இந்த வீட்டில் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் இருந்த அந்த ஒற்றைக் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள் வெண்மதி.. குமரேசன் இறந்ததிலிருந்து அவளின் வாசம் இங்கே தான்.. பஞ்சு மெத்தையில் படுத்தாள் கணவன் நினைவு வந்து கொல்லும் என்று ஊராருக்கு ஒரு பதிலை கூறி பெண்ணவளை இங்கே கொண்டு வந்தது கனகத்தின் வேலை இது.
ஆனால் வெண்மதியோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. எங்கிருந்தாலும் ஒன்று தான் என்ற எண்ணம் அவளுக்கு.
ஆனால் இன்று அவளை தாங்கியவன் யார் என்ற கேள்வி இப்பொழுது அவள் மனதில் வண்டாய் குடைந்தது.. இதுவரை அவனை இந்த வீட்டில் அவள் பார்த்ததில்லை.. ஆனால் அவனின் பார்வை ஏதோ பலவருடமாய் பழகியது போன்ற எண்ணத்தை தோற்றுவித்தது. இல்லை இது தனது மனப்பிரமையா என்று தான் நினைத்தாளே ஒழிய அதற்கு மேல் அதை பற்றி சிந்திக்காது அதை மறந்தாள் பெண்ணவள்.. அவளின் நிலை மேற்கொண்டு அவளை எதுவும் சிந்திக்க விடவில்லை.
இங்கே அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் சிறிது நேர யோசனையில் ஒரு முடிவெடுத்தவனாய் குளியலறைக்கு சென்றான்.. சற்று நேரத்தில் கிளம்பி கீழே வந்தவனை கண்டவர்களின் விழிகள் தெறித்து விடும் அளவு அதிர்ச்சியில் நின்றனர்.
வெள்ளை வேட்டி சட்டையில் மீசையை முறுக்கியபடி காவல் காக்கும் அய்யனாராய் திராவிட நிறத்திற்கும் அவனின் வேட்டி சட்டைக்குப் அத்தனை அம்சமாய் இருந்தான்.. ஆண்களுக்கே பொறாமை கொள்ளும் பேரழகு தான்.
அவன் வந்த நொடியிலிருந்து கனகம் தன் குரலை அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு நன்றாக தெரியும் வந்தவனின் குணம்.. அந்த சிறுவயதிலேயே ராட்சசனின் குணத்தை கொண்டவன்.. இப்போது அவனின் முன்னால் தன் ஆதிக்கத்தை காட்டக் கூடாது.. அடக்கி தான் வாசிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் இங்கிருக்கும் அத்தனை சொத்துக்கும் நேரடி வாரிசு அவன்.. அவன் இல்லையென்றால் தான் அது கனகத்தின் குடும்பத்திற்கு சேரும்.. அவன் பாட்டன் எழுதிய உயில் சாசனம் அது.
இத்தனை நாளாக இதை காபந்து பண்ணி வைக்கும் உரிமையை பெற்றவர்கள் தான் கனகத்தின் குடும்பம்.. ஆனால் அவன் வரவே மாட்டான் என்ற எண்ணத்தில் தான் தங்களுடைய சொத்தை போல பாதுகாத்தனர்.. ஆனால் உரியவன் வந்துவிட்டாள் உடமையை தந்து தானே ஆக வேண்டும்.
ஆதவனின் குடும்பம் தான் மேலூரில் மிகவும் வசதி படைத்த குடும்பம்.. பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்கள்.. ஊரிலேயே வசதி படைத்த குடும்பம்.. மரியாதை மிகுந்த குடும்பம்.
ஆனால் அத்தனை மரியாதையும் ஒரே நாளில் போகும் என்று ஆதவனின் குடும்பத்தினர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.. ஏன் தன் குடும்பத்தை தன் கண் எதிரே ஒரே நாளில் இழப்போம் என்று அவனுமே நினைத்திருக்க மாட்டான்.
அவனின் தாத்தா மருதநாயகம் அவரின் மனைவி கற்பகம் அவர்களுக்கு இருமகன்கள் ஒரு மகள்.. மூத்த மகன் ஆதவனின் தந்தை நாகரத்தினம் அவரின் மனைவி தேவகி.. அவர்களுக்கு ஒரு மகன் ஆதவன் ஒரு மகள் விருஷாலினி.. இரண்டாம் மகன் நாகராஜன் அவரின் மனைவி யசோதை.. அவர்களுக்கு ஒரு மகன் யுகேந்திரன்.. நாகலட்சுமி மருதநாயகத்தின் ஒற்றைப் பெண் வாரிசு.. அவரின் கணவர் நந்தகோபால்.. அவர்களுக்கு ஒரு மகள் ஒரு வயதான மதுமதி.
எல்லோரும் ஒரே குடும்பமாய் சந்தோஷமுடன் வாழ்ந்தனர்.. ஆதவன் அனைவருக்கும் மூத்தவன்.. அதனால் பொறுப்புகள் அதிகம் உடையவன்.. தம்பி தங்கைகளுக்கு பொறுப்பான அண்ணன்.. அத்தை மகளுக்கு பாசமான நேசமான மாமன்.. ஆதவனின் மேல் அவன் தம்பி தங்கைக்கு பாசமும் மரியாதையும் அதிகம்.. இப்படி ஒரு கூட்டுக் கிளியாய் குடும்பமாய் வாழ்ந்தவர்களை யார் கண் பட்டதோ ஒரே நாளில் வேரோடு அனைத்தும் சாய்ந்து போனது.. அடி மரத்திலிருந்து நுனி வரை அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது.. அதில் தப்பித்து அந்த மரத்தை மீண்டும் துளிர்க்க வைக்க வந்த சிறு தளிர் தான் ஆதவன்.
ஒரு விபத்தில் தன் குடும்பத்தை அடியோடு இழந்த ஆதவன் செய்யாத தவறுக்கு வஞ்சத்தால் பத்து வயதிலேயே சிறைச்சாலை சென்றவன்.
சதானந்தன் மருதநாயகத்தின் தூரத்து உறவான தம்பி பையன்.. தன் குடும்ப உறவுகள் அனைத்தையும் இழந்த ஆதவனுக்கு அவனின் சொத்துக்களை பாதுக்காக்க சொந்தமாக வந்தவர்கள் தான் கனகத்தின் குடும்பத்தினர்.
அந்த சொத்துக்களை நிர்வகிக்க பவர் ஆஃப் பட்டானி ஆதவன் அவர்களுக்கு எழுதி தந்திருந்தான்.. அதுவும் அவனின் குடும்ப வக்கீல் மூலம்.
வஞ்சத்தால் சிறைச் சென்றவன் திரும்ப வரவே போவதில்லை என்ற எண்ணத்தில் தான் கனகம் குடும்பத்தினர் தங்கள் இஷ்டம் போல இருந்தனர்.. ஆனால் இதற்கெல்லாம் உடமையானவன் வந்ததை அவர்களால் ஏற்க முடியவில்லை.. ஆனால் அவனை எதிர்க்கவும் துணிவில்லை.
கீழே வந்தவன் அனைவரையும் ஒரு முறை பார்த்து அங்கிருந்த வேலைக்கார பெண்மணியிடம், "இங்கே வாங்க.." என்று கை நீட்டி அழைத்தான்.
அவனை பார்த்த பயத்துடன் அங்கே வந்தவர், "சொல்லுங்க ஐயா.." என்றாள் என்ன சொல்லப் போகிறானோ என்ற பயத்துடனே.
" இங்கே வேலை செய்யற அத்தனை பேரையும் வரச்சொல்லு.. அதே போல இங்கே இருக்குற குடும்பத்தையும் வரச் சொல்லு.. உன் பேரு என்ன.." எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு கடைசியாய் அவரின் பெயரை கேட்டான்.
"என் பேரு வள்ளி ஐயா.. இதோ எல்லாரையும் வரச்சொல்றேன் ஐயா.." என்று கூறியவள் வேகமாய் அனைவரையும் அழைத்து வருவதற்கு சென்றாள்.
அங்கு உள்ள அனைவருக்கும் அவன் யாரென்று தெரியவில்லை என்றாலும் அவன் தோற்றமும் கனகம் குடும்பத்தின் அமைதியும் அவன் இந்த வீட்டிற்கு முக்கியமானவன் என்று சொல்லாமல் சொன்னது.
அடுத்த அரைமணிநேரத்தில் வெண்மதியை தவிர மற்ற அனைவரும் அங்கே வந்தனர்.. அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்தவன் அவள் இல்லாதது கண்டு சற்று முகம் சுணங்கி தான் போனான்.. ஆனால் அதை அனைவருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்தான்.
கனகம் வந்ததும் , "ஆதவா கண்ணா ஏன் பா எல்லாரையும் வர சொன்ன.. எதாவது வேணுமா பா சொல்லு சாமி நீ என் புள்ளை மாறி பா.. உனக்கு என்ன தேவையோ சொல்லு இவங்க எல்லாம் செஞ்சு தருவாங்க பா.. " நாக்கில் தேனொழுக பேசினாள்.
ஆனால் இதே வாய் தான் அவன் வந்ததும் அவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவன் பார்வைக்கு பயந்து ஓடியது என்பதை அந்த நொடியில் மறந்தாள்.
தன்னிடம் தேன் தடவிய வார்த்தையில் பேசியவளை கண்டு ஒரு பார்வை தான் பார்த்தான்.. அந்த பார்வைக்கு அஞ்சி நடுங்கி பின்வாங்கினாள்.
எல்லோரையும் ஒரு முறை பார்த்தவன், "நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா.." அழுத்தமான குரலில் கேட்டான்.
அவனின் குரலின் அழுத்தம் அவர்களை பின்வாங்க செய்தது.. ஆனாலும் அவனின் கேள்வி யாருக்கும் பதில் தெரியவில்லை.
" எனக்கு தெரியும் ஐயா.." என்றது ஒரு குரல் அந்த கூட்டத்தில்.
அது யாரென்று முன் வந்தவரை கண்டவன் அதிர்ந்து எழுந்து நின்றான் ஆதவன்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. படிச்சிட்டு மட்டும் போகாம கமெண்ட் பண்ணுங்க செல்லம்ஸ்.