• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -10

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
காலை வேலையில் அனைவரையும் எழுப்பவென வெள்ளென கிளம்பி வந்து விட்டான் சூரியன்.. முகத்தில் மெலிதாய் விழுந்த சூரிய ஒளியில் கண் விழித்தாள் வெண்மதி.. தலை பயங்கரமாக வலித்தது.. உடலின் ஒவ்வொரு பாகமும் வெட்டி எடுப்பதை போல வலித்தது.. படுக்கையிலிருந்து மெதுவாய் எழுவதற்கு முயன்றாள்.. ஆனால் அவளால் தன் உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை.. அப்பொழுது தான் பக்கத்தில் யாரோ படுத்திப்பது போல் இருக்கவும் யாரென பார்த்தாள்.

அவன் தான் அவளின் புடவையின் ஒரு பகுதியினை தன் உடல் அடியில் போட்டு படுத்திருந்தான்.. அவனைக் கண்டதும் நேற்று நடந்த அத்தனையும் அவளின் கண் முன்னே வந்தது.

தன் விருப்பத்தை சிறிதும் கேட்காமல் அறைக்குள் நுழைந்ததும் தன்னை ஆக்கிரமித்தவனை கண்டு முகம் சுளித்தாள்.. அது மட்டுமல்லாமல் இரவு முழுவதும் அவளை ஒரு மனிதியாய் கூட நினைக்காமல் குடி போதையில் அவள் உடலை மட்டும் தின்று தீர்த்தது அந்த மனித மிருகம்.

அவளின் கண் பார்த்து அவளின் விருப்பம் அறிந்து அவளை தீண்டவில்லை.. அவனின் பார்வை அவளின் உடலிலும் அங்கங்களிலும் தான் அவன் பார்வை இருந்தது.. அதுவே பெண்ணவளுக்கு அருவருப்பை கொடுத்தது.

இரவு முழுவதும் அவளின் சதையை தின்று தீர்த்தம் அவனின் ஆசை அடங்கவில்லை போலும்.. ஆனால் பெண்ணவள் அதற்கு மேலும் உடலின் வலி தாங்காது அவனிடமிருந்து வந்த போதை வாசனையும் தாங்காது மயங்கி விட்டாள்.

இப்பொழுது தான் எழுகிறாள்.. அவள் தூங்குகிறாளா இல்லை மயங்கினாளா என்று கூட தெரியாது மது போதையும் மாது போதையும் அவனை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது.

தன் நிலை நினைத்து அவளின் விழிகளில் கண்ணீர் மழை பொழிந்தது.. ஆனால் அவள் அழுவதற்கு கூட நேரமில்லை என்பது போல அறையின் கதவு தட்டும் சத்தமும் அதை தொடர்ந்து,

"அடியே வெண்மதி இன்னமுமா தூங்கற.. பொழுது விடிய போகுதுடி.. பொம்பளையா லட்சனமா சீக்கிரமா எந்திரிக்கனும்னு உனக்கு தோனுதா டி.. அடச்சீ எழுந்து வந்து கதவை தொற.." என்ற கனகத்தின் கர்ஜனை குரலும் அதற்கு மேலும் படுக்க விடாமல் தன் மேல் மேம்போக்காய் சுத்தியிருந்த புடவையை உதறி கட்டிலில் போட்டு விட்டு அங்கிருந்த அவளின் பெட்டியில் இருந்த புடவையில் ஒரு புடவையை எடுத்து சுத்திக் கொண்டு வேகமாய் சென்று கதவை திறந்தாள்.

கதவை திறந்ததும் வெண்மதியின் முகத்தை ஆழ்ந்து பார்த்த கனகம் அவளின் கன்னம் கழுத்து என்று ஆராய்ச்சி பார்வையை பார்த்தாள். அவளின் பார்வையில் வெண்மதி தான் கூனி குறுகி போனாள்.

அவளின் கழுத்திலும் கண்ணத்திலும் இருந்த பல்தடத்தை திருப்தியாய் பார்த்து விட்டு,

"போ போய் தலைக்கு குளிச்சிட்டு வாசலை மொழுகி கோலம் போட்டுட்டு பூஜை ரூம்ல விளக்கேத்திட்டு சமையல் கட்டுக்கு வந்து சேரு.." கட்டளையிட்டு சென்றாள்.

அவள் சென்றதும் வெண்மதியின் விழிகள் குளம் கரை கட்டியது. இரவு முழுவதும் புருஷன் என்ற பெயர் கொண்ட காமுகனின் தொல்லை என்றால் அந்த வலியை போக்க கூட ஓய்வெடுக்க முடியாமல் இதோ வேலை பட்டியல் கொடுத்து விட்டு சென்றாள் அவளின் மாமியார்.

தன் விதியை நினைத்தபடி குளியலறைக்கு செல்வதற்காக வந்தவளின் முன்னே கட்டிலில் அலங்கோலமாய் படுத்திருந்த கணவன் என்ற ஜந்துவின் முகம் தெரியவும் அவளின் முகம் கோபத்தை கொண்டது.

ஆனால் இந்த கோபத்தை காட்ட முடியாது.. பணம் பதவி ஆள்பலம் அதிகார பலம் கொண்டவர்கள் முன்னே நம் கோபத்தை காமித்தால் பாதிப்பு கோபம் கொண்டவர்களுக்கே என்று புரியவும் தன் கோபத்தை மனதின் ஆழத்தில் போட்டு கொண்டு குளியலறை சென்றாள் வெண்மதி.


ஷவரை திறந்துவிட்டு அதனடியில் நின்று விட்டாள்.. அந்த பூமழையோடு இவளின் கண்ணீர் மழையும் சேர்ந்தே பொழிந்தது.. ஒரு அளவிற்கு மேல் தன்னை தேற்றிக் கொண்டவள் குளித்துவிட்டு வெளியே வரும் பொழுதும் அவன் எழவில்லை.. மனதில் சொல்லெனா உணர்வுடன் வாசலுக்கு சென்றவள் தண்ணீர் தெளித்து கூட்டி அழகான கோலமிட்டாள்.

சுவற்றை சுற்றியிருந்த செடியில் இருந்த பூக்களை தொடுத்து அதை பூஜையறையில் உள்ள சாமிகளுக்கு பூவிட்டு தீபமேற்றி வழிபட்டால்.

பெரும்பாலும் எந்த கடவுளிடமும் அதிகம் வேண்டமாட்டாள்.. அமைதியான மனதில் எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் மனதை நிர்மலமாக்கி கையெடுத்து வணங்கினாலே போதும் என்று எண்ணுபவள்.

இன்றும் அதையே தான் செய்தால்.. மனதில் எதையும் வேண்டவில்லை.. ஆனால் ஒரு கோரிக்கை வைத்தாள், "இறைவா இந்த நரகத்துல இருந்து காப்பாத்து.." அது ஒன்று மட்டும் தான் அவளின் வேண்டுதலானது.

சமையல் கட்டிற்கு சென்றவளை வரவேற்றது யாருமில்லா அடுப்பங்கரை தான்.. இரவு உணவு உண்ட தட்டு முதற்கொண்டு சமைத்த பாத்திரங்கள் அனைத்தும் சிங்கில் கிடக்க அடுப்பில் பால் வழிந்த தடம் அப்படியே காய்ந்து கருகி இருந்தது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளை,

"ஏன் மகாராணிக்கு இந்த வேலை செய்யின்னு சொன்னா தான் செய்வீங்களோ.." முதுகின் பின்னால் கனகத்தின் நக்கல் குரல் கேட்டது.


"இல்லைத்த.." என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறினாள்.

"என்னடி இல்லைத்த நொல்லத்தை.. போ போய் கிச்சன் கிளின் பண்ணிட்டு பாத்திரம் எல்லாம் விளக்கிட்டு பால் இருக்கும் பாரு.. காபி போட்டு எல்லாருக்கும் கொடு.." அதிகார தொனியில் கூறிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவள் சென்றதும் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த அடுப்பை சுத்தம் செய்து விட்டு பாலை எடுத்து அடுப்பில் ஏற்றி விட்டு பாலை காய வைத்துக் கொண்டே பாத்திரத்தை துலக்கி முடித்தாள்.

அதற்குள் பால் காய்ந்தது.. அதை எடுத்து நான்கு கப்புகளில் ஊற்றி காபி தூளை போட்டு ஆற்றினாள்.. அதை எடுத்துக் கொண்டு வெளியே ஹாலில் அமர்ந்திருந்த கனகத்திடம் வந்தவள்,

"அத்தை காபி.." என்று கொடுத்தாள்.

அதை வாங்கி கொண்டவள் , "ரெண்டு கப்பை இங்கேயே வச்சிட்டு நீ உன் புருஷனுக்கு காபி எடுத்துட்டு போ.. அவனுக்கு குடுத்துட்டு வந்து காலையில் டிபனுக்கு இட்லி பொங்கல் பூரி.. அதுக்கு சாம்பார் குருமா சட்னி எல்லாம் பன்னிடு.." என்று பட்டியலிட்டாள்.

அதைக் கேட்டு பெண்ணவளுக்கு மயக்கம் வராத குறை தான்.. இது என்ன ஹோட்டலா இப்படி வித விதமா சமைக்கிறதுக்கு என்று நினைத்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது என்ற நினைவுடன் காபி எடுத்துக் கொண்டு தங்களின் அறைக்கு சென்றாள்.

அங்கே அவன் இன்னமும் தூங்கி கொண்டிருந்தான்.. அவனை எப்படி எழுப்புவது என்ற யோசனையில் இருந்தவளை வேகமாய் கைப்பிடித்து இழுத்து அவனின் தேவை முடிந்த பின்பு தான் அவளை விட்டான்.

அவளால் முடியவில்லை.. அவளின் உடலும் ஒத்துழைக்கவில்லை.. இதையெல்லாம் தாங்கும் அளவு அவள் பெரிய பெண்ணும் இல்லை.. பதினெட்டு வயதான இளம் பெண் அவள்.. கிராமத்தில் வளர்ந்ததால் ஒரளவுக்கு அந்த வாழ்க்கை முறை தெரியும்.. அவனிடம் எதுவும் பேசாமல் எழுந்தவள் மீண்டும் சென்று குளித்துவிட்டு வேறு புடவை மாற்றிக் கொண்டு கீழே சென்று விட்டாள். அவனும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.. அவனுக்கு தேவை அவளின் உடல் மட்டும் தான்.. அது தான் அவனுக்கு தங்கு தடையின்றி கிடைக்கிறதே.. அப்புறம் ஏன் பேசப்போகிறான்.

கீழே வந்தவளுக்கு நிற்கவும் நேரம் இல்லாமல் வேலை வரிசையாய் காத்திருந்தது.. இவள் வந்த பின்பு சமையலுக்கு என்று இருந்த பெண்மணியை மற்ற வேலை பார்க்க சொல்லிவிட்டாள் கனகம்.

ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் வீட்டு வேலைக்கும் இரவு முழுவதும் கணவனின் உடல் தேவையை தீர்த்து வைக்கும் பொம்மையாய் இருந்தவள் காளியாய் உருமாறிய நாளும் வந்தது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்க்கு நன்றி