• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
தன்னை தெரியும் என்று சொன்ன நபர் யாரென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.. அவர் அவனுடைய தாத்தா காலத்தில் இருந்து இங்கே வேலை செய்த முனியாண்டி.. அவனை பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்.. அவனை தெரிந்த அனைவரும் இப்பொழுது இந்த வீட்டில் இல்லை.. ஆனால் இவர் மட்டும் இன்னும் இங்கிருக்க காரணமென்ன என்ற யோசனையுடன் பார்த்தான்.. ஆனால் அவரின் கண்களோ அவனை யாசகமாய் பார்த்தது.. அவரை பார்த்துக் கொண்டே,

"உங்களுக்கு எப்படி என்னை தெரியும்.." அவரை தெரியாத மாதிரி கேள்வி கேட்டான்.. அவன் என்ன கண்களும் யாசித்தது இதைத்தானே.


" அய்யா அது வந்து இப்போ தான்யா கனகத்தம்மா சொன்னாங்க.." என்று கனகத்தின் மேல் பழியை சுமத்தினான்.

இதை கேட்ட கனகமோ, "ஏய் முனியா நான் எப்போ உன்கிட்ட சொன்னேன்.." எதையோ யோசித்தபடி.

"அது வந்தும்மா இப்போ தானா நான் உங்க ரூமுக்கு வந்து தோட்டத்து கணக்கு வந்து சொன்னேன்.. அப்போ நீங்க தான சொன்னீங்க.. இனிமே இந்த சொத்துக்கு வாரிசு வந்துட்டான்.. எனக்கு பாரம் குறையுதுன்னு சொன்னீங்க மா.. நல்லா ஞாபகப்படுத்தி பாருங்கம்மா.." என்றான் சாமர்த்தியமாய்.

அவளோ இன்று நடந்த களேபரத்தில் நடந்த எதுவும் சரியாய் நினைவு இல்லை அவளுக்கு.. அதுவும் ஆதவன் வந்ததும் உள்மன அலைச்சல் எதையும் நினைவுபடுத்தூவதாய் அவளுக்கு தெரியவில்லை.

இருந்தாலும் இந்த நேரத்தில் ஆதவன் முன்னிலையில் முனியனை கண்டிக்கவும் முடியாமல் ஆதவனின் பார்வையை சமாளிக்கவும் முடியாமல் திண்டாடி போனாள்.

ஆதவனோ அவளை பார்வையால் அளந்தபடியே முனியனிடம் திரும்பி,

"சித்தியா அப்படி சொன்னாங்க முனியா.." என்றான் எள்ளலாய்.

அவன் குரலில் இருந்த எள்ளல் யாருக்கு புரியாவிடினும் முனியனுக்கு அவனின் குரலில் இருந்த வித்தியாசம் நன்றாக புரிந்தது.. அவனும் சிரித்தபடியே

"ஆமாங்கய்யா.. அம்மாவுக்கு உங்க மேல ரொம்ப பாசம் யா.." என்றான் ஆதவனுக்கு பதிலாய்.

ம்ம் சரி.. ஆஆ சித்தி சித்தப்பா இன்னும் ஒரு மணி நேரத்துல வக்கீல் வர்போறாரு.. நான் உங்க மேல எழுதி கொடுத்த பவர் ஆஃப் பட்டானி முடிஞ்சது.. இனிமே நானே எல்லாத்தையும் பாத்துக்குறேன்.. இப்போ வக்கீல் வந்துருவாங்க ரெடியா இருங்க.." என்று கம்பீரமாய் சொல்லிவிட்டு வள்ளியிடம் திரும்பியவன்,

"என்னோட ரூம்க்கு ஒரு காபி கொண்டு வாங்க.." அவளிடம் உத்தரவாய் கூறிவிட்டு முனியனிடம் கண்ணசைவில் பின்னே வருமாறு சைகை செய்து விட்டு உள்ளே சென்றான்.


கனகம் குடும்பத்தினர் அதிர்ச்சியில் நிற்கும் பொழுது அதை பயன்படுத்திய முனியன் யாரும் அறியாமல் ஆதவனின் அறைக்குள் சென்று விட்டான்.

உள்ளே வந்தவன் நொடியும் தாமதிக்காமல் ஓடி சென்று ஆதவனின் கால்களில் விழுந்தான்.

" அய்யா சாமி எம்புட்டு நாள் கழிச்சி வந்துருக்கீங்க.. இத்தனை காலமா செய்யாத தப்புக்கு இப்படி தண்டனை அனுபவிச்சிட்டுங்களே ராசா.. எங்களால எதுவும் செய்ய முடியலை சாமி.. உங்க குடும்பமே அழிய யாரு காரணம்ன்னு இன்னுமும் தெரியலை சாமி.. நானும் நம்ம ஆளுங்களை வச்சி தேடி பார்த்துட்டேன் சாமி.. என்னால கண்டு பிடிக்க முடியலை ராசா.." கலங்கிய குரலில் சொன்னான்.

"முனியா அதை விடு நீ மட்டும் எப்படி இங்கே இருக்க.. மத்தவங்களாம் எங்க.." என்றான் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்.

" அய்யா நம்ம ஆளுங்க எல்லாம் இந்த ஊருக்கு வெளியே இருக்க மில்லுல வேலலை இருக்காங்க அய்யா.. அதுமட்டுமில்லாம நாங்கலாம் உங்களுக்கு விசுவாசமானவங்கன்னு தெரிஞ்சா எங்களையும் கொல்றதா சேதி வந்துச்சி அய்யா.. அது தான் எல்லோரையும் திசைக்கு ஒருத்தரா அனுப்பிட்டேன்.. நான் இங்கே இருக்குறதுக்கு காரணம் நான் உங்க ஆளுன்னு இங்கே யாருக்கும் தெரியாது அய்யா.. பெரிய அய்யா என்னை யாருக்கும் தெரியாம தான் அப்பவே தூரத்துல வச்சிருந்தாரு அய்யா.. அதுமட்டுமில்லாம சாகும் போது பெரிய அய்யா உங்களுக்கு பக்கபலமா பாதுக்காப்புக்கு இருக்க சொல்லி சொல்லிருக்காங்க அய்யா.." என்றான் சிறிதும் குறையாத விசுவாசத்துடன்.


அவனின் விசுவாசம் ஆதவனை பிரமிக்க வைத்தது.. அதனூடாக,

"ஏன் முனியா என் குடும்பமே இப்போ இல்லை.. அது மட்டுமில்லாம செய்யாத தப்புக்கு நான் ஜெயிலுக்கு போயிருக்கேன்.. ஆனா இப்பவும் எப்படி அதே விசுவாசத்தோட இருக்க.. தாத்தாவோட எப்படி விசுவாசமா இருந்தீங்களோ இப்பையும் அப்படித் தான் இருக்கீங்க.." என்றான் ஆதுரயமாய்.

" என்னங்கய்யா இப்படி சொல்லிட்டிங்க.. இந்த உடம்புல உயிர் இருக்கறதே உங்க குடும்பத்துக்காக தான் யா.. என் உயிரையும் கொடுப்பேன்.. அப்புறம் என்ன கேட்டீங்க எப்படி இப்பவும் அந்த விசுவாசம்னா.. நீங்க எங்க மருது அய்யாவோட ரத்தம் யா.. எல்லோருக்கும் கொடுக்கத் தான் தெரியுமே தவிர அடுத்த குடும்பத்தை அடிச்சி பிழைக்கற வம்சம் இல்லையா.. அதுமட்டுமில்லாம அய்யாவோட கடைசி நாள் என்கிட்ட சில விஷயங்கள் சொல்லிருக்காங்க அய்யா.. அதுல ஒன்னு என் உயிர் இருக்கற வரைக்கும் நான் உங்களுக்கு காவலா இருக்கனும் அய்யா.. இது அய்யாவோட உத்தரவு சாமி.." என்றான் அந்த விசுவாசமானவன்.

அதில் நெகிழ்ந்த ஆதவன், " முனியா முதல்ல நம்ம குடும்பத்தை கொன்னவனை கண்டுபிடிச்சி என் கையாலேயே அவனுக்கு சமாதி கட்டுவேன்.. அப்போ தான் என் குடும்பத்தோட ஆத்மா சாந்தி அடையும் முனியா.. அப்புறம் இத்தனை நாளா இந்த வீட்ல என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரியனும்.. நான் இங்கிருந்து போனதில இருந்து இப்போ வரைக்கும்.." என்றான் கட்டளையான குரலுடன்.

" அய்யா அது அந்த கனகம் அம்மா.." என்று சொல்ல ஆரம்பித்தவன் அரைமணி நேரங்கழித்து அனைத்தையும் கூறி முடித்தான்.. முனியன் கூறியதை கேட்டு ஆதவனின் தேகமெங்கும் ரத்தம் கொதித்தது.

"ஓஓஓ இந்த அளவுக்கு போயிட்டாங்களா.. இனிமே தான் இந்த ஆதவனோட இன்னொரு முகத்தை பாக்க போறாங்க.. சரி முனியா நான் பாத்துக்கறேன் நீ போய் நம்ம ஆளுங்களை திரும்ப இங்கே வரச் சொல்லு.." அவனிடம் மேலும் சில பல வேலைகளை சொன்னவன் ஏதோ ஒரு திட்டத்துடன் மீண்டும் கீழே வந்தான்.

அவன் கீழே வரவும் வள்ளி காபியுடன் மேலே வரவும் அவன் அமைதியாய் மீண்டும் தன் அறைக்கு வந்து நின்றான்.

அவள் வந்து அவனிடம் மெதுவாய் காபி ட்ரேயை நீட்டினாள்.. அதை எடுத்துக் கொண்டவன்,

"வள்ளி காலையில் ஒரு பொண்ணு இருந்தாளே இப்போ எங்கே அவ.." என்றான் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்.

"அய்யா வெண்மதி அம்மா அங்கே.." அவள் இருக்கும் அறையை நோக்கி தன் கையை நீட்டி காட்டினாள்.

அதை பார்த்த ஆதவனின் கண்கள் ரத்தமென சிவந்தது.


அடுத்த பாகத்தில பாக்கலாம் பட்டூஸ்