• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே!!

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
1705580172437.jpeg


அத்தியாயம் 2



மறுவார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

மயில் தோகைபோலே விரல்கள்

உன்னை வருடும்

மனம் படாமல் உரையாடல் நிகழும்….



என தாமரையின் பாடல் வரிகள் அந்த அறையை நிறைத்து கொண்டிருக்க வரிகளின் மென்மையும் அந்த இசையின் இனிமையும் அவனின் மனதிற்கு இதமாக இருக்க புலன்கள் விழித்திருக்க ,விழிகள் மூடி அதில் லயித்திருந்தான் அவன்.

அப்போது அறையின் அழைப்பு மணி விடாமல் ஒலிக்கவும்

அவனோ அதனை கண்டுகொள்ளாமல் பாடலில் மூழ்கி இருந்தான்.

அதற்குள் தொடர்ந்து இரண்டு மூன்று முறை அழைப்பு வரவும் பாடலை நிறுத்தி விட்டு அறைகதவை திறந்தான்.

எதிரில் யாரும் இல்லாமல் போக சுற்றும் முற்றும் பார்த்தவன் பின்னர் “ஹே குட்டி பிசாசு நீ தான கதவை தட்டின ..வெளியே வா” என குரல் கொடுக்க

“ஹிஹி கண்டுபிடிச்சுட்டிங்களா” என வழிந்தபடி முன் வந்து நின்றாள் ஸ்ரீ வாகிணி. அவன் முகத்தை பார்த்ததும் “சாரி இந்த நேரத்தில உங்களை தொந்தரவு பண்ண கூடாதுன்னு தெரியும்...ஆனா ஒரு அவசர உதவி வேணும் ... அதான் இங்கே வந்துட்டேன்” என்றாள்.



“பச் என்ன வேணும் சொல்லு” முகத்தை சுளித்தபடி என அவன் கேட்ட தொனியே அவன் மனநிலையை உணர்த்த

உடனே “இல்லை மாமா அது வந்து ...வந்து” என அவள் இழுக்கவும்

உடனே “சரி இன்னும் அரைமணி நேரத்தில நான் உன் அறைக்கு வரேன்.....இப்போ கிளம்பு” என சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அறைகதவை மூடிவிட்டு உள்ளே சென்று விட்டான்.

இது அவள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அந்த நொடியில் தோன்றிய ஏமாற்றத்தில் அவள் முகம் வாடி போனது.

இது அவனுக்கான நேரம்.... இந்த அறையில் இருக்கும்போது அவனை யாரும் தொந்தரவு பண்ண கூடாது. அந்த நேரத்தில் யார் வந்தாலும் அவனது பதில் இப்படிதான் இருக்கும். வாகிணி என்பதால் பதில் பேசினான். மற்றவர்கள் என்றால் அவனது பார்வையிலே பஸ்பமாகி இருப்பார்கள்.

“அப்போது இங்க என்ன பண்ணிட்டு இருக்க வாகிணி .... கீழே உங்க அப்பா உன்னை தேடிகிட்டு இருக்கார்” என்றபடி வந்தார் கீதா அவளின் தாய் .



“இல்லம்மா சாண்டி மாமா கிட்ட சொல்லி அப்பாகிட்ட பேசலாம்னு” என அவள் முடிக்கும் முன்னே



“ஏண்டி உங்க அப்பாவ பத்தி உனக்கு தெரியாதா...அவர் முடிவு எடுத்தா எடுத்தது தான் .யார் சொன்னாலும் கேட்கமாட்டார்...நீ போய் படிக்கிற வேலைய பாரு” என சொல்லிவிட்டு சென்றார்.



சொன்னபடி அரைமணி நேரம் கழித்து வாகிணி அறையில் இருந்தான் சாண்டி என்று அழைக்கபடும் சாண்டில்யன்.

“சொல்லு வாகி என்ன ஹெல்ப் வேணும் உனக்கு .... என்ன வம்ப இழுத்திட்டு வந்திருக்க ....... காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா இல்லை செமஸ்டர் மார்க் வந்திடுச்சா ....எத்தனை அரியர்ஸ்...எதிலயாவது சைன் பண்ணனுமா” என வரிசையாக கேட்க



“ ச்சே சே என்ன மாமா இப்படி என்னை அசிங்க படுத்திட்டிங்க என முகத்தை சுளித்தவள் இந்த மாதிரி சில்லி மேட்டர்க்கு எல்லாம் உங்ககிட்ட வருவேனா.....அதெல்லாம் காலேஜ் வாசல்ல முடிச்சுடுவேன். அரியர்ஸ் எல்லாம் நமக்கான ஆர்னமென்ட்ஸ் மாம்ஸ்...... அது இருந்தா தான் கெத்து” என பெருமையாக இல்லாத கலரை தூக்கி விட்டபடி சொன்னவள் “இது வேற “ என்றவள் .

“அது வந்து மாமா என்னோட ப்ராஜெக்ட் விஷியமா பெங்களூர்ல இருக்க ஒரு கம்பெனிக்கு ஒன் வீக் தங்கி வேலை பார்க்கணும். அப்பா சொன்னா ஒத்துக்க மாட்டேன்கிறார். நம்ம ஊர்ல இருக்கிற கம்பெனி பாருன்னு சொல்றார். நீங்க தான் சொல்லி பெர்மிசன் வாங்கி தரணும்...நாளைக்கு தான் கடைசி நாள்.... என் ப்ரிண்ட்ஸ் எல்லாரும் போறாங்க”...என்றாள் .1



அதற்கு “மாமா சொல்றதும் சரிதானே .. ....இந்த சென்னையில நமக்கு தெரியாத கம்பெனி கிடையாது....அதுக்கு நீ ஏன் அங்க போகணும் என்றவன்

“எனக்கும் இதில விருப்பம் இல்லை . நீ இங்கே ஏதாவது கம்பெனி பாரு......எனக்கு இப்போ பசிக்குது நேரமாகிடுச்சு முதல்ல சாப்பாடு மத்தது அப்புறம் பேசிக்கலாம்” என பேச்சை பாதிலே முடித்து கொண்டு கிளம்ப

“மாம்ஸ் ப்ளீஸ்..... ப்ளீஸ்..... எனக்காக இது கூட செய்ய மாட்டீங்களா...என்ன மாமா நீங்க .....நான் உங்களுக்கு எத்தனை முறை ஹெல்ப் பண்ணிருக்கேன்.....இரண்டு நாளைக்கு முன்னாடி நீங்க தோள்பட்டை வலின்னு வீட்டுக்கு வந்தப்ப நான் தான் அத்தை அறையில இருந்து தலைவலி தைலம் எடுத்திட்டு வந்து உங்க கிட்ட கொடுத்தேன்” என்றவள்

.....அப்புறம் போன வாரம் நீங்க ஒரு பைல் ரூம்ல இருக்கு எடுத்திட்டு வா சொன்னதும் என் தல அஜித் பாடலை பார்க்கிறத பாதியில விட்டுட்டு மாடி ரூம்க்கு போய் எடுத்திட்டு வந்து கொடுத்தேன்...உங்களுக்காக நான் இவ்ளோ செஞ்சிருக்கேன்...எனக்காக நீங்க இந்த சின்ன உதவி கூட செய்ய மாட்டேன்கறீங்க ”.... என அவள் தன் முட்டை கண்ணை உருட்டி உருட்டி தான் செய்ததை ஏதோ பெரிய வேலை செய்தது போல பட்டியலிட

....”ம்ம்ம் அதான் பார்த்தனே...ஏன் வாகி உங்க ஊர்ல எல்லாம் தோள்பட்டை வலிக்கு தலைவலி தைலம்தான் போடுவாங்களா?” என கேலியாக கேட்டவன்

அவளோ திரு திரு வென முழித்தபடி “ அது வந்து அதான் கிடைச்சுது என்றவள் ....எதுவா இருந்தா என்ன....ஆனா நான் தான எடுத்திட்டு வந்து கொடுத்தேன் தான ....” என அவள் செய்ததை நியாபடுத்த

அவளது பேச்சிலும் செய்கையிலும் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு தன் முடிவில் இருந்து மாறாமல் இருப்பது போல் நின்றான்.

உடனே வேகமாக “ என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லை மாமா ....பேசாம நான் எங்க ஊர்லே இருந்திருக்கலாம்”என தனது இறுதி ஆயுதமாக இந்த பேச்சை எடுத்தவள் அவள் அழுவது போல் சொல்லவும்



“சரி சரி...முகத்தை இப்படி அஷ்டகோணலா வைக்காத பயமா இருக்கு ....நான் மாமாகிட்ட பேசறேன்” என்றான் அவன்.

அவன் ஒத்துக்கொண்டதும் சந்தோஷத்தில் வேகமாக எம்பி குதித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டவள் “ தேங்க்ஸ் தேங்க்ஸ் மாமா” என சொல்லிவிட்டு வேகமாக மாடிப்படியில் இறங்கி ஓடினாள்.

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் அப்போது அவன் முகத்தில் இருந்த அந்த சந்தோசம் அவன் கண்களில் தெரிந்த நிறைவு அது வாகினிக்கு மட்டுமே உரித்தானது. அவளால் மட்டுமே அவனுக்கு அந்த மனநிறைவை கொடுக்க முடியும்.



கீழே வந்தவன் “சாரி மாமா..கொஞ்சம் லேட்ஆகிடுச்சு “ என்றபடி உணவு மேஜையில் மாமாவின் அருகில் அமர்ந்த சாண்டி “எங்க அம்மாவ காணோம்” என கேட்க

“அவங்க தலைவலிக்குதுனு மாத்திரை போட்டு படுத்து இருக்காங்க....நம்ம பொன்னமா அறைக்கே சாப்பாடு கொண்டு போய்ட்டா” என்றார் கீதா.



“ஏன் என்னாச்சு காலையில நல்லாத்தான இருந்தாங்க...இப்போ என்ன தலைவலி...” என அவன் பதறி எழவும்



“ சாண்டி அவங்களுக்கு ஒன்னும் இல்லை.....இன்னைக்கு உங்க அப்பாவோட நண்பர் ஒருத்தர் வந்திருந்தார். என்னனு தெரியலை அவங்க பேசிட்டு போனதும் முகமே சரியில்லை .... உங்க அப்பாவ பத்தி பேசி இருப்பாங்க போல .....கொஞ்ச நேரத்தில தலைவலிக்குதுனு சொல்லிட்டு போய் படுத்துட்டங்க” என்றார் கீதா.



அதை கேட்டதும் சாண்டியின் முகமும் வாட வேகமாக எழுந்தவன் மீண்டும் எதுவும் பேசாமல் அமர்ந்தான்.



“ஏன் கீதா இந்த நேரத்தில அதை எல்லாம் நியாபகபடுத்திற”... என அவனின் மாமா தன் மனைவியை திட்ட





சிலவினாடிகள் அமைதியாக இருந்தவன் பின்னர் “சரி சரி விடுங்க...அத்தை பசிக்குது...சீக்கிரம் டிபன் வைங்க” என சட்டென முகத்தை மாற்றி பழைய நிலைக்கு திரும்பினான். இந்த நேரத்தில் தன் அன்னை யாரையும் பார்க்க விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும்.





இங்கு மேசையில் தட்டில் வைத்திருந்த உணவை கிளறியபடி சாண்டியின் முகத்தையும், தந்தையின் முகத்தையும் மாறி மாறி பார்த்துகொண்டே இருந்தாள் வாகிணி.

“என்னம்மா ஏதாவது கிடைச்சுதா?” என தந்தையின் குரலில்

கீழே குனிந்து உணவை கிளறி கொண்டு இருந்தவள் திடுக்குடு நிமிர்ந்து “ என்னப்பா ...என்ன கேட்டிங்க? என தடுமாற



“இல்லை தட்டுல இருக்க இட்லில ஏதோ தேடறியே அதான் கேட்டேன்” என அவர் சொல்லவும்



ஆம் சாண்டியிடம் இவ்ளோ வாயடிக்கும் வாகிணி அவளது தந்தை முன் முகம் பார்த்து பேசமாட்டாள். சிறுவயதில் இருந்தே அவள் அப்படிதான். அவர் கிராமத்து மனிதர் .கண்டிப்பும் தோரணையும் அவரது உடல் மொழியிலே இருக்கும். அவரிடம் மரியாதை கலந்த பயம் உண்டு.



அவள் திரு திரு வென முழித்தபடி சாண்டிய பார்க்க

அவனோ நிமிர்ந்தும் பார்க்காமல் உணவு உண்டுகொண்டிருந்தான்.

அதை பார்த்து கடுப்பானவள் “ஐயோ இந்த மாமாவ அப்பா கிட்ட பேச சொன்னா இட்லிய நல்லா மொக்கிட்டு இருக்கு.... இருடி மவனே நைட்டு பாலுக்கு பதிலா உனக்கு பினாயில் கொண்டு வரேன்” என மனதிற்குள் அவனை திட்டிகொண்டிருக்க

அவனோ எதுவும் அறியாதவன் போல் உணவில் மட்டுமே கவனமாக இருந்தான்.



இவனை நம்பி பிரயோஜனம் இல்லை என முடிவு செய்தவள் மெதுவாக “இல்லப்பா அது வந்து ஊருக்கு போறத பத்தி” என அவள் திக்கி திணற

“அதான் என் முடிவை நான் சொல்லிட்டேன்ல” என்றவர் பின்னர் திரும்பி “நீயே சொல்லு சாண்டி இவளை நம்பி அவளோ தூரம் எப்படி அனுப்பறது? ...இங்க இருக்கும்போதே தினமும் ஒரு பஞ்சயாத்து வருது...ஒருவாரம் அங்க அனுப்புனோம் அப்புறம் கலவரம் தான் நடக்கும்”. “ என அவர் சொல்லவும்



“ம்ம் எனக்கும் கொஞ்சம் அந்த பயம் இருக்கு மாமா ” என அவனும் தலையாட்ட

“அதான் சொல்றேன் ...இவளை தனியா எல்லாம் அனுப்ப முடியாது....எதா இருந்தாலும் இங்கே பார்க்கட்டும் ... நம்ம ரங்கராஜன் கம்பெனிக்கு வேணா போகட்டும். நான் அங்க பேசிடறேன்” என்றார்.

“அட ஆமா மாமா அது பெரிய கம்பெனி ஆச்சே!!” என அவன் சொல்லி முடிக்கும் முன்

வாகிணியோ “மாமாஆஆஆஆ!!!!! என பற்கலின் நடுவே வார்த்தைகளை கடித்து துப்ப

“இல்லம்மா அப்பா சொல்றதும் சரிதான...அவர் உன் நல்லதுக்குதான் சொல்வார்” என்றவனின் கண்கள் அவளை பார்த்து கேலியாக சிரிக்க முகத்தை சாதரனமாக வைத்து கொண்டு சொன்னான்.

அவனையே முறைத்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் துளி முட்டி கொண்டு நிற்க

சிறிது நேரம் அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் பின்னர்

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் மாமா .....ஆனா அவரோடது ஸ்டீல் கம்பெனி...நம்ம வாகி பண்றது டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான ப்ராஜெக்ட் .....அதனால் இங்க ஒத்துவராது ...... அவ பெங்கலூர் போகட்டும் மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்...அங்க நம்ம வீடு ஒன்னு இருக்கு ...இங்க இருந்து வேலைக்கு ஒரு ஆளு, நம்ம காரும் அனுப்பிடலாம். எங்க போனாலும் நம்ம கார்லே போகட்டும் ... அவளுடைய பாதுகாப்புக்கு நான் பொறுப்பு....நீங்க கவலை படாதீங்க” என்றவன் .

“என்ன வாகி இப்போ சந்தோசம் தானே” என்றபடி அவளை பார்க்க

அவனை எரித்துவிடும் பார்வை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

அதற்குள் இவர்களை பற்றிய ஒரு அறிமுகம்.

. SK மோட்டர்ஸ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் உள்ள கார் விற்பனை நிலையம். அதன் உரிமையாளர் சதாசிவம் .அவரின் துணைவி கௌரி..குடும்ப தலைவி இவர்களின் ஒரே வாரிசு சாண்டி என்ற சாண்டில்யன். நீண்ட கால தவத்தில் வரமாய் கிடைத்தவன்....பள்ளி படிப்பை இந்தியாவில் முடித்து கல்லூரி படிப்பை வெளிநாட்டில் படித்து கொண்டு இருந்தான். எதிர்பாராத நிகழ்வில் அவனின் தந்தை இறந்துவிட அவர்களது குடும்பம் தடுமாறி போனது.

உறவும் நட்பும் பொய்த்து போய்விட அந்த நேரத்தில் கௌரிக்கு துணை நின்றது அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் மாசிலாமணி. அவரின் மனைவி கீதா .அவர்களின் ஒரே வாரிசு தான் இந்த ஸ்ரீ வாகிணி என்ற வாகி. சாண்டி படிப்பை முடித்து வந்த பிறகு தொழிலில் அவனும் பங்கேற்க SK மோட்டார்சின் கிளைகள் இன்னும் விரிவானது.

இதைத்தவிர் சர்வீஸ் ஸ்டேஷன், கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் என மோட்டார் சம்பந்தப்பட்ட அனைத்திலும் SK மோட்டார்ஸ் தான் முதலிடம்.

சாண்டியின் தந்தை இறந்த நேரத்தில் தமக்கைக்கு உதவியாக மாசிலாமணி குடும்பம் வந்த போது பெண்குழந்தை இல்லாத கௌரிக்கு வாகிணியின் சுட்டி தனம் பிடித்து போக அவர்களை தன்னுடனே வைத்து கொண்டார் . அப்போது சாண்டியும் வெளிநாட்டில் இருக்க அவரது வலியை போக்கும் மருந்தாகி போனாள் அவள்.

அவன் இந்தியா திரும்பியதும் தந்தை தொழிலான கார் டீலர் நிறுவனத்தின் பொறுப்பு தன்னிடம் வைத்து கொண்டு , சர்வீஸ் ஸ்டேஷன் அவனது மாமவின் பொறுப்பிலும், உத்ரிபாகங்கள் விற்பனை அவனது நண்பன் சுதர்சன் பொறுப்பிலும் இருந்தது.

உணவு வேலை முடிந்த பின் தனது அன்னையின் அறைக்கு சென்றவன் அங்கு மேசையில் இரவு உணவு அப்படியே இருக்க நன்றாக உறங்கி கொண்டிருந்தார் கௌரி. அவரின் அருகில் சென்றவன் தாய்மை பெருகும் அந்த முகத்தின் நெற்றியில் இருந்த சுருக்கத்தை மெதுவாக தடவி கொடுத்தவன் அதற்கான காரணம் என்ன என்பது அவனும் அறிந்தவனாதலால் ஒரு பெருமூச்சு விட்டபடி அவர் அறையில் இருந்து வெளியேறினான்.

அவன் அறைக்குள் நுழைந்ததும் அடுத்த நொடி அவன் அறையில் இருந்தாள் வாகிணி.



“மாமா உங்ககிட்ட நான் என்ன சொன்னேன் .அப்பாகிட்ட பெர்மிசன் தான் வாங்கி தர சொன்னேன்...கார் வீடு எல்லாம் நான் கேட்டனா? ... நான் என்ன சின்ன குழந்தையா ....என்னோட ப்ரிண்ட்ஸ் எல்லாம் ரொம்ப சிம்பிள் ...நானும் அப்படிதான் இருக்கணும் ....அதனால எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

அவனோ அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடி “ஏன் வேண்டாம் வாகிணி...நீ ப்ராஜெக்ட் தான பண்ண போற.... இல்லை வேற.....” என அவன் அழுத்தி கேட்கவும்

அவனின் பார்வையில் தலை குனிந்தவள் “அது வந்து ப்ராஜெக்ட் மூணு நாள் தான் ...அப்புறம் நான்கு நாள் நாங்க ப்ரிண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கூர்க் , மைசூர் எல்லாம் பைக்குள சுற்றி பார்க்கலாம்னு இருந்தோம்” என அவள் உண்மையை சொல்லவும்

“ம்ம் அதுக்காக தான் இந்த ஏற்பாடு....நீ இந்த வீட்டு பொண்ணு..... இந்த வீட்டுக்குனு சில கௌரவம் இருக்கு....அதில உனக்கும் பங்கு இருக்கு .....அதை புரிஞ்சு நடந்துக்கோ.....நீ எங்க வேணாலும் போலாம்...ஆனா என்னோட கண்பார்வையில தான் இருக்கணும்” என சொல்லும்போது அவன் குரலில் இருந்த அந்த உரிமையில் அவளால் பதில் சொல்ல முடியாமல் நிற்க

அதன் பின் “சரி நீ கிளம்பு எனக்கு தூக்கம் வருது” என்றவன் தனது படுக்கையில் விழ வாகிணியோ அமைதியாக வெளியே வந்தாள்.



தேடல் என்பது ஒரு சுகமான

சுமை அல்லவா !

மனதின் ஆசைகள் எல்லாம்

மௌனம் என்ற மனக்கதவு

கொண்டு தாழிட்டு அதன்

நுழைவாயிலை எதிர்முனையில்

தேடிகொண்டிருகிறான்.




நிலவு தொடரும் .............
 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
வாகினி செம க்யூட். சாண்டிக்கும் சகானாவிற்கும் என்ன சம்பந்தம் . வெயிட்டிங் சிஸ் ❤️