• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -27

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
196
216
43
Salem
தனது தாத்தாவையும் சித்தப்பாவையும் அந்த நேரத்தில் அங்கே காண வந்த ஆதவன் குகையின் உள்ளே கேட்ட விடயத்தில் அதிர்ச்சியாகி அப்படியே நின்றுவிட்டான்.

உள்ளே இரு குரல்களின் பேச்சு சத்தம் கேட்டது.. அதில் ஒன்று தாத்தாவுடையது.. ஆனால் மற்றொன்று ஒரு புதியவருடையது.. ஆனால் அந்த குரலில் இருந்த மென்மை அவனை எங்கோ இழுத்தது.. ஏதோ புவி ஈர்ப்பு விசையின் ஈர்ப்பியல் இங்கே நடந்ததோ.

அந்த குரலின் மென்மையில் கரைந்து நின்றவனை அடுத்து அவர்கள் பேசியதை கண்டு அதிர்ச்சியில் சிலையாய் நின்றுவிட்டான் ஆதவன்.

அவன் எவ்வளவு நேரம் நின்றானோ அவனின் சிறிய தந்தையின்,

"ராசா ஆதவா ஏங்கண்ணு இங்கனையே நின்னுட்ட.. வா ராசா உள்ளே போகலாம்.." என்ற அவரின் குரலிலும் தொடுதலிலும் நினைவிற்கு வந்தவன்,

"சித்தப்பா உள்ளே.." என்று கைகாட்டி ஏதோ சொல்ல முயன்றவனை தடுத்து நிறுத்தியவர்,

"வா ராசா இனி உனக்கு தெரியாத வேண்டிய அத்தனையும் தெரிஞ்சி தான் ஆகனும்.. வாய்யா.." என்று அவனின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.

தனியே சென்ற தன் மகன் தன் பேரனுடன் வந்ததை நினைத்து கண்களில் ஒளியுடன் தன் பேரனை நெருங்கிய மருதநாயகம்,

"எஞ்சாமி வந்துட்டியா ராசா.. வாயா தங்கம்.." என்று தன் பேரனை கை நீட்டி நெட்டி முறித்தவர் தன் முன்னே இருந்தவரிடம் திரும்பி,

"குருஜி இவன் தான் என் பேரன்.." மருதநாயகம் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே

"ஆதவன்.." என்று அவர் தன் மென்மையான குரலால் முடித்த வைத்தார்.

முகமெல்லாம் புன்னகை சுமந்த முகத்துடன் அவர் கூறியதை கேட்ட மருதநாயகம், "ஆமா குருஜி உங்களுக்கு தெரியாம போகுமா.. முக்காலத்தையும் உணரக் கூடியவர் தானே நீங்க.." என்றார் பெருமை பொங்க.


ஆதவனோ அந்த குருஜி என்பவரை விழியகலாது பார்த்திருந்தான்.. என்ன இது அந்த விழிகள் எங்கேயோ பார்த்ததை போல் இருக்கிறதே.. அதுவும் இல்லாமல் இதற்கு முன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே.. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லையே.. ஆனால் இவரை பார்த்ததும் கையெடுத்து வணங்க தோன்றுகிறதே.. ஏன்..? என பல கேள்விகள் குழப்பத்தில் அவரை பார்த்தபடியே இருந்தான்.

அவனின் பார்வையில் என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்தவர் சிரித்தபடியே,

"என்ன ஆதவனே என்னை இங்கே கண்டதும் தங்களது வதனத்தில் குழப்பம் மண்டி கிடக்கிறதே.. ஆனால் அதன் காரணம் தங்களுக்கு இன்னும் விளங்கவில்லையோ.." என்றார் மென்மையாக.

அவரின் வினாக்களில் அதிர்ந்தபடியே தலையை இரு பக்கமும் ஆட்டினான்.

அதற்கும் புன்னைகைய சிந்தியவர்,

" இன்று வைத்திய சாலையில் தாங்கள் கண்டது என்னைத் தான்.. தங்களின் சிறிய தந்தையை அல்ல.. அதுமட்டுமல்லாமல் தாங்கள் என்னை முன்னவே கண்டுறிக்கீறிர்கள்.. ஆனால் அவை யாவும் தக்க சமயத்தில் தங்களுக்கு நினைவு வரும் மகனே.. இப்பொழுது தாங்கள் வேறு ஒரு பிரச்சினையில் சிந்தனையில் உள்ளீர்கள்.. அதற்கு தீர்வு தங்களின் பாட்டனார் என்று நினைத்து வந்தீர்கள்.. சரிதானே ஆதவா.." என்றார் சிரித்தபடி.

தான் சொல்ல வந்ததை முன்னே சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஆதவன்.

அவனை பார்த்து சிரித்தவர், " நாயகம் நீயே உன் பேரனுக்கு சொல்லிவிடு நான் யாரென்று.. இனியும் அவரின் குழப்பம் தொடர தேவையில்லை.." என்றார் சிரித்தபடி.

ஆதவனோ தன் தாத்தாவை திரும்பி பார்த்தான் அவர் யாரென்ற பார்வையுடன்.

மருதநாயகமும், " ஆதவா இவரோட பேரு சச்சிதானந்தம்.. இவரு நம்ம குடும்பத்தோட வழி வழியா வர்ற குருஜி.. இன்னைக்கும் நானும் உன் சித்தப்பாவும் உயிரோட இருக்க காரணம் இவரு தான்.. அதுமட்டுமில்லாம இவருக்கு தெய்வ சக்தி அதிகம் பா.. அந்த பரமேஸ்வரனோட பூரண அருள் பெற்றவர்.. அவரோட விசேஷ சக்திகள் தான் நாங்க இன்னும் உயிரோட இருக்க காரணம்.. உன்னையும் இத்தனை வருஷமா காப்பாத்தினதும் இவரு தான்.. நம்ம பட்டு மாவையும் காப்பித்தினது இவரு தான்.. ஆனா நம்ம பட்டுமாவுக்கு நடந்த அந்த ஒரு விடயம் மட்டும் தான் தப்பாயிடுச்சி.. என்ன ராசா பன்றது.. விதின்னு ஒன்னு இருக்கு இல்லை... நம்மளை படைச்சவனுக்கே சில சமயம் தவறா நடக்குதே.. நாம சாதாரண மனுசங்க என்ன ராசா பண்ண முடியும்.." என்று கலங்கிய குரலில் சொன்னார்.

"நாயகம் இனி ஆதவன் கிட்ட எதையும் மறைக்க தேவையில்லை.. அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிக்கிற நேரம் வந்துடுச்சி.. எல்லாத்தையும் சொல்லிடலாம்.." என்றார் தீர்வாக.

" சரிங்க சாமி எல்லாத்தையும் நீங்களே சொல்லிடுங்க.."

"ஆதவா வாங்க வந்து இங்கே அமருங்கள்.. தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.. உங்கள் குழப்பத்திற்கு இனி விடை கிடைக்கலாம்.." என்று சற்று அமைதியானவர் ஆதவனிடம் திரும்பி,

"இப்பொழுது நீங்களும் உங்கள் குடும்பமும் அனுபவிக்கும் நிலைக்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.. அப்படி தெரிந்ததை கூறத் தான் முடியுமா.." என்றார் அதையே அறிந்து கொள்ளும் ஆவலுடன்.

" அது எனக்கு முழுசா எதுவும் தெரியலை குருஜி.. ஆனா எங்க குடும்பத்துக்கு ஆகாதவங்க யாரோ தான் இப்போ நாங்க இப்படி நிக்குற காரணம்.. அதுமட்டுமில்லாம தாத்தா சொன்ன விடயம் எங்க குடும்பத்துல ஏதோ பொக்கிஷம் இருக்கறதாகவும்.. அது கொள்ளையடிக்க தான் எங்க குடும்பத்தை சிதறடிச்சதா சொன்னாரு குருஜி.." என்றான் தனக்கு தெரிந்த வரையில்.

"அதுமட்டுமில்ல பா.. உங்க குடும்பம் ஜமீன் பரம்பரையில வந்தவங்க.." ஆதவனிடம் அவனின் குடும்பத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் அதே நேரம் இங்கே வெண்மதியின் அருகில் ஒரு கருப்பு உருவம் நெருங்கியது.

தன்னறையில் மாத்திரையின் உதவியால் தன்னை மறந்து உறங்கி என்ன கொண்டிருந்தவளின் அருகே மெதுவாய் வந்து கொண்டிருந்தது அந்த கருப்பு உருவம்.

அதே கட்டிலின் அருகில் இருந்த அருவமும் நடக்கப் போவதை தடுக்க முடியாமல் வலியுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தது.


உயிர் ராகம் தானா..
உள் சோகம் தானா..
பழி பாவம் தானா..
எங்கே... எங்கே..
உயிர் தேகத்தோடு...
மெய் கோபத்தோடு...
பெரும் ஏக்கத்தோடு..
எங்கே.. எங்கே...


தீயில் எறிந்தால் என்ன..
நீரில் கரைந்தால் என்ன..
ஜீவன் மறைந்தால் என்ன..
காதல் மாறுமோ...
உயிர் ராகம் தானா..
உள் சோகம் தானா..
எங்கே.. எங்கே..



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்
கதை பிடிச்சிருந்தா லைக் கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்