அந்த கோயிலின் படியிலே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானே அவன் முன்னால் நிழல் தெரியவும் யாரென திரும்பி பார்த்தான்.. அங்கே கடோத்கஜனை போல ஒருவன் வாட்ட சாட்டமாக நின்றிருந்தான்.
" வா பைரவா.. என்னாச்சி நான் சொன்னது.." கட்டளையுடன் கேட்டான்
"அய்யா அது வந்து.." என்று தயங்கியபடியே அவனிடம் அரைமணி நேரமாக பேசினான்.. பைரவன் கூறியதை கேட்ட ஆதவன் மேலும் அவனிடம் சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு,
"சரி பைரவா.. யாரு கண்ணுலேயும் படாம இங்கிருந்து சீக்கிரம் போ.. அப்புறம் நான் கேட்டது எனக்கு வரணும்.. சரி நீ போ.. உன்னை பார்த்தா நிறைய பிரச்சனை வர வாய்ப்பிருக்கு பைரவா.. கிளம்பு நீ.." என்று அவனை அங்கிருந்து வேகமாய் அனுப்பினான்.
கிராமத்தின் தின்னை வீடுகளை பார்த்தபடியே வந்தவன் அங்கிருந்த மக்களும் அவனை பார்ப்பதை பார்த்தவன் ஏதோ வித்தியாசம் தோன்றவும் என்னவென பார்த்தான். அங்கிருந்த எல்லா மக்களும் மகிழ்ச்சியில் அவனை பார்த்தபடியே அவனருகில் வந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டனர்.. அதில் முன்னே வந்து ஒருவர், "அய்யா சாமி இப்போ தான்யா இந்த ஊருக்கே வெளிச்சம் வந்துருக்கு.. எங்க ஊரு குலசாமி வந்துருச்சிய்யா.. இனிமே எங்க வம்சமே தளைஞ்சிடும் யா.. எங்களோட மரியாதையை நீங்க கண்டிப்பா ஏத்துக்கனும் யா.. டேய் அடிங்கடா மேலத்தை.. எடுங்கடா அந்த மாலையை.." என்று கூற மலமலவென எங்கிருந்தோ வந்த இளைஞர் கூட்டம் அனைவரும் அவனை சூழ்ந்தனர்.
இது அவனுக்கான மரியாதை மட்டுமல்ல.. அவனின் குடும்பத்தாருக்குமான மரியதை.. அதை தக்க வைத்துக் கொள்வது அந்த வம்சத்தின் வாரிசின் நடவடிக்கையை பொறுத்தது.
இதோ இவன் குடும்பத்தை இந்த ஊருக்கே தெரியும்.. அது தான் ஊரின் மரியாதை இன்றும் உள்ளது.
அங்கிருந்த கட்டிளங்காளைகள் அனைவரும் அவனை சுற்றி நின்று கொண்டு,
"அண்ணே நீங்க வந்துட்டீங்க.. இனிமே இந்த ஊருக்கே விமோசனம் தான் அண்ணே.. இனிமே நீங்க தான் அண்ணே எங்களுக்கு வழி காட்டனும்.. எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாம கிடைக்கிற வேலையை செஞ்சு வாழ்நதுட்டிருந்தோம்அண்ணே.. இனி நீங்க தான் பெரியய்யா மாறி எங்களுக்கு வழிகாட்டியா இருக்கணும் அண்ணே.." என்று கோரசாய் மகிழ்ச்சியுடன் கூறினார்.
அவர்களின் முகத்தில் தங்களுக்கு திறமையான ஒரு தலைவன் வந்துவிட்டான் வழிகாட்டுவதற்கு.. தங்களின் வாழவாதரத்தை உயர்த்த ரட்சகன் ஒருவன் வந்துவிட்டான்.. தங்களின் வாழ்வை மேம்படுத்த சிறந்த வழிகாட்டி வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் இருந்தது.
எத்தனை தான் ஊர் செழித்து சிறப்பாய் இருந்தாலும் அதை திறமையாக வழிநடத்த ஒரு தலைவன் தேவை.. இதோ இந்த ஊரினை காக்க தன் தடையை தாண்டி வந்துவிட்டான் ஆதவன்.
"என்னடா செயிலுக்கு போயிட்டு வந்தவனுக்கு இத்தனை பெரிய கொண்டாட்டமோ.. அவனையும் அவன் குடும்பத்தையுமே காப்பாத்த முடியாதவனெல்லாம் எப்படி டா தலைவனா வர முடியும்.. முதல்ல அவனையும் அவன் சொத்து, சொந்தத்தையும் காப்பாத்திட்டு வரட்டும்.. அப்புறம் அவனுக்கு முதல் மரியாதை கொடுங்கடா போக்கத்த பசங்களா.." என்று கர்ணகொடுரமாய் ஒரு குரல் ஒலித்தது.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரென்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்.. ஆனால் பதில் பேச முடியாது.. ஏனென்றால் மருதநாயகத்தின் பங்காளி குடும்பமான தாண்டவராயன் தான் அது.. அவருக்கு மருதநாயகத்தின் குடும்பத்தின் மேல் தீராப்பகை.. அது மட்டுமல்லாமல் தாண்டவராயனின் மகன்கள் ஆதவனின் தந்தை மேல் வஞ்சம் வைத்தனர்.. இதற்கு காரணம் ஊரின் கும்ப மரியாதை போட்டி.. அதுமட்டுமல்லாமல் யாரிடமும் சொல்லப்படாத இரு குடும்பம் மட்டுமே தெரிந்த ரகசியமும் உண்டு.. அதற்காகத்தான் இந்த பகை, வன்மம் சூழ்ச்சி.
அவரைக் கண்டதும் ஆதவனின் முகம் செந்நிறமாய் கொதித்தது.. ஆனால் அதை ஊரின் முன்னால் காட்ட அவன் விரும்பாமல் அவரைப் பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டே,
"ஏனுங்க தாத்தா.. இந்த வயசான காலத்துல இப்படி யா வருவீங்க.. கீழே கீழ விழுந்து வங்சினாதீங்க.. அப்புறம் எப்படி நான் என் குடும்பத்தை கொன்னவனை நான் கொல்றதை பாக்க நீங்க இருக்கனும் இல்லை.. மரியாதை தானா கிடைக்கனும் தாத்தா.. கேட்டு வாங்க கூடாது.. அது அசிங்கம்.. என் குடும்பத்துக்கு இருக்கற மரியாதை எப்பவும் இருக்கும்.. அதே போல என் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு அப்போ எனக்கு வயசோ அறிவோ இல்லாம இருக்கலாம்.. ஆனா இப்போ என் சொத்து சொந்தம் எல்லாத்தையும் காப்பாத்திக்கற அளவுக்கு தைரியமும் துணிச்சலும் இருக்கு.. அதே போல என் குடும்பத்தை அழிச்சவனையும் அவன் குடும்பத்தையும் கருவறுக்காம ஓயமாட்டான் இந்த ஆதவன்.. பாக்கத்தான போறீங்க.. இந்த ஊரு மேல எம்பாட்டனும் எங்க அய்யனும் வச்ச பாசம் அதிகம்.. அதுவே எங்களுக்கான நீதியை தேடித் தரும்.. இனி தான இந்த ஆதவனோட ஆட்டத்தை பாக்க போறீங்க..
நான் ஆதவன் சுட்டெரிக்கற சூரியனை பேரா கொண்டவன்.. அதே மாதிரி தேவையான நேரத்துல வெளிச்சமும் தருவேன்.. தீமைன்னா அக்னி நட்சத்திரம் மாறி கொலுத்தி எடுக்கவும் தயங்க மாட்டேனுங்க.. வரட்டுமுங்களா தாத்தா.." அவரை வார்த்தையால் எள்ளியாடியவன் அங்கிருந்த ஊராரிடம் கையெடுத்து விடைபெற்று சென்றான்.
போகும் அவனை நான்கு விழிகள் வஞ்சத்துடன் பார்த்தது.
தடியை ஊன்றிப் படி சென்ற தாண்டவராயனை இரு கைகள் அணைத்து பிடித்து அழைத்துச் சென்றது.
தாங்கியபடி நடந்தவரோ தன்னை பிடித்திருந்த உருவத்திடம்,
"ஏய் மலையா பாத்தியா அவன் என்ன தெனாவட்டா பேசிட்டு போறான்னு.. அவன் குடும்பம் அழிஞ்ச மாறி இவனும் அழியனும்னு நினைச்சேன்.. ஆனா இப்படி இத்தனை வருசத்துக்கு அப்புறம் வந்துட்டானேடா.. அவன் நிம்மதியா இருக்க கூடாது டா.. அவன் நிம்மதி போகனும்.. அதுக்கு அவனோட சொந்தம் எங்கிருக்குன்னு அவனுக்கு தெரியக் கூடாது மலையா.. இந்த முறையும் நம்ம வம்சம் தோற்கக் கூடாது மலையா.." என்று வஞ்சத்துடன் கூறினார்.
ஒவ்வொரு பெற்றோரும் மூத்த தலைமுறையும் நல்லதை சொல்லி வளர்க்க வேண்டிய மழலைச் செல்வத்தை இதுபோல பகைக்கு அடிமையாக்க அவர்களின் மனதில் வஞ்சத்தை வளர்க்கும் பெற்றவர்களுக்கு தெரிவதில்லை அதே வஞ்சத்தால் தன் வம்சமே அழிந்து போகுமென.
அப்படி அழிந்து போனாள் கடவுளையும் மனிதர்களையும் சாக்கிடும் பெற்றவர்கள் தான் செய்த தவறினை உணராது போவது தான் வேதனையின் உச்சக்கட்டம்.
இதோ தன் குடும்பத்தாருக்கு வஞ்சத்தை சொல்லித் தரும் தாண்டவராயனுக்கு தெரியவில்லை தன் வஞ்சத்தாலே தன் வம்சத்தை கருவறுக்க போவதை.. பொறுத்திருந்து தான் பார்ப்போமே நன்மை தீமையா எவை வெற்றி பெறும் என்று.
ஹாய் செல்லம்ஸ் எனக்கு அந்தந்த ஊர் மொழி அவ்வளவா வராது.. சோ கொஞ்சம் எப்பவும் போலவே வார்த்தைகள் வரும்.. நடுவுல அந்த மாதிரி ஊர் பாஷை வந்தாலும் ஏத்துக்கோங்க.. வரலைன்னாலும் ஏத்துக்கோங்க பட்டூஸ்..
நோ கோபம் மீ பாவம்..