• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -22

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
196
216
43
Salem

நம்மை படைத்தவனுக்கு காக்கவும் தெரியும் தான்.. ஆனால் சில நேரங்களில் நாம் அவமானப்படும் போது நின்று வேடிக்கை பார்ப்பதும் அவன் தானே.. வலிகள் கொடுத்து கொடுத்து மனதை இறுக்கம் கொள்ள வைக்கிறானே ஏன்.. ஆனாலும் நாம் அவனை வணங்குவதை நிறுத்துவதில்லையே.. அவன் மேல் உள்ள நம்பிக்கையா..? இல்லை நம் பக்தியின் மேல் உள்ள நம்பிக்கையா..? ஆனால் எதுவோ ஒன்று இன்னும் மருதநாயகத்தை நம்ப வைக்கிறது.. சொந்த ஊரிலே அகதியாய் வாழும் வாழ்வு நரகம் என்றால் கண் முன்னே தன் குடும்பத்தை இழந்து அந்த குடும்பத்தின் பொக்கீஷத்தை பாதுகாக்க இறந்தது போல வேஷம் கட்டி வாழ்வது அதை விட கொடுமையல்லவா..

அது அந்த குடும்பத்தின் பொக்கீஷமா.. அப்படி என்ன உள்ளது அந்த பொக்கீஷத்தில்.. எதற்காக இந்த தலைமறை வாழ்வு.. எல்லாம் இழந்தும் எந்த நம்பிக்கையில் இந்த ஈசனை துதிக்கின்றோம் என தன் மனதாலும் நினைக்காமல் இன்னும் அந்த சர்வேஷ்வரன் காப்பான் என்ற நம்பிக்கையில் இதோ தன் வீட்டு குலவிளக்குக்காக மீண்டும் அந்த ஈசனிடம் கையேந்தி அமர்ந்து விட்டார் மருதநாயகம்.

தன் தந்தையின் சொல்லுக்கு ஏற்ப அந்த சிவனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

மருதநாயகத்தின் மனதினுள்,

"பரமேஸ்வரா ஏன் என் குழந்தைகளுக்கு இன்னும் சோதனையை கொடுக்குற.. இத்தனை நடந்ததுக்குப்புறமும் நீ விலகி நிக்கிறன்னா இன்னமும் அவங்க கஷ்டபடனும்.. அவங்க கஷ்டபட்டா தான் அவங்க மேல விழற கடமையை காக்குற பக்குவம் வரும் தான்.. ஆனா என் பேத்திக்கு தவறா எதுவும் நடக்காத மாறி பாத்துக்கோ பா பரமேஸ்வரா.." அவனை பற்றி நன்றாக தெரிந்தவர் என்பதாலும் எந்த ஒரு விடயம் நடந்தாலும் அதிலுள்ள நன்மையை மட்டுமே பார்க்கும் குணம் கொண்டவராக இருந்தாலும் கூட வலிகள் அதிகம் தாங்கிய நெஞ்சம் அதனால் கொஞ்சம் பதட்டமும் இருந்தது.

மனதார அந்த பரமேஸ்வரனுக்கு பூஜை பண்ணியவர் தன் மகனிடம் திரும்பி,

"நாகா இந்த பிரசாதம் என் பேத்திக்கு போய் சேரனும் அதுவும் என் பேரனின் கையாலே.." என்று அவரின் கைகளில் விபூதி குங்குமம் தந்தார்.

" அய்யா நீங்க பாக்கனும்னு சொன்னீங்களே.." என்றான் தயக்கத்துடன்.

" எனக்கும் அந்த ஆசை இருக்கு நாகா.. ஆனா நான் வெளியே வரும் நேரம் இன்னும் வரலை ராசா.. நான் வெளியே வரதுக்கான உத்தரவு இன்னும் அந்த பரமேஸ்வரன் இன்னும் கொடுக்கலைய்யா.. நானும் ஏதோ பதட்டத்துல கொஞ்சமும் யோசிக்காம பேசிட்டேன் பா.. போங்க இதை என் பேரன் கையில கிடைக்கிற மாறி பண்ணு.." பெருமூச்சு விட்டபடியே பேசினார்.

தன் தந்தையிடம் உத்தரவு வாங்கி கொண்டு அவரின் ஆசைப்படி அந்த பிரசாதம் ஆதவன் கைகளில் கிடைக்கும் படி செய்தார்.

இங்கே மருத்துவரின் முன்னே ஆதவனும் வளவனும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.

"மிஸ்டர் ஆதவன் நான் நினைச்சது சரிதான்.. அவங்களுக்கு எப்பவோ பட்ட அடி அந்த ரத்தகட்டு கரையாம அப்படியே உறைஞ்ச இருக்கு.. அது ஆப்ரேட் பண்ணி எடுக்கனும்.. ஆனா அவங்களோட உடம்பு அதை தாங்க கூடிய நிலையில இல்லை.. அவங்க ஏதோ ஸ்ட்ரெஸ்லையே இருக்காங்க.. மே பி மறந்து போன நினைவுகளா கூட இருக்கலாம்.. அதை அவங்களே நினைவு படுத்த முயற்சி பண்ணும் போது அளவுக்கு அதிகமான தலைவலியை உண்டு பண்ணுது.. சோ அவங்களோட மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஆ இருக்கனும்.. இப்போதைக்கு நான் டேப்லெட் தர்றேன்.. அதை கண்டினியூ பண்ணுங்க.. ஒரு ஒன் மன்த் கழிச்சு வாங்க.. அதுக்கப்புறம் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு நாம ஆப்ரேசனை பத்தி பேசலாம்.." என்றார் தீர்வாக.

அவர் சொல்வதை கேட்டவன்,

"டாக்டர் இதுக்கு ஆபரேசன் இல்லாம மாத்து வலி எதுவும் இல்லையா.." இன்னும் தீராத சந்தேகத்துடன்.


"அதுக்கு வாய்ப்பே இல்லை மிஸ்டர் ஆதவன்.. இப்போ ஆனா காயம் இல்லை.. எப்படியும் ஒரு பத்து வருஷத்துக்கு மேல இருக்கலாம்.. சோ அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி சார்.."

இருவரும் மருத்துவரிடம் விடைபெற்று வெண்மதி இருந்த அறைக்குள் வந்தனர்.

அங்கே வாடிய பூவாய் தொய்ந்து படுத்திருந்தாள் வெண்மதி.. அவளருகில் வந்தவன் அவளின் தலையை மென்மையாய் வருடி கொடுத்தான்.

"ஏன் பட்டூமா இன்னும் உனக்கு வலியே கிடைக்குது.. இல்லை பட்டுமா உன்னை நான் கண்டிப்பா காப்பாத்துவேன் டா.. உன்னை யாருக்காகவும் இழக்க மாட்டேன் டா.." என்று மனதோரம் அவளிடம் பேசியவன் அவளருகில் அமர்ந்து விட்டான்.

கொஞ்ச நேரத்தில் மெல்லமாய் தன் குட்டி இமைகளை சிமிட்டி கண்விழித்தாள் பெண்ணவள். அவள் அங்கே கண்டது அவளின் தலைமாட்டில் அமர்ந்திருந்த ஆதவனைத் தான்.

அவனை பார்த்தவள் என்ன நினைத்தாளோ, "ஆது.." என்று வார்த்தைக்கும் வலிக்குமோ என்று அழைத்தாள்.

அவளின் அந்த அழைப்பு அந்த காற்றிற்கோ கேட்டிருக்குமோ என்னவோ அவனின் காதுகளில் அது தெளிவாய் விழுந்தது.

கண்கள் மின்ன சந்தோஷத்துடன் நிமிர்ந்தவன், "பட்டுமா என்னை தெரியுதா டா.." என்று பதட்டத்துடன் அவளை அழைத்தான்.

தன்னை அவள் அடையாளம் கண்டு கொண்டாளே என்ற சந்தோஷம் அவன் முகத்தில் வழிந்தது.

அவனின் வேகமான வார்த்தை சத்தத்தில் நினைவு வந்தவள்,

"எனக்கு என்னாச்சி நான் எப்படி இங்கே வந்தேன்.." என்றாள் ஆதவனை பார்த்து.

அவள் கேட்ட விதத்திலே புரிந்தது அவள் சுயநினைவில் கேட்கவில்லை என்று.. இருந்தாலும் மனதோரம் ஒரு சந்தோஷம் அவளின் ஆழ் மனதில் தங்களின் நினைவு உள்ளது என்று.

" ஒன்னுமில்லை அண்ணி திடிரென மயங்கிட்டீங்க.. நானும் அண்ணனும் தான் உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தோம் இப்போ வீட்டுக் போயிடலாம் அண்ணி.." ஆதவனுக்கு பதிலாய் வளவன் அவளிடம் பதில் கூறினான்.

அப்பொழுது தான் ஆதவனை கண்டாள் எதோ அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தான்.

" அண்ணே போலாம் ணே.. " என்று ஆதவனை உலுப்பினான்.

தம்பியின் உலுக்கலில் சுயநினைவு வந்தவன், "வளவா போய் வண்டிய எடு.. நான் கூட்டிட்டு வர்றேன்.." என்று அவனை முன்னே அனுப்பிவிட்டு வெண்மதியின் கையில் டிரிப்ஸ் போட்டிருந்த ஊசியை எடுத்து டிரஸ்ஸிங் செய்து தோளில் கை போட்டு அழைத்து வந்தான்.

அவன் அவளின் தோளின் மீது கை வைத்ததும் பெண்ணிற்கு உண்டான இயல்பான கூச்சம் அவளை நெளிய வைத்தது.

ஆணவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை அணைத்தபடியே வெளியே கூட்டி வந்தான்.

அவர்கள் மருத்துவமனையின் வாயிலில் வண்டிக்காக காத்திருக்கும் நேரம்,

"அய்யா ஆதவா.." என்ற குரலில் இருவரும் திரும்பினர்.


தனக்கு பழக்கப்பட்ட குரல் தன் அருகில் கேட்கவும் யாரென திரும்பி பார்த்தான் ஆதவன்.. அங்கே காவியுடை தரித்து நரைத்த தாடியுடன் ஜடா முடியுடனும் ஒர் சித்தர் நிற்க அவனை அறியாமல் கையெடுத்து வணங்கினான்.

பெண்ணவளும் மரியாதை நிமித்தமாக வணங்கினாள்.

"சிரப்புடன் வாழ்க மகளே.." என்று ஆசிர்வதித்தவர் தன் கைகளில் உள்ள விபூதியை வழங்கினார்.

அதை சந்தோஷமாய் பெற்றுக் கொண்டவள் தன் கையை எடுக்கும் நேரம் அவளின் கைகளில் குங்குமத்தை கொடுத்தார்.

தன் கையில் விழுந்த குங்குமத்தை அதிர்ச்சியுடன் பார்த்தவள் நிமிந்து அந்த சித்தரை கண்டாள் பதட்டத்துடன்.

அவரோ மென்புன்னகையுடன், "எதற்கு மகளே இந்த பதட்டம்.. உன் நாடகம் ஊர் அறியாது.. ஆனால் உன்னை படைத்தவன் அறியாமலா போவான்.. தீர்க்க சுமங்கலி பவ.." என்றார் அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாது ஆதவனை திரும்பி பார்த்து,

"இனி உன் வாழ்வில் நடந்த அத்தனை குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை மகனே.. தீர்க்காயுஸ்மான் பவ.." என்று இருவரையும் மனதார ஆசிர்வதித்து விட்டு சென்றார்.

ஆடவனுக்கோ அது யார் என்று நன்றாகவே தெரியும்.. ஆனால் பெண்ணவளோ அவர் கொடுத்து சென்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை..

அவளின் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்று அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.

கதையை பத்தின உங்க கருத்துக்களை பகிர்வும் பட்டூஸ்

போன பதிவுக்கு கமெண்ட் செஞ்ச பட்டூஸ்க்கு நன்றி