கனகத்தின் அந்த நாரசமான குரல் அனைவருக்கும் முகம் சுளிக்க வைத்தது.. கனகத்தை கேள்விக் குறியாக பார்த்தான் ஆதவன்.. அவன் கண்களில் இருந்த கோபம் கனகத்தை சற்று தடுமாறத்தான் வைத்தது.. ஆனால் வெண்மதியை ஒடுக்கி வைக்க இதை போல வேறு ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதும் வாய்க்காது என்பதை உணர்ந்தவள் அந்த தடுமாற்றத்தை பின்னுக்கு தள்ளினாள்.
ஆனால் அவள் அறியவில்லை அவளை ஒடுக்கி வைக்க நினைத்து அவள் செய்யப் போகும் செயல் வெண்மதியை சுதந்திர பறவையாய் பறக்க வைக்க போகிறது என்பதை.
ஆனால் யாரின் மனநிலை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் தன் மனதில் தோன்றிய அனைத்து அழுக்குகளையும் கொட்ட ஆரம்பித்தாள் கனகம்.
"ஏங்க ஐயா உங்களுக்கே தெரியும் என் புள்ளை செத்து இப்போ தான் ஒரு மாசம் ஆகுது.. இதுல இவ தாலியறுத்த ஒரு முண்டச்சி.. இவ வந்து அந்த சாமிக்கு பூஜை பண்ணா விளங்குமா..? இல்லை தெரியாமத் தான் கேக்குறேன் உங்களுக்கு தெரியும் எம்புள்ளை இறந்து நான் துடிக்குறேன்.. இதுல எம்புள்ளைய கட்டிக்கிட்டு அவன் கட்டின தாலியையும் அறுத்துட்டு இருக்கறவள தூக்கி உசரத்துல வைக்க போறீங்களா.. இவ ஒரு தரித்திரம்.. இது வந்து பூசை பண்ணி இந்த ஊருக்கு மாரி மழை பொய்ய போகுதுங்களா.. அதுவும் தீட்டு இருக்கறவளா இதை செய்ய முடியும்.." என்று வாயிக்கு வந்த அனைத்தையும் வார்த்தைகளை விஷமாய் கொட்டினாள் கனகம்.
அதை கேட்டு பெண்ணவளோ மனதால் துடித்து மடிந்தாள்.. ஆதவனின் மனம் போல முகமும் கைகளும் இறுக்கமடைந்தன.. அந்த இறுக்கமே சொல்லியது அவனின் கோபத்தின் அளவை.
தனது கோபத்தை ஊர் காரியத்தை காட்ட முடியாது என்பதால் தனது கோபத்தை அடக்கியவன் ஊர் பெரியவர்களிடம் திரும்பி,
"ஐயா சின்னம்மா சொன்னதும் உண்மை தான்.." என்றவனின் பேச்சில் அனைவரும் அதிர்ச்சியுடனும் கனகம் சந்தோஷத்துடனும் அவனையே பார்த்திருந்தனர்.. வெண்மதியோ அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.. அந்த பார்வையே சொல்லியது என்னை அவமானப்படுத்தவா முன்னே நிறுத்தினாய் என்ற கேள்வி நிறைந்திருந்தது.
அதை கண்டாலும் காணாதவன் போல கனகத்தின் சந்தோஷமான முகத்தை பார்த்தவன் ஊர் மக்களிடம் திரும்பி,
"ஆமாங்கய்யா எங்க வீட்ல தீட்டு இருக்கு.. குமரேசன் இறந்து இன்னும் முழுசா மூனு மாசம் முடியலை.. அது உண்மை தானே.. அப்போ ஊர் எல்லையம்மன் கோவிலுக்கு இந்த புள்ளை வர முடியாது இல்லை.. ஆனா முனா மாசம் முடிஞ்ச உடனே வரலாம் இல்லை.. இன்னும் குறுக்க ரெண்டு மாசம் தான் இருக்கு.. அதுக்கு பின்னே ஊர் திருவிழாவை பத்தி பேசலாம் இல்லைங்களா.. இதுல யாருக்கும் ஆட்சேபனை இருந்தா இப்பவே சொல்லிடுங்க ஐயா.." என்றான் தன்மையாக.
ஊரின் பெரிய தலைகள், "ஐயா அது வந்து.." என்று இழுக்க.
"என்ன நீங்களும் இந்த விதவை பொண்ணு பண்ணக் கூடாதுன்னு சொல்லப் போறீங்களா.." என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.
"அய்யோ சாமி அப்படில்லாம் இல்லைங்க ஐயா.. இந்த புள்ளை அதோட ஏழு வயசுல இருந்து இங்கே தான் வளருது.. ராசியான முக ராசி கொண்ட பொண்ணுங்க ஐயா.. நாங்க அதை பத்தி எதுவும் சொல்லலை ஐயா.. வேற ஒரு விஷயம் சொல்றதுக்கு தான் தயங்கினோம்.. நீங்க சொன்னது போல இன்னும் ரெண்டு மாசம் கழிச்சே திருவிழா பூஜை ஆரம்பிக்கலாம் ஐயா.." என்றார் ஊர் தலைவர்.
"வேற என்ன சொல்லனும் சொல்லுங்க.."
"ஐயா அது வந்து நம்ம ஊர் கோவில் கொஞ்சம் சீரமைக்கனும் ஐயா.. இது எல்லாம் இந்த ரெண்டு மாசத்துல செஞ்சா அதுக்கு பின்னாடி நம்ம கோவில் திருவிழா வரதுக்கு சரியா இருக்கும் தம்பி அதுக்கு கொஞ்சம் பணம் அதிகமா தேவைப்படுது அது தான் தம்பி உங்ககிட்ட சொல்ல தயங்கினோம்.." தாங்கள் தயங்கியதற்கான காரணத்தை கூறினார்.
"அதுக்கு என்ன நம்ம ஊர் கோவில் தானே நானே முழுசா அதை சீரமைச்சி தரேன்.. வளவா அதுக்கு என்ன தேவைன்னு கொஞ்சம் பாரு.. இவ்வளவு தானே வேற எதுவும் இல்லைல்ல.." அவர்களிடம் வேறு எதுவும் தயக்கம் இருக்குமோ என்று கேட்டான்.
"இல்லைங்க தம்பி அது போதும்.. அப்போ நீங்க உத்தரவு வாங்கிக்கறோம் தம்பி.." என்று அனைவரும் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்.
எல்லோரும் போனதும் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அங்கிருந்த வேலைக்காரர்களை ஒரு பார்வை பார்த்தான்.. அந்த பார்வையிலே அனைவரும் அங்கிருந்து சென்றனர்.. ஏன் வெண்மதியும் கூட அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
எல்லோரும் போகவும் கனகத்தின் முன்னே வந்தவன்,
"அவளுக்கு கேட்க யாருமில்லைன்னு நீங்க எப்படி வேணாலும் பேசலாம்னு நினைச்சீங்களா.. இத்தனை நாளா எனக்கு தோணாத ஒரு விஷயம் இப்போ தான் உரைக்குது.. என் புத்தியில உரைக்குற மாறி சொல்லிருக்கீங்க.. தேங்க்ஸ் சின்னம்மா.. எதை வச்சி அவளை அவமானபடுத்தனும்னு நிறைச்சீங்களோ அவளை அதுல இருந்து வெளியே கொண்டு வந்ததுக்கு அப்புறம் தான் இந்த திருவிழா நடக்கும்.. நான் நடத்தி வைப்பேன்.. அதை நீங்க பாக்க போறீங்க.. " என்று கர்வத்துடன் சொல்லிச் சென்றான்.
அவன் அங்கிருந்து சென்றதும் அவனை வஞ்சத்துடன் பார்த்தவள் மனதில்,
'அடேய் ஆதவா நீ என்ன செஞ்சாலும் அவ காலம்பூரா இந்த வெள்ளைப் புடவையில தான் இருக்க போறா.. இல்லை நான் அவளை இருக்க வைக்கப் போறேன்.. அவ யாருன்னு தெரியாமையே இப்படி துடிக்குறியே அப்போ அவ யாருன்னு தெரிஞ்சா எப்படி துடிப்ப.. அதுக்கு தான்டா அவளுக்கு இந்த தண்டனை..' என்று அரக்கியாக எண்ணினாள்.
ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள்.. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டாள் தெய்வத்திற்கு இங்கே வேலையும் இல்லை.. நமது அரக்க குணம் கூடிவிடும்.. அதற்கு தான் தெய்வம் அப்போ அப்போ நம்மை தட்டி வைத்துள்ளது கர்மா என்ற பெயரில்.
இங்கே தன் அறைக்கு வந்த வெண்மதிக்கு மனம் தாளவில்லை.. என்ன வார்த்தையெல்லாம் பேசிவிட்டார்கள்.. இவனும் இந்த அரக்க குடும்பத்தில் ஒருவன் தானே.. வேறென்ன செய்வான்.
நானா இவனிடம் கேட்டேன் பூஜை நான் செய்கிறேன் என்று.. இவனே என்னை உள்ளே இழுத்து விட்டு இவனே என்னை அவமான படுத்தி விட்டான்... என்னை அசிங்கபடுத்துவதில் இவனுக்கு என்ன ஆனந்தம்.. ஆனால் என்னால் இவன் முகத்தை பார்த்து கோபமாய் பேசக் கூட பேச முடியவில்லையே.. ஏன் அவனின் விழிகளை பார்த்து என்னை நானே மறந்து போகிறேன்.. அவன் சொன்னதை ஏன் அப்படியே செய்கிறேன்.
அவளால் மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியாமல் தலைவலிக்க அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி..