வள்ளி காட்டிய திசையில் இருந்தது ஸ்டோர் ரூம்.. அது பழைய பொருட்கள் இருக்கும் அறை.. அந்த அறையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் காற்று அதிகம் வராத இடம்.. அதில் ஜன்னல் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.. சின்னதாய் இரண்டு பலகைகள் கொண்டு ஜன்னல் இருக்கும்.. அதிலும் காற்று அதிகம் வராது.. அதிலா தன் 'பட்டுமா..' இருக்கிறாள் என்ற கோபம் அவன் மனதில் தீயாய் தகித்தது.. அவளை அங்கே கொண்டு சேர்த்தவர்களின் மேல் கோபம் வந்தது.. ஆனால் கோபத்தை காமிக்கும் இடமும் நேரமும் இன்னும் வரவில்லை.
நிச்சயமாக அவள் யாரென்று அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் வெண்மதியின் நினைவிலிருந்தவனை கலைத்தது முனியனின் குரல்.
" ஐயா வக்கீலய்யா வந்துருக்காங்க உங்களை கூப்பிட்டாங்க ஜயா.." என்றவன் தகவலை கூறிவிட்டு முன்னே சென்றுவிட்டான்.
அவனோடுடனே வள்ளியும் சென்று விட்டாள்.. சிறிது நேரங்கழித்து கம்பீரமாக வந்தவனை கண்டு எழுந்தார் அவனின் குடும்ப வக்கீலும் நண்பருமான ராஜேந்திரன்.
"வணக்கம் தம்பி.. எப்படி இருக்கீங்க.. போன மாசம் வந்து உங்களை பாத்தது.. ஒரு கேஸ் விசயமா தஞ்சாவூர் வரை போயிருந்ததால தம்பி வெளியே வரும் போது இங்க இருக்க முடியலை.." என்றார் இயல்பாய்.
அவரை கண்டு புன்னகை சிறிதாய் இதழ் விரித்தவன், "நல்லாருக்கேன் அங்கிள்.. பரவாயில்லை அது தான் நான் வந்துட்டேனே.. நான் வரவே போறதில்லைன்னு நிறைய பேரு நெனச்சுட்டாங்க.. ஆனா என் விதி நான் வந்துட்டேன்.." நிதானமாய் அங்கிருந்தவர்களுக்கு உறைக்கும் படியாய் அழுத்தமாய் கூறினான். அவன் அதை யாருக்கு கூறினான் என்று அங்கிருந்து சிலருக்கு தெரியும்.. பலருக்கு தெரியாது.
" சரி தம்பி நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.. நான் வந்த வேலையை பாக்கலாமா.." தன் வேலையை முடிக்கும் நோக்கத்துடன்.
"சரிங்க அங்கிள் நீங்க ஆரம்பிங்க.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்.." என்று திரும்பியவன் அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவரையும் உள்ளே போக சொன்னவன் கனகம் குடும்பத்தினரை மட்டும் அங்கு நிறுத்தினான்.. அதிலும் கனகம் சதானந்தம் வளவன் மட்டும் அங்கிருக்க வெண்மதியை காணவில்லை.. அதை கண்டவன்,
"சித்தி உங்க மருமகளை இங்கே வர சொல்லுங்க.." ஆணை போல கூறினான்.
"ஆதவா அவ எதுக்கு இங்கே.. அவளே ஒரு மூழி.." மேற்கொண்டு என்ன சொல்லியிருப்பாரோ அவனின் பார்வையில் இருந்த ரௌத்திரத்தில் அமைதியாய் வாயை மூடிக் கொண்டாள்.
"போய் வர சொல்லுங்க.." என்றவனின் குரலில் தான் சொன்னதை செய்ய வேண்டும் என்ற கட்டளை இருந்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வெண்மதி அங்கே வந்தாள் பொம்மையாய்.. அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.. அவளை கண்டவன் வக்கீலிடம் திரும்பி கண்ணை காட்டினான்.
அவரும், "தம்பி இதுவரைக்கும் உங்க சொத்துக்களை பாதுகாக்கற பொறுப்பை நீங்க உங்க பங்காளி முறையான சித்தப்பா சித்திகிட்ட கொடுத்திருந்திங்க.. இப்போ நீங்க வந்ததால அந்த பவர் ஆஃப் பட்டானி இனி செல்லாது.. அது மட்டுமில்லாம இத்தனை நாளும் உங்க சொத்துக்களை பாதுகாக்க அவங்களுக்கு மாச சம்பளம்ன்னு நில புலன்களை ஆண்டு அனுபவிக்க உரிமை கொடுத்தீங்க.. அதோட உங்களோட நிலத்திலிருந்து வந்த வெள்ளாமையில நீங்க எதுவும் வாங்கிக்கலை.. அதையும் கனகத்தம்மா குடும்பம் தான் அனுபவிச்சாங்க.. ஆனா இனி இந்த வீடு முதற்கொண்டு எல்லா விதமான அசையும் அசையா சொத்துக்கள் அனைத்திற்கும் ஒரே வாரிசான நீங்க வந்ததால அவங்களோட காபந்து முறை முடியுது.. இனி வரும் காலங்கள்ல அவங்க என்ன செய்யனும்னு அவங்களோட இஷ்டம்.. ஆனா இங்கே இருக்கிறது போல இருந்தா உங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கனும் இது எல்லாமே இந்த சொத்துக்களை பராமரிக்கும் பொறுப்பை இவங்கிட்ட ஒப்படைக்கும் போது நீங்க எழுதின ஒப்பந்த பத்திரம்.." என்றார் முழுதாய்.
அதை கேட்ட அனைவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.. கனகத்திற்கோ வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளாத குறையாய் போனது.. இவன் திரும்ப வரவே மாட்டான் என்று அல்லவா இத்தனையும் காபந்து பண்ணி வைத்தது.. இப்பொழுது இவன் வந்து கேட்டாள் அத்தனையும் தூக்கி கொடுக்க முடியுமா என்ற எண்ணத்தில்,
"வக்கீலய்யா அது எப்படி முடியும்.. இத்தனை வருஷமா இதை பத்திரமா பொண்ணா பூவா நாங்க காப்பாத்தி வச்சா இன்னைக்கு இவன் வந்த உடனே தூக்கி கொடுக்க முடியுமா.." தான் போட்ட ஒப்பந்தத்தையும் மீறி புரியாமல் கேள்வி கேட்டார்.
அதை கேட்டு சிரித்தவன், "ஏன் சித்தி இவ்வளவு நேரம் நீங்க என்ன தூங்கிட்டு இருந்தீங்களா என்ன.. அவரு என்ன பன்றிங்க சொன்னாருன்னு நீங்க கவனிக்கலையா.. அது எல்லாமே அப்பவே நீங்க படிச்சு பாத்து கையெழுத்து போட்ட ஒப்பந்த பத்திரம் தானே மறந்துடுச்சா என்ன.." என்றான் எள்ளலாய்.
அவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவனை அடிக் கண்ணால் முறைத்தாள் கனகம்.. அவனுடன் நேரடியாக அவளால் மோத முடியவில்லை.. காரணம் இத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு அவன்.. அதுமட்டுமில்லாமல் இத்தனை நாள் இங்கிருந்து இந்த ஆஸ்தி அந்தஸ்து பெரிய வீட்டம்மா என்ற மரியாதை என அனைத்தையும் ஒரே நாளில் இழக்க அவளுக்கு மனமில்லை.. எத்தனை பணம் வந்தாலும் இந்த மரியாதை அதுவும் அரண்மனை போல வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறி பங்களாவில் வாழ்ந்தாலும் இந்த சுகம் கிடைக்குமா என்ன.. எப்படியும் இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.. அதற்கு இப்பொழுது இவனிடம் அடங்கி போகத்தான் வேண்டும்.. மீண்டும் அனைத்தையும் இவனிடமிருந்து வாங்க வேண்டும்.. காலம் வாராமலா போய்விடும்.. அதற்கு நாம் இங்கிருக்க வேண்டும்.
தந்திரமாய் சிரித்தபடியே, "அதுக்கில்லை ஆதவா.. உனக்கு யாரு இருக்கா எங்களை விட்டா.. இத்தனை நாளா காப்பாத்தி வச்ச சொத்து.. உன் கூட இருந்து இதை கட்டி காப்பாத்தனும் இல்லை.. அதுமட்டுமில்லாம எங்க பெரிய மாமாவும் சின்ன மாமாவும் அது தான் பா உங்க தாத்தா மருதநாயகமும் அவரோட மகனும் கடைசியா உன்ன எங்க கைல தான ஒப்படைச்சாங்க.. அப்போ உனக்கு நாங்க தான துணையா இருக்கனும்.. இங்கேயிருந்து போக சொன்னா எப்படி கண்ணா ஆதவா.." ஒரு நாடக மேடையையே அரங்கேற்றிய ஆதவன் தான் வாயில் கை வைத்தான்.
'எம்மால் என்னா இந்த அம்மா இப்படி நடிக்குது.. நீ எதுக்கு இர்கேன்னு எனக்கா தெரியாது.. ஆனா உன்னை நான் இங்கே இருக்க விடவும் காரணம் இருக்கே..' என்று மனதோரம் நினைத்தவன்,
"அச்சோ சித்தி என்ன நீங்க இப்படி போறேன்னு சொல்றீங்க.. நான் உங்களை போக சொல்லலை சித்தி.. இனி நான் பாத்துக்கறேன்.. நீங்க எனக்கு துணையா இருங்க.." நக்கலுடன் கூறினான்.
அங்கே ஆதவனும் கனகமும் மட்டும் பேசிக் கொள்ள சதானந்தம் எப்பொழுதும் போல மனைவியின் பின்னே ஒழிந்து கொள்ள வளவனோ வந்தவனையே இமைசிமிட்டாது பார்த்திருந்தான்..எங்கே இமை சிமிட்டினால் கூட மறைந்து போய்விடுவானோ என்று கண் வலிக்க மனம் துடிக்க அமைதியாய் பார்த்திருந்தான்.. அவனின் பார்வை ஆதவனை துளைத்தது.
இதை எல்லாம் விட நீங்கள் யார் பேசினாலும் நான் இப்படி தான் பொம்மையாய் தான் இருப்பேன் என்று குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள் வெண்மதி.
அடுத்த பாகத்தில பாக்கலாம் பட்டூஸ்