• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மதி 57

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
வந்தனாவை தேடி அவள் இருக்கும் வீட்டை தேடி வந்த இருவருக்கும் அங்கே அவள் இல்லாதது பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.. ஏனென்றால் தனக்கென யாருமில்லை என்று சொன்னவள் எங்கே சென்றிருப்பாள்.. சட்டென ஒரு நினைவு தான்.. ஆனால் அடுத்த நொடியே ஏதாவது கடைக்கு போயிருக்கலாம் என்று தன்னை தேற்றியவள் பக்கத்தில் விசாரித்தாள்.

ஆனால் அவளைப் பற்றி அங்கிருந்த யாருக்கும் சரியாக தெரியவில்லை.. இன்னமும் சொல்லப் போனாள் அங்கே வந்தனா என்ற பெண் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் யாரிடமும் தென்படவில்லை.

ஏன் வயசுப் பெண் தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறாள் என்ற கேள்வி எழாமல் இல்லை.. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை உரியவளிடம் தானே தெரிந்து கொள்ள முடியும்.. அவளும் இப்பொழுது இங்கே இல்லையே..

அவர்களுக்குள் பல கேள்வி வந்து போனது.. அதில் சில கேள்விகளுக்கு அவர்களே பதிலை கூறிக் கொண்டாலும் சில கேள்விகள் புரியாத புதிராகவே உள்ளது.

வந்தனாவை கல்லூரியில் தான் முதலில் சந்தித்தார்கள்.. அவளாகவே வந்து பேசினாள் அன்பு பாராட்டினாள்.. இதோ அவளை காண வரும் போது அவள் கொடுத்த முகவரியில் அவள் இல்லை.

அவளைப் பற்றி வேறு எந்த விபரமும் தெரியாது.. தாய் தந்தை யாருமில்லா அனாதை என்றாள்.. ஹோமில் தங்கி இருப்பதாகவும் அங்கேயே படிக்க வைப்பதாகவும் கூறியவளுக்கு எதற்கு இந்த தனி வீடு என்று புரியவில்லை.

இத்தனை கேள்விகளும் வெண்மதிக்கு இருந்தாலும் தன் தோழி மேல் உள்ள நம்பிக்கையில் நிச்சயம் காரணம் உண்டு என்பதை புரிந்து கொண்டாள்.

ஆனால் வளவனால் அவ்வளவு சுலபமாய் விடமுடியவில்லை.. இதில் ஏதோ உள்ளது.. அதை என்னவென்று அவள் கூறாமலே நாமே அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.. இதை முதலில் ஆதவன் அண்ணனிடம் கூற வேண்டும் என்று யோசித்தான்.


பின்பு வெண்மதியிடம் வந்தவன், "அண்ணி உங்க தோழி போன் நெம்பர் குடுத்துருக்கா இல்லை.. அதுக்கு கால் பண்ணி பாருங்க.." என்றான் ஏதோ சிந்தனையுடன்.

"நானும் பன்னிட்டேன் வளவா.. ஆனா போன் சுவிட்ச் ஆஃப்.. இப்போ என்ன பன்றது.." என்று அவனிடமே வினவினாள்.


வேற என்ன பன்றது.. கிளம்பலாம் அண்ணி.. அண்ணா வந்துட்டா இன்னும் வரலைன்னு கோபப்படுவாறு.." என்றபடி அவளை அழைத்துச் சென்றான்.

' ஆமா அந்த ராட்சசன் மட்டும் யாருகிட்டேயும் சொல்லிட்டா போறாரு..' என்று மனதினுள் பேசியபடி அவன் பின்னே சென்றாள்.

இங்கே தன் குடிசையில் அமர்ந்திருந்த ஆராவின் அருகே ஒரு பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்.

"என்னாச்சி மா நான் சொன்ன படி செஞ்சியா.." என்று கேட்டாள் ஆரா.

" ஆராம்மா நீங்க சொன்னபடி நானும் அவங்ககிட்ட பேசிட்டேன்.. ஆனா ரொம்ப வெகுளி மா அவங்க.. ஆனா உண்மையா ரொம்ப அழகா இருக்காங்க.. அவங்களுக்கா நீங்க சொன்ன கொடுமை நடந்துச்சி.. நினைக்கவே முடியலை மா.." என்று ஆராவிடம் அந்த பெண் கூறினாள்.

"என்ன மா பன்றது.. நாம எதிர்பார்க்காம தானே நிறைய நடக்குது.. இங்கே சரி தப்பு எல்லாம் அவங்க பார்வையில தானே பாக்குறாங்க.. அது தான் அவளோட பக்கம் யாருக்கும் சரியா தப்பான்னு தெரியலை.. சரி மா நீ கவனமா இரு.. இனிமே தான் சூழ்ச்சியோட சூத்திரதாரன் வரான்.. அவனை அழிக்க வல்லவனும் மீண்டு வர வேண்டும்.. நீ கிளம்பு வந்தனா.." என்று அவளை அனுப்பி விட்டு உள்ளே வர அங்கை அந்த ஆடவன் சுவற்றை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

அந்த சுவற்றில் ஓவியமாய் இரு உருவங்கள் நின்றிருந்தது.. அதை பார்த்திருந்தவரை வலியுடன் பார்த்தவள் அருகில் சென்று அவரின் தலையை தடவினாள்.

தன் தலையில் வைத்திருந்த கையை அழுத்தி பிடித்தவரின் கண்களில் கண்ணீர் சொறிந்தது.

அதை கண்டவள் மனம், 'அத்தான் உங்களை சீக்கிரமே பழையபடி கொண்டு வருவேன்.. நீங்க எதை நெனச்சு கலங்குறீங்களோ அதை தரைமட்டமா ஆக்குவேன்.. எவனோட சதியால நம்ம குடும்பம் பிரிஞ்சிதோ அவனை வேரோடு கருவறுப்பேன் அத்தான்.. இது நான் தெய்வமா வாங்குற நம்ம குடும்பத்து மேல சத்தியம்..' என்று மனதோரம் உறுதி எடுத்துக் கொண்டவள் அதை செயல்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாள்.

இங்கே தன்னை பார்த்து விட்டு சென்ற பேரனின் நினைவில் இருந்தவரை அவரின் மகன் ,

"ஐயா என்னாச்சுங்க.. ஏன் இப்படி சிந்தனையில இருக்கீங்க.." என்றார் யோசனையாய்

" நாகா நம்ம வெளியே போற நேரம் வந்துடுச்சி பா.. " என்று சொல்லிவிட்டு இன்று ஆதவன் வந்து போனதை தெரிவித்தார்.

அதை கேட்டவன், "ஐயா அந்த தகட்டுல இருக்கறது பாதி சேதி தானுங்களே.. அப்போ அதுல இருந்த மீதி சேதி எங்கங்கய்யா.." என்றான சிந்தனையாய்

"ஆமா நாகா.. ஆனா அதோட மீதி சேதி வந்து சொல்றவங்கள் தான் இல்லையே.. அதுவும் எனக்கு யோசனையா தான் நாகா இருக்கு.. பாக்கலாம் இன்னும் இந்த பரமேஸ்வரனோட திருவிளையாடல் எதுவரைக்கும்னு.." என்றவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

அதற்கு மேலும் அவரை தொந்தரவு செய்யாமல் அதை பற்றிய முழு தகவலை அறிய சென்று விட்டார்.

இங்கே வளவனுடன் வீட்டிற்கு வந்த வெண்மதிக்கு அங்கே ஒரு ஆடவன் கம்பீரமாய் சோபாவில் அமர்ந்திருந்தது புதிதாய் இருந்தது.

ஏன் இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவும் வீட்டின் உள்ளே வந்து உரிமையாய் அமர்ந்திருந்ததில்லை. நீண்ட நாள் கழித்து வெளியாள் ஒருவர் உள்ளே வந்தது அமர்ந்தது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

' இது இந்த ராட்சசனுக்கு தெரிந்தவரா இருக்கனும்.. அது தான் உள்ளாரே வரைக்கும் வந்துருக்காங்க.. ' என்று மனதோரம் எண்ணியபடி அவனை பார்க்காமல் உள்ளே செல்ல முயன்றாள்.


அவள் உள்ளே வந்ததை அறிந்தவன் அவனை கண்டு கொள்ளாமல் சென்றவளை, "ஹலோ சிஸ்டர்.."என்று அழைத்தான்.

அவன் சிஸ்டர் என்று அழைத்ததும் தன்னையா அல்லது வேறு யாரையுமா என்ற எண்ணத்தில் சுற்றியும் பார்த்தாள்.

அங்கே அவளைத் தவிர பெண்கள் யாருமில்லை.. அவள் மட்டும் தான் நின்றிருந்தாள்.


மீண்டும் அவனிடம் திரும்பி, "என்னையா கூப்பிட்டீங்க.." என்று சந்தேகமாய் கேட்டாள்.

" ஆமா சிஸ்டர் உங்களைத் தான்.." என்று மீண்டும் அழைத்தான்.

தயங்கியபடி அவனருகில் வந்தவள், "சொல்லுங்க சார்.." என்றாள் மென்மையாய்.

"சிஸ்டர் கொஞ்சம் குடிக்க தண்ணீ தர்றீங்களா.. ரொம்ப தாகமாக இருக்கு.." என்றான் கள்ளமில்லா புன்னகையுடன்.


அவன் சொன்னதும் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள். அதை வாங்கியவன் மடமடவென்று குடித்து முடித்தான்.

அதே நேரம் அங்கே வந்த ஆதவன், "ஹே கரன் வாட் எ பிளசன்ட் சர்ப்பிரைஸ்.. வீட் வரைக்கும் வந்துருக்கீங்க.. எதுவும் விஷயமா.. இல்லை எதனாலும் கால் பண்ணிருக்கலாம் இல்லை.." என்று சிரித்தபடி பேசினான்.

ஏனோ அவனின் இயல்பான பேச்சு அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.. அவனையே கண் இமைக்காமல் பார்த்தாள்.

எவ்வளவு நேரம் பார்த்தாளோ எங்கிருந்தோ வந்த கதவை அடைக்கும் சத்தம் கேட்டு நிகழ்வுக்கு வந்தாள்.


அங்கே கடுகடுவென முகத்துடன் கனகம் வந்தார்.. வந்தவர் நேரடியாக அங்கே யாரு இருக்கிறார்கள் என்றும் பார்க்காமல் ஆதவனிடம் வந்தவர்,


"ஏயா ஆதவா எதுக்கு இந்த சிறுக்கிக்கு படிக்க அனுப்பறே.. இவ என் சின்ன பையனோட சுத்திட்டு இருக்கா.. கேட்டா காலேசுக்கு போறேன்னு என் பையனை வளைச்சி போட பாக்குறாளா.." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

சித்தி யாரைப் பத்தி எங்க பேசுறேன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா.. இப்போ நீங்க உள்ளே போகலை அடுத்த நொடி நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு தெரியுமா இல்லை.. இன்னொரு முறை வெண்மதியை நீங்க அப்படி சொன்னா பேசுறதுக்கு வாய் இருக்காது பாத்துக்கோங்க.. இந்த ஆதவனை பத்தி தெரியும் இல்லை.. இனி எது வந்தாலும் நான் கவலைப்பட போறதில்லை.. எனக்கு என்ன செய்யனும்னு நீங்க ஆர்டர் போடாதீங்க. . எனக்கு தெரயும் என்ன பண்ணனும்னு.. கெட் அவுட்.." என்றபடி அவளிடம் கூறியவன் கரனுக்கு கண்களால் சைகை செய்தான்.

அதை உணர்ந்த கரன் சரி என்று தலையாட்டினான்.



அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.