• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -18

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
ஆதவன் சாப்பிட அமரும் நேரம் வளவன் வெண்மதினை கையோடு அழைத்து வந்திருந்தான்.. ஆதவன் அவளிடம் எதுவும் பேசாமல் சாப்பிட அமர்ந்தான்.. கூடவே வளவனும் அமர்ந்தான்.

இருவருக்கும் கூடவே இருந்து பரிமாறினாள் வெண்மதி.. அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான் ஆதவன்.. அவளின் முகத்தில் ஏதோ குழப்பத்தில் இருந்தது. அதை உணர்ந்தாலும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே ஊர் பெரிய மனிதர்கள் கோவில் தர்மகர்த்தா பூசாரி என அனைவரும் வந்திருந்தனர்.. அவர்களை பார்த்தவன் பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்தான்.. அவன் எழுவதை கண்ட தர்மகர்த்தா,

"அய்யோ தம்பி சாப்பிட்டு வாங்க.. நாங்க காத்திருக்குறோம் தம்பி.." என்றார் பணிவாக.

"பரவாயில்லைங்கய்யா சாப்பிட்டாச்சு.. நீங்க வாங்க பெரியவங்க எல்லாம் வந்துருக்கீங்க.. எல்லாரும் வாங்க.. ஆஆ வளவா வெண்மதிகிட்ட சொல்லி இவங்களுக்கு மோர் எடுத்துட்டு வர சொல்லு.." என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அதற்குள்ளாக வள்ளி கையில் மோர் டம்ளர்கள் அடங்கிய தட்டுடன் வந்தாள். அவளை பார்த்தவன்,

"பரவாயில்லையே வள்ளி சொல்லாதையே செஞ்சிருக்க.. உனக்கு யார் சொன்னாங்க சின்னம்மா வா.." அவளால் கொண்டு வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்துடன். அதே போல் அவள் வாயிலிருந்து,

"இலலைங்கய்யா நம்ம வெண்மதி அம்மா தான் கொடுத்து விட்டாங்க.." என்றாள் சிரிப்புடன்.


"ஏன் இதை உன் கையில கொடுத்து விட்டவங்களுக்கு கொண்டு வந்து கொடுக்க மனசு இல்லையோ.." என்றான் கோபத்துடன்.

அவள் இப்படி ஒதுங்கி நிற்பது அவனுக்கு வலியுடன் கூடிய வேதனையை கொடுத்தது.. ஆனால் இவள் தன்மையாய் சொன்னால் எடுத்துக் கொள்ளும் ரகம் இல்லை என்று அறிந்தவன் இவளுக்கு அதிரடி தான் சரி என்று யோசித்தவன் அவளை,

"வெண்மதி.." என்று கோபமாய் அழைத்தான்.

அவனின் கர்ஜனை குரலுக்கு பயந்தவள் வேகமாய் அவன் முன்னே வந்து நின்றாள் நடுங்கியபடி.. அவளின் நடுக்கம் அவனுக்கு வேதனையை தந்தாலும் அவளுக்கு தைரியம் தேவை.. இதுக்கே பயந்தால் இன்னும் கான வேண்டியது நிறைய உள்ளது.. காலம் மட்டிலும் இந்த பயத்துடனா இவளை வாழ வைப்பதா.. இல்லை இந்த பயம் அனைத்தும் இல்லாத வெண்மதியாய் இவள் வர வேண்டும்.. இவளுக்கு நான் பரிதாபத்தைக் காட்டக் கூடாது..

தன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி அவளிடம் திரும்பியவன்,

"ஏன் உனக்கு இந்த சபை மரியாதை தெரியாத.. வீட்டுக்கு வந்தவங்களுக்கு வீட்டுக்கு சொந்தகாரங்க தானே மரியாதை செய்யனும்.. ஆனா நீ வீட்டு வேலைக்காரிகிட்ட மோர் கொடுத்து விட்டுருக்க.. போ போய் அதை நீ வாங்கி உன் கையால கொடு.." என்று கட்டளையிட்டான்.

அவனின் கட்டளை குரலில் உடல் நடுங்க வள்ளியிடம் இருந்து மோர் தட்டை வாங்கி அனைவருக்கும் கொடுத்தாள்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் அதை எடுத்து குடித்தனர்.. மனம் நிறைய தாங்கள் பேச வந்த விசயத்தை பேச ஆரம்பித்தனர்,

தர்மகர்த்தா தான் முதலில் பேச ஆரம்பித்தார்.

"தம்பி முக்கியமான விஷயமா பேச வந்தோம் தம்பி.."

"ம்ம் சொல்லுங்க ஐயா.."

"தம்பி இத்தனை வருஷமா நம்ம ஊருல திருவிழா போடவே இல்லை.. ஏன் எத்தனையோ தடவை முயற்சி எடுத்தும் நம்ம ஊர் எல்லையம்மன் ஆத்தா அதுக்கு உத்தரவு தரலை.. அதுமட்டுமில்லாம ஊர்ல இத்தனை வருஷமா சரியான மழை தண்ணி இல்லாம குடி தண்ணி கூட அடுத்த ஊருக்கு போற நெலமை வந்துருச்சி.. இதையெல்லாம் மாறுனம் தம்பி.. ஆளுங்க இல்லாம திருவிழா நடக்கக் கூடாதுங்குறது அந்த ஆத்தாவோட உத்தரவு.. இப்போ நீங்க வந்துட்டீங்க.. உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சோம்ங்க.. ஆனா அதுக்குள்ள ராத்திரி அந்த ஆத்தா கனவுல வந்து உங்ககிட்ட பேசச் சொல்லுச்சி தம்பி.. அது தான் உங்ககிட்ட வந்தோம்.." என்றார் சந்தோஷமாக.

"நானும் அது விஷயமா உங்ககிட்ட பேசனும் பாக்கலாம்னு இருந்தேன்.. அது தான் இன்னைக்கு கோவிலுக்கு வரலாம்னு இருந்தோம்.. அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.. சந்தோஷம் ஐயா.. சொல்லுங்க ஐயா இந்த முறை கண்டிப்பா கோவில் திருவிழா நடக்கும்.. அதுக்கு நான் உறுதி தர்றேன் ஐயா.. பூசாரி அதுக்கு ஆரம்ப வேலைகளை பாருங்க.." என்று உறுதி கொடுத்தான்.

அவர்களுக்கு தெரியும் ஆதவனின் உறுதி எப்படிப்பட்டது என்று.. அவனின் வம்சம் அப்படி.. சொன்ன சொல்லை காக்கும் வம்சம் உயிரை கொடுத்தாவது.. அதற்கு ஆதவன் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன.

அவனும் தான் கொடுத்த வாக்கை காப்பதற்காக உயிரையும் கொடுப்பவன்.

" ஐயா அதுக்கு நம்ம ஊர் எல்லையம்மன் கோவில்ல உத்தரவு கேக்கனும் யா.. அதுக்கு நாளைக்கு பூஜையை நடத்தனும் யா.. அதுக்கு உங்க குடும்பத்தோட பெண் வாரிசு வந்து தான் துவங்கி வைக்கனும்.. ஆனா இப்போ ஐயா வீட்ல அப்படி பெண் வாரிசு இல்லைங்களே ஐயா.." என்றார் தயக்கமாக.


"ஏன் பூசாரி அது இந்த வீட்ல பொறந்த பொண்ணா தான் இருக்கனுமா.. இல்லை இந்த வீட்டுக்கு வந்த மருமகளாவும் இருக்கலாமா.." என்றான் வெண்மதியை பார்த்துக் கொண்டே.

அவனின் பார்வை சென்ற இடத்தை பார்த்த அனைவருக்கும் மனம் நிறைந்து போனது.

"அப்படி இல்லைங்க ஐயா மருமக பொண்ணா இருந்தா இன்னும் நல்லது தான்.. ஏனா இந்த வீட்டோட மருமக பொண்ணா இருக்கறது தான் இன்னும் சிறப்பு.." என்றார் சிரித்தபடி.

" அப்போ இந்த வீட்டுக்கு வந்த மருமக இதோ இங்க இருக்காங்க.. அவங்க வந்து துவக்கி வைப்பாங்க.." என்றான் சந்தோஷமாக.

அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர்,

"தம்பி ஆனாலும் அது உங்க சித்தப்பா மருமக தானுங்களே... அவங்களே உங்களுக்கு பங்காளி முறை தானுங்களே.." என்றார் சந்தேகமாக.

"அதுனால என்னங்கய்யா அவங்களும் இந்த வீட்டு ஆளுங்க தானே.. அதுனால தான என்ற தாத்தா உயிரை விடும் போதும் நான் ஜெயிலுக்கு போகும் போது என் சொத்து பாதுக்காக்குற உரிமை இவங்ககிட்ட தானே இருந்துச்சி.. அப்போ இவங்களுக்கு இதுக்கும் உடமைபட்டவங்க தானே ஐயா.." என்றான் மென்மையாய்.

அவன் கூறுவதும் சரிதானே என்று எண்ணத்தில் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

எல்லோரும் சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்ளும் போது கனகத்தின் குரலோ,


"ஏங்க ஐயா அவனுக்கு தான் அறிவில்லை.. உங்களுக்குமா அறிவில்லை.." என்று நாராசமான குரலில் தன் எதிர்ப்பை தெரிவித்தாள்.




அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி