• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -12

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
குமரேசன் வெண்மதியை அழைத்து இடம் வால்பாறையில்.. இயற்கை எழில் கொஞ்சும் அழகான மலைத் தொடரின் அருகிலே பசுமை எங்கும் நிறைந்திருக்க அழகான இடத்தில் அந்த வீடு இருந்தது.. அங்கு தான் அழைத்து வந்திருந்தான்.. அது அவனின் நண்பன் வீடு என்று அவளிடம் கூறினான்.. அவள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.. அவன் கூறியதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை.

இருவரும் உள்ளே நுழைந்தனர்.. அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறி எதுவுமில்லை.. கையில் ஒரு பையுடன் அவளிடம் திரும்பியவன்,

"நீ உள்ளே போய் குளிச்சிட்டு இதோ இதுல இருக்கற புடவையை கட்டிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.." அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றதும் அறைக்குள் சென்றவள் அலுப்பு தீர குளியல் போட்டவள் அவன் கொடுத்த கவரில் இருந்த புடவையை எடுத்தவள் விழிகள் தெறிக்க அப்படியே நின்று விட்டாள்.

அந்த புடவை வெயிட் இல்லாத கண்ணாடி போன்ற உள்ளிருக்கும் அங்கங்கள் யாவும் அப்படியே தெரியும் வண்ணம் இருந்தது. பொதுவாக தேனிலவு ஜோடிகள் இது போன்று உடுத்துவது சகஜம் தான். ஆனால் அவளோ இதை பார்த்ததும் முகம் சுளித்தாள். ஆனால் இதை இப்போது உடுத்தாது விட்டாள் அவனுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் அதை உடுத்திக் கொண்டாள்.

சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் அவ்வளவு தொலைவு வந்த அசதியிலும் அப்படியே உறங்கி போனாள்.

அப்படியே உறங்கியிருந்தவளின் உடலில் ஏதோ மாற்றம் காணவும் தன் உறக்கம் கலைந்து எழுந்தவளின் முன்னே வேறொரு ஆடவன் அவளுடலை மோகமுடன் பார்த்திருந்தான்.. அப்பொழுது தான் உணர்ந்தாள் அவளின் முந்தானை கீழே இறங்கி விடப்பட்டதை.. அதிலே அவளின் பெண்மையின் வனப்பு அங்கே அள்ளி வீசியிருந்தான் கடவுள்.

அவளை அப்படி பார்க்க பார்க்க அவனின் பார்வை வீதம் மாறியிருந்தது.. வேகமாக தன் புடவை முந்தானையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள்,

"யார் நீங்க.. இங்கே எப்படி வந்தீங்க.." என்றாள் பயத்துடன்.

அவனோ அவளை பார்த்து கோனலாக சிரித்துக் கொண்டே, " நீ பாக்க செம்மையா இருக்கே பேபி.. உன்னோட உடம்பு ஸ்டரெக்சர் அப்படியே மோகத்தை தூண்டுது பேபி.. அய்யோ உன்னோட பார்வை ஆழ்கிணறு மாறி.. விழுந்தா ஒருத்தனும் எழவே மாட்டான்..

உனக்கு இவ்ளோ பெரிய விலை கொடுத்தது தப்பா இல்லை.. டேய் குமார் இன்னும் உனக்கு என்ன வேணாலும் கேளுடா நான் தாரேன்.. இப்படி தேவதை மாறி ஒருத்திய தந்த உனக்கு என்ன வேணாலும் பண்ணலாம் டா.." அவன் போக்கில் பேசிக் கொண்டே செல்ல அதை கேட்டவளுக்கு தான் இமைகள் இரண்டும் கலங்கி கண்ணீர் மழை பொழிந்தது.

புதியவன் பேசிய திசையில் பார்த்தாள் அங்கே நின்றது அவளின் கணவன் தான்.. கணவன் என்ற சொல்லுக்கு கூட தகுதியில்லாத ஒருவன் தான் இருந்தான் வஞ்சக சிரிப்புடன்.

அவனைக் அங்கே கண்டதும் அதிர்ச்சியில் சிலை என அவனை பார்த்தபடி நின்று விட்டாள்.. தன் கணவன் ஒரு காமுகன் என்று தெரியும்.. ஆனால் தன் மனைவியை மாற்றானுக்கு கொடுக்கும் அளவுக்கா கேவலமானவன்.. அதுவும் இப்படி கண் முன்னே தன் மனைவியை வேறொருவன் உறவு கொள்வதை கண்டு ரசிக்கும் அளவுக்கா கீழ்த்தரமானவன்.

ஆனால் அவன் அரக்கன் என்பதை பெண்ணவள் அறியவில்லை.

அவளின் மனநிலையும் அதிர்ச்சியையும் கண்டு கொள்ளாத இருவரில் ஒருவன் அவளின் உடலில் இருந்து துணிகளை கலைத்தான்.. ஒருவனோ அதை ரசனையுடன் வேடிக்கை பார்த்தான்.

அவளின் மேல் கைவைத்தவனை பார்த்து, "ப்ளீஸ் என்னை விட்ருங்க.. வேணாம் என்னங்க ப்ளீஸ் காப்பாத்துங்க நான் இங்கேயிருந்து எங்கேயாவது போயிடுறேன்.. எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வேணாங்க.. ப்ளீஸ் உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்னை விட்டுடுங்க.." என இருவரிடமும் மாறி மாறி கெஞ்சினாள்.

அவளின் கெஞ்சலை இருவருமே காதில் வாங்காமல் ஒருவன் ஆடையை அகற்றும் முனைப்பிலே ஈடுபட்டிருக்க இன்னொருவனோ அதை ரசனையுடன் பார்த்திருந்தான். அவளின் குரல் காதில் கேட்கவும் அவளின் கெஞ்சலை ரசித்தபடியே அவளருகில் வந்தவன்,

"என்னடி விடனுமா உன்னை.. அதுக்கா இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை இப்படி கூட்டிட்டு வந்தேன்... நீ அழனும் டி.. உன்னை கொஞ்சம் கொஞ்சமா துடி துடிக்க வச்சி கொல்லனும்.. உனக்கு ஒன்னு தெரியுமா உன் மேல யாரும் அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாதாமே.. உனக்கு அவ்வளவு பலத்த பாதுகாப்பு இருக்காமே.. இது தெரிஞ்சதுல இருந்து தாண்டி உன்னை துடிக்க வைக்க நினைச்சேன் கட்டிக்கிட்டேன்.. உன்னை ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேனு நினைக்குறியா.. உன்னை பழி வாங்க தாண்டி கட்டிக்கிட்டேன்.. இதோ நித்தமும் நீ துடி துடிச்சி சாகப்போறே டி..


இனிமே என் குடும்பமே நிம்மதியா இருக்க போகுதுடி.. இனி நீ காலம்பூரா இதை நினைச்சு நினைச்சு சாகப் போற.. இது தாண்டி உன் குடும்பத்துக்கே நான் குடுக்க போற தண்டனை.. சார் உங்க விருப்பம் போல அனுபவியுங்க.. இன்னைக்கு பூரா இவ உங்களுக்கு தான்.. ஆஆ என் அருமை பொண்டாட்டி நாளைக்கு வேற ஒருத்தன் வரப்போறான் டி.. இன்னைக்கு அவர சந்தோஷபடுத்து.. இவரு உன்னை அனுபவிக்குறது பாத்து பாத்து நான் சந்தோஷப்படுவேன் டி.. இதை விட வேற என்ன இருக்கப் போகுது சொல்லு பாக்கலாம்.." என்று பழி வெறி மின்னும் கண்களுடன் கூறினான்.

அவன் கூறிய எதுவும் அவளுக்கு எதுவும் புரியவில்லை.. ஆனால் தன்னை தன் பெண்மையை அடகு வைக்கிறான் மட்டும் என்று புரிந்ததும் அவளால் அதற்கு மேலும் பொருமையாய் இருக்க முடியவில்லை.. கணவன் என்ற ஒரு காரணத்திற்காக தனக்கு விருப்பமில்லை என்றாலும் அவனின் அரக்க குணத்திற்கு ஈடுகொடுத்து வாழ்ந்தாள்.

ஆனால் இன்று தன் பெண்மையை மாற்றானுக்கு விலை பேசியவனை அவளால் அப்படியே விட முடியவில்லை. பெண்ணை பலவீனமாக்கும் முயற்சி தான் அவளின் கற்போடு விளையாடுவது தான் இதுபோன்ற ஆண்களுக்கு துணையாகிவிடுகிறது.

இவன் எல்லாம் ஆண் என்றே வர்க்கத்துக்கே கலங்கம் தான்.. இவனைப் போன்றவனை எல்லாம் இப்படியே வா விட்டு விட முடியும் என்றவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவளின் கண்ணத்தில் அறை விழுந்தது.. என்னவென்று உணரும் முன்பே விழிகள் சொருகி ஆழ் மயக்க நிலைக்கு சென்றாள் பெண்ணவள்.

அடுத்த இரு நாட்கள் கழித்து தான் கண்விழித்தவள் கண்டது எதிரே உயிரற்ற உடலுடன் இருந்த அவளின் கணவனைத் தான்.. அருகில் சொந்த பந்தங்கள் அழும் குரல் கேட்கவும் தான் தெரிந்தது அவர்களின் வீட்டில் இருக்கிறாள் என்று.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் ஸ்டார்ஸ் கொடுத்த பட்டூஸ்க்கு நன்றி