தன் சிறையில் இருந்த போது சம்பாதித்த சில உறவுகளை வைத்து தன் குடும்பத்தை அழித்தவனை தேட விட்டான் ஆதவன்.. அவர்கள் அனைவரும் ரவுடிகள் தான் என்றாலும் அவர்களை நல்ல பழக்க வழக்கத்தை சொல்லி கொடுத்து தான் செய்ய விரும்பும் நன்மைக்கு அவர்களை பயன்படுத்தினான் ஆதவன்.. அதுவே அவர்களின் மத்தியில் அவனுக்கு ஒரு பெரிய மதிப்பை தந்தது.. அவர்களை தன் துணைக்கு வைத்துக் கொண்டான் யாருமறியாமல்.
அவர்களிடம் பேசி விட்டு கட்டிலில் அமர்ந்தவனை ஏதோ ஒரு குரல் அழைத்தது.. யார் அது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஆனால் யாரும் அங்கிருப்பதற்கான அடையாளம் சுத்தமாய் தெரியவில்லை.. ஆனால் யாரோ அழைத்தது போல் இருந்ததே என்ற சிந்தனையில் இருந்தவனின் மேல் ஒரு காகித சுருள் வந்து விழுந்தது.
அதை எடுத்து பார்த்தான்.. நான்காக சுருட்டி மடக்கி இருந்தது.. அதை யார் எறிந்திருப்பார்கள் என்று பார்த்தான்.. ஆனால் அங்கே யாருமில்லை.. கடைசியில் அதை பிரித்து படித்தான். அதில்,
"ஆதவா மலை மேல் இருக்கும் குகைக்கு வந்து விடு.. இன்று உனக்காக காத்திருக்கும் எனது தவம் முடியட்டும்.. ஆனால் நீ என்னை சந்திப்பது யாருக்கும் தெரிய கூடாது.. உன் நிழலாய் உனை பின் தொடரும் வளவனுக்கும் கூட.. உன் அம்முவை பற்றி பேச வேண்டும்.. மறந்திருக்கமாட்டாய் உன் அம்முவை.." என்று அதில் இருந்தது.. ஆனால் அதை எழுதியது யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவன் மனம் ஏனோ அங்கே போ என்று கூறியது.. கண்டிப்பாக போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
ஊரே அடங்கியிருந்த அந்த நடுசாம வேலையில் ஆதவன் கிளம்பினான் யாரும் அறியாமல்.. தன் அறையிலிருந்து வெளி வந்தவன் யாரும் வெளியே உள்ளார்களா என்று சுற்றிலும் பார்த்தான்.. யாரும் இருப்பதற்கான அடையாளம் இல்லை.. கண்டிப்பாக அவரவர் அறையில் அடைந்திருப்பர் என்று நினைத்து தன் முகத்தை ஒரு துண்டால் மறைத்து தலைக்கு தலைப்பாகை கட்டி வீட்டை விட்டு வெளியே வந்தான்.
ஆனால் இவன் யாரும் அறியாமல் வீட்டை விட்டு சென்றதை நான்கு விழிகள் பார்த்தது.
இவனோ இருட்டையும் துச்சமாய் மதித்து தன் போக வேண்டிய தூரத்தை மட்டும் மனதில் வைத்து யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டே ஊரின் எல்லையை தாண்டி மலை ஆரம்பிக்கும் இடமான அடர்ந்த கானகத்திற்கு வந்தான்.
அந்தகார இருட்டில் ஆந்தையின் அலறல் சத்தமும் நரி ஊளையிடும் சத்தமும் அந்த கானகத்தை பயமாய் காட்டியது.. அந்த இருட்டு அவனுக்கு பெரிதாய் பயம் இல்லை.. சிறு வயதிலேயே இதை விட பல கொடுரமான இரவுகளை கண்டவனுக்கு இதை கண்டு பயம் இல்லை.
தான் போக வேண்டிய பாதையை மட்டும் பார்க்காமல் சுற்றிலும் தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே சென்றான்.
தனது கையில் வைத்திருந்த சிறு டார்ச் லைட் உதவியுடன் கானகத்தை தாண்டி மலையின் அடிவாரம் வரை வந்தவனுக்கு அதற்கு மேல் எப்படி போவது என்று புரியாமல் அங்கேயே நின்று விட்டான்.
அங்கே எந்த பக்கம் போவதற்கும் வழி இல்லாமல் தடமனைத்தும் அடைத்து வைத்த மாதிரி இருந்தது.. அதனாலே இந்த குழப்பம்.
அப்படியே நின்றவன் மீண்டும் வந்த வழியே செல்வதற்கு திரும்பவும் 'ஆதவா' என்ற குரல் அழைப்பது போல் இருக்கவும் திரும்பினான்.
அவன் முன்னே ஒரு சிறு வெளிச்சம் அவனுக்கு காட்டியது.. அவன் கையில் இருந்த சிறு டார்ச்சர் முன்னமே அனைந்து போயிருந்தது.. அப்போ இந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். ஆனால் யாரும் வெளிச்சம் காட்டுவதாகவும் தெரியவில்லை பின்னே எப்படி என அப்படியே நின்று விட்டான்.
ஆனால் அந்த ஒளி அவனுக்கு முன்னே வழிகாட்டியது.. முன்பு அடைபட்டிருந்த வழி இப்பொழுது ஒதுங்கி வழிவிட்டது.. அதை ஆச்சர்யத்துடன் பார்த்தவன் அந்த ஒளியின் பின்னே சென்றான்.
அந்த ஒளி அவனை மலையின் மத்திய பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு குகையில் சென்று மறைந்தது.. அவனும் அதன் பின்னே அந்த குகைக்குள்ளே புகுந்தான்.. வெளியிலிருந்து பார்க்கும் பொழுது இருட்டாய் இருந்த இடம் உள்ளே செல்லச் செல்ல ஆங்காங்கே தீப்பந்தங்களின் ஒளியுடன் மின்னியது.
உள்ளே செல்ல அங்கே ஓரிடத்தில் உலகை ஆளும் சர்வேஷ்வரனின் சிலை இருந்தது.. அதன் முன்னே லஷ்மி விளக்கு ஏற்றப்பட்டு சிவனுக்கு அரளிப் பூ மாலை போடப்பட்டிருந்தது.. அதே ஒரு ஓரத்தில் தின்னை போல் இருந்த இடத்தில் ஒரு உருவம் படுத்திருந்தது.. உடம்பில் வெறும் எலும்புகள் மட்டும் குடியிருக்க பேருக்கு சதையுடன் கன்னம் இரண்டும் ஒட்டி நரைத்த தலையுடன் மீசை புதர் போல் முகத்தை மறைந்திருந்த அந்த உருவத்தின் கண்ணீல் அவனைக் கண்டதும் ஒளி கீற்று வீசியது.
மெதுவாக வார்த்தைக்கும் வலிக்குமோ என்று , "வந்துட்டியா ஆதவா.." என்று முனுமுனுத்தது.
அந்த உருவத்தின் அருகே சென்று முட்டியிட்டு அமர்ந்தவன், "ஐயா யாரு நீங்க.. ஏன் என்னை பாக்க வர சொன்னீங்க.." என்று கேட்டான்.
ஆனால் அந்த உருவத்தை பார்த்திலிருந்து அவனின் உயிரும் உடலும் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.. அவன் விழிகள் ஏனோ காணக் கிடைக்காத பொக்கீஷம் கிடைத்ததை போல் ஆர்ப்பரித்தது.
ஆனால் அதற்கான காரணம் அவனுக்கு விளங்கவில்லை.. அவன் அமைதியாய் அந்த உருவத்தையே பார்த்திருந்தான் தான் கேட்ட கேள்விக்கு பதிலை தேடி.
தன் தளர்ந்த கைகளை தின்னையில் ஊனி மெதுவாய் எழுந்தது அந்த உருவம்.. அது எழுவதற்கு தடுமாறவும் இவன் தன் கைகள் கொடுத்து தூக்கினான்.
அந்த தளர்ந்து உடலை தொடரும் ஏனோ அவனுக்கு அவன் குடும்பம் தான் நினைவு வந்தது.
மெதுவாய் அமர்ந்த அந்த உருவம் ஆதவனின் முகத்தை தன் கைகளில் தாங்கி தடவி பார்த்தது.. அவன் முகத்தை தடவி கொண்டே அதன் விழிகளில் கண்ணீர் மழை பொழிந்தது.
"ஆதவா.." என்று அழுத்தமாய் அழைத்தது.
அந்த குரல் அவனின் உயிர் நாடி வரை சென்றது.. இந்த குரல் அவனுக்கு மிகவும் பழக்கமானது.. ஆனால் யார் இது என்று அந்த உருவத்தின் முகத்தை உற்று பார்த்தான்.
அப்பொழுது பின்னிருந்து ஒரு குரல்,
"ஆதவா வந்துட்டியா பா.. எஞ்சாமி.." என்றது.
அது யார் என்று திரும்பி பார்த்தவன் அப்படியே அதிர்ச்சியில் திகைத்து நின்று விட்டான். தன் விழிகள் காண்பது கனவா..? இல்லை இதை நனவென்றால் எப்படி இது நடந்தது என்ற அதிர்ச்சியில் நின்றவனை அந்த உருவம் நெருங்கி வந்து அணைத்தது. அந்த உருவத்தின் கைகளில் அவன் அப்படியே சிலையாக நின்று விட்டான்.
இங்கே கனகமோ, "நீ என்னய்யா சொல்றே.. இந்த நேரத்துல அந்த பய அப்படி எங்க போறான்.." என்றாள் ஏதோ யோசனையாய்.
அவள் முன்னே அவளின் கணவன் சதானந்தன் நின்றிருந்தான்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. கதை எப்படி போகுதுன்னு கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி செல்லம்ஸ்