனக்கு பிடிக்காத மாதிரி அவன் நடந்துக்கொள்பவன் இல்லை. அப்படிஅவன் ஏதேனும் பண்ணினா, என்கிட்ட சொல்லிடு. நான் பாத்துக்குறேன்." என்று அவள் மனதை சரி செய்யப்பார்த்தான். ஆனாலும் அவள் மாறியதாக இல்லை. அவன் இவ்வளவு தூரம் கூறியதால், அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.


ஆனால் நிறைமதிக்கும், ஸ்ரீபரனிற்கும் தெரியாது.. புலிவேந்தனை சந்திக்க நிறைமதியை கூட்டிச்செல்வது எவ்வளவு பெரிய தவறு என்று...
__________________________________


யார் அந்த புலிவேந்தன்..? ஸ்ரீபரனிற்கு ஏன் மாமல்லபுரத்தின் பெயர் கேட்டதும் இப்படி காட்சிகள் தோன்றின? ஸ்ரீபரனிற்கும் மாமல்லபுரத்திற்கும் என்ன சம்மந்தம்..?

___________________________________