• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர்வன 5

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 5

"நீங்க தான் மாப்பிள்ளை இல்ல?" என கண்களை விரித்துக் கேட்டவள் என்னவோ மனக்கணக்கில் இருக்க, இங்கே அவள் கேள்வியில் பெரிதாய் எதையோ இழந்த உணர்வு செழியனிற்கு.

முன்பாவது பார்க்காமல் இருந்திருக்கலாம் சரி.. பெண் பார்த்த அன்று? கேள்விகள் மண்டைக்குள் ஓடத் துவங்க கொஞ்சம் கொஞ்சமாய் காற்றிழந்த பலூனாய் மாறிக் கொண்டிருந்தது நேரம்.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்றிங்களா?" மலர் இவன்புறமே திரும்பாமல் முன்அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கொண்டு கேட்க,

என்னவென கேட்கவா வேண்டாமா என பெரும் போராட்டம் மனதில்..ஏற்கனவே அவளுக்கு திருமணம் என்பதில் விருப்பம் இல்லை என்பதை அறிவான்.. இவ்வளவு தூரம் வந்த பின்னும் கேட்க கூடாத எதையாவது கேட்டு வைத்து விட்டால்?

மனமே இரண்டு விதமாயும் யோசிக்க, கேட்டு அவள் அபாசகுனமாய் கூறிவிட கூடாது.. கேட்காமல் விட்டால் அவள் எதுவும் நினைத்துக் கொள்வாளோ எனும் எண்ணம்.

யோசனைகளுக்கு இடையே தலை தன்னைப் போல ஆட, "உங்க போன் நம்பர் சொல்லுங்களேன்" என்றாள்.

வெப்பக் காற்றின் நடுவே சிறு தென்றல் காற்று அவனுக்கு. அவள் கேள்வி தந்த இதத்தில் தானாய் ஒரு பெருமூச்சொன்று உருவாக, தன் எண்ணைக் கூற, அவளும் மனத்தில் பதித்துக் கொண்டாள்.

'ஆமா! விடிஞ்சா கல்யாணம்.. இப்ப எதுக்கு நம்பர்?' மீண்டும் மூளை தன் வேலையை செய்ய, செழியன் பாவமாய் விழித்த நேரம் அவனருகில் குனிந்தான் பிரேம்.

"என்ன டா என்னவோ மாதிரி இருக்க?" பிரேம் கேட்க,

"ரொம்ப பயம் காட்டுறா டா.." என்றான் மறையாமல் செழியன்.

"லூசா டா நீ? மலர் தான் குழந்தை மாதிரி நடந்துக்குறாங்கன்னா உனக்கு என்ன வந்துச்சு.. இப்ப என்ன நடந்துச்சு?" என கேட்க, செழியன் கூறவும்,

"போன் நம்பர் கேட்டா குடுத்துடுவியா? நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம்னு சொல்லி இருக்கலாம்ல?" என்று கேட்க,

"ஆமால்ல? ஆனா ஒரு ஆர்வத்துல கொடுத்துட்டேன் டா"

"விடு விடு.. போன் என்கிட்ட தான் இருக்கு.. போன் வந்தா நான் சமாளிச்சுக்குறேன்.. அவங்ககிட்ட ஏதாச்சும் பேசு டா.. லூசு மாதிரி பேசாம" சொல்லிவிட்டு அவன் தள்ளி நிற்க,

"ஏன் டல்லா இருக்கனு கேட்டேனே?" என்றான் மலரிடம் மீண்டும்.

"இல்ல வேற ஒரு திங்கிங்ல இருந்தேன்" என்றவளுக்கு அவனிடம் என்ன பேசிட என்ற யோசனை.

"ஓஹ்!" என்றதற்கு மேல் இப்படி இருப்பவளிடம் என்ன பேசிட என்று தெரியவில்லை.

பிரேம் கூறியதைப் போல திருமணத்திற்கு பின் பேசிக் கொள்வதே இருப்பதை கெடுக்காமல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

முன்பே ஏன் இந்த யோசனை எழ வில்லை? இவனிடம் கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம்.. இப்போது எப்படி பேசுவது என சிந்தித்துக் கொண்டிருந்தாள் மலர்.

செழியன் அவளை அழைத்ததும் ட் திரும்பி அவனைப் பார்த்திருந்தாள் மலர்.

அதன்பின் தான் அவன் மாப்பிள்ளை என்பதில் இருந்து ஏன் அவனிடம் திருமணத்தை நிறுத்துவதைக் குறித்து பேசாமல் போனோம் என்பது வரை யோசித்து விழிவிரித்து அவள் பார்த்திருக்க, ஏற்கனவர் இப்படி அவள் கேட்டுவிடக் கூடாது என தான் அவனும் அவளிடம் பேசி இருக்கவில்லை.

அலைபேசி எண்ணை வாங்கிய பிறகு தான் இனி செழியனிடம் அதை பேசுவதே அபத்தம் என தோன்றியது மலருக்கு.

அன்னை, தந்தை, அண்ணன் என இவர்களிடம் தன் விருப்பத்தை இவ்வளவு நாளும் கூறி கெஞ்சியது வேறு. அவர்களுக்கு தலைகுனிவு ஏற்படும்படி இங்கே வரை வந்து இவனிடம் கூறுவது வேறு என நன்றாய் புரிந்தது உடனேயே.

அது மட்டும் இல்லாமல் காலை திருமணத்தை வைத்துக் கொண்டு இப்பொழுது நம்பரை கேட்டு வைத்திருக்கிறோமே தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? என்ற எண்ணம் வேறு முகத்தில் அடிக்க, மீண்டும் அவள் அவனை திரும்பிப் பார்க்கும் போது அவனும் அவள்புறம் திரும்பினான்.

என்ன என்று கண்ணசைவில் கேட்டவன் முகத்தில் கீற்றாய் புன்னகையும்.

ஒன்றும் இல்லை என தலையசைத்தவள், "சாரி! நான் சும்மா தான் போன் நம்பர் கேட்டேன்" என்று திரும்பிக் கொள்ள, இரு நொடிகள் அவளை கவனித்தவன் எதுவும் கூறாமல் புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.

இப்படி பலவித குழப்பங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்க, தலைவலியில் தானாய் சோர்ந்துவிட்ட மலர், இறுதி முடிவு தன் குடும்பத்தினர் விருப்பப்படி இருக்கட்டும் என்று நினைத்து ஒரு முடிவிற்கு வர, வரவேற்பு நிகழ்வு முடியும் நிலைக்கு வந்திருந்தது.

இப்போது சிந்திக்கும் போதும் தன் குடும்பத்தை விட்டு பிரிகின்றோம் என்ற நினைவோடு இன்னொரு குடும்பத்திற்குள் நாம் செல்கின்றோம் என்ற நினைவும் தனக்கென ஒருவன் தன் வாழ்வில் துணை வர போகின்றான் என்ற நினைவும் வர செழியன் முகம் கண்ணில் தோன்றவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"டயர்ட் ஆகிட்டியா?" என்று அவன் கேட்க, ம்ம் என்றவள் இப்பொழுது தான் அவனைப் பார்த்து புன்னகைக்கவே செய்தாள்.

அதில் தானாய் மலர்ந்துவிட்டான் செழியன்.

"ஹாட் வாட்டர்ல கொஞ்ச நேரம் கால் வச்சுக்கோ.. நல்லா தூங்கி எழுந்துக்கோ.. கொஞ்சம் பிரெஷ்ஷா இருக்கும் மார்னிங்" என்றான் அவனும் அதே மலர்ந்த புன்னகையோடு.

"எல்லாரையும் ரூம்க்கு பத்திரமா கூட்டிட்டு போ டா" என அருகே வந்த கவினிடம் செழியன் கூற, இப்பொழுது கவினைப் பார்த்து முறைத்த மலரின் முகத்தில் கொஞ்சம் மென்மையான சிரிப்பும் கலந்திருந்தது.

"அழகா இருக்க மலரம்மா!" கவின் கூற,

"கவின் அப்படியே மாப்பிள்ளை வீட்டாளா மாறிட்டிங்க.." அஜிதா கூற,

"பின்ன! பொண்ணு தான் புதுசா இருக்கே.. இன்னும் என்கிட்ட பேச கூட இல்லயே அண்ணி" என்றான் கவினும்.

அப்போதும் அவனிடம் பேசிவிடவில்லை மலர். முறைத்து நின்றாலும் முன்பிருந்த கோபம் இல்லை. அது தற்போதைய சூழ்நிலையாலா இல்லை இவ்வளவு நாட்களும் நேரில் பாராமல் இருந்ததாலா என்று அறியவும் முற்படவில்லை.

"சித்தப்பா! நீங்க இப்போ பேசிட்டு இருந்திங்க இல்ல ஒரு ஆண்ட்டிகிட்ட.. அது தான் சித்தியா?" ரச்சு கவினிடம் கேட்க,

"அய்யயோ குட்டிம்மா.. யாரை டா சொல்றிங்க?" என்று கவின் பதற,

"இது எப்ப?" என்று செழியனும் சந்தேகமாய் பார்க்க,

"இப்போ தானே கீழ ஒரு ஆண்ட்டிகிட்ட பேசிட்டு வந்திங்க?" என்று மீண்டும் ரச்சு கூற, யோசித்த போது தான் கவினிற்கு அவள் யாரைக் கூறுகிறாள் என தெரிந்தது.

"அட ராமா! அடியேய்.. நிஜமாவே அது ஆண்ட்டி தான்.. கேப் புக் பண்ணி கேட்டதுக்கு பதில் சொல்றதுக்குள்ள என்னை டேமேஜ் பன்றியே.. உனக்கு யார் அப்படி சொன்னது?" என்று கவின் கேட்க, ரச்சு தன் அன்னையைப் பார்க்க, அஜிதா மாட்டிக் கொண்டாள்.

"அண்ணி! ஏன் இப்படி?" கவின் கேட்க,

"சும்மா ஒரு சோசியல் சர்வீஸ்" என்று இவர்கள் பேசி சிரிக்க,

"கவின்! மலர் அஜிதா அம்மா எல்லாரும் இங்கேயே மண்டபத்துல தங்கட்டும்.. மத்தவங்களை ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போய்டலாம்" என்றான் மகேந்திரன்.

அந்த இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து செல்ல வேண்டாம் என்ற முடிவிற்கு வந்திருக்க, சரி என்று மற்ற உறவினர்கள் கிளம்பும்படி ஆனது.

கவின், பிரேம், செழியன், மகேந்திரன், ஹரி என மற்றவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து முடித்து மகேந்திரனை பெண்களுக்கு காவலாய் மண்டபத்தில் விட்டு இவர்கள் மட்டும் செழியன் வீடு வந்து சேரும் பொழுது ஒரு மணி ஆகி இருந்தது.

மீண்டும் கவின் செழியனிடம் கூறிக் கொண்டு மண்டபத்தில் தான் இருப்பதாக சொல்லி கிளம்பிவிட, காலை தான் வந்து சேர்ந்த பிரேம் அடித்து எழுப்பினாலும் எழ மாட்டேன் என ஐந்தே நிமிடத்தில் தூங்கிப் போனான்.

செழியன் உறங்காமல் விழித்திருந்தவனிற்கு மலரிடம் முன்னவே பேசி இருக்க வேண்டுமோ என்ற தவிப்பு.

மனம் முழுதும் முதல் நாள் மலரை பார்த்த தினத்தில் நின்றது.

கவின் வீட்டிற்கு செழியன் வந்திருந்த நேரம் அது.

முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பிய மலர் தலையில் கைவைத்து வாசலில் நிற்க, அவளை சுற்றி நின்றனர் கண்ணன், மகேந்திரன், சித்ரா என.

"நல்லா படிக்கணும் மலர்.. அவ்வளவு தூரம் எப்படி தனியா போய்ட்டு வர போற?" என சித்ரா புலம்ப,

"நான் வேணா உன்கூட வரவா?" என கண்ணன் கேட்க,

"ப்பா! இன்னைக்கு முதல் நாள் இல்ல.. நாம வேணா போய் ட்ரோப் பண்ணிட்டு வந்துடலாமா?" என்று மகேந்திரன் கூற,

"ஏன் அப்படியே அவங்க கிளாஸ் மேடத்தை பார்த்து குழந்தையை விட்டுட்டு போறேன்.. பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு வாங்களேன்.." என்றாள் கடுப்பாய் அஜிதா.

"நல்லா கேளுங்க அண்ணி" என்று மலர் கூற, இவற்றை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.

"காலேஜ் கிளம்பிட்டாளா?" செழியன் அருகே வந்து நின்ற கவின்,

"மலரம்மா! காலேஜ் பஸ் தானே?" என அவன் பங்கிற்கு சத்தமாய் கேட்க, தலையில் அடித்துக் கொண்டாள்.

"யாரு டா அது?" என்று அங்கு நடந்த காட்சியில் செழியன் கேட்க,

"பக்கத்து வீட்டு பொண்ணு டா.. ஃபர்ஸ்ட் டே காலேஜ்.. அதான் அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க போல" என்றான் அவன்.

"காலேஜ் போற பொண்ணுக்கு குழந்தை மாதிரி பிகேவ் பன்றாங்க" செழியன் கூற,

"குழந்தை தான் டா.. நீ பேசி பார்த்தா தெரியும்.. ரொம்ப செல்லம் வீட்டுக்கு.. இங்கேயும் தான். ரித்தியும் மலரும் சேர்ந்தா வீடு ரெண்டாகிடும்" என்றான்.

"பை கவின்ண்ணா" கல்லூரி பேருந்தில் ஏறி கையசைத்தவளை பார்த்தபடி நின்றிருந்தான் செழியன்.

முதல் சந்திப்பு.. அதன்பின் பலமுறை சென்று வந்திருக்கிறான். அடுத்தடுத்த நாட்களில் தான் மலரின் மேல் காதலும் மலர ஆரம்பித்து இருந்தது.

மலரும் உறக்கம் வராமல் அறையின் முன்னே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.

திருமணம் என்ற எண்ணமும் அதன் பின்னான வாழ்வும் என சில மணி நேரங்களில் மனதில் தன் வாழ்வில் தான் எத்தனை பெரிய முக்கிய கட்டத்தில் நிற்கின்றோம் ஏன கூறிக் கொண்டிருந்தது.

அதை நினைத்ததும் தன்னுடன் சேர்ந்து வாழ்வை பயணிக்க வரும் செழியனின் முகமும் அகத்தினில்.

'ஏன் டல்லா இருக்கன்னு கேட்டேனே!' செழியனின் வார்த்தைகள் தொடர்ந்து, 'செழியன் அண்ணன்கிட்ட நீ பேசியிருந்தால் அவங்க உன்னை நல்லா பார்த்துப்பாங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்' என்ற அஜிதாவின் வார்த்தைகள்.

நினைத்தவளுக்கு "என்னவோ! இனி நீ பிரீடம் கேர்ள் இல்ல டி மலர்" என்று தனக்கு தானே கூறிக் கொண்டு திரும்ப அங்கே கவின் நின்றிருந்தான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
பார்க்கவில்லை பழகவில்லை பார்வையால் பேசிக்கொள்ளவில்லை பாதி தூரம் வந்தாகி விட்டது
பாதியில் செல்ல முடியாது
மீதி வாழ்க்கை அவனுடன்
மனதில் ஏனோ நெருடலுடன்......
மனதில் பதிந்தவளை
மனம் முடிக்க எண்ணி
மனதிலே ஒரு தடுமாற்றம்
மணநாளும் வந்துவிட்டது
மலரிடம் பேசவில்லை
மனம் விட்டும் பேசவில்லை..... 🤩🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi