• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 51

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
இந்த வீட்டிற்கு வந்த பிறகு கனகம் அவளை பூஜையறைக்குள் பெரிதாய் விட்டதில்லை.. அவளின் அறையிலே ஒரு கப்போர்டில் சுவாமி படத்தை வைத்து கும்பிடுவாள்.. அவளும் எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள் இவ்வளவு பெரிய வீட்டில் பூஜை ரூம் இல்லையா என்ன சந்தேகம் இருந்தாலும் அதை வாய் திறந்து கேட்கும் அளவுக்கு அவளுக்கு சுதந்திரம் வளங்கப்படவில்லை.

அவள் இங்கு வந்ததிலிருந்தே ஏதோ வேலைக்காரியைப் போல் தான் நடத்தப்பட்டாள்.. ஆனால் பார்வைக்கு மருமகளாய் இருக்க வைக்கப்பட்டாள்.

அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து முதல் முறையாய் அந்த பூஜையறைக்குள் உரிமையாய் நுழைந்தாள்.

அங்கே எல்லாம் சுத்தமாய் துடைத்து வைக்கப்பட்டிருந்தது.. ஒரு கூடையில் பூக்கள் கட்டப்பட்டு சரமாய் வைக்கப்பட்டிருந்தது..

அந்த பூக்களை எடுத்து அங்கிருந்த சுவாமி படங்களுக்கு சாற்றியவள் அங்கிருந்த ஆதவனின் முன்னோர்கள் இருந்த படத்திற்கும் மாலையிட்டாள்.. அந்த படங்கள் அனைத்தும் அவள் மனதில் எதையோ தட்டி எழுப்பியது.. தலையை சிலுப்பி அதை துரத்தியவள் அங்கிருந்த காமாட்சி விளக்கிலும் குத்து விளக்கிலும் திரியிட்டு தீபமேற்றினாள்.

அந்த தீபத்தின் ஒளி அந்த அறை முழுக்க வீசி ஏதோ கோவிலுக்குள் வந்த உணர்வை தந்தது..

கற்பூரம் ஏற்றி மனம் நிறைந்து கடவுளை வணங்கியவளின் முன்னே சில காட்சிகள் நிழற்படமாய் தோன்ற அங்கிருந்த தீபத்தின் ஒளி அந்த படங்களில் பட்டு அவளின் நினைவில் ஏதோ மாற்றம் ஏற்பட உடலில் உள்ள ரத்தநாளங்களில் வியர்வைப் பூக்கள் பூக்க தலையில் ஏதோ தாக்க மயங்கி சரிந்தாள் பெண்ணவள்.

அவள் பூஜையறைக்குள் நுழைந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களுக்கு அவளின் உடலிலும் முகத்திலும் ஏற்பட்ட மாற்றம் தெரிய சரியாக அவள் கீழே விழும் சமயம் வேகமாய் வந்து தாங்கி பிடித்தான்.

அவள் மயங்கி விழும் போது அவளின் வாய் எதையோ முனுமுனுத்தது.. அதை என்னவென்று உனுப்பாய் கேட்டவனின் காதிற்குள் தேனாய் வந்து விழுந்தது அவளின் 'ஆது' என்ற அழைப்பு.

அவள் என்ன தான் பழைய நினைவுகளை மறந்திருந்தாலும் தன்னை இன்னும் மறக்கவில்லை.. அதுவே ஆடவனுக்குள் பனிச்சாரலை பொழிந்தது.

அவளை அப்படியே தன் கைகளில் அள்ளி எடுத்தவன் அவளின் அறை நோக்கி சென்றான்.

அந்த காலை வேலையிலே பெரிதாய் யாரும் எழவில்லை.. அதுவே அவனுக்கு பெருத்த நிம்மதியாய் இருந்தது.


அவளை படுக்கையில் படுக்க வைத்தவன் அவளின் முகத்தில் குளிர் நீரை தெளித்தான்.

அதில் புருவம் சுருக்கி கண்ணை கசக்கி எழுந்தவளின் முன்னே அவளின் ராட்சசன் நின்றிருந்தான் மென்புன்னகையுடன்.

அவனை பார்த்தவள் எதுவும் பேசாமல் தலைவலி அவளை பயங்கரமாய் தாக்க தன் கைகளால் தலையை தாங்கிப் பிடித்தாள்.

அவளுக்கு எது எதுவோ நினைவு வந்த வண்ணமே இருந்தது.

அப்பொழுது தான் உணர்ந்தாள் பூஜையறையில் இருந்தவள் படுக்கையில் இருந்ததை.. தன்னை தூக்கி வந்தது ராட்சசன் தான் என்பதை உணர்ந்தே இருந்தாள்.

தான் ஏன் பூஜையறையில் மயங்கி விழுந்தோம் என்றவளின் சிந்தனைக்கு பதிலாய் அங்கிருந்த சில புகைப்படங்கள் கிடைத்தது.

இந்த போட்டோலாம் முன்னவே பார்த்தது போலவே இருக்கு.. ஏன் எனக்கும் அந்த போட்டோஸ்க்கும் ரொம்ப நெருக்கம் இருக்கற மாறி இருக்குதே.. என்று தலையை தட்டி யோசித்தவளின் சிந்தனைக்கு வேறெதுவும் புலப்படவில்லை.

அவளின் சிந்தனைக்கு குறுக்கே வராமல் அங்கிருந்து வெளியே சென்றவன் சற்று நேரத்தில் கையில் டம்ளருடன் வந்து அவளின் முன்னே நின்றான்.

"இதோ பாரு வெண்மதி வேற எதையும் யோசிக்காத முதல்ல இதை குடி.. கொஞ்சம் நார்மலா ஆகுவ.. நான் வள்ளி ய சமைக்க சொல்லிட்டேன்.. அவ பாத்துப்பா நீ ரெஸ்ட் எடு.." என்று விட்டு எதையோ சாதித்த திருப்தியுடன் அங்கிருந்து சென்றான்.


போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பெண் மனம் ஏனோ வலித்தது.. அதன் காரணம் தான் அவளுக்கு தெரியவில்லை.

இங்கே காட்டின் மலைப்பகுதிக்கு வந்த ஆதவன் பின் திரும்பி யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் கண் மூடி எதையோ வாய் மொழியில் கூறவும் அவனுக்கு அந்த காட்டின் குகைக்கு செல்லும் வழி திறந்தது.


வேக வேகமாய் குகைக்கு சென்றவன் அங்கே பூஜையில் இருந்த மருதநாயகத்தின் அருகில் அமர்ந்து அந்த பித்தனை மனதார வண்ஙகினான்.

தன் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு கண் திறந்த மருதநாயகத்திற்கு தன் பேரனை கண்டதும் தாடி படர்ந்த முகத்தில் புன்னகை அரும்பியது.

" வா ராசா ஆதவா எப்படி ராசா இருக்க.. என்ற பேத்தி எப்படி இருக்கா யா.." என்றார் சிரிப்புடன்.

" ம்ம் நல்லாருக்கா ஐயா.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஐயா.." என்று காலையில் வீட்டில் நடந்ததை அப்படியே மருதநாயகத்திடம் ஒப்பித்தான்.

அதை கேட்ட மருதநாயகம் மென் சிரிப்புடன், "எல்லாமே நல்லது தான் யா.. கூடிய சீக்கிரமே நம்ம குடும்பம் இணையப் போகுது ராசா.. வர்ற சித்ரா பௌர்னமிக்கு ஒரு சிறப்பு பூஜை இருக்கு.. அன்னைக்கு தான் அந்த துருவன் வெளியே வர்ற நாள்.. அதுவரைக்கும் பாப்பாவ பத்திரமா பாத்துக்கோ ராசா.." என்று கூறியவர் மீண்டும் எதையோ யோசித்தபடி,

"ஆதவா நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க இன்னும் யாரோ எங்கேயோ இருக்காங்க ராசா.. நேத்திக்கு பூஜையில எனக்கு நிழலாத்தான் தெரிஞ்சது..ஆனா யாரோ இருக்காங்க யா.." என்று உறுதியாய் கூறியவருக்கும் பிரிவின் வலி இருந்தது.

"ஐயா என்ன சொல்றீக.. இன்னமும் நம்ம ஆளுங்க இருக்காங்களா.. நம்பவே முடியலை ஐயா.. கூடிய சீக்கிரம் அவங்களை தேட ஏற்பாடு பன்றேங்க ஐயா.." என்று சந்தோஷத்துடன் கூறினான்.

"இல்லை ஆதவா வேணாம் அவங்களா வரக்கூடிய நாள்ல வருவாங்க.. அதுவரைக்கும் நாம காத்திருக்கறது தான் சரி ராசா.." என்றார் இறுதியாய்.

" ம்ம் சரிங்க ஐயா.. அப்போ நான் கிளம்புறேன் ஐயா.."

" ஏன் ராசா உன்ற சித்தப்பன பாக்காத போறியா ராசா.." என்றார் சிரித்தபடி.

" இல்லைங்க ஐயா நான் அப்புறம் பாத்துக்குறேன் ஐயா.." என்றான் கிளம்பியபடி.

அவரும் அவனை தடுக்கவில்லை.. ஏதோ நினைத்தபடி.

சுற்றிலும் மரங்களடர்ந்து அந்த இடமே குளிரில் பனிப்போர்வை படர்ந்த புல்வெளியில் பசுமை நிறைந்து விளங்க அங்கே இருந்த அந்த மலைவாழ் கிராமத்தில் இருந்ததோ மொத்தமாகவே முப்பது கிராமங்களை உள்ளடக்கியது தான். அங்காங்கே மூங்கிலினால் ஆன குடில்கள் அதன் அழகை மேலும் அழகாக்கி காட்டியது.

மூங்கிலினை வளைத்து அழகான குடில்களை அமைத்து அதில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர் மக்கள்.

அங்கிருந்த ஒரு குடிலில் இருந்து ஒரு குரல் வந்தது.

அங்கிருந்து வந்த குரலின் சத்தத்தில் அந்த இடத்தில் அமர்ந்திருந்த இருவர் வேகமாய் உள்ளே நுழைந்தனர்.

அங்கே இருந்த கட்டிலில் ஒரு பெண் உருவம் ஆழ்நிலை மயக்கத்திலிருக்க அதனருகே இருந்த ஆண் உருவம் பார்வையை எங்கோ வெறித்திருந்தது.

அந்த பெண்ணின் உடலில் தான் சிறிது அசைவு தெரிய அங்கிருந்த முதியவர் ஒருவர் அவர் அருகில் சென்றார்.

அந்த பெண்ணின் நாடியை பிடித்து பார்த்த அம்முதியவர் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, "அய்யா நினைவு வருதுன்னு தோனுதுங்கய்யா.." என்றார் புன்னகையுடன்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ். . இந்த கதை பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க லைக் பண்ணுங்க பட்டூஸ்..