வீட்டிற்கு வந்த ஆதவனை உணவின் மனம் நாசியை துளைத்தது. ஆம் அவன் செய்ய சொன்ன அனைத்தையும் செய்து விட்டு அதை எல்லாம் உணவு மேஜையில் எடுத்து வைத்திருந்தாள் வெண்மதி.. ஆனால் அவளைக் காணவில்லை.. தன் விழிகளால் நாலாபுறமும் அவளைத் தேடியவன் கண்களுக்கு அவளின் பிம்பம் விழவில்லை.
அவனின் தேடலை உணர்ந்த வளவன்,
"அண்ணே அண்ணி உள்ளார போயிட்டாங்க.. எதுக்காக இப்போ தேடுறீங்க.. வாங்க சாப்பிடலாம்.." என்று அழைத்தான்.
"வளவா அவ சாப்பிட்டாளா டா.." என்ற கேள்வியுடன் அவன் பின்னே சென்றான்.
"இல்லை ண்ணா.. நீங்க சொன்னீங்கன்னு தான் இதையெல்லாம் செஞ்சாங்க..அவங்க இருக்கற சூழ்நிலைக்கு இதை செய்யச் சொன்னதே தப்பு ண்ணே.. ஆனாலும் வேற யாரையாவது செய்ய சொல்லிருக்கலாம் அண்ணே.. " என்றான் மனத்தாங்கலாய்.
பின்னே இருக்காதா.. ஒரு பெண்ணின் மாங்கல்யம் காலையில் பறிக்கப்பட்டு மாலையில் அவளையே விதவிதமாய் சமைக்க சொன்னாள் அவளின் மனநிலை தான் எப்படி இருக்கும்.. அதன் ஆதங்கம் தான் வளவன் இப்பொழுது ஆதவனிடம் சொன்னது.
ஏன் வளவா அவளை சமைக்க சொன்னது உனக்கு கோபமா.. கொஞ்சம் யோசிச்சு பாரு.. அவளோட மனநிலையை.. இப்போ நாம கண்டுக்காம விட்டுட்டோம்னா அவ அந்த அறைக்குள்ளேயே முடங்கிடுவா இல்லை முடக்கி வச்சிடுவாங்க டா.. அது தான் வேணுமா உனக்கு.. காலையிலே உங்க அம்மா அவள் பேசுனதை கேட்டுட்டு தானா இருந்தே..
அவ ஒரு பொண்ணுடா.. அவளுக்குன்னு சில ஆசைகள் இருக்கும்.. உங்க வீட்ல அவ சம்மதம் கேட்டாடா குமரேசனுக்கு அவளை கல்யாணம் செய்து வச்சாங்க.. அவளோட முகத்தை பாத்தியா டா எத்தனை வலியோட இருக்கா.. நானும் வலியை அனுபவிச்சவன் டா.. எனக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லவா டா..
அவளை பத்தி நீ சொன்னதை வச்சி பாக்கும் போது அவளுக்கு நிறைய கனவுகள் இருந்துருக்கு.. அதையெல்லாம் கல்யாணங்கற பேருல உங்க அண்ணன் தீயிட்டு கொலுத்தியிருக்கான்.. அதுக்கு சப்போர்ட் உன்னோட குடும்பம்.. அவ நடந்ததை மறந்துட்டு வெளியே வரணும்..
அதுமட்டுமில்லாம அவ கனவுகளுக்கு நாம தான் உயிர் கொடுக்கனும்.. அதுக்கு அவ பழைசை மறந்துட்டு வெளியே வரணும்.. ஒரு பொண்ணு விதவை ஆகிட்டா அவளோட வாழ்க்கை அதோட முடியறது இல்லை.. அதுமட்டுமில்லாம அவ இன்னும் வாழவே ஆரம்பிக்கலை.. ஆனா அவ வாழ்க்கையை முடிச்சி கட்டிட்டாங்க.. அது திரும்ப தளிர் விடனும்.. அதுக்கு அவகிட்ட இப்படி தான் நடக்கனும் வளவா.." என்றான் பெருமூச்சுடன்.
அவன் சொன்னதில் இருந்த உண்மையில் வளவனின் வாய் மூடிவிட்டது.
அவனுக்கும் தானே தெரியும் தன் தாய் வெண்மதியை படுத்திய பாடு.. நின்றாள் குத்தம் நடந்தால் குத்தம் செய்தாலும் குத்தம் செய்யாமல் விட்டாலும் குத்தம் என ஒவ்வொரு நாளும் ராட்சசியாய் ஒரு சிறு பெண்ணை எத்தனை சித்ரவதை செய்தார்கள்.
வளவன் அவளை பற்றி சிந்திக்கும் அதே நேரம் வெண்மதியும் தன் அறையில் தன் திருமண வாழ்வை நினைத்திருந்தாள்.
நன்றாக படித்துக் கொண்டிருந்தவள் வெண்மதி.. பண்ணிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் குமரேசன் அவளின் பாட்டியை சித்ரவதை செய்து பிடிவாதத்துடன் மணந்து கொண்டான்.. அவளை ஒரு பெண்ணாய் பாராமல் அனைவரின் முன்னே கையை நீட்டி அறைந்திருக்கிறான்.. எல்லாவற்றையும் தன்னை வளர்த்த பாட்டிக்காக பொறுத்துப் போனாள் பெண்ணவள்.
தாய் தந்தை இல்லா வெண்மதிக்கு அவளின் தந்தை வழி சொந்தமான வடிவுடை ஆச்சி தான் பாதுகாவல்.. இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட வெண்மதி திருமணத்திற்கு பின்பு அனைத்திற்கும் பயந்தாள். அவளை அதே பயத்துடன் வைத்திருந்தான் குமரேசன்.
அவளுக்கு படிப்பின் மேல் தீராக் காதல்.. அதை கண்டு கொண்டவன் மொத்தமாய் அவளின் படிப்புக்கு முழுக்கு போட வைத்தான்.
திருமணமான முதலிரவிலே அவனின் குணம் அவளுக்கு பாதி தெரிந்திருந்தது.. என்னதான் பெண்ணவள் திருமணத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் திருமணத்திற்கு பின்பு தன் கணவன் தான் தனக்கு எல்லாமே என்று தெரிந்து வைத்திருந்தாள்.
கிராமத்தில் வளர்ந்ததால் அவளுக்கு கணவன் வீட்டில் எப்படி இருக்க வேணும் என்று வடிவால் சொல்லி வளர்க்கப்பட்டாள்.
திருமணம் இருமணம் இணைய வேண்டும் என்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை.. அவள் தான் வேண்டுமென்ற பிடிவாதம் பிடித்து கட்டிக் கொண்டவனும் அவளுக்கு கற்றுத் தரவில்லை.
ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் தன் படிப்பு தான் முடிந்தது ஆனால் தனது வாழ்க்கையாவது நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் முதலிரவு அறையில் அடியெடுத்து வைத்தவளை உன் வாழ்வும் சூன்யம் நிறைந்தது தான் என்று அன்றே முடித்து விட்டான் ஆடவன்.
அழகான மாம்பழ நிறமும் பச்சை நிற கறை கொண்ட புடவையை உடுத்தி தன் நீண்ட கூந்தலுக்கு மல்லிகை சரத்தை வைத்து கண்ணுக்கு மையிட்டு நெற்றியிலும் உச்சி வகிட்டுலும் குங்குமம் மின்ன நாணம் கொண்ட தேவதையாய் பயம் சுமந்த விழிகளுடன் அறைக்குள் நுழைந்த பெண்ணவளை ஆராதிக்காமல் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல அவள் அறைக்குள் நுழைந்தவுடன் அவள் மேல் பாய்ந்து விட்டான்.
அவளின் அனுமதி வேண்டவில்லை.. அவளுக்கு விருப்பமா இல்லையா என்று கேட்கவில்லை.. மஞ்சள் கயிற்றில் சிறிது தங்கத்தை சேர்த்து தாலி கட்டியாகிவிட்டது.. இனி இவள் நம் அடிமை என்ற எண்ணத்துடன் அவளின் விருப்பு வெறுப்பு என்ற எதற்கும் செவி சாய்க்காமல் அவளை அவனாகவே எடுத்துக் கொண்டான்.
இதுவும் ஒரு வகை பலாத்காரம் தான்.. லைசென்ஸ் பெற்ற விபச்சாரம்.. பெண் என்பவள் படுக்கைக்கு மட்டுமல்ல.. அவளுக்கும் உணர்ச்சி உண்டு.. தன் கணவன் தன்னிடம் ஆசையாய் பாசமாய் நேசமாய் பேசி அவளின் விருப்பமறிந்து அவளின் அனுமதியுடன் இணைவது தான் தாம்பத்யம்.. அவளை உணர்வால் உள்ளத்தால் ஆராதிக்காமல் உடலை மட்டும் ஆராதிக்கும் ஆணுக்கும் பலாத்காரம் செய்பவனுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை தான்.. அவளுக்கும் ஒரு மனம் உண்டென்று யார் புரிந்து யார் அந்த மனதிற்கும் உணர்வுக்கும் மரியாதை தருகிறார்களோ அவர்களின் மேல் பாசம் வைத்த பெண் அந்த ஆணை என்றும் தோற்க விடமாட்டாள்.
இங்கே தான் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்று வகுத்திருக்கிறார்களே.. ஒரு பெண் தானே முன்வந்து தன் ஆசையை வெளிப்படையாய் தன் கணவனிடம் கூற முடியாது.. அப்படி கூறினாள் அவள் தவறானவள்.. வேசி விபச்சாரி என்று பல வார்த்தைகளில் அவளின் இதயத்தை குத்தி கிலிக்கின்றனர் இன்றைய சமூகம். ஏன் அதை ஒரு கணவனே கூறுவது தான் கொடுமையிலும் கொடுமை.. எத்தனை காலம் மாறினாலும் இது போன்ற பழக்க வழக்கங்கள் இன்றும் மாறவில்லை.. அங்காங்கே கள்ளிச் செடியாய் பரவித் தான் கிடக்கின்றது.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி