• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மயான புளியமரம்- அத்தியாயம் 1

Santirathevan_Kadhali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 10, 2021
7
3
3
Malaysia
அன்று காரிருள் வானத்தைச் சூழ்ந்திருந்தது. தேய்பிறை என்பதால் நிலவின் ஒளி பார்ப்பதற்குச் சற்று மங்கலாகவே இருந்தது.எங்கும் வௌவால்களின் சேட்டை. கூட்டம் கூட்டமாக அவை பறந்து திரிந்து கொண்டிருந்தன. அக்கிராமத்தின் பெயரே திரிஞல் நகரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு திரிஞல்கள் அங்கே டேட்டிங் அடிக்கும் என்று. அக்கிராமம் தேங்காய்க்குப் பேர் போனது. அக்கிராமத்தில் தென்னை மரத்தைத் தவிர வேறு மரங்களைப் பார்ப்பதே அபூர்வம்தான்.


இந்த கிராமத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் சற்று கவனம் தேவை இல்லையேல் குரங்குகள் நம் தலையைப் பதம் பார்க்காமல் விடாது. காலையில் குரங்குகளின் ஆட்சி இரவில் வௌவால்களின் சபைக்கூடல். இறைவனின் படைப்பாயிற்றே எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டியது தான். காலங்காலமாய் இங்கே வாழ்ந்து வருவதால் கிராமத்து வாசிகளுக்கு இவையனைத்தும் பழகிப் போன ஒன்றுதான் என்று கூற வேண்டும்.

இப்பொழுது கதைக்கு வருவோம்.அக்கிராமத்திலிருந்து 3-மைல் தூரத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அது ஆதிகாலத்திலிருந்து அவ்விடத்திலேயே இருந்து வருகிறது.அதனை யாரும் பயன்படுத்தாமல் விட்டதால், அம்மயானத்தின் பாதிப் பகுதியை அழித்து அக்கிராமத்து மாணவர்களின் கல்விக்காக ஓர் இடைநிலைப்பள்ளி கட்டலாம் என்ற கருத்தை கிராமத்தலைவர் திரு.ஆதிமூலம் வெளியிட்டார்.

அந்த கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். அவ்வாறே இடைநிலைப்பள்ளியைக் கட்டுவதற்கானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கியது.கட்டுமானப் பணிகள் எந்தவொரு தடையுமின்றி நடக்க வேண்டும் என்பதற்காக அவ்வூர் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு காவல் தெய்வ பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். பூஜைகள் அனைத்தும் இனிதே நடந்தேறியது. அப்பூஜைகளைச் செய்து முடித்தப் பின்னர் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.


அக்கிராமத்துவாசிகளுள் ஒருவனான சொக்கன் தலைத்தெறிக்க பூஜை நடந்த இடத்திற்கு ஓடி வந்தான். அவன் மூச்சி வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராமத் தலைவர் ஆதிமூலம் நடந்தவற்றை சொக்கனிடம் விசாரிக்கலானார். அவன் கூறியதாவது

"ஐயா! என்னைக் காபாற்றுங்கள் தங்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் !இந்த மயானத்தைத் தயைக் கூர்ந்து அழிக்காதீர்கள்.இல்லையேல் பெரும் ஆபத்தை நாம் சந்திக்க நேரிடும் "என்றான்.


இன்னும், "நானும் கூட்டாளியும் மொத புளியமரத்துக்குக் கீழே சும்மா கதையடிச்சிக்கிட்டு இருந்தோம். திடீர்னு என்னானு தெரில யா சோனு அப்படியே நெஞ்ச பிடிச்சிக்கிட்டு கீழே விழுந்துட்டான் யா. கிட்டப் போய் பார்த்தப்போ அவன் இரத்தம் கக்கி செதுட்டான் யா! அத சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தேன்யா" என்றான் பயந்தக் குரலில்.


மர்மம் தொடரும்.......