


















தொடர் _3
"டேய் மச்சான் என்னடா கதவு தானாக பூட்டுது ?"
"ஐயே அதுக்குள்ள போதை ஏறிடுச்சா அவரு தாண்டா பூட்டிட்டு போறாரு"
" அவரு எதுக்குடா பூட்டிட்டுப் போகணும் நாம உள்ளே இருக்கும்போது சும்மா பூட்டிட்டுப் போறதுக்கு அவர் என்ன லூசா ?"
"சத்தமா பேசாத அவங்க வீட்டுல வந்து இருந்துகிட்டு அவரே லூசுங்குற "
"டேய் நாம தான்டா லூசு தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறேன்"
" இப்ப என்னடா பண்றது ?"
" ஒண்ணுமே பண்ண முடியாது,
நாம பொழைச்சா வெளியே போக வேண்டியதுதான் "
"ஏன்டா இப்படி தொடை நடுங்கியா இருக்க ?"
"ஏன்டா சொல்ல மாட்ட , பொம்பள பிள்ளைங்க சொல்லுச்சுனு என்னை இழுத்துக்காந்து இப்படி மாட்டிவிட்டுட்டியே ?"
"நீ ஒருத்தன் சும்மா இருடா ஒரு சாப்பாடு வாங்கிட்டு வந்ததும் சாப்பிட்டுட்டு தெம்பா தூக்கம் போடுவோம்"
"டேய் நாம என்ன பிக்னிக்கா வந்திருக்கோம் "
"என்னவோ நாம வந்த வேலை என்ன ? ஜாலியா சரக்கு அடிச்சிட்டு மட்டை ஆகுறதுக்கு தான் "
"பரவாயில்லைடா ஆனா மொத்தமா முடிஞ்சுருவோம் என்று பயமா இருக்கு "
"வாய மூடு " என்று ரவியை திட்டினான் விசு
***
அந்த அறையில் இருந்த பொருட்களை எல்லாம் துடைத்து அடிக்கிக் கொண்டிருந்தபோது தாகம் எடுத்தது மஞ்சுவுக்கு
"ஏய் வினோ ரொம்ப தாகமா இருக்குடி
இரு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரேன் "
"சீக்கிரமாடி எனக்கு ஓவரா விக்குது"
சரி சரி என்று வினோ தண்ணீர் எடுக்க போக ...
"இவ பக்கத்திலேயே இவ்வளவு பெரிய பானை இருக்கு இதுல இருந்து தண்ணி எடுத்து குடிக்க வேண்டியது தானே "என்று அவள் அங்கிருந்து பானையில் இருந்து தண்ணீரை எடுத்து கொடுத்தாள்
அதை வாங்கிக் குடித்த மஞ்சு அப்படியே மயக்கம் போட்டு விழுந்தாள்
தண்ணீரோடு வந்து பார்த்த வினோ
"என்னடி ஆச்சு அவளுக்கு இப்படி மயங்கி போய் கிடக்கும் அந்த அளவுக்காடி தாகம் ?"
"ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லை இதோ இந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தேன் அவள் மயங்கி விட்டாள் "
"ஏன்டி உனக்கு அறிவு இருக்கா அதுல இருந்தது தண்ணியான்னு பாத்தியா ?"
"இந்தக் குடத்துல வேற என்ன வச்சி இருக்க போறாங்க ?"
"அதுக்காக சும்மா கிடந்த வீட்ல இருந்த தண்ணி எடுத்து குடிப்பியா
அறிவில்ல ?"
"இப்ப நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுற நேரமாடி அவளுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்கடி"
ஆமாம்டி அவளுடைய மூக்குக்கு நேரே கையை வைத்து பார்த்தாள் வினோ
"அவளுக்கு ஒன்னும் ஆகல மயக்கம் தான் , அவளுடைய முகத்தில் தண்ணீர் அடிப்போம் " என்றதும் வினோ கொண்டு வந்த தண்ணீரை அவர் முகத்தில் அடித்து எழுப்ப அதை துக்கத்திலிருந்து எழுந்தாள் மஞ்சு
"ஏய் என்னடி நடந்துச்சி இங்க "
"ஆடு மாடு நடந்தது உனக்கு என்ன ஆச்சுடி அதை சொல்லு "
"என்னடி எனக்கு எதுவும் விஷம் வைத்துவிட்டீர்களா ?"
"ஆமா உன்ன விஷம் வச்சு கொல்றது எங்க வேலை போறியா அங்கிட்டு "
"ஏய் இந்த படத்துல இருந்து தண்ணி எடுத்து குடிச்சதும் எனக்கு ஏதேதோ மண்டைக்குள்ள ஓடுச்சு"
"பாதை எதுனா வச்சிருக்கியா எல்லாம் ஓடறதுக்கு?"
"ஐயா காமெடி சிரிச்சிட்டேன் எனக்கு இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் பயமாத்தான் இருக்கு "
"ஏன்டி நீ ஏதோ தப்பு பண்ணிட்டு இந்த வீட்டு மேல குறை சொல்ற ?"
"இல்ல வினோ நிஜமா சொல்றேன் இந்த வீட்ல நிச்சயமா ஏதோ இருக்கு "
"டேய் வந்ததும் வராதுமா ஏதாவது புரளியைக் கிளப்பி விடாதே "
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பேசாம நாங்க கிளம்புறோம் "
"இதுக்கு மேல இங்க இருந்தா எங்க உயிருக்கே ஆபத்தாயிரும்னு தோணுது " என்றாள் மஞ்சு
"ஏய் சும்மா மிரட்டாதடி உனக்கு பிடிக்கலை என்பதற்காக வீட்டு மேல குறை சொல்லாதே "
"இல்ல வினோ வழக்கம் தான் சொல்றேன் இங்கே நீ வராத என்ன ஏதாவது நடந்தா நான் பொறுப்பில்லை "
"ஏய் என்னடி உளறுற இந்த தண்ணியைக் குடிச்சு அதனால எதுவும் மூளை குழம்பிடுச்சா ?"
"இல்ல இப்பதான் நான் தெளிவா இருக்கேன்"
"ஏய் நாம இன்னைக்கு கூட கிளம்பி போயிடுவோம் ஆனா இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போறது அவ, இப்படி பயமுறுத்தினா எப்படி இங்கு வருவா "
"அவ இங்க வரக்கூடாதுன்னு தான் சொல்றேன் நிஜமாவே நம்புங்கடி வேற என்னமோ இருக்கு "
"ஆமா இங்க நிறைய பொருட்கள் இருக்கு "
"நான் சொல்றத சீரியஸா எடுத்துக்காம விளையாட்டுத்தனமா இருந்தீங்க உங்க உயிருக்கு தான் ஆபத்து சொல்லிட்டேன் "
"ஏய் போதும்டி ஓவரா கதையெழுதாத
ஏற்கனவே சுந்தர் சி நிறைய எழுதிவிட்டார் "
"இப்பவும்சொல்றேன் வீணா உங்க தலையைக் கொடுக்காதீங்க "
"ஏய் இவளை கொஞ்சம் தூங்க வைங்கடி இல்லைனா இப்படித்தான் உளறுவா "
"நீங்க எப்படியோ போங்க நான் வீட்டுக்கு போறேன் இதுக்கு மேல ஒரு நிமிடம் கூட நான் இருக்க மாட்டேன் என்றாள் மஞ்சு
"ஏன்டி எங்களை எல்லாம் இங்கு இருக்க சொல்லிட்டு நீ மட்டும் போற சொன்னா எப்படி டி "
"நம்ம உயிரை நாம தான் டி காப்பாத்திக்கணும் அதுக்காக இங்கேயே கிடந்து சாக முடியுமா ?"
"ஏய் என்ன உளர்ற எதோ விளையாட்டுக்கு சொல்றீங்க பார்த்தா சீரியஸா புலம்பிகிட்டு இருக்க "
"சுலோச்சனா நான் சொல்றத நம்பு இங்க ஏதோ தப்பு நடக்குது இங்க நாம இருந்தோம்னா நிச்சயமாக செத்துருவோம் "
"என்னடி இப்படி சொல்ற ?"
"இவ்வளவு நேரமா அதைத்தானடி சொல்லிட்டு இருக்கேன் நீ வந்தா வா வராட்டா போ என்று மஞ்சு தனது பேக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வர ஏய்நில்லடி" என்று அதிகாரத் தோரணையில் கூறினாள் வினோ
"டேய் நீ வேணா இங்க இரு அதற்காக எங்களையும் இருக்க சொல்லி கட்டாயப்படுத்தாதே "
"இது கட்டாயம் இல்லை கட்டளை ஒழுங்கு மரியாதையாக திரும்பி வா "
"என்னடி ஓவரா பேசுற வேற என்ன பண்ணுவ ?"
"மறுபடியும் சொல்றேன் திரும்பி வா "
"வர முடியாது " என்று இரண்டு அடி எடுத்து வைக்க பலத்த குரலில் சிரித்தாள் வினோ
ஏய் என்று அவளின் தோளை பத்தடி அந்தப்பக்கம் நின்று கொண்டபடியே தன் கையை நீட்டித் திருப்பினாள்
அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
எழுத்தாளர் நாகா