காலை வேலையிலே பொங்கி வந்த காவிரியாய் கருமேகம் பொழிந்து தள்ளிவிட்டான்.. பூமி மாதாவும் குளிர்ந்து மனம் பரப்பி மண் வாசனையை தூவிவிட்டாள்.. ஆனால் அதையெல்லாம் உணரும் நிலையில் அவளில்லை.. அவளின் நிலைக் கண்டு தான் மேகராஜனும் அழுதானோ என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்.
ஊர் மக்கள் வந்த வேலை முடிந்தது என்று சென்று விட்டனர்.. குடும்ப உறுப்பினர் மட்டும் இருந்த வீட்டில் கனகத்தின் குரல் மட்டுமே ஓங்கி உயர்ந்தது.. ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் வெறுமையாய் அமர்ந்திருந்தாள் வெண்மதி.
அவள் அமர்ந்திருந்த நிலை கான கான கனகத்திற்கு வயிறு காந்தியது.. அவள் திட்டுவதற்கு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஏன் அதற்கு எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தவளின் நிலை அவளின் வன்மத்திற்கு மேலும் தூபம் போட்டது.
' அழறாலா பாரு செஞ்சு வச்ச செலையாட்டம் உக்காந்துருக்கா..' மனதினுள் முனங்கியவள் வெணமதியின் அருகே வந்து அவளின் தலைமுடியை தன் கைகளால் அழுந்த பற்றி அவளை தூக்கினாள்.. அதுவரை உணர்ச்சியில்லாத ஜடமாய் அமர்ந்திருந்தவள் தலை வலி எடுக்கவும் தான் தெரிந்தது தன் முடி கனகத்தின் பிடியில் இருந்தது.
"என்னடி நீ பாட்டுக்கு உக்காந்துருக்க.. சனியன பீடை தரித்திரம் புடிச்சவளே அதான் என் பையனை முழுங்கிட்டியே இன்னும் எதுக்கு யார முழுங்க இப்படி உக்காந்துருக்க.. ச்சீய் போ போய் அடுப்படியிலை வேலையை பாரு.. அம்மனிக்கு வெத்தலை பாக்கு வச்சி அழைப்பாங்களோ.. போடி.." என்று தலைமுடியை இழுத்து தள்ளினாள்.
அவள் தள்ளிய வேகத்தில் கிழே விழ இருந்தவளை இரு வலிய கரங்கள் தாங்கி பிடித்தது.. மன உளைச்சலில் இருந்த பெண்ணவள் கனகத்தின் தீடீர் தாக்குதலில் அந்த வலிய கரங்களுக்குள்ளே மயங்கினாள்.. அவளை தாங்கி பிடித்தவன் விழிகளில் அத்தனை கோபம்.. விழிகள் இரண்டும் செந்நிறத்தில் மாறி அதன் சூடு தாங்காமல் அங்கிருந்த அனைவருக்கும் நடுக்கம் பிறந்தது.. ஆனால் யாரும் வெளியே காட்டாமல் பயத்தை மறைத்தனர்.
கனகமோ அவனை இரு விழி கொண்டு எரித்தாள் அவ்வளவு வன்மம் அவளின் விழிகளில்.. ஆனாலும் உள்ளுக்குள் நடுக்கம் ஓடியது நிஜமே.
வெண்மதியை தன் கைகளில் தாங்கியவன் குணிந்து அவளின் பிறை முகத்தை பார்த்தான்.. மயங்கிருந்த அவளின் பாழ் நெற்றி அவனிடம் என்ன உறைத்ததோ அவளின் நிலைக்கு காரணமானவர்களை நெருப்பு விழிகளால் சுட்டெரித்தான்.. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லவும் இல்லை கேட்கவும் இல்லை.. தன் கரங்களில் இருந்தவளை தூக்கி கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று விட்டான்.
அவன் போகவும் தான் கனகத்திற்கு மூச்சே வந்தது.. ஏதோ தோனவும் வேகமாக தன் கணவன் அருகில் சென்றவள், "யோவ் இவன் எப்போயா ரீலிஸ் ஆனான்.. இவ்வளவு நாளும் இல்லாத இப்போ எப்படி யா வந்தான்.. பேச்சு இனிமே அந்த மாயக்காரி பக்கம் கூட நெருங்க விட மாட்டான்.. இவன் இனி வரவே மாட்டேன்னு நெனச்சேன்.. ஆனா வந்து நிக்கிறான் பாரு.." கணவனிடம் வந்தவனை குறித்து பேசினாள்.
அவள் தான் பேசினாளே ஒழிய சதானந்தன் எதுவும் பேசவில்லை.. கணவனின் பதிலுக்காக முகத்தை பார்த்தவள் அவனின் அதிர்ந்த தோற்றம் தலையில் அடித்துக் கொள்ள வைத்தது.
"யோவ்.. யோவ் இங்கே பாருய்யா.." அவனை உலுக்கினாள்.
"க.. க.. கனகம் ஆதவன் வந்துட்டானா.." பயந்தபடியே பேசினான் சதானந்தன்.
"ஆமாய்யா வந்துட்டான் இப்போ அதுக்கு என்ன.." என்றாள் எரிச்சலாக.
"அடியே என்னடி இப்படி கேக்குற.. அவனுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுது அவ்வளவு தாண்டி.." என்றவனின் விழிகளில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.
"அவனுக்கு எப்படிய்யா தெரியும்.. நான் போட்ட திட்டம் சரியாத்தான் வேலை செஞ்சுது..ஆனா நடுவிலே இப்போ இவன் வேற வந்துட்டான்.. என்ன பன்றது.. யோசிக்கலாம் வாயா.." தன் கணவனை அடக்கியவள் முன்னே யோசித்தபடியே செல்ல அவளின் பின்னே இன்னமும் பயம் தெளியாத முகத்துடன் சென்றான் சதானந்தன்.
இங்கே அந்த அறையில் உள்ள கட்டிலில் தன் கைகளில் இருந்தவளை படுக்க வைத்தவன் ஏதோ யோசனையாக அவளின் முகத்தை பார்த்தான்.. அவனின் நினைவடுக்குளில் எங்கே பார்த்தது போல் இருந்தது.. ஆனால் சரியாக தெரியவில்லை.. இருந்தும் ஏதோ ஒரு உந்துதலில் அவளின் நெற்றியில் பரவியிருந்த முடியை ஒதுக்கி விட்டான்.
முடியை ஒதுக்கி விட்டவன் கையில் ஏதோ தட்டுபடவும் என்னவென்று பார்த்தவனுக்கு மின்னலாய் ஒரு குழந்தை முகம் வந்து போனது.. அந்த குழந்தை தான் இவள் என்று அவளின் நெற்றிப்பொட்டில் இருந்த தழும்பு நினைவுப்படுத்தியது.
" பட்டு மா.." என்று வார்த்தைக்கும் வலிக்குமோ என்று மென்மையாய் அழைத்துப் பார்த்தான்.
அவன் குரல் அவளின் செவிகளுக்குள் விழுந்ததா இல்லை ஆழ்மனதின் தேடலா என்று எதோ ஒன்று அவனின் கரங்களில் தன் கரங்களை வைத்தாள் பாவை.
தன் கரடுமரடான கைகளில் பரவியிருந்த தளிர் கரங்களை இறுகப் பற்றியவன், "பட்டு மா என்னடா ஆச்சி உனக்கு.. இத்தனை வருஷத்துக்கப்புறம் இப்போ தான் டா உன்னை பாக்குறேன்.. ஆனா இப்படியா பாக்கனும்.. இத்தனை நாள் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை.. ஆனா இனி நீ கலங்க கூடாது பட்டு மா.. உனக்கு துணையா நான் இருப்பேன் டா.. உன்னோட ஆது வந்துட்டேன் டா.. என்னை பாரு மா.." அவளின் கையை பிடித்து அழுதிருந்தவனின் கண்ணீர் துளி அவளின் நெற்றியில் பட்டு அவளுக்கு முழிப்பை கொடுத்தது.
அவள் எழவும் தன் கண்ணீரை வேகமாய் துடைத்தவன் ஆர்வமாய் அவளின் முகத்தை பார்த்தான் ஆதவன்.
தன் பட்டாம்பூச்சி இமைகளை மலர்த்தி மெதுவாய் இமை திறந்தவள் கண்டது எதிரே இருந்த ஆடவனைத் தான்.. அவளுக்கு அவன் யாரென்று பார்வையில் ஏதோ அன்னியமாய் பார்த்தாள்.. அவளின் அன்னிய பார்வை ஆடவனின் மனதை சுக்கு நூறாய் உடைத்தது.. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.. இத்தனை நாள் வனவாசம் அவனின் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் பழக்கி வைத்தது.. தன்னை தேற்றிக் கொண்டான்.
அவனையே பார்த்தவள், "யார் நீங்க.. இங்கே எப்படி வந்தீங்க.. இங்கிருந்து போயிடுங்க.. இவங்க எல்லாம் பொல்லாதவங்க.. எதாவது பன்னிடுவாங்க.." என்றாள் வலியை தேக்கிய குரலில்.
அவள் குரல் சொன்னது தான் பட்ட கஷ்டத்தையும் வலியையும் இனி யாரும் படக் கூடாது என்று.
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே, "நான் ஆதவன்.." என்றான் அவள் முகத்தில் எதையோ தேடியபடி.
"ஆஆஆ தவன்.." வார்த்தைக் கற்றுக் கொள்ளும் மழலையாய் அவனின் பேரை உச்சரித்துக் பார்த்தாள்.
"ஆனா தெரியலையே நீங்க யாரு.." என்றாள் மீண்டும்.
அவளின் தெரியவில்லை என்ற வார்த்தை அவனை கொன்று போட்டது.. ஆனால் இதற்கு மேலும் அவளுக்கு எந்த கஷ்டத்தையும் தரக்கூடாது என்று யோசித்தவன் ஒரு முடிவுடன்,
"நான் ஆதவன் நானும் இந்த வீட்ல ஒருத்தன் தான்.." என்று கூறவும் அதுவரை இளகியிருந்து அவளின் முகம் மீண்டும் இறுகிப் போனது.
அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் மெதுவாய் எழுந்தவள் அங்கிருந்த செல்ல முற்படும் போது கீழே விழ சென்றாள்.. அவளை தாங்கி பிடிக்க வந்தவனை தன் கைகளால் தடுத்தவள் மெதுவாய் அங்கிருந்து சென்று விட்டாள். போகும் அவளை அவனால் தடுக்க முடியவில்லை.. அவளின் கட்டளையை அவனால் மீறவும் முடியவில்லை.. ஆனால் அவனின் மனமோ 'பட்டு மா..' என்று கலங்கிப் போனது.
யார் இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் தான் என்ன.. கனகத்தின் குடும்பத்தை சேர்ந்தவனா இவன்.. ஆமாம் என்றாள் யார்.. இல்லை என்றாள் என்ன சம்பந்தம்.. இனி வரும் அத்தியாயங்களில் காணலாம் பட்டூஸ்.
படிச்சிட்டு மட்டும் போகாம கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்