• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

போட்டி அறிவிப்பு

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
வணக்கம்

மனமெங்கும் பொங்கும் உவகை கலந்த மகிழ்ச்சியுடன் வைகையின் போட்டியை அறிவிக்க வந்துவிட்டோம்.

எங்கள் அபிமான எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களே...

டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் போட்டி எதற்கென்று கணித்து விட்டீர்களா?

எல்லாம் உங்களுக்காகத்தான்!
உங்களுக்காக மட்டுமே தான்!

உங்களைத் திக்கு முக்காடச் செய்ய தித்திக்கச் செய்ய மிட்டாய் கதைகளோடு வந்து விட்டோம்!

குளிருக்கு இதம் தரும், மனதிற்கு சுகம் தரும், கண்களை களிப்படையச் செய்யும் மிட்டாய் கதைகள் குறுநாவல் போட்டி- 2024!

சவாலே சமாளி

பத்து அத்தியாயத்திற்குள் உங்களின் மொத்த திறமைகளையும் படைத்திட முடியுமா?

10 நாட்களில் 10 அத்தியாயம் எழுதிட,
எழுத்து உலகில் எழுத்தாளர்களின் திறமைகளுக்கு ஒரு சவால்!

பரிசு:
முதல் பரிசு - 3000/-

இரண்டாம் பரிசு - 2000/-
மூன்றாம் பரிசு - 1000/-


போட்டியில் பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

விதிமுறைகள்:

•யார் வேண்டுமென்றாலும் எத்தனை கதைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம். “மிட்டாய் கதைகள்" என்ற தலைப்பில் குறைந்தது 10000 வார்த்தைகள், அதிகபட்சம் எழுத்தாளர்களின் விருப்பம்.

10000 வார்த்தைகளுக்கு குறையாமல் கதையை எழுதி வைகைத்தள பக்கத்தில் பதிவிட வேண்டும்.

*கதைக்களமும் எழுத்தாளர்களின் விருப்பம்தான். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் விரும்பிய கதைக்களத்தைக் கொண்டே எழுதலாம். 18+ கதைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.


நவம்பர் 30 வரைக்கும் கதைக்கான பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.

•நம் வைகை தள பக்கத்தில் உங்கள் மிட்டாய் கதைகளை வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பதிவிடலாம்.

•எழுத்துப்பிழை இல்லாது கதையைப் பதிவிடுவது அவசியம்.

இது பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி.

வைகை தள பக்கத்தில் நேரடியாக எழுத்தாளர்களே பதிவிடலாம். அதற்கான ஐடியை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.

* ஏற்கனவே வெளியாகிய/ தேர்வு செய்யப்பட்ட கதைகளை அனுப்பக் கூடாது.

எழுத விரும்பும் எழுத்தாளர்கள் உங்கள் பெயர், கதையின் பெயர், விருப்பமிருந்தால் உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு - எழுத்தாளர்கள் தங்கள் கதையே தாங்களே ப்ரோமோட் செய்து கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களுக்கு மட்டும்தானா? அப்போ கதையை படிக்கும் வாசகர்களுக்கு என்ன பரிசு என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது.

கதைகளை கொண்டாடும் வாசகர்களுக்கு பரிசில்லாமல் ஒரு போட்டியா? கண்டிப்பாக உண்டு.

தளத்தில் உள்ள அனைத்து கதைகளையும் படித்து தளத்திலும், முகநூலில் உள்ள வைகை குழுவிலும் விமர்சனம் அளிக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்த அனைத்து கதைகளுக்கும் மீம்ஸ் போட்டு உங்கள் எழுத்தாளரையும் கதையையும் நீங்கள் கொண்டாடலாம்.

கதைக்கான மீம்ஸ் மற்றும் கருத்துக்களை வைகை தளத்திலும், முகநூல் குழுவிலும் பதிவு செய்ய வேண்டும்.

முதல் சிறந்த விமர்சனத்திற்கு - 500/- மற்றும் சிறப்பு பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும்.


முதல் சிறந்த மீம்ஸ் க்கு -500/- மற்றும் சிறப்பு பரிசாக புத்தகங்கள் வழங்கப்படும்.

இரண்டாம் சிறந்த விமர்சனத்திற்கு 250/- மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.

இரண்டாம் சிறந்த மீம்ஸ் - 250/- மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்

போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்படும்.


எமை அன்பால் ஆளும் எழுத்தாளர்களே ... வாசகர்களே... நட்புக்களே....

உங்களின் ஆதரவாலும், அன்பாலும், விமர்சனத்தாலும் வைகை தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் அந்த உன்னதத்திற்கு என் நன்றிகள்.

கதைகளின் விளை நிலமாய் வைகை தளம் அமைக்க, அதனை நட்புக்களமாய் மாற்றிய இனிய நட்புகளும் பங்கேற்று கதைகளைக் கொண்டாடலாம் மிட்டாய் போல் சுவைத்து மகிழலாம்!

சீனி மிட்டாய் போல் சிதற விடலாம்!
சர்க்கரை மிட்டாய் போல் சதிராடலாம்!
தேன் மிட்டாய் போல் உருகி வழிந்தோடலாம்!
பஞ்சு மிட்டாய் போல் கொஞ்சி மகிழலாம்!


வாருங்கள்! வாழ்த்துங்கள்!
 

Attachments

  • WhatsApp Image 2024-11-17 at 6.27.56 PM.jpeg
    WhatsApp Image 2024-11-17 at 6.27.56 PM.jpeg
    42.5 KB · Views: 11
Last edited: