• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -13

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
நடந்த போன எதுவும் சுத்தமாய் அவளுக்கு நினைவில்லை.. என்ன நடந்தது என உணரும் முன்னே அங்கே மாலையுடன் ஐஸ் பாக்ஸில் குமரேசனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது.. அதை பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் மனதில் ஒரு நிம்மதி உண்டானது.. ஒருத்தரின் இறப்பில் நிம்மதி காண்பது பாவம் தான் என்றாலும் ஏனோ மனதோரம் வந்த நிம்மதியை அவளால் தடுக்க முடியவில்லை.

அவள் வாய் விட்டு கத்தவும் இல்லை கதறவும் இல்லை.. ஏன் கண்ணில் சிறு துளி கூட கண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை.. யாரோ ஒரு மூணாவது மனிதர் இறந்தாலும் வெளிவந்துவிடுமே இந்த கண்ணீர்.. ஆனால் பெண்ணவளுக்கு அது கூட வரவில்லை.. அவளின் அந்த அமைதி கனகத்திற்கு வெறியை ஏற்படுத்தியது.

ஊரே அவள் கணவன் இறந்த அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டாள்.. அதிர்ச்சியில் சிலையாகிவிட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்க கனகம் மட்டும் ஏனோ அதற்கும் அவளை தான் குறை கூறினாள்.

" இவளால் தான் எம்புள்ளை செத்துட்டான்.. இவ தான் கொன்னுட்டா.." அவளை வார்த்தையால் வசைபாடினாலும் யாரும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

சேயை இழந்த தாயின் வேதனை என்று விட்டு விட்டனர்.. என்ன தான் கெட்டவளாக இருந்தாலும் அவளுக்கு பெற்ற பாசம் என்ற ஒன்று இருக்கும் அல்லவா.. அதன் வெளிப்பாடு தான் இந்த கதறல் என்று அமைதியாகினர்.


பின்னே அவளுக்கும் வலி என்ற ஒன்று உண்டல்லவா.. பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை மனைவியுடன் தேனிலவுக்கு சென்றவன் போன இரண்டாம் நாளிலே அவன் இறந்து ஒரு நாள் முடிந்து விட்டது.. எப்படி இறந்தான் என்றே தெரியவில்லை என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்.. அந்த நேரத்தில் அவனுடன் இருந்தது அவனின் மனைவி மட்டும் தானே.. அவளும் ஏதோ அதிர்ச்சியில் மயக்கம் தெளியாமலே இருந்தாள் என்று சொல்லவும் அவளின் சந்தேகம் மொத்தமும் வெண்மதியின் பக்கம் தான் திரும்பியது.

உண்மை என்னவென்று தெரிந்தால் தானே அவளை ஏதாவது செய்ய முடியும்.. ஆனால் அதற்கும் அவள் வாயை திறக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் கொக்கை போல் காத்திருந்தாள். குமரேசனின் உடல் எரியூட்டப்பட்டு எல்லாம் முடிந்தது.. வந்திருந்த சொந்தங்கள் ஊர் மக்கள் என அனைவரும் சென்று விட வீட்டு ஆட்களும் வேலை ஆட்கள் மட்டும் இருந்தனர்.

நேராக வெண்மதியிடம் வந்த கனகம் அவளின் தலைமுடியை பிடித்து தூக்க வலி தாங்காமல் அலறிக் கொண்டே எழுந்தாள் வெண்மதி.

அவளின் இரு கண்ணத்திலும் மாறி மாறி அறைந்து கொண்டே,

"சொல்லுடி என் புள்ளை எப்படி செத்தான்.. கண்டிப்பா உனக்கு தெரியாத இருக்காது.. இப்போ சொல்லப் போறியா இல்லையா.." அவளின் முடியை அழுத்த பிடித்துக் கொண்டே கேட்டாள்.

அவளோ அழுது கொண்டே, "சத்தியமா எனக்கு தெரியாது அத்தை.. என்னை யாரோ அடிக்கவும் நான் மயங்கிட்டேன்.. " கண்ணீர் வழிந்தது கொண்டே கூறினாள்.

ஆனால் வந்தவன் அவளின் பிள்ளைக்கு தெரிந்தவன் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டாள்.. அவளுக்கு இப்போது சந்தேகம் இருந்தது..அவளுக்கு தாலி கட்டியவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவளின் காதுக்குள்ளே ஒலித்து கொண்டிருந்தது.

தன்னை பற்றி அவனுக்கு தெரிந்த விடயம் கூட அவனுக்கு தெரிந்திருக்கிறது.. ஏன் இவர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.. அப்படி என்றாள் நான் யார்..? நான் வடிவுடை ஆச்சியின் பேத்தி தானே.. அவரின் மகள் வழி பேத்தி என்றல்லவா சொல்லியிருக்கிறார்.. எனக்கு இந்த ஊரே புதுசா தானே.. ஆனால் அவன் என்னென்வோ சொன்னானே என்ற அவளின் மனதிற்குள்ளே நிறைய கேள்விகள் குடைந்து கொண்டே இருந்தது.. அதனால் அங்கே என்ன நடந்தது என்பதை பாதி மறைத்து தான் கூறினாள் கனகத்திடம்.

குமரேசன் சொன்ன போதே உணர்ந்து விட்டாள் தன் வாழ்வில் தனக்கு தெரியாமல் ஏதோ ஒரு ரகசியம் உள்ளதென்று.. முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.. நிச்சயம் அது இந்த குடும்பத்திற்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்ன நடந்தாலும் எதுவும் தெரியாமல் இந்த வீட்டை விட்டு போகக் கூடாது என்ன முடிவில் உறுதியாக இருந்தாள் வெண்மதி.

அவளுக்கு நன்றாக தெரியும் இனி கனகத்தின் வாயிக்கு அவள் தான் அவல் என்று..ஆனால் அதற்கு பயந்து இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணத்தில் இங்கே இவர்கள் கொடுக்கும் வலிகளை தாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டாள்.

அதற்காகத் தான் கனகத்திடம் உண்மையை மறைத்தாள். அதற்கு பின்பு அந்த வீட்டில் நடந்த எதற்கும் அவள் வாயை திறக்காமல் அமைதியாய் இருக்க பழகிக் கொண்டாள்.

அன்று குமரேசனின் காரியம் நடந்த போது கூட தகுதியில்லாத ஒருவன் கட்டிய மாங்கல்யம் அவள் கழுத்தில் இருக்க வேண்டியது இல்லை என்ற நிம்மதி அவள் மனதிற்கு வந்தாலும் பிறந்ததிலிருந்து தாய் பாட்டி வைத்து அழகு பார்த்த பொட்டு பூ வளையல் என அனைத்தும் அவனுக்காக இழக்க வேண்டும் என்ற போது தான் அவளுக்கு வலித்தது.

ஆனால் அதை மனதுடன் பூட்டி வைத்துக் கொண்டாள்.. கொண்டவனை மன்னிக்க முடியவில்லை.. அவன் செய்த செயல் ஆணிணத்திற்கே அவமானம்.. வெளியே தெரிந்தால் தன்னை கண்டு சிரிப்பார்கள்.. அது மட்டுமல்லாமல் அந்த இரண்டு நாள் மயக்கத்தில் இருந்தாள் என்றால் அப்பொழுது என்ன நடந்திருக்கும் என்று இன்று வரை புரியாத புதிராகவே அவளுக்கு உள்ளது.

தன் உடல் கலங்கப்பட்டு விட்டதா.. அது தான் முன்பே கணவன் என்ற பெயரை கொண்டவன் களங்கப்படுத்தி விட்டானே.. மீண்டும் அதில் களங்கம் ஏது.. ஆனால் தன்னுயிரை காத்தார்கள்.. யார் அவன் உயிரை எடுத்திருப்பார்கள் என்றவளின் யோசனையில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவள் முன்பு தான் ஆதவன் வந்தான்.. அதுவும் அவளை தாங்கி பிடித்தபடி.

ஏனோ அவன் கூறிய நானும் இந்த குடும்பத்தில் ஒருவன் தான் என்பதை அவள் மனம் ஏற்கவில்லை.. அவன் முகம் ஏற்கனவே கண்டது போல் இருந்தது.. ஆனால் யார் என்று அவளுக்கு புரியவில்லை.. அவனை கண்ட நொடியிலிருந்து மனதில் ஏனோ நிம்மதி தங்கியது.


பழைய நினைவுகளில் இருந்தவளை,

"அண்ணி.." என்ற குரல் நினைவுக்கு கொண்டு வந்தது.

அங்கே அவளின் முன்னே வளவன் நின்றிருந்தான்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ணி ஸ்டார்ஸ் கொடுத்த பட்டூஸ்க்கு நன்றி