• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -07

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
சில மணி நேர பாசப் போராட்டத்தில் அண்ணன் தம்பி இருவரும் சுயநினைவை அடைந்தனர். தன் முன்னே நின்றவனின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன்,

"எப்படி இருக்க வளவா.. நீ என்னை மறந்துட்டியோன்னு நினைச்சேன் டா.. இப்போ தான் நிம்மதியா இருக்கு.." பெருமூச்சு விட்டபடி ஆதவன் கூறினான்.

"நான் நல்லாருக்கேன் அண்ணா.. அது எப்படிண்ணா உங்களை அவ்வளவு ஈசியா மறக்க முடியுமா என்ன.. உங்களால நல்லாருக்கேன் அண்ணா.. என்ன இவ்வளவு நாளா நீங்க இல்லைன்ற வருத்தம் இருந்துச்சி.. ஆனா இப்போ தான் நீங்கவந்துடீங்களே.. அதுவே போதும் அண்ணா.." வளவனின் மனதிலிருந்த பெரும் பாரம் விலகியது போல் இருந்தது.

"அப்புறம் என்ன சொல்றாங்க கனகம்மா.. இப்போ செம்மையா கோபம் வந்துருக்குமே வளவா.. நான் வேற கொஞ்சம் பேசிட்டு வந்துட்டேன்.." என்றான் எதையோ யோசித்தபடி.

"ஆமாண்ணா செம்ம கோபத்துல தான் இருக்காங்க.. இன்னும் நாம செஞ்ச வேலை தெரியலை.. இல்லைன்னா இன்னேரம் வெடிச்சிரிப்பாங்க.." எதையோ நினைத்து புன்னகைத்தபடி.


வேண்டாம் வளவா.. அதையெல்லாம் சொல்றதுக்குன்னு ஒரு நாள் இருக்கு.. முதல்ல என் குடும்பத்தை அழிச்சவங்க யாருன்னு கண்டுபிடிக்கனும் வளவா.. மீதிய அப்புறம் பாத்துக்கலாம்.. அப்புறம் உங்க அண்ணி என்ன சொல்றா.." மென்புன்னகை சிந்தியபடி.


"அண்ணே அண்ணி பாவம்.. அவங்களுக்கு இன்னும் எதுவும் தெரியலை.. தெரிஞ்சா அவ்வளவு தான்.. பொருமையா இருக்கறவங்க பூலான்தேவியா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.." சிரித்தபடி.

"ம்ம் ஆமா வளவா.. அவளை எப்படி சமாதானம் பண்ணப்போறோமோ.." என்றான் இறுகிய குரலில்.

அவனின் குரலில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவன், "எது சமாதானம் பண்ணபோறமா.. சமாதானம் பண்ணப்போறீங்க.. நீங்க மட்டும்.. யுவர் ஒன் மேன் ஆர்மி அண்ணா.." என்று கலாய்த்தான்.


" டேய் போதும் டா.. ஏற்கனவே அவ என்னன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா.. இதுல நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவன்னு சொன்னதுக்கே முறைக்குறா.. எல்லாம் தெரிஞ்சா கொன்னுடுவா டா.." என்றான் பயமாய்.

"பார்றா எங்க அண்ணன் கூட பரப்படுறாரு.. சரி விடுங்க அண்ணே சமாளிக்கலாம்.." என்று அவனிடம் கூறியவன் மேலும் பல விடயங்களை பேசி விட்டு ஆதவனிடம் மேலும் பல கட்டளைகளை வாங்கி கொண்டு சென்றான்.

அவனை அனுப்பியவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். போகும் அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை.. கேட்கவும் முடியாது.. அவன் அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டான் அப்பொழுதே.. இப்பொழுது கேட்கவா வேண்டும்.

பல ஆண்டுகள் கழித்து தன் ஊரை சுற்றி பார்த்துக் கொண்டே அந்த ஊரில் உள்ள ஆற்றங்கரையோர கோயிலுக்கு சென்றான்.. அங்கிருந்த அனைத்து இடங்களும் அவன் மனதினுள் பல நினைவுகளை தூண்டியது.. அந்த இடங்களை சுற்றிப் பார்க்க பார்க்க அவன் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

அவன் கோயிலுக்குள்ளே காலடி எடுத்து வைக்கவும் கோயிலின் மணியோசை நாலாபுறமும் ஒலித்தது.. கோயிலிலிருந்த மாடப்புறாக்கள் அனைத்தும் பறந்தது. அவனின் கால்கள் உள்ளே பதிந்ததும் எங்கிருந்தோ ஒரு வெண்புறா அவனின் தோளில் வந்து அமர்ந்தது.. அதனைக் கண்டவன்,

" ஹேய் மதி மா எப்படி டா இருக்க.. எத்தனை வருஷம் ஆச்சு உன்னை பாத்து.. நான் இன்னும் உன் நினைவுல இருக்கனடா.. ஆறறிவு மனுஷனுக்கு இல்லாத நன்றி ஐந்தறிவு இருக்கற விலங்கினங்களும் பறவையினங்கள் உங்களுக்கும் இருக்கு டா.. இனி எப்பவும் உன்னோட தான்டா இருப்பேன்.." அதன் தலையை வருடியவாறு பேசினான்.

அவனின் பேச்சு அதற்கு புரிந்ததோ என்னவோ அவனின் முகத்தோடு தன் முகத்தை வைத்து தேய்த்தது.

அதனுடனே உள்ளே இருந்த அம்மனை தரிசிக்க சென்றவனுக்கு அமைதியே உருவாய் மென்புன்னகை சிந்தியபடி அவனை வரவேற்றாள் அந்த அம்மன். அவனின் கைகள் தானாய் கையெடுத்து அந்த தாயை வணங்கியது.

பிறந்து வளர்ந்த நாள் முதலாய் தன் தாயுடன் வந்த கோயில்.. ஏன் இந்த கோயிலின் பரிவட்டம் கட்டும் மரியாதையும் அவன் குடும்பத்திற்கே உண்டு.. இத்தனை வருடமாக அவன் குடும்பம் இல்லாமையால் முறையாய் நடக்கும் திருவிழா கூட இன்று வரை நடக்கவில்லை.

வைத்த கண் வாங்காமல் சாமியை பார்த்துக் கொண்டிருந்தவன் முன்பு வந்து நின்றார் அவர்.. அவனை பார்த்ததும் அவரின் கண்களில் சூரியனை கண்ட ஒளியாய் பிரகாசித்தது.

"அய்யா ஆதவா வந்துட்டியா யா.. வந்துட்டியா.. உனக்காகத் தான்யா இத்தனை வருஷமா காத்திருந்தோம்.. " அவனின் தலையை தன் தளர்ந்த கைகளால் வருடியவாறு கேட்டார் அந்த வயதான முதியவர்.

" பெரியய்யா எப்படி இருக்கீக.. வந்துட்டேன் யா.. உங்களோட பாசம் தான் என்னை திரும்ப கொண்டு வந்துருக்கு.." அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான்.

"அய்யா ஆதவா அவனும் வந்துட்டான் யா.. இந்த முறை அவன் தப்பிக்க கூடாதுய்யா.. நம்ம குடும்பத்தை அடியோட அழிச்சவன் இருக்க கூடாதுய்யா.. இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் அவனோட மரணம் மட்டும் தான்யா வரனும்.. எக்காரணம் கொண்டும் நம்ம வம்சத்தோட பொக்கீஷம் அவன்கிட்ட போகக் கூடாது.. அப்படி போனுச்சுன்னா இந்த ஊரையும் மக்களையும் காப்பாத்தறது ரொம்ப கஷ்டம் யா.. அது நடக்க விட்டுடாத ஆதவா.. உனக்கான கையில தான் எல்லாம் இருக்கு.. காப்பாத்துற கடமை உனக்கிருக்கு ஆதவா.. எனக்கு தெரியும் யா.. நீ இந்த வம்சத்தை தலைநிமிர்த்த வந்தவன்.. நீ காப்பாத்துவய்யா.." என்று அவன் காதருகில் கேட்ட குரல் அடுத்த நிமிடம் அங்கிருந்து மறைந்தது.

மூடியிருந்த தன் இமை திறந்து பார்த்தவன் முன்னே யாருமில்லை.. இத்தனை நேரம் அவன் கண்டது அனைத்தும் கனவா..? அல்லது நினைவா..? என்று சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டான்.. ஆனால் அவன் கண்களில் எட்டிய தூரம் வரை யாருமில்லை. சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு தன் கடமை உணர அந்த அம்மனை மனதார தொழுதவன் கோயில் விட்டு வெளியே வந்து அங்கிருந்த படிகட்டில் அமர்ந்தான்.

ஏதோ ஏகாந்த நிலையில் அமர்ந்திருந்தவனின் விழிகளை இரு தளிர்கரம் பொத்தியது.

அதனுடனே, "மாமா இங்கே பாரு.. நான் வந்துட்டேன்.. என்னை மறந்துட்டியா மாமா.. நான் உன் அம்மு இல்லையா மாமா.. ஏன் மாமா என்னை விட்டு போன.. நீயில்லாம எனக்கு ரொம்ப பயமாயிருக்கு மாமா.. சீக்கிரம் வந்துரு மாமா.." என காதோரம் ரீங்காரமாய் ஒலித்தது குரல்.

அந்த குரலில் இருந்த வலியும் அழுகையும் ஆணவனை அசைத்து பார்த்தது.. அந்த குரலுக்கு சொந்தக்காரி மட்டும் தானே அவனை அசைத்து பார்க்கும் வல்லமை கொண்டவள்.

யார் அவள்..? எங்கே உள்ளாள்.. அவளை தேடி கண்டுபிடிப்பானா.. இல்லை தேடலில் அவனின் அந்தமும் முடியுமா..?


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்