• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -14

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன் முன்னே நின்றவனை கேள்வியுடன் பார்த்தாள் வெண்மதி.

"அண்ணி உங்களை ஆதவன் அண்ணா கூப்பிடறாங்க.." அவளிடம் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

இந்த குடும்பத்தில் தப்பி பிறந்தவன் போல.. இது நாள் வரை அவள் கண்ணை தவிர்த்து அண்ணி என்ற வார்த்தையை தவிர்த்து வேறு எதுவும் பேசாதவன். அவன் மேல் வெண்மதிக்கு எப்பொழுதும் ஒரு மரியாதை உண்டு.. அவனை விட வயதில் சிறியவள் தான்.. ஆனாலும் அண்ணி என்ற சொல்லை இதுவரை தாண்டாதவன்.

அவன் சென்றதும் இவளும் பின்னே சென்றாள்.. அங்கே உணவு மேஜையில் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தனர் ஆதவனும் வளவனும்.

அவள் வந்ததை பார்த்து விட்டு,

"என்ன மேடம் சமைச்சா மட்டும் போதுமா.. பரிமாற யாரு வருவா.." என்றான் அவளை பார்த்தபடியே.

அவனின் பார்வையில் ஏதோ இருந்தது.. ஆனால் என்னவென்று தான் அவளால் உணர முடியவில்லை.

அமைதியாக வந்தவள் இருவருக்கும் பரிமாறினாள். அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட்டவன் அவளிடம் திரும்பி,

"ஆமா நீ என்ன படிச்சிருக்க.." என்றான் கேள்வியாய்.

இதெல்லாம் உனக்கு எதற்கு என்ற பார்வையில் பெண்ணவள் பதில் கூறவில்லை.. ஆனால் அவன் பார்வையில் இருந்த அழுத்தம் அவள் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருந்தது.

அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.. அவள் அவனை பார்க்க,

"நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்.. எனக்கு நான் கேட்டதுக்கான பதில் வேணும்.." என்றான் கட்டளையாய்.

அவள் அவனை பார்த்து சலித்தபடியே, "ப்ளஸ் டூ முடிச்சேன்.. அப்புறம் கல்யாணம் ஆயிடுச்சி படிக்க முடியலை.." என்றாள் எங்கோ பார்த்தபடி.

"உனக்கு மேல படிக்க இஷ்டம் இருக்கா.." என்றான் அவளின் விருப்பம் வேண்டி.

"ஏன் படிக்க வைக்க போறீங்களா.. தேவையில்லாத கேள்வி எதுக்கு கேக்குறீங்க.." முகத்திலடித்தாற் போல பதில் சொன்னாள்.

"உனக்கு மேல படிக்க விருப்பமான்னு கேட்டேன்... அப்படின்னா என்ன படிக்க விருப்பம்.." என்றான் மீண்டும் அதே கேள்வியுடன்.

தான் பதில் சொல்லாமல் அவன் விடமாட்டான் என்பதை உணர்ந்தவள்,

"ஆமா சார் எனக்கு படிக்கனும்.. ஒரு பெரிய ஐஏஎஸ் ஆபிசர் ஆகனும்.. இது என்னோட சின்ன வயசு கனவு.. என்னவோ நிறைவேத்தி வைக்க போற மாறி கேக்குறீங்க.." என்றாள் கடுப்புடன்.

மேலும் அவளிடம் எதுவும் வார்த்தையாடாமல், "வளவா நாளைக்கு இந்த புள்ளைய கூட்டிட்டு டவுனுக்கு இருக்க காலேஜுக்கு போயி அப்ளிக்கேஷன் போட்டுட்டு வந்துடு.." என்றான் முடிவாய்.


அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவனின் முகத்தை கேள்வியாக பார்த்தாள் பெண்ணவள்.. அப்பொழுது தான் அங்கிருந்து அவர்களின் பேச்சை கேட்டபடி வந்த கனகம்,

"ஆதவா நீ என்ன நெனச்ச இது மாதிரி பன்றே.. அவ இந்த வீட்டு மருமக.. அதுவும் புருஷனை இழந்தவ.. அவ போய் இப்போ காலேசிக்கு போனா இந்த குடும்பத்தை யாரு மதிப்பா.. அவ என்ற மருமக நான் அதுக்கு அனுமதி கொடுக்கனும்.. ஏய் வளவா அவ சொல்றான்.. நீயும் கேட்டுட்டு இருக்க.." என்றாள் கொதிப்புடன்.

அவளை அடிமையாக்க கொண்டு வந்தாள் இவன் அவளை படிக்கவென்று அனுப்பினால் அப்புறம் எப்படி இவள் நம்மை பார்த்து பயப்படுவாள்.. அதுமட்டுமல்லாமல் இவ படிக்கவென வெளியே சென்றாள் தாங்கள் இத்தனை நாள் போட்ட திட்டம் அனைத்தும் பாலாகிவிடுமே என்ற பயம் மனதில் தோன்ற என்ன நடந்தாலும் சரி இவள் இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என்ற முடிவில் இருந்தாள் கனகம்.


ஆனால் முடிவெடுக்க வேண்டியவன் தெளிவாக ஒரு முடிவுடன் தான் உள்ளான் அவனை மாற்றுவது அத்தனை எளிதல்ல என்பதை அவள் மறந்து தான் போனாள்.

அவளின் எண்ணம் அறிந்தவனோ,

"சித்தி இது என் வீடு இங்கே யாரு என்ன செய்யனும்னு நான் தான் முடிவு எடுப்பேன்.. உங்க கிட்ட அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. அதுமட்டுமில்லாம இப்போ உங்களுக்கும் வெண்மதிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை..எப்போ உங்க பையன் இறந்தானோ அப்பவே இவளுக்கும் உங்களுக்குமான பந்தம் முடிஞ்சிருச்சி.. இனி தேவையில்லாம நான் எடுக்குற முடிவுல தலையிடாதீங்க.. வளவா நாளைக்கு நான் சொன்னது நடக்கனும்.." அங்கிருந்த அனைவருக்கும் கர்ஜனை குரலில் கட்டளையிட்டு விட்டு சென்றான்.

அவனின் குரலில் இருந்த கம்பீரம் அவளுக்கு எதையோ மங்கலாய் சில நிழல்கள் தோன்றியது.. ஆனால் அவளுக்கு சரியாக தெரியவில்லை.. முகத்தில் குழப்பத்துடன் அங்கிருந்த யாரையும் கவனிக்காமல் தன் அறை சென்று அடைந்து கொண்டாள்.

அங்கே வந்த வளவனோ,

"அம்மா மறந்துட்டிங்களா அவருக்கு வேலை செஞ்சு தர்றோம்னு சொன்னதால தான் நம்ம இன்னும் இங்கிருக்கோம்.. இப்போ போய் இப்படி பேசுவீங்கன்னா வெளியே எங்கே போறது..கொஞ்சம் பொறுமையா இருங்க மா.." என்று கனகத்தை தாஜா செய்து விட்டு ஆதவன் சொன்னதை நாளை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு சென்றான்.


அவர்கள் போனதும் கனகத்தின் மனம் வெகுண்டது.. ச்சே என்ன நடக்க கூடாதுன்னு நெனைச்சமோ அது நடக்குமா.. இல்லை அவ படிக்க தானா போறா.. அவளை அப்படியே வா படிக்க விட்டுருவோம்.. பாத்துக்கலாம் என்ற மமதையில் சென்று விட்டாள்.

இங்கே தன் அறைக்கு வந்த ஆதவன் மனமோ ரணமாய் வலித்தது.

'ஏன் பட்டூமா உன்னோட ஆசையை கூட என்னால நிறைவேத்த முடியாதா மா.. நிச்சயம் நிறைவேத்துவேன் டா.. நீ ஆசைப்பட்ட படிப்பை படிக்க வச்சி உன்னை அந்த உச்சியில உக்கார வைப்பேன் டா.. அதே மாதிரி என் குடும்பத்தை அழிச்சவனை என் கையாலே அழிப்பேன்.. நீ யாரு உனக்கு நான் யாருன்னு இப்போ சொல்ல மாட்டேன் டா.. நீ பெரிய ஆபிசர் ஆனதும் தான் சொல்லப் போறேன்.. அதுவரைக்கும் நீ அமைதியா தான் இருக்கனும் பட்டு மா.." என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

அவன் குடும்பத்தை அழித்தவனை தேடும் படலத்தில் முதல் படியை எடுத்து வைத்தான் ஆதவன்.. தனக்கு ஊரில் நம்பிக்கையானவர்களை அழைத்து பேசினான்.. அவர்களும் உதவுவதாக வாக்களித்தனர்.

அதே போல தான் சிறையில் இருந்த சமயத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் சிலரை அழைத்து ரகசியமாய் தேட விட்டான்.

அவனின் முகம் தெரிந்தும் தெரியா எதிரியை தேடும் நேரம் வெண்மதி அவன் முன்னே வந்து நின்றாள் தான் யார் என்ற கேள்வியுடன்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் ஸ்டார்ஸ் கொடுத்த பட்டூஸ்க்கு நன்றி