• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி -28

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
196
216
43
Salem
மருத்துவமனையில் போட்டிருந்த ஊசியாலும் மாத்திரையின் வீரியத்திலும் தன்னை மறந்து தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை மறந்து கட்டிலில் பதுமையாய் உறங்கி போயிருந்தாள் பெண்ணவள்.

அவளின் கட்டிலின் அருகே அருவமாய் நின்று அவளை கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு அருவம்.. மென்மையாய் உறங்கி கொண்டிருந்தவளை வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்த உருவம்,

"மதியாளே எத்தனையோ தங்களை பாதுகாத்தும் இன்று தங்களை என்னால் பாதுகாக்க முடியவில்லையே.. நடக்கப் போகும் இந்த விபரீதத்தை தடுக்கும் சக்தி கொண்டவர் தற்போது இங்கில்லையே.. நான் என்ன செய்வேன் தேவி.. சின்னவரை அழைத்து வரலாம் என்றாளோ நான் அவரின் விழிகளுக்கு புலப்படமாட்டேனே.. என் சத்தியத்தை காக்க முடியாத சூழ்நிலையை எனக்களித்து வீட்டிர்களே இது நியாயமா தேவி.. " என்று புலம்பியது அந்த அருவம்

ஆனால் பெண்ணவளோ இதையெல்லாம் உணராமல் சுகமான ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.


அதே நேரத்தில் அந்த அறைக்குள் ஒரு கருப்பு உடையணிந்த உருவம் ஒன்று தன் முகத்தையும் கருப்பு துணியால் மறைத்து படி அங்கே வந்தது.

அதை தடுக்க முடியாத நிலையில் முகத்தில் கவலையை கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தது அந்த அருவம்.

மெதுவாய் அவளருகில் வந்த அந்த கருப்பு உருவம் அவளை சில நிமிடங்கள் மெய் மறந்து பார்த்திருந்தது.. அதன் கண்களோ சிவந்து வஞ்சக சிரிப்பில் மிதந்திருந்தது..

" பார்த்தாயா வெண்மதியாளோ உன்னை கவர்ந்து செல்ல வந்துவிட்டேன் கள்வன் நான்.. ஆனால் உன்னை காப்பாற்ற வேண்டியவனோ பிரச்சனைக்கு தீர்வு தேடி சென்றுள்ளான்.. ஆனால் அவன் அனைத்தும் அறிந்து வரும் நேரம் நீ இங்கே இருக்கு போவதில்லை.. என் இடத்தில் அகதியாய் அல்லவா இருக்கு போகிறாய்.. செல்லலாமா தேவி.." என்று அவளை தூக்குவதற்கு போகும் நேரம்,

"வேண்டாம் தேவியை விட்டு விடுங்கள்.. அவர்களை தாங்கள் தீண்டுவது கூட பாவம்.. அது தங்களின் மரணத்திற்கு எழுதும் ஓலையாகிவிடும் வேந்தே.." என்று எச்சரித்தது.

" நீயா எத்தனை நாள் இவளுக்கு காவல் இருப்பாய்.. என்னை தடுக்கும் அளவுக்கு உனக்கு துணிச்சல் வந்துவிட்டதா பொற்கொடி.. இவளை நான் கவர்ந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதை மறக்காதே.." என்றான் கோபத்துடன்.

" வேந்தரே தாங்கள் மறந்து விட்டீர்கள் போல.. எம் தேவியினை காக்கும் வீரர் உண்டு என்பதை.." அவனை துணிவுடன் எதிர் கொண்டது அருவம்.

" இருக்கலாம் ஆனால் தற்சமயம் அவளருகில் யாருமில்லை.. என் கண்களுக்கு தெரிந்த நீ வேறு யாரின் கண்களுக்கும் புலப்படமாட்டாய் என்பதை அறியாதவானா நான்.. என்னை அறிந்து கொண்டது போல் வேறு யாரும் அறியப் போவதில்லை.. இப்போது இவளை நான் கவர்ந்து செல்லப் போவதும் அவர்களுக்கு தெரிய போவதுமில்லை.." என்று கர்வத்துடன் சொன்னான்.

"வேந்தே இது அநியாயம் அடுத்தவரின் உடமை பொருளை களவு கொள்வது.. அது சக்ரவர்த்திகளுக்கு பெருமை அல்ல என்பதை அறியாது போகீறிர்களே.. ஒரு வீரன் நேருக்கு நேராக மோதி வெற்றி பெறுவது தான் அவனின் பெருமையாக கொள்ளப்படும்.. ஆனால் தாங்களோ ஒரு சக்ரவர்த்தியாகவும் அல்லாமல் வீரனாகவும் அல்லாமல் கோழை போல இப்படி யாருமில்லாத நேரம் பார்த்து கவர்ந்து செல்வது உங்களின் கோழைத் தனத்தின் உச்சத்தை அல்லவா காட்டுகிறது.." என்றாள் பொற்கொடி என்று அவனால் அழைக்கப்பட்ட அருவம்.

அந்த அருவத்தின் பேச்சில் கோபமடைந்த கருப்பு உருவம் தன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை தன் நெற்றிக்கு இடையில் கொண்டு வந்து ஏதோ முனுமுனுத்தவன் அதை அந்த அருவத்தின் மேலே தூக்கி போடவும் அது அந்த அருவத்தின் மேலே பட்டு எறிந்தது.

அதன் எரிச்சல் தாங்காமல் அது கத்தி துடி துடிக்க இவனோ அதை பார்த்து கர்வமாய் சிரித்து ,

"என்னை எதிர்க்கும் அத்துனை பேருக்கும் இது தான் தண்டனை.. உன் விசுவாசத்திற்கு தண்டனை இது தான் பொற்கொடி.. இதோ இவளுக்கும் அது உண்டு.. ஆனால் இவள் அனுபவிக்கும் தண்டனையை காண அவன் வர வேண்டும்.. இப்பொழுது இவளை நான் கவர்ந்து செல்கிறேன்.." என்று எள்ளலுடன் அவளைப் பார்த்து சொன்னுவன் படுக்கையில் இருந்தவளை போர்வையால் கட்டி தூக்கி கொண்டான்.

அவனை தடுக்க முடியாமல் எறியும் நெருப்பில் இருந்து வெளி வர முடியாமலும் தவித்து துடித்தது அந்த அருவம்.

இங்கே சச்சிதானந்தரோ ஆதவனை பார்த்து ,

"உங்களின் குடும்பம் ஜமீன் வம்சா வழியில் வந்தது.. உன் குடும்பத்தில் உள்ள உன் பாட்டன்மார்கள் அப்பொழுது மதுரையை ஆண்ட கூண்பாண்டியன் அரசவையில் முக்கிய பொருப்பிலிருந்தவர்கள்.. அவர்களின் விசுவாசம் அடுத்தடுத்த வந்த மன்னர்களுக்கும் முக்கிய பணிகளை செய்து கொடுத்து மன்னருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள்.. உன் முப்பாட்டனின் ஆட்சியில் தான் ஜமீன்கள் வந்தார்கள்.. அன்று உங்களின் வம்சம் இடையக்கோட்டை நாயக்கர் வழி வந்தது தான் உங்க ஜமீன்.

அப்போ தான் உங்களோட முப்பானோட விசுவாசத்துல ஈர்க்கப்பட்ட அப்போதைய பாண்டிய மன்னன் தன்னோட பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அதுக்கு சீர்வரிசையா அப்போதைய இந்த சமஸ்தானத்தையும் சேர்த்து கொடுத்தாரு மன்னர்.

அன்னைக்கு தான் உன் பாட்டனார்க்கு எதிரிங்க அதிகமானாங்க.." என்று அந்த நிகழ்வுக்கு சென்றார்.


அந்நாளைய இடையக் கோட்டை சமஸ்தானமும் மேலூர் என்பது அந்த காலத்தில் நடுவி நாடு மேலநாடு என்றும் அழைக்கப்பட்டது.. இவை இரண்டு சமஸ்தானமும் அப்போதைய மதுரை நாயக்கர் வம்சத்தில் வந்த ஜமீனான பிலவேந்திர ஜமீனின் ஆட்சியின் கீழ் வந்தது.

மக்களின் மனம் குளிர அந்த ஜமீனை ஆட்சி செய்து வந்தான்.. பாண்டிய வம்சா வழியில் வந்த அவரின் மனைவி ஜானகி தேவி கணவனுக்கு ஏற்ற மனைவியாய் கணவனுக்கு அத்தனையிலும் உறுதுணையாய் உற்ற துணையாய் இருந்தார்.

பிலவேந்திரனுக்கு தாய் தந்தை இல்லை.. ஒரு தமையனும் தங்கையும் உண்டு.. அவர்கள் இருவரையும் வளர்க்கும் பொறுப்பை ஜானகி தான் எடுத்துக் கொண்டார்.

அண்ணி என்றாலே இன்னொரு அன்னை தானே.. அது போலவே தன் கொளுந்தனையும் நாத்தனாரையும் மகன் மகளாக இருந்து வளர்த்தார் ஜானகி.

தன் மனைவி குடும்பத்தை பார்க்க பிலவேந்திரனோ மக்களின் சேவையை மகிழ்ச்சியாய் செய்தான்.

மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்தவர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தத்தை கூட்ட ஜானகி தேவி கரு தரித்தார்.

அதை கேட்ட சமஸ்தானமே தங்களுக்கு அடுத்த ராஜா வந்ததை சந்தோஷமாக ஊர் திருவிழா போல் கொண்டாடியது.

இப்படி மகிழ்ச்சி மட்டுமே கொண்டிருந்த சமஸ்தானத்தில் அண்டை நாட்டு ராஜா கண் விழுந்து அதில் சமஸ்தானமே சரிந்து போனது.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்..

கதை என்னோட கற்பனை பட்டூஸ்.. ஆனா இந்த ஜமீன் இருந்தது உண்மை தான் பா.. உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ்