• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -06

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
" இங்கே பாருங்க சித்தி.. நான் உங்களை இந்த வீட்டை விட்டு போக சொல்லலை.. ஆனா இங்கே இனி என்ன நடந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நடக்கனும்.. அப்பறம் இங்கே யாரு என்ன செய்யனும்னு நான் தான் சொல்லுவேன்.. அதை செஞ்சீங்கன்னா போதும்.. இப்போ நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறம் இன்னை வரைக்குமான கணக்கு வழக்கு என்கிட்ட கொண்டு வர சொல்லுங்க உங்க சின்ன பையனை.. அங்கிள் அவ்வளவு தானா இனி இந்த பத்திரத்துக்கு வேலை இல்லை ல.. இதை கிழிச்சிடலாமா..." என்று தோரனையாய் அனைவரிடமும் உத்தரவை வழங்கியவன் வக்கீலிடம் ஆலோசனை கேட்டான்.

" இல்லை ஆதவா இனி இதுக்கு அவசியம் இல்லை.. அப்புறம் ஆதவா நாளைக்கு கொஞ்சம் ஆபிஸ்ல வந்து பாருப்பா.. கொஞ்சம் பார்மாவிட்டிஸ் இருக்கு.." கடைசியாய் கூறியதை மட்டும் வெண்மதியின் மேல் பார்வையை பதித்தபடி கூறினார் ராஜேந்திரன்.. ஆனால் அடுத்தவர் காணும் முன்பு தன் பார்வையை மாற்றி விட்டார்.. அந்த சில நாழிகையில் ஆதவன் அதை கண்டு கொண்டான்.

அவனும் அதை ஆமோதிக்க எல்லோரிடம் இருந்தும் அவர் விடை பெற்றுக் கொண்டார்.. அவர் கிளம்பியதும் தன் குடும்பத்தாரின் முன் திரும்பியவன்,

"சித்தி உங்க பையன் கிட்ட சொல்லி கணக்கு வழக்குகளை எடுத்துட்டு வர சொல்லுங்க.. அப்புறம் உங்க மொத பையன் இப்போ தான தவறுனான்.. அதுக்கு என்னோட ஆழ்ந்த வருத்தங்கள்.. அப்புறம் நீங்க உங்களுக்கு விருப்படற வரைக்கும் இங்கே இருக்கலாம்.. நானா உங்களை போக சொல்ல மாட்டேன்.. ஆனா சும்மாவும் இருக்க முடியாது இல்லை.. அதனால கொஞ்சம் வீட்ட பாத்துக்கங்க.. அப்புறம் சித்தப்பா நீங்க காட்டுல நடக்குற வேலையை பாருங்க.. வளவா நீ கணக்கு எடுத்துட்டு அந்த கடைசி ரூமுக்கு வந்துடு.. ஆஆ சித்தி உங்க மருமககிட்ட சொல்லி கொஞ்சம் காபி தண்ணி வச்சி எடுத்துட்டு வர சொல்லுங்க அந்த ரூமுக்கு.." அனைவருக்கும் வேலையை பகிர்ந்து கொடுத்தவன் அங்கிருந்த கடைசி அறைக்குள் சென்று மறைந்து கொண்டான்.

அவன் போனதும் தான் கனகத்திற்கும் அவளின் கணவனுக்கும் மூச்சு விட இயல்பாய் முடிந்தது.

அவன் அறைக்குள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டவள் வெணமதியிடம் திரும்பி, "அடியே இங்கே நடந்தத அவன் கிட்ட சொன்னே நீ திங்கற சோத்துல வெசத்தை வச்சிடுவேன் பாத்துக்கோ.. போய் போயி அவனுக்கு காபி தண்ணி போட்டு கொடு.." அவளை துரத்தியவள் வளவனிடம் திரும்பி,

"நீ என்ன செலைய பாத்த மாறி நின்னுட்டுருக்க.. அவன் தான் கணக்கு கேட்குறான் இல்லை கொண்டு போ.."அவனுக்கும் வேலையை சொல்லியவள் ,

"ச்சீய் எனக்குன்னு எங்கிருந்து தான் வருவாங்களோ.. யோவ் நீ என்னய்யா இப்படி நிக்குற.. போய் பொழைப்ப பாரு.." என்று கணவரிடமும் வேலையை வாங்கியவள் மீண்டும் எப்படி சொத்தை அடைய வேண்டும் என்ற யோசனையில் உள்ளே சென்றாள்.

இங்கே அறையில் சோபாவில் அமர்ந்திருந்த ஆதவனின் கண்கள் எதையோ எதிர்பார்த்து வாசலையே பார்த்திருந்தது.. சிறிது நேரத்தில் அந்த அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் குரலை செருமிக் கொண்டு,

"உள்ளே வாங்க..." என்றான் இறுக்கமான குரலில்.

அங்கு கையில் கத்தையான நோட்டுகளுடன் உள்ளே வந்தான் வளவன்.

" வா வளவா உக்காரு.." எதிர் சோபாவை காட்டினான்.

ஆதவனை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.. அதே நேரத்தில் அங்கு காபி குவளையுடன் வந்தாள் வெண்மதி.. அங்கிருந்த இருவரையும் கவனிக்காமல் காபியை இருவருக்கும் தலைகுணிந்தபடியே கொடுத்துவிட்டு வேகமாய் அங்கிருந்து சென்றவளை,

"ஒரு நிமிஷம் ஆத்தா.." என்று அழைத்தான்.

அவனின் ஆத்தா அழைப்பில் அவளின் நடை தடைப்பட்டது.. இது நாள் வரையில் யாரும் அவளை அப்படி யாரோ அழைத்தது போல நினைவடுக்குகளில் ஏதோ ஒரு முகம் தோன்றியது.. ஆனால் அது யாரென்று அவளுக்கு சரியாய் தெரியவில்லை.. இப்பொழுது இவனின் அழைப்பு அவளின் உணர்வுகளை ஏதோ செய்தது. அதே நேரம் மனதோரம் மகிழ்ச்சி தோன்றியதையும் மறுக்க முடியவில்லை.

அவர்களின் புறம் திரும்பாமலே அவள் நிற்கவும் அவனே பேச துவங்கினான்,

" ஆத்தா மதியத்துக்கு சமைச்சிருத்தா.. அப்புறம் " என அவளிடம் சில வேலைகளை சொல்லியவன், "போமோது கதவை சாத்திட்டு போத்தா.."அவளிடம் உரிமையாய் வேலை சொல்லி அனுப்பி அனுப்பி வைத்தான்.

ஆனால் பெண்ணவளின் உள்ளமோ அவன் அழைத்த அழைப்பிலே நின்றது.. அதே சமயம் அவன் சொன்னதையும் கேட்டவள் மீண்டும் அவனை திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.

இதையெல்லாம் வளவனின் விழிகளில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. வெண்மதியிடம் அவன் பேசிய வீதமும் கீழே பேசிய வீதமும் அவனா இவன் என்ற ரீதியில் தான் இருந்தது.. ஆச்சர்யத்துடன் ஆதவனை கண்டான்.

ஆனால் அவனோ அவனை பாராமல் காபியை குடித்துக் கொண்டே, "இப்போ எம்மூஞ்சியில என்ன எழுதியிருக்குன்னு இப்படி வச்சக் கண் வாங்காமா பாக்குறவன்.. காபி தண்ணியை எடுத்து குடி ஆறப்போகுது.." என்று விட்டு தன் வேலையில் கவனமாயிருந்தான்.

இருவரும் காபியை குடித்து முடித்ததும், "இப்போ சொல்லு என்ன என்ன எங்கிருக்கு... இத்தனை நாளா வந்த வரவு செலவு வருஷ வருஷமா சொல்லு.. அப்படியே கோயில் கணக்கையும் சொல்லு.." உத்தரவிட்டு அமர்ந்தான்.

அவனை பார்த்துக் கொண்டே, "அ.. அ..ண்.." என்று வார்த்தை வராமல் தடுமாறினான் வளவன்.

அவனின் தடுமாற்றத்தை கண்டு, "இப்போ எதுக்கு இந்த தடுமாற்றம்.. அண்ணன்னு சொல்ல அவ்வளவு அவமானாமா இருக்கா.. அப்படின்னா நீ அப்படி கூப்பிட வேண்டாம்.. " என்று காட்டமாக சொன்னான்.

அதுவரை அமைதியாய் இருந்த வளவன் அவனின் கடைசி வார்த்தையில், "அண்ணா.." என்ற கதறலுடன் அவனின் காலில் வந்து விழுந்தான்.

தன் காலில் காதலுடன் விழுந்தவனை கைதொட்டு தூக்கி அணைத்துக் கொண்டான் ஆதவன்.

அங்கே பேச்சுக்கே இடமில்லாமல் சிறிது பாசப் போராட்டம் நடந்தது.தான் தோளில் சாய்ந்து அழுதவனை,

"டேய் வளவா என்ன இது சின்ன புள்ளை மாறி அழற.. நல்லா வா இருக்கு.. இப்போ எதுக்குடா இந்த அழுகை.. ஆம்பளை அழலாமா டா.. இல்லை நான் தான் உயிரோட வந்துட்டேனே அதுக்கு தான் அழறியா வளவா.." அவனை சமாதானப்படுத்த கேலியில் இறங்கினான்.


" போண்ணா உனக்கு எப்பவும் கேலி தான்.. நீ எப்படி ண்ணா இருக்க.. உன்னை திரும்ப பாப்பேன்னு நினலக்கலை ண்ணா.. ஆம்பளை அழக்கூடாதுன்னு யாருன்னா சொன்னாங்க.. உங்களை பாத்தத இன்னும் என்னால நம்ப முடியலை ண்ணா.." அவனை மேலும் கட்டிக் கொண்டு அழுதான் வளவன்.

அவனை சமாதானப்படுத்தும் வழி அறியாது, "ஏய் தம்பி பாப்பா.. ஏண்டா இப்படி பாப்பா மாறி அழற.." என்று வம்பிழுத்தான்.

ஆனால் அந்த ஆறடியில் வளர்ந்தவனுக்கோ அந்த நொடி அண்ணா என்ற வார்த்தையை தவிர வேறெதுவும் வரவில்லை.. இதுவும் ஒரு வகையான பாசம் தான்.


நாம் அதிகமாய் நேசிக்கும் ஒரு உறவை நீண்ட வருடங்கள் கழித்து பார்த்தாள் அங்கே பேசவும் தோனுமா.. அந்த நிலையில் தான் இப்பொழுது வளவன் உள்ளான்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்