" என்னய்யா சொல்றே.. எதுக்கு அவன் யாருக்கும் தெரியாம இந்த அர்த்த சாமத்துல வெளில போகனும்.." ஏதோ யோசனையில் கேட்டாள் கனகம்.
" எனக்கு மட்டும் எப்படி தெரியும் கனகம்.. நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி தண்ணி கொண்டு வர சொன்ன.. சமையல் கட்டுக்கு போகும் போது தான் இவன் இப்படி போறது தெரிஞ்சது.." என்றார் அப்பாவியாய் சதானந்தன்.
ஆம் அவன் வெளியே சென்றதை கண்ட நான்கு விழிகளில் இரு விழிகளுக்கு சொந்தமானவன் சதானந்தன்.
"ஏன்யா அவன் தான் போனான் இல்லை நீ பின்னாடியே போய் எங்கே போறான்னு தெரிஞ்சிக்க வேண்டியது தான.." என்றாள் அவசரமாக.
"அடியே நீ தெரிஞ்சு தான் பேசுறீயா.. எனக்கு தான் இருட்டுனா பயமே டி.." என்றான் பதட்டமாக.
"அடச்சீ நீயெல்லாம் ஒரு ஆளு.. போயா போக்கத்தவனே.. அவன் பின்னாடி பண்றதுக்கு உனக்கு என்னய்யா பயம்.. உன்னையெல்லாம் கட்டிகிட்டு நான் தான்யா தடுமாறுறேன்.. அய்யோ இப்போ அந்த பய எங்க போயிருப்பான்னு தெரியலையே.. ஏற்கனவே அவ ஒரு வில்லங்கம் புடிச்சவன்.. இதுல இப்போ இந்த அர்த்த ராத்திரியில அவனை எங்கய்யா போய் தேடுறது.." என்று யோசனையாய் நடந்தவாறு கணவனை திட்டியவள் வெளியே போனவனை நினைத்து புலம்பினாள்.
இங்கே தன் அறைக்கு வந்த வெண்மதி, "இந்த நேரத்துல இந்த ஆளு எங்க போறாரு.. இவரு நல்லவரா..? கெட்டவரா..? இவரை நம்பலாமா.. நம்மளை பத்தி இவருக்கு தெரியுமா..? நாளைக்கு கேட்டு பாக்கலாம்.." என்ற யோசனையில் அறையிலே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள்.
ஆதவன் வெளியே சென்றதை பார்த்தவர்களில் இவளும் ஒருவள். இவர்களின் சிந்தனைக்கு காரணமானவனோ அங்கே மலையில் அந்த குகையில் அதிர்ச்சியில் சிலையாய் நின்றிருந்தான்.
தனக்கு முன்னே நின்றிருந்தவரை கண்டு, "சித்தப்பா.." என்றான் அதிர்ச்சியாக.
அவரும் அவனின் அருகில் வந்து அவனை கட்டியணைத்து, "ஆதவா எஞ்சாமி வந்துட்டியா ராசா.." என்று அவனின் முகத்தை தடவி கொடுத்து தன் பாசத்தை காட்டினார் நாகராஜன்.
"சித்தப்பா நீங்க உயிரோட இருக்கீங்களா சித்தப்பா.. ஆனா எப்படி சித்தப்பா.. எல்லோரும் என் கண் முன்னாடி தான எரிஞ்சி போனீங்க.. இன்னமும் என்னால அதை மறக்க முடியலையே சித்தப்பா.. ஒவ்வொரு நாளும் என்னை தூங்க விடாம செய்யற கனவு சித்தப்பா அது.." என்று தன் சிறிய தந்தையை ஆரத் தழுவி கொண்டே கேட்டான்.
"அய்யா ராசா எஞ்சாமி நாங்க இன்னும் உசுரோட தான்யா இருக்கோம்.. உன்னை காப்பாத்த முடியாம இப்படி உசுருக்கு பயந்து வாழந்துட்டிருக்கோம் யா.." என்றார்.
"சித்தப்பா நாங்கன்னா இன்னும் யாரு யாரு இருக்கீங்க.." என்றான் தேடலாய்.
"நானும் அய்யனும் தான் யா இருக்கோம்.. எங்க உசுரு எதுக்கு இன்னும் இப்படி இழுத்துட்டு இருக்குன்னு தெரியலை ராசா.." என்றார் கசப்பாய்.
"நாகராஜா.." என்ற குரல் கேட்கவும்,
"இதோ வந்துட்டேனுங்க ஐயா.." என்று தன் தமையன் மகனை அழைத்துக் கொண்டு அங்கே படுத்திருந்த உருவத்தை நோக்கி இருவரும் சென்றார்.
அவரின் அருகே சென்ற இருவரும்,
"கண்ணு ஆதவா உன்ற பாட்டன் ராசா.. அந்த ஆக்ஸிடெண்ட் ல இவரு படுத்த படுக்கையா ஆகிட்டாரு.. ஆனா இத்தனை வருஷம் ஆகியும் இவரு உசுரு இன்னும் துடிச்சிட்டு இருக்கு ராசா.. உன்னை பாக்க.." என்று தன் தந்தையின் அருகே ஆதவனை அழைத்து சென்றான்.
அங்கே படுத்திருந்த மருதநாயகத்தின் அருகே சென்ற ஆதவன், "தாத்தா.." என்றான் ஆசையாக.
இந்த வார்த்தையை மீண்டும் கூப்பிட முடியாது என்று பயந்த இரவுகள் தான் எத்தனை.. இதோ இன்று மீண்டும் தன் குடும்பத்தின் இரு உறவுகள் மீண்டும் அவன் வாழ்வில் வந்துள்ளது என்ற ஆசையுடன் அவரின் கைகளில் தன் கையை வைத்தான்.
தன் பேரனின் கரங்கள் தன் மீது பட்டதும் சூரியனை கண்ட பனித்துளி போல ஒளி வீச துவங்கியது.
தள்ளாத தளர்ந்த வயதிலும் அவரின் விழிகளில் வழிந்த கம்பீரம் இந்த வயதிலும் அவருக்கு அழகாய்த் தான் இருந்தது.. ஒரு ராஜாவிற்கு உரிய கம்பீரம்.
ஏதோ ஒரு பழமொழி சொல்வார்களே.. புலி பதுங்குவது பாய்வதற்காகத் தான் என்று.. அதே தான் மருதநாயகமும் நாகராஜனும் இத்தனை காலம் பதுங்கியிருந்தது பாய்வதற்கு தான்.
ஆதவன் தன் தாத்தா மற்றும் சிறிய தந்தையிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.
" தாத்தா சித்தப்பா உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை.. என் குடும்பம் எல்லாரும் எனக்கு கிடைச்சது போல இருக்கு சித்தப்பா.." கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்காமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அய்யா ஆதவா அழுவாத ராசா.. நீ அழபிறந்தவன் இல்லை ராசா.. ஆழப்பிறந்தவன் ராசா.. உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. அது உன் கையால நடக்கனும்ங்கிறது இந்த சர்வேஷ்வரனோட கட்டளை.. நம்ம குடும்பம் அதுக்கு பழியாகனும்ங்குறது விதி ராசா.. நடந்துருச்சி இனி ஒரு தப்பும் நடக்கக் கூடாது.. காலத்தின் கட்டளை நமக்கு காத்திட்டு இருக்கு.. உனக்கு பக்க பலமா நானும் உன் சித்தப்பனும் எப்பவும் இருப்போம்.. நம்ம மூணு பேருக்கும் அந்த பரமேஸ்வரன் துணையாயிருப்பான்.
எங்களை இங்கே நீ வந்து பாக்குறது யாருக்கும் தெரிய கூடாது ஆதவா.. நாங்க இருக்கோம்ங்கறது யாருக்கும் தெரிய கூடாது.. அது மட்டுமில்லாம நம்ம அம்முவும் பட்டுமாவும் உயிரோட தான் இருக்காங்க ஆதவா.." என்றார் மகிழ்ச்சியுடன்.
"தெரியும் தாத்தா பட்டு மாவ பாத்துட்டேன்.. ஆனா அம்மு எங்க இருக்கான்னு தெரியலை தாத்தா.." என்றான் ஏமாற்றமாய்.
"அவ உன்கிட்ட வந்து சேருற நேரம் இன்னும் வரலை ஆதவா.. வருவா அவளும் வந்தா தான் உங்களோட ஒத்துமை தான் நாம செய்யப் போற செயல்களுக்கு பலம் ஆதவா.. விடியறதுக்குள்ள வீட்டுக்கு போயிடு.. அப்படி நீ போகலைன்னா தேவையில்லாத கேள்விக்கு பதில் சொல்ற மாறி ஆயிடும் கிளம்பு ஆதவா.. அந்த பரமேஸ்வரன் தேவியோட ஆதரவு உனக்கு எப்பவும் கிடைக்கட்டும்.. ஓம் நமச்சிவாய.." என்று சிவனையும் பார்வதி தேவியையும் வணங்கி விட்டு அங்கிருந்த விபூதியை எடுத்து ஆதவனின் நெற்றியில் பூசினார் மருதநாயகம்.
நாகராஜனிடம் திரும்பியவர், "உன் பையனை கொண்டு காட்டுப் பகுதி முடிவுல விட்டுட்டு வா நாகராஜா.. கிளம்பு ராசா.." என்று இருவரையும் வழி அனுப்பி வைத்தார்.
அங்கே அந்த தோட்டத்து பங்களாவில் ஒரு குரல், "எப்படி அந்த ஆதவன் வெளியே வந்தான்.. அவன் வரக்கூடாதுன்னு தானே சொன்னேன்.. இது எப்படி நடந்துச்சி.. அவ வெளியே வந்துட்டான்.. இனி தோண்டி துருவ போறான்.. நம்ம எல்லாம் மாட்ட போறோம்.. அதுக்கு முன்னால அந்த பொக்கீஷம் எங்க இருக்குன்னு தேடனும்.." என்று எதிரே இருந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தான் ஒருவன்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்.
போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி