• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மஞ்சள் நிலவே , மையல் அழகியே!!!!

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
ஹாய் ஹாய் ப்ரிண்ட்ஸ்

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 🙏

இதோ உங்களுக்காக சாண்டில்யனும் ,சகானாவும் :love:

1704804276835.jpeg

அத்தியாயம் -1



“துதிப்போர்க்கு வல்வினைப்போம்

துன்பம்போம் நெஞ்சில் பதிப்போருக்கு
செல்வம் பலித்து கதித்து ஓங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலரருள்

கந்தர்சஷ்டி கவசந்தனை “

என இரு கரம் கூப்பி சிந்தையும் செயலையும் ஒரு நிலை படுத்தி மனதார ஒரு குரல் கடவுளின் முன் முணுமுணுத்து கொண்டிருக்க



“அடடா போதுமக்கா நீ சாமிகிட்ட வேண்டினது......ஒரு மனுஷி உனக்காக விடியகாலையில ஒன்பது மணியில இருந்து காத்துகிட்டு இருக்கேன்......இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்த அப்புறம் சாமி சிலைக்கும் உனக்கும் வித்தியாசம் தெரியாது ....உனக்கு தீபராதனை காட்டிடுவாங்க அம்மா ..... நேரமாச்சு சீக்கிரம் வா ... இதை வாங்கிக்கோ நான் மறுபடியும் தூக்கத்தை கண்டினுயூ பண்ணனும்” என கொட்டாவி விட்டு கொண்டே ஒருத்தி சொல்லிகொண்டிருக்க

“வேண்டாம்க்கா வேண்டாம் அவகிட்ட சிக்கிடாதா....அவ உன்னை சோதனை எலியா பயன்படுத்திக்கிட்டு இருக்கா...இந்த முறை தப்பிச்சுடு” என பதட்டத்துடன் ஒரு ஆண் குரல் அறைக்குள் இருந்து வெளிவந்தது.


“டேய் அரிசிமூட்டை நான் உள்ள வந்தேன் நீ தொலைஞ்ச .......உன் வேலையை நீ பாருடா குரங்கு”.... என இவள் எதிர்பேச்சு பேச

“போடி எலிபொறி ..... எப்போ பார்த்தாலும் அங்க இங்க ஒட்டு போட்ட துணிய கொண்டு வந்து அக்காகிட்ட கொடுத்து கேட்டா இது பேச் வொர்க் டிசைன் சொல்லி ஏமாத்திகிட்டு இருக்க....... இப்படி கிழிஞ்ச துணிய ஒட்டு போட்டு கொடுத்திட்டு நீ பேஷன் டிசைன் படிக்கிறேனு ஊரை ஏமாத்திகிட்டு இருக்கேனா நாங்களும் ஏமாந்திடுவமா என்ன?” என மீண்டும் உள்ளே இருந்து குரல் வரவும்

“அடேய் நீ இப்போ வாயை மூடலை நீ சாப்பிட்டுகிட்டு இருக்க சாம்பார்ல வந்து உன்னை முக்கி எடுக்க போறேன் பாரு”..... என அவள் பதில் சொல்லி கொண்டிருக்கும்போதே




“ஏய் இப்போ நீங்க இரண்டு பேரும் வாயை மூட போறீங்களா இல்லியா ......அவளுக்கு இரயிலுக்கு நேரமாச்சு ... பெட்டில எல்லாம் அடுக்காம இருக்கு ...... இன்னும் டாக்சி வரலை ....அவளும் இன்னும் சாப்பிடலை எல்லாம் வேலையும் அப்படியே இருக்கு......இப்போ இந்த சண்டை ரொம்ப முக்கியம் உங்களுக்கு” என திட்டி கொண்டே வந்தவர் கடவுள் முன்பு தன்னை மறந்து கண் மூடி நிற்கும் மகளை பார்த்ததும் ஒரு பக்கம் அவளது சாதனையை நினைத்து பெருமையாக இருந்தாலும் அவளின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என நினைத்த அவர் மனம் கனத்து போனது.


அதற்குள் “இங்க பாரு சக்கு நான் ஒன்னும் வெட்டியா சண்டை போடலை......... என் செல்ல அக்காவுக்கு இந்த ஊரே பார்த்து ஆச்சிரியப்ட்ற அளவுக்கு சூப்பர் டிரெஸ் தைச்சு வச்சுகிட்டு அரைமணி நேரமா கரடியா கத்திகிட்டு இருக்கேன்....அவ தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்கிறா” என தமக்கையின் மேல் குற்றபத்திரிக்கை வாசித்தாள் அவள் செல்ல தங்கை.

“பெரியம்மா நான் அக்காவுக்கு தேவையான எல்லா பொருளையும் கடைக்கு போய் வாங்கிட்டு வந்திட்டேன்...இத அக்காகிட்ட நான் தான் கொடுப்பேன்” என்றபடி ஒருவன் அறைக்குள் இருந்து வெளியே வர

“இங்க பாரேன் அரிசிமூட்டை உருண்டு வர மாதிரியே ஓடி வரான்...மெதுவாடா நில நடுக்கம் வந்திட போகுது” என அவள் கிண்டல் பண்ணவும்

“போடி கரடி” என அவன் முறைக்க

“போடா குட்டி சாத்தான்...என்னோடது தான் அக்கா முதல்ல வாங்குவா “ என இவள் எகிற

“அடடா கொஞ்சம் இரண்டு பேரும் பேசாம இருக்கீங்களா....உங்க அப்பா கூப்பிடற மாதிரி இருக்கு” என்றதும் அந்த இடமே அமைதியானது. அந்த அமைதிக்குள் நாம் இவர்களின் அறிமுகத்தை முடித்து விடுவோம்....



காலை ஒன்பது மணியை விடிகாலை என விளித்து கூறும் செல்ல தம்பியால் கரடி என அழைக்கப்படும் அந்த வீட்டின் இரண்டாவது இளவரசி சாத்விகா. பேஷன் டிசைனிங் படித்து கொண்டிருப்பவள். சக்கு என பிள்ளைகளால் செல்லமாக அழைக்க படும் சகுந்தலா இவர்களின் தாய். சிறுவயதில் இருந்தே குடும்ப சுமையை சுகமாக சுமந்த தந்தை ரகுபதி. இவர்கள் கூட்டு குடும்பம் மற்றும் சித்தி மாலா ,சித்தப்பா ராஜேந்திரன் அவர்களின் பிள்ளைதான் அரிசிமூட்டை என அழைக்கும் இவர்களின் செல்ல தம்பி கடைக்குட்டி சர்வேஸ்வரன் . பள்ளிபடிப்பு படித்து கொண்டு இருக்கிறான்.சாப்பிடுவது அவனது பொழுது போக்கு. இப்போது இந்த விழுதுகளை எல்லாம் தாங்கும் ஆலமரம் அதிகாலை பொழுதிலே ஆண்டவன் முன் கரம் கூப்பி அனைவருக்காகவும் வேண்டுதல் வைக்கும் அந்த வீட்டின் முதல் இளவரசி சகானாஸ்ரீ என்கிற சகானா.



“வந்திட்டேன் ...வந்திட்டேன்...” என்றபடி வேண்டுதலை முடித்து விட்டு வேகமாக அவர்களை நோக்கி வந்தவள் “ முகத்தில் புன்னகை தவிழ ம்ம்ம் இப்போ நான் பண்ணனும் சொல்லுங்க” என்றாள் சகானா. 1

“அக்கா உனக்காக சூப்பர் மாடல் சுடிதார் தைச்சிருக்கேன். இது எல்லாமே நானே டிசைன் பண்ணது....இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி போட்டது இல்லை ...உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்...நீ பரிசு வாங்கும்போது இதே போட்டுக்கோக்கா” என அவள் நீட்டவும்

அதற்குள் “அக்கா இந்தாக்கா நீ ஊருக்கு போகும்போது சாப்பிடறதுக்கு தீனி வேணும்ல ...நான் என்னோட காசுல இருந்து இதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்...நீ முதல்ல என்னோடத வாங்கு” என சாத்வியை இடித்து கொண்டு சர்வேஸ் முன்னால் வந்து நீட்ட

“டேய் அரிசிமூட்டை இது ரொம்ப முக்கியமா..நான் எவ்ளோ கஷ்டபட்டு தச்சுட்டு வந்திருக்கேன் போடா ,,,,அக்கா அவன் கிடக்கிறான்...நீ என்னோட டிரஸ் தான் வாங்கணும்” என அவனுடன் இவளும் போட்டி போட

“சரி சரி ...உங்க இரண்டுபேரோடதும் வாங்கிக்கிறேன்” என்றவள் இரண்டையும் வாங்கி உள்ளே வைத்து கொண்டவள் தங்கையிடம் திரும்பி “சாத்வி உன்னோட வாளுதனத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு வீட்ல எல்லாரயும் நல்லா பார்த்துக்கோ என்றவள் தம்பியிடம் திரும்பி சபரி உனக்கு அக்கா என்ன வாங்கி வரட்டும்” என கேட்க

“அய்யோ அக்கா இவனுக்கு நீ கிலோ கணக்குல வாங்க முடியாது ..டன் கணக்குல தான் வாங்கணும்....நல்லா யோசிச்சுக்கோ” என சாத்வி அலறவும்

அதற்குள் அங்கு வந்த அன்னை சகுந்தலா “சகானா உன்னை அப்பா கூப்பிடறார் “ என்றதும் அங்கிருந்த கலகலப்பு மாறி சற்று அமைதியாக ,, “இதோ போறேன்மா” என்றவள் தந்தையின் அறையை நோக்கி நடந்தாள்.

உள்ளே நுழைந்ததும் தனக்காக காத்திருக்கும் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றவள் பின்னர் மெதுவாக “அப்பா எனக்கு அங்க போறதில விருப்பம் இல்லை. நீங்க, வீட்ல எல்லாரும் வற்புறுத்தினதால போறேன்.. இது ஆரம்பம் தான்பா. இன்னும் இந்த உலகம் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு......எந்த காரணத்திற்காக வீடு. வாசல் ஊரை விட்டு வந்தமோ அதை அடையாம நான் ஓயமாட்டேன்பா.....மறுபடியும் உங்களை பழையமாதிரி மாத்திகாட்டுவேன்” என அவள் சொல்லும்போது முகத்தில் கோபம் இல்லாவிட்டாலும் வார்த்தைகளில் தெரிந்த அழுத்தம் மகளின் மனநிலையை அவர்க்கு நன்கு உணர்த்தியது.



தன் மகளையே வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருந்தவரின் கண்களில் ஓரத்தில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருக்க வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்து தனியாக இந்த உலகத்தில் முட்டி மோதி சுயமாக எழ முயற்சிக்கும் மகளை நினைத்து ஒரு புறம் பெருமையாக இருந்தாலும் வாய் பேசமுடியாமல் கால்கைகள் செயலற்று கிடக்கும் தன்னால் அவளுக்கு உதவ முடியவில்லயே என்ற தவிப்பும், தன்னுடைய அறியாமை தனது பெண்ணின் வாழ்வை திசை மாற்றி விட்டதே என்பதே அவரிண் ஆற்றானமைக்கு காரணமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக கை கால்கள் செயலற்று படுத்த படுக்கையாக இருக்கும் ரகுபதிக்கு நடப்பதை தடுக்கும் ஆற்றல் இல்லை என்றாலும் நடந்து முடிந்த நிகழ்வுகள் கனவாக இருக்க கூடாதா என்ற நப்பாசை மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

அதற்குள் “அக்கா கார் வந்திடுச்சு” என்ற சத்தம் கேட்கவும்” “நான் போயிட்டு வரேன்பா” என்றபடி கண்களில் துளிர்த்த நீரை தந்தைக்கு தெரியாதபடி துடைத்து கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.



அவள் எந்த மனநிலையில் அறையில் இருந்து வருவாள் என்பதை அறிந்திருந்த அவளின் சித்தப்பா அவளருகில் சென்று “..கடவுள் எப்பவும் உனக்கு துணை இருப்பார். நீ சந்தோஷமா போயிட்டு வா” என அவளுக்கு ஆறுதல் சொன்னார்.

அதற்குள் அங்கு வந்த சாத்விகா “அக்கா இது உன்னோட திறமைக்கான பரிசு.உனது உழைப்பு ,நேர்மை,அர்பணிப்பு என அனைத்திற்குமான பரிசு இது. இதை வாங்கிறதால உனக்கும் பெருமை ..இந்த ஊருக்கும் பெருமை. அதனால் நீ சந்தோஷமா போய் பரிசை வாங்கிட்டு வா.உனக்காக ஆரத்தி தட்டோட காத்திருக்கிறோம்” என உற்சாக படுத்த அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சந்தோசம் நிறைந்திருந்தது.



ஆனால் அதற்கு உரியவளோ இவை அனைத்திற்கும் ஒரு கசந்த புன்னகையை பதிலாக தந்து கொண்டே முன்னே செல்ல



அவளின் முகத்தை பார்த்ததும் “அக்கா என்னக்கா இப்படி இருக்க ....எவ்ளோ பெரிய விஷயம் உன் வாழ்க்கையில நடக்க போகுது. இது உன்னோட வெற்றிக்கா ...இதுக்குதான இவ்ளோ கஷ்டப்பட்டோம். ஆனா உன் முகத்தில எந்த ரியாக்ஷனும் இல்லை ..போக்கா” என சாத்விகா சலித்து கொள்ளவும்



“அப்படி எல்லாம் ஏதும் இல்லை சாத்வி ...நான் சந்தோஷமா தான் இருக்கேன்” என அவள் சொல்லி கொண்டு இருக்கும்போதே



“சகானா நேரமாகிடுச்சு கிளம்பலாமா....இன்னும் என்ன பண்றிங்க .....டிக்கெட் எல்லாம் மறக்காம எடுத்துகிட்டிங்களா” என கேட்டுகொண்டே வந்தான் சர்வேஸ் என்கிற சர்வேஸ்வரன். சகானாவின் சகலமும் இவன்தான். பத்து வருடங்களுக்கு முன்பு உதவிக்காக உள்ளே வந்தவன் இன்று சகலமும் அவனாகி போனான்.



“ஆஹா வந்திட்டாண்டா டைம்பீஸ் .....கடிகாரம் கூட பேட்டரி தீர்ந்தா நின்றும் ..ஆனா இவன் இருக்கானே சொன்ன நேரத்துக்கு சரியா வந்து நிப்பான் ....இவனோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லம போச்சு” என மனதில் அவனை திட்டி கொண்டே “ஹிஹி வாங்க... வாங்க ச்சே சபரிஷ் சார் “ என வேண்டுமென்றே அவன் பெயரை அழுத்தி சொல்லி அவனை வரவேற்றாள் சாத்விகா.





அவனை பார்த்ததும் மனதில் உள்ள நினைவுகள் எல்லாம் மறைந்து போக “இதோ கிளம்பிட்டேன் சபரீஷ். வண்டி வந்திடுச்சா...அம்மா எல்லாம் ரெடியா? ...டைம் ஆகிடுச்சு...நான் போகும்போது சாப்பிட்டுகிறேன் ” என்றபடி தனது கைபையை எடுத்து கொண்டு வாசலுக்கு விரைந்தாள் சகானா.





குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி நின்று அவளை சந்தோஷமாக வழி அனுப்ப ஒரு கண்ணில் பெருமிதமும் மறுகண்ணில் வேதனையுமாக பார்த்து கொண்டு நின்று இருந்தார் சகுந்தாலா ... பின்னே இருக்காதா இந்த ஆண்டு திருப்பூர் மாநிலத்தின் சிறந்த நிறுவனமாக அவர்களது சகானா மோட்டார் வாகன சர்வீஸ் ஸ்டேஷன் தேர்வு ஆகி அதற்கான சிறந்த தொழில் முனைவோர்க்கான விருது அவளுக்கு கிடைத்துள்ளது . அந்த விழாவிற்கு தான் இப்போது சகானா செல்கிறாள்.
 
  • Love
Reactions: Viswadevi

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
சூப்பர் ஆரம்பம். சகானாவிற்கு என்ன சோகம்னு தெரியலை.