• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

மலர் தேடும் பனிக்காற்று - பாலதர்ஷா

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
மலர் தேடும் பனிக்காற்று
பாலதர்ஷா

முதலாம் தர மாணவர்களின் சலசலப்பு மத்தியில், அன்றைய பாடத்தினை கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தார் வகுப்பாசிரியர்.

"எல்லாரும் சத்தத்தை நிப்பாட்டிட்டு உங்கட உங்கட கொப்பியில நான் எழுதினத பாத்து எழுதுங்கோ." என்றார்.

அந்த வகுப்பின் மையப்பகுதியில் போடப்பட்டிருந்த மேசையோடு ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்து
பாடங்களை சிரத்தையோடு எழுதும் மாணவர்களை ஒருமுறை கண்களால் அளர்ந்தார்.


ஒரு நீளமான பெஞ்சில் இரண்டிரண்டு மாணவர்கள் வீகுதம் அமர்ந்திருக்க,
பெஞ்சின் ஓரமாக அவளை மாத்திரம் பிரித்து வைத்திருந்தார்கள் அந்த வகுப்பின் மற்றைய மாணவர்கள்.


இருவர் இருக்கும் பெஞ்ச்சில், தான் ஒருவளாக அமர்ந்திருந்தவள், தன் புத்தகப் பையில் கையினை நுழைத்து, எதையோ நீண்ட நேரமாக தோடிக்கொண்டிருந்தாள்.

அப்படி தேடியவள் முகத்தில் திடீர் என ஓர் புன்னகை.
அவள் தேடியது கிடைத்து விட்டது போல.
அதை வெளியே எடுத்தாள்.

ஆம் அது பென்சில் தான். அது பென்சிலா இல்லை ஆட்டுப்புளுக்கையா என கேட்டால், நிச்சயம் பதில் சொல்வது கடினம் தான். அந்தளவு தான் அதன் வளர்ச்சியிருக்கும்.

கையில் அது அகப்படாது என்பதனால், பேனா மூடியினை பின்புறத்தில் சொருகி, தன் கைகளுக்குள் அதை அடக்கி கொள்வாள்.

வழக்கம் போல் அவளது அந்த வெள்ளை நிற ஆடையில், பழுப்பு நிறம் படிந்திருந்ததனால், அவள் மாத்திரம் அந்த வகுப்பறையில் தனித்துவமாக தெரிந்தாள்.


அந்த வகுப்பிலே அடிக்கடி பள்ளிப் பையினை மாற்றுவதில், அவள் ஒருத்தி தான் செல்வந்தி.

ஆம் அது ஒன்றும் துணிப்பை இல்லை. புடவை கடைகளில் புது உடைகளை வைத்து கொடுக்கப்படும் பாலித்தின் பை தான் அது. அதுகூட பல துளைகளை கொண்டிருந்தது. அந்த ஆட்டு புளுக்கை பென்சில் கூட அந்த துவாரத்தினால் விழுந்து விடக்ககூடிய அளவு துளைகள் அவை.

இந்த இரு வாரங்களாகத் தான் அந்த பையினை அவள் மாற்றவில்லை. அவள் கைகளுக்கு யாராவது நன்கொடையாக அளிக்கும் புது பை இன்னும் கிடைக்கவில்லை போலும்.


தலைகளில் அந்த பாடசாலையின் வர்ண ரிபன் இல்லாமல், பழைய துணியினை ரிபன் போல் கிழித்து, எண்ணெய் கண்டிராத பரட்டை தலையினில் இரட்டை கீரைப்பிடி போல் கட்டியிருந்தவள், அதில் சிவப்பு நிற செம்பரத்தி பூவினையும் சொருகியிருந்தாள்.


முழுநில முகமது இதுவரை சோப்போ, பவுடரோ கண்டிராது, வறண்டு பொழிவிழந்து காணப்பட்டது. நெற்றியின் நடுவே பெரிய கருநிற பொட்டு, அது கூட ஏதோ அடுப்பு கரியினை தொட்டு வைத்திருந்ததை போல், திரல் திரலாக நொற்றியோடு ஒட்டாமல், இன்னும சில நிமிடத்தில் அது அழிந்து விடும் என்பதை போல தான் இருந்தது. அவளது கால்களில் இதுவரை செருப்பினை கண்டறியாள் அந்த ஆசிரியை.


அவளது தோற்றத்தினையே கண்ணிமைக்காது பார்த்திருந்த அந்த ஆசிரியை,

"தருணிகா...." என்றார்.


கரும்பலகையில் இருந்தவற்றை தன் புத்தகத்திற்கு மாற்றிக்கொண்டிருந்தவள், அவரது திடீர் அழைப்பில், தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று, ஆசிரியையை மிரண்ட பார்வை பார்த்தாள்.


அவளது பார்வையில் இருந்த பயத்தினைக்கண்ட அந்த ஆசிரியை, மற்ற மாணவர்கள் தான் அவளை அழைத்ததும், அவளையும் தன்னையும் மாறிமாறிப் பார்ப்பதை உணர்ந்து,

"இங்க படிக்கிற எல்லாருக்கும் தருணிகாவா பேர்? தருணிகா யாரோட பேரோ, அவங்கள மட்டும் தான் கூப்பிட்டேன். மற்றவங்க உங்கட வேலையை பாக்கலாம்." என்று எச்சரிக்கை போல கூறியவர். தருணிகாவின் புறம் திரும்பி,

'உன்னைத்தான் கூப்பிட்டேன்." என்று எழுந்து நின்றவளை தன்னிடம் வரும்படி அழைத்தார்.


பயந்தவாறு அவர் அருகில் சென்றவளுக்கு நன்றாகத்தெரியும். தனது தோற்றத்தை மற்றைய மாணவர்களோடு ஒப்பிட்டு, அவர்கள போல மாற்றச்சொல்ல போகிறார் என்று. இது ஒன்றும் அவளக்கு புதிதில்லை. தினமும் இதே தான் நடக்கிறது.

அவளுக்கு மட்டும் மற்றைய மணவர்கள் போல வரவேண்டும் என்று ஆசையில்லையா என்ன? எல்லாம் அவளது குடும்ப சூழல். அவளுக்கு மாத்திரம் அந்த நிலமையல்ல, அவளுடன் கூடிப் பிறந்த மீதி ஏழு பேருக்கும் இதே நிலமை தானே.

அவளை தன் முன் நிறுத்திய அந்த வனிதா ஆசிரியை,

"உனக்கு எத்தின தடவை சொல்லுறது தருணிகா. நீ நீட்டாவே வரமாட்டியா? மற்ற புள்ளங்களையும் உன்னையும் பாரு. எப்பிடி அசிங்கமா இருக்கேன்னு? அவங்களும் உன்னைப்போல தானே! நீ மட்டும் ஏன் இப்பிடி இருக்கா? எதுக்கு யூனிபோம் தோய்கேல." என்றவளை மருண்ட பார்வை பார்த்தவாறு.
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
"இல்ல மிஸ் அண்ணா தோய்ச்சு தந்தார். சோப்பு இல்லாததனால ஊத்த போகேல. நாளைக்கு சோப்பு வாங்கி தோய்ச்சு தாரதா அண்ணா சொன்னார " என்று அழுவதற்கு தயாராகுவது போல் மன்னையை நீட்டிக் கூறுபவளின் அழுகையினை கண்டு கொள்ளாதவரோ,


"ஏன் உனக்கு அம்மா இல்லையா? அவங்க தோய்ச்சு தந்தா தான் என்ன? பெத்ததோட அவங்க கடமை முடிஞ்சுதா? ஆம்பள பசங்க தோய்ச்சா இப்பிடித்தான் இருக்கும். தலைக்கு கட்டுற ரிபன் எங்க? ஏதோ சீல துணி எடுத்து கட்டியிருக்க, பறட்டை முடிவேற, கால்ல செருப்ப காணோம். இது பள்ளிக்கூடமா இல்ல வேற எதுவுமா?

பாரு யாராச்சும் ஒரு பிள்ளை உன்கூட சேருறாங்களா? அத்தனை பேரும் உன்னை ஒதுக்கி வைச்சிருக்காங்க. இதில படிப்பும் சரியா ஓடாது.

வீட்டுப்பாடம் தந்தா அதையும் செய்யிறது இல்லை. காரணம் கேட்டா அப்பா அடிச்சாரு, அதனால செய்ய முடியலன்னு பொய் சொல்ல வேண்டியது. நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு வரணோம்" என்றார் கண்டிப்போடு.

"அம்மா வேலைக்கு போரவங்க டிச்சர். அவங்க இங்க வரமுடியாதே" என்றளினை முறைத்தவாறே,

"அம்மா வேலைக்கு போறாங்கனா, அப்பாவை கூட்டிட்டு வா!"

"வேண்டாம் மிஸ் அப்பா வேண்டாம். நான் அம்மாவையே கூட்டிட்டு வாரேன்." என்றவளை இழிவாக பார்த்தவர்.

"அப்போ அம்மாக்கு வேலைன்னு பொய் சொன்னியா? உனக்கு அப்பா என்டா தான் பயமா? அப்போ நீ அப்பாவைத்தான் கூட்டிட்டு வரோணும். இல்லன்னா கிளாஸ்கு வரக்கூடாது." என அந்த சிறுமியிடம் கராராக பேசிக் கொண்டிருந்தவரை அடக்கியது,

"எஸ் கியூஸ் மீ" என்று வெளியில் கேட்ட இன்னொரு சக ஆசிரியையின் குரல்.

அவரத குரலில் வாசலை பார்த்தார்,

"நான் உள்ளே வரலாமா?" என முகமெல்லாம் பல்லாக கேட்ட உமா ஆசிரியரைப்பார்த்த வனிதாவிற்கு ஒரே ஆர்ச்சர்யம்.

இதுவரை அவர் யாரையும் தேடி சென்று பேசியதை அந்த வனிதா ஆசிரியர் அறிந்ததில்லை. ஏன் பொதுவாக அவர் சிரித்திடா மனிதி.

தெரிந்தவர்கள் தன்னை கடந்து சென்றால், தலையை மட்டும் அசைத்து, தன்னை அடையாளப் படுத்திக்கொள்வார். இது தான் உமா ஆசிரியருடைய இயல்பு.


பலர் அவரை திமிர் பிடித்தவர் என்றும், பணச்செருக்கு என்றும், சக மனிதரை மனிதாராக பாவிக்க தெரியாதவர் என்றும், மாணவர் கூட்டத்தினரால் பூச்சாண்டி டீச்சர் என்றும் பேசியதை தன் காதுபடவே கேட்டும் இருக்கிறார்.
இந்த வார்த்தைகள் ஒருபோதும் அவரை பாதித்தது இல்லை.

அவர் மணம் புரிந்து ஒரு வருட காலத்தை தாண்டியதன் பிற்பாடு.
மனதில் இருப்பதை அவரும் வெளிப்படையாக பேசிச்சிரித்தவர் தான். இப்போது காலம் அவர் மனதை கல்லாக்கியிருந்தது.

தேடி வந்தவரை கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாதவரிடம்..

"என்ன மிஸ்.... என்னை பாத்ததும் சிலையாடிக்கிங்க." என்ற உமாவின் பேச்சினில், சிலையாய் நின்றவள் சிந்தை தெளிந்து.

"அப்.. அப்பிடில்லாம் எதுவும் இல்லை மிஸ். வாங்க.." என உள்ளே அழைத்தார்.

அவளது பதட்டத்தினை பார்த்து சிரித்தவளாய். உள்ளே வந்தவர், வனிதாவின் அருகில் நின்ற சிறுமியினைக்கண்டு,

"இவ தருணிகா தானே?" என்றார் சந்தேகமாய்.
அவளது கேள்வியில், தனது வகுப்பு மாணவியின் பெயர் இவளுக்கு எப்படித்தெரியும்? அதுவும் இவளை குறிப்பாக விசாரிக்கிறாளே!

யாருடனும் தேவையை தவிர பேசிராதவள், இவளை மட்டும் கேட்பதற்கான காரணம் தான் என்ன? என தனக்குள் நினைத்தவளாய்,

"ஆமா மிஸ். இவ தருணியா தான். என்ர வகுப்பு மாணவியை பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிங்க போல. இவளை பாத்ததும் அடையாளம் கண்டு உடனேயே சொல்லிட்டிங்கள்" என ஆர்ச்சர்யம் கலந்து கேட்க.


"இல்ல மிஸ் எனக்கு இந்த மாணவியை பத்தி மட்டுந்தான் தெரியும். மத்தவங்களை பத்தி எதுவுமே தெரியாது. இவளோட அண்ணன் என்னோட கிளாஸ் தான். அவனுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லன்னு இன்னைக்கு கொஸ்பிடல்ல அவனை சேர்த்திருக்காங்க.
அது தான் இவளை ஒரு தடவை பாத்திட்டு போகலாம்ணு வநதேன்." என்றவள்,
தருணிகாவை அருகே அழைத்து, அவள் நெற்றிமேல் முத்தம் வைத்தவள், அவள் கையினில் ஒரு சாக்லட்டை கொடுக்க,
சின்னவேளோ உமா ஆசிரியரை சந்தோஷ சிரிப்புடனே பார்த்து,

"தாங்க்ஸ் மிஸ்." என சாக்லட்டையே பார்த்திருந்தாள்.


வனிதாவிற்கு எதுவுமே புரியவில்லை.
உமா இந்தளவு இறங்கி வந்து பேசுவாளா? அதுவும் ஒரு அழுக்கு படிந்த பெண்ணுக்கு முத்தமிட்டு. ச்சீ.... அப்படி நினைக்கும் போதே, அருவருப்பில் உதட்டினை சுழித்த வனிதாவை பார்த்து, சிரித்த உமா.


"யாரும் தாழ்ந்தவங்க இல்ல வனிதா.
அதே போல யாரும் உயர்ந்தவங்களும் இல்ல. மனுஷங்க எல்லாமே ஒன்னு தான். சூழல் மட்டுந்தான் அவங்களை தாழ்த்திக்கிது.

நான் உங்களோட கொஞ்சம் பேசணும். உங்களுக்கும் மனசில நிறைய குழப்பம் இருக்கும் எண்டு நினைக்கிறேன். வகுப்பு இடைவேளை நேரம் கன்டீன் வாங்க அப்போ பேசலாம்."
என்றவர் நன்றி கூறி வகுப்பை விட்டு வெளியேற.
வனிதாவிற்கு தான் எப்போது இடை வேளை வரும் என்றிருந்தது.

இரண்டு நாட்கள் விடுமுறை என்று கூறி சென்றவர், இன்று வந்து இப்படி ஒரு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தால், குழப்பம் வரத்தான் செய்யும்.


உமா ஒரு பணக்கார வீட்டுப்பெண். காதல் திருமணம். திருமணத்திற்கு முன் அவளும் சாதாரணமாகத்தான் எல்லோரை போலவும் கேலி, கிண்டல் என, வயசுக்கு ஏற்ற குறுப்புகள் செய்வாள்.

எப்போது திருமணம் ஆகி ஒரு வருடங்கள் கழிந்ததோ அன்றிலிருந்து தன்னை ஒரு நத்தை போல் ஆக்கி கொண்டவள், தனது உலகமே அந்த ஓடு என்பதைப்போல் எந்தவித சந்தோஷமும் இன்றி, கடமைக்கே என்று தன் வாழ்க்கையினை கடக்கத்தொடங்கினாள்.


திருமணமாகி ஒன்பது வருடங்களை கடந்தாயிற்று. அவளுள் மாற்றம் தான் இல்லை. இன்று தான் தன்னுடனே பேசியிருக்கிறாள். அதுவும் பலகாலம் பழகியதைப்போல மிக இலகுவாக பேசியது தான் ஆர்ச்சரியமே.


இவளுடைய இந்த மாற்றத்திற்கு அப்படி என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவளுக்கு, விடை கிடைக்காமல் போக,
சரி அவங்க தான் சொல்லுறேன்னு சொன்னாங்களே, எதற்கு தேவையிலலால் என் மண்டையை போட்டு உருட்ட வேண்டும் என நினைத்தவளாய். அமைதி காக்க.

இடைவேளையும் வந்தது. தனது டிபன் பாக்ஸ்ஸை எடுத்துக்கொண்டு கன்டீன் பக்கம் ஓடியவள், ஒரு மேசையினை தான் ஆக்கிரமித்துக்கொண்டு, உமாவிற்காக காத்திருந்தாள்.


சிறுது தாமதத்தின் பின் வந்த உமா, வனிதாவினை தூரத்தே கண்டு, சிரித்தவாறே அவளருகில் இருந்த கதிரையில் அமர்ந்து,


"என்ன வனிதா! என்னை பத்தி தெரிஞ்சுக்க ர ஆர்வமா இருக்கிங்க போல?.." என்று அவளை கேலி பேசியவாறு தன் டிபன் பாக்ஸ்சை திறந்தவள்.

"சாப்பிடலையா?.." என்றாள்.
"ஹ்ம்ம் சாப்பிடுவோம்." என்றவாறு உமாவினை வித்தியாசமாக பார்த்தவறே சாப்பாட்டை பிரித்தவள், மௌனமாக இருப்பதற்கு தான் இங்கு வரவில்லை என்பது மூளை எடுத்துரைக்க.

எப்படித்தொடங்குவது என்பதை யோசித்தவளுக்கு. உமாவின் நேற்றைய விடுமுறை நினைவில் வந்தது.

"லீவ் எல்லாம் எப்பிடி போச்சு?" என்றாள்.

"வழமை போல தான். மச்சினிச்சி மகளுக்கு சடங்கு, முதல் நாளே வந்திடணும் எண்டு கூப்பிடுவாங்க, வழக்கம் போல பிள்ளையில்லாதத காரணம் காட்டி, ஓரமா நிக்க வைச்சிட்டாங்க. வரவங்க போரவங்க எல்லாம் அதையே குத்திக்காட்டி பேசுறதை கேட்டிட்டு வந்தோம்

சில நேரம் எனக்கு எனக்கு தோணும்... அசிங்க படுத்திறத்துக்காவே எங்கள கூப்பிடுறாங்களோன்னு. நானும் இவர்கிட்ட பல தடவை சொல்லிட்டேன், எந்த விசேஷத்துக்கு யாராச்சும் கூப்பிட்டா, பந்தி நேரத்துக்கு மட்டும் போயிட்டு வந்திடலாம்னு. அவரு தான் சொந்தம் பந்தம்னு ஆயிரம் காரணம் சொல்லுவாரு.


என்னால ஒரு குழந்தையைத்தான் அவருக்கு குடுக்க முடியலைய, இப்படியான சின்ன சின்ன விருப்பங்களையாவது நிறைவேற்றணும் என்கிற நினைப்பில பதில் பேசாமல் போயிடுவேன்.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வனிதா. எனக்கும் உங்களைப்போல சந்தோஷமா, எல்லார் கூடவும் சிரிச்சு பேசி, ஒருவரை ஒருவர் காலை வாரி இருக்கணும் என்று ஆசை தான்.


இந்த ஓட்டுக்குள்ள என்னையே ஒழிச்சிட்டு வாழ்ற வாழ்க்கையில, எனக்கு இஷ்டமில்லை. ஆனா என்னோட குறைய யாராவது குத்திக்காட்டி பேசிடுவாங்களோ என்கிற பயத்தினால, எனக்குள்ளவே ஒரு விதமான குற்றவுணர்வு.

அதனால தான் விருப்பமே இல்லை என்றாலும் இந்த வாழ்க்கையை நானே ஏத்துக்கிட்டேன்." என்று தன்னை புரிய வைப்பதற்காய், தன் மனதினை முதல் முறையா வனிதாவிற்க்கு கூறியவளை, பாவமாக பார்த்தவள், அவள் மனம் என்னவென புரிந்தவளாக வனிதாவும்,

"ஏன் உமா. நீங்க இது சம்மந்தமான டாக்டரை பாத்திருக்கலாமே!.. இப்போ தான் விஞ்ஞானம் வானைத்தொடுற அளவுக்கு வளந்துட்டுதே, இதக்கும் ஏதாவது ரீட்மன்ட் இல்லாமலா போகப்போகுது?" என்று இலவச ஆலாசனை வழங்க,


இதழ் வளைவில் நொருங்கிய புன்னகையை சிந்தியவள்,

"அப்பிடி ஒரு வழியிருந்தா, நிச்சயம் நாங்க செய்யாமல் இருந்திருப்போமா? பட் அதுக்கு கர்ப்ப பை வேணும் வனிதா. கல்யாணமாகி எட்டு மாசமிருக்கும். அடி வயிறு ரொம்ப வலின்னு சொல்லி, கொஸ்பிடல் போனோம். ஸ்கேன், பிளட் எல்லாமே ஸ்டெஸ் பண்ணி பாத்திட்டு, கற்ப பையில ஒரு கட்டி வளருது, அதை அப்பிடியே விட்டா, புற்றுநோய் ஆகக்கூடிய வாய்ப்பு அதிகமா இருக்கிறதனால அதை எடுத்தே ஆகணும் எண்டுட்டாங்க.


ஒரு குழந்தை பெத்துகிட்டு அதை எடுப்போம்னு இவர்கிட்ட கெஞ்சி பாத்தேன். டாக்டஸ் அந்த கட்டியிருக்கும் போது குழந்தைக்கு வாய்ப்பே இல்லன்னு உறுதியா சொல்லிட்டாரு.

வேற வழியே இல்லாம அதை எடுத்தாச்சு.
கொஞ்ச நாள் அழுதிட்டு இருந்தேன். அப்புறம் உலகம் எங்களை ஒதுக்க, ஒதுக்க அதுவாவே பழகிடிச்சு.


நான் கஷ்டபடுறேன்னு என்கூட என் புருஷனும் ரொம்ப கஷ்டபடுராரு.


என்னை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கங்கனா, எனக்கு நீ தான் குழந்தை உனக்கு நான் குழந்தைன்னு சினிமா வசனம் பேசுவாரு, அதுக்கு மேல என்னால என்ன சொல்ல முடியும்? " என்றவள்~

"வாழ்க்கை ஒரு விசித்திரமானது வனிதா. யார் யாருக்கு என்னென்ன வைச்சிருக்கு எண்டு யாராளையும் கண்டு பிடிக்க முடியுதில்லை.


கடவுளை பத்தி என்ன நினைக்கிற நீ" என்று தன் கதையை சொன்னவள் கடவுள் கேள்வியோடு முடிக்க.


அவளது இத்தையக கேள்விக்கு என்ன பதில் சொல்ல. ஒவ்வொரு நிலையில ஒவ்வொரு மாதிரி நினைப்போம். இவ எதை மனசில வைச்சு இந்த கேள்வி கேக்கிறான்னு தெரியலையே!.. என நினைத்தவளாய்.


"எதுக்கு உமா இந்த கேள்வி? கஷ்டபடுறவங்களுக்கு கொடுமைக்காரன், சந்தோஷமா இருக்கிறவங்களுக்கு வள்ளல், இயற்கையை பொறுத்தவரை நல்ல ரசிகன். அவனையே நினைச்சிட்டு இருக்கிறவங்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டி. இப்பிடி ஒவ்வொரு நிலையில அவனோட தோற்றம் மாறுபடும். இதில நீங்க கேட்கிறது புரியல" என்று கூறியவளை சிறு புன்னகையுடன் அவள் பேச்சினை ரசித்தவள்.

"பொதுவா ஆண்களிட்ட பெண்களை பத்தி என்ன நினைக்கிறீங்கன் கேட்டா, அவங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா?

கடலோட ஆழத்தை அளந்திடலாம் பெண்னோட மனதின் ஆழத்தை அழக்க முடியாது என்பாங்க.
உண்மை தான் வனிதா. அவங்க அப்பிடி இருக்கிறதுக்கு காரணமே இந்த சூழ்நிலை என்கிற ஒன்றுதான்.

ஏன்னா பெண் எந்தளவு மென்மையானவளோ, அந்தளவு வைராக்கியமும் கொண்டவள். தன்னோட மனச தானே அடக்க தெரிந்தவள். ஒரு முடிவெடுக்கும் போது, அந்த முடிவு அவளை மட்டும் பாதிக்கிறது கிடையாது. ஒரு குடும்பதை பாதிக்கும்.

குடும்பம் சமுதாயமா மாறும்போது, அவ தன்னோட மனதுக்கு தரும் முக்கியத்துவத்தை விட, அந்த சமுதாயத்துக்கு தான் முதல்ல முக்கியத்துவம் குடுப்பா. ஏன்னா நாளைக்கு இந்த சமுதாயம், பலவீனமானவங்க கிட்டதான் தன்னோட வக்கிரத்தை காட்டும்." என்று விரக்தியாக தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை நினைத்து பெருமூச்சு விட்டவள்,

"இந்த கடவுள் இருக்கானே ரொம்ப வினோதமானவன் வனிதா. அவனோட செயல்களை சுத்தமாவே புரிஞ்சிக்க முடியாது.

யாருக்கு என்ன
தேவையோ அவங்களுக்கு அது குடுக்கவே மாட்டான். யாருக்கு எது வேண்டாம்னு கெஞ்சுவாங்களோ, அவங்களுக்கு இந்தா இது உனக்கானது வைச்சுக்கோன்னு திணிப்பான்.


அது கஷ்டமாவும் இருக்கட்டும், சந்தோஷமாகவும் இருக்கட்டும், செல்வமாகவும் இருக்கட்டும், வறுமையாகவும் இருக்கட்டும். ஏன் குழந்தையாவும் இருக்கட்டும்" என்று எங்கோ பார்த்தவாறு கூறியவள் கண்களோ கலக்கம் கண்டிருந்தது.

"ஆமா வனிதா! முந்தாநேத்து இவரோட அம்மா வீட்டுக்கு போனேன். அது தான் மச்சினி பொண்ணு சடங்குன்னு போயிருந்தேன்.

முதல் நாளே போனதனால பொழுது சாயும் நேரமாத்தான் போனோம். போற வழியில ஒரு வீட்டை பாத்தோம். அது ஒரு பழைய காலத்து வீடு. சுத்தவர வேலியோ, மதிலா இல்லாம, சும்மா ஒரு கம்பிமட்டும் வரிஞ்சு கட்டியிருந்திச்சு. அந்த வீட்டில இருக்கவே முடியாத அளவுக்கு ரொம்பவே சேதமடைஞ்சிருந்துது.

ஒரு சின்ன பொண்ணு மட்டும், வாசல்ல குந்திட்டு இருந்தா, தூரத்தில பாத்ததனால அந்த பொண்ணோட முகம் தெரியல. சும்மா விளையாட்டுக்கு அந்த பாழடைஞ்ச வீட்டுக்கு வந்திருக்கான்னு நினைச்சிட்டு நானும், இவரும் மச்சினி வீட்டுக்கு போயிட்டோம். அந்த பாழடைஞ்ச வீட்டு பக்கம் தான் இவரோட தங்கை வீடு.

இரவு ஒரு ஏழு, எழரை இருக்கும். ஐயோ!.... என்று ஒரு பெண்ணோட கத்துற சத்தம் கேட்டிச்சு, அந்த சத்தத்தை தொடர்ந்து சிறுவர்களின் கூக்குரல். என்னாேட நெஞ்சுக்குள்ள அந்த சத்தத்தை கேட்டுட்டு, யாருக்கோ என்னமோ நடக்குதுன்னு ஒரு வித பயம் தொத்திடிச்சு,

என் புருஷனும் ஏதோ அசம்பாவிதம்னு பதறிட்டு, பாக்க வெளியே போகபோறப்ப தான்.
என்னோட மச்சினி அவரோட கையை புடிச்சு தடுத்து,

"போகாதண்ணா, அது இன்னைக்கு மட்டும் இப்பிடி சத்தம் வாரது இல்லை. ஒன்றரை வருஷமா இதே கத்தலோட தான் நாங்க இருக்கோம்." என்றாள்.


"ஆமாண்ணா.. அது ஒரு குடிகாரனோட வீடு." என்றாள்.


"இங்க எங்க வீடு இருக்கு?" என்று சந்தேகமாக கேட்ட உமாவிடம்.

"ஏன் அண்ணி வரேக்க ஒரு பழைய வீடு ஒன்னு இருந்திச்சே பாக்கலையா?.." எனும் போது தான், அந்த பாழடைந்த வீடு நினைவில் வந்தது.


"ஒரு பாழடைஞ்ச வீடு ஒன்னு இருந்திச்சே அதுவா?.." என்று கேட்டவளிடம்.


"அதே வீடுதான். பகல்ல யாருமே அந்த வீட்டில இருக்க மாட்டினம். இரவானால் இதே தொல்லை. அந்த வீட்டுக்கார அம்மா தான் பாவம். எங்கேயோ போய் பத்து பாத்திரம் தேய்ச்சு புள்ளங்களுக்கு ஆக்கி போடுது. ஒரு புள்ளை, ரெண்டு புள்ளனா பரவாயில்ல.

ஏழு முழு உருப்படிகளை பெத்து போட்டுட்டு அந்த நாதாரி நாயி பொறுப்பில்லாம, குடிச்சிட்டு வந்து அதுங்கள அடிச்சு போடுறது தான் அவனோட வேலையே.

ஒரு வேலைக்கு போறது கிடையாது. ஆனா குடிக்க மட்டும் எங்க இருந்து காசு வருதோ.
எனக்கு தெரிஞ்சு அந்த பிள்ளைங்க இரவுக்கு மாத்திரம் தான் சாப்பிடுங்க. அதுவும் அந்த குடிகாரன் வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டிடணும்.

இப்பிடித்தான் ஒரு நாள் சாப்பாட்டுக்கு வழியில்லாம எங்கெங்கோ போய் பிச்சை எடுத்தந்து, அந்தம்மா சமைச்சிட்டு, பிள்ளங்கள இருத்தி சொதியும் சோறும் பிசைஞ்சு, ஒவ்வொரு பிடி கொடுத்து, அதுங்க வாயில வைக்கிற சமயம் பாத்து, அந்த வீட்டு கடைசி பொண்ணோட கையை காலால தட்டி விட்டுட்டு.


நான் குடிக்க காசில்லாம இருக்கேன்... உங்களுக்கு சாப்பாடு கேக்குதான்னு கேட்டு, அந்தம்மா மண்டையை பக்கத்தில கிடந்த உலக்கையினால எடுத்து உடைச்சதும் பத்தாதுன்னு, சாப்பாடு முழுக்க மண்எண்ணெய் ஊத்திட்,டு சாப்பிடுங்கன்னூ மூத்த பையனுக்கு ஊட்டி விட்டுட்டான்.


அந்த அம்மா அந்த காயத்தோடையும் பையன கொஸ்பிடல் கூட்டிட்டு பாேயிச்சு. உண்மையில அதுங்க இதுக்கு பிள்ளையா பிறந்தது எவ்வளவு பாவம் தெரியுமா? வீட்டில சமைச்சு சாப்பிட மட்டுந்தான் இருப்பாங்க.

இரவில தூங்கிறது எல்லாமே கொஞ்சம் தள்ளிப்போனா, ஒரு பைரவர் கோவில் இருக்கு. அங்கதான் தூங்குங்க. ஏன்னா அந்த குடிகாரப்பயு வீட்டில இருந்த அடிச்சே சாகடிச்சிடுவான்." என்று அந்த வீட்டு கதையை கூறியவளை பார்த்த உமாவின் கணவன்.

"நீங்க இத கேக்க மாட்டிங்களா?."

"கேட்டு அவனோட அசிங்க பேச்சை யாரு கேப்பாங்களாம்?. இப்பிடித்தான் ஒருநாள் ரொம்ப ஓவரா சத்தம் போட்டான்னு, இவரு போய் கேட்டதுக்கு,
யாருடா நீ? நான் இல்லாத நேரம் நீயா இவளை வைச்சிருக்கன்னு அசிங்கமா கேட்டான்.

அதுக்கு பிறகு யாரும் கேக்க போறது கிடையாது.
மூத்த பையன் தான் தாய்க்கு அப்புறம் பொறுப்பா இருப்பான். தனக்கு கீழ இருக்கிற தங்கை, தம்பிங்களை அவன் தான் வழி நடத்துறான். உடுப்பு கழுவுறதில இருந்து, குளிக்க வைக்கிறது வரைக்கும் அவன்தான்.

அவனுக்கு வயசும் பதின்மூன்று தான். நீங்க படிப்பீக்கிற பள்ளி கூடத்தில தான் படிக்கிறான். பெயர் கூட கரன்" என்றாள்.


அவனது வயதையும், பெயரையும் யோசித்து பார்த்தவளுக்கு, அழுக்கு படிந்த உடையுடன் வரும் மாணவன் நினைவு வர,

"யாரு அழுக்கா தினமும் வருவானே அவனா?" என்றாள்.

"அவனே தான். சாப்பிடக்கூட வழியில்ல. இதில சோப்பு போட்டு துவைக்க பணம் எப்பிடி? ஒருதங்க ரெண்டு பேருனா சமாளிச்சிடலாம்... ஏழுல்ல இருக்கு. இந்த பசங்களை அந்தம்மா பள்ளிக்கு கூட அனுப்பி இருக்காது. புள்ளங்களுக்கு பசி தெரியக்கூடாது எண்டு தான் அனுப்புது.


பள்ளியில குடுக்கிற இலவச யூனிபோம் துணி தான் மாதத்தில ஒரு நாளைக்கு சாப்பாடாவே மாறும்.


இதுவரை புதுத்துணி போட்டு அறியாத புள்ளங்க. அந்த குடிகாரன் இல்லாத நேரம், என் பிள்ளங்க பழைய துணியை குடுத்தா, அவங்க முகத்தில ஒரு சந்தோஷம் இருக்கு பாரு... வறண்ட பாலை வனத்தில தண்ணீர் ஊற்றினது போல இருக்கும்."

"இப்பிடி கஷ்டபடுற பொண்ணு எதுக்கு இத்தனை புள்ளங்கள பெறணும். ?" என்று மறு கேள்வி கேட்டான் தமையன்.


"அந்தம்மா இவன் கூப்பிட்டு போகாததனால, அந்த வீட்டு நடுவில பையனை தலைகீழா தூக்கி வெட்டிடுவேன்ணு மருட்டுவான். அந்த மருட்டலுக்கு பயந்தே அந்தம்மா போயிடும். " என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, பெரிதான தண்ணீர் சத்தமும், அதைத்தொடர்ந்து பெருங்குரலெடுத்து,

"யாராவது அண்ணனை தூக்குங்க" என்று கத்திய சத்தமும் கேட்க.
இம்முறை தினமும் கேட்கும் சத்தமில்லை. இது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த உமாவின் மைச்சினி.


"என்னங்க வாங்க ஏதோ விபரீதம் ஆகிடிச்சு போல" என்றவாறு வெளியே ஓடியவளை தொடர்ந்து, மற்றவர்களும் பாழடைந்த வீட்டை நோக்கி ஓடினார்கள்.


சிறுவர்கள் எல்லோரும் அந்த இருட்டினிலும் அந்த வீட்டின், கிணற்றினை சுற்றி நின்று கத்த, அந்த வீட்டு அம்மா மட்டும்,

"யாரும் கிட்ட வாராதிங்கடா. அம்மா அண்ணாவை தூக்குறேன்." என்றவாறு,
தன் கிழிந்த புடவையை உருவியவள், நுணியினில் ஒரு முடிச்சிட்டு, கிணற்றினில் அதை இறக்கி,

"கரன் பயப்பிடாதடா! அம்மா தூக்கிடுவேன். இதை நல்லா புடிச்சுக்கோ... சரியா" என்று புடவையினை கிணற்றினில் விட்டுக்கொண்டிருக்கும் போது தான்.
உமா குடும்பம் அங்கு வந்தது.


கரனின் தாயை விலக்கி நிற்க சொன்னவர்கள். வீட்டிலிருந்து ஒரு கயிற்றினை எடுத்து வந்து, ஒரு மரத்தினில் இறுக கட்டிய உமாவின் கணவன், அதை பிடித்தபடி கிணற்றினில் இறங்கி, கரனை தூக்கியவர், வெளியே வந்து பார்க்கும் போது, அதிக நீர் அருந்தியதனால் மயக்கம் அடைந்திருந்தான் கரன்.

வயிற்றினை அழுத்தி தண்ணீரை வெளியெடுத்தவர்கள், உடனேயே கொஸ்பிடல் அழைத்து சென்றனர்.

அங்கு என்ன நடந்தது என அறியும் ஆவல் உமாவிற்கு எழ,
அந்த எழு பிள்ளைகளில் நடுத்தர சிறுமியை அழைத்தவள்.


"எப்பிடிடா அண்ணா கிணத்துக்குள்ள விழுந்தான்?" என்றாள்.


"அப்பா தான் தூக்கி போட்டார்" என்றதும் உமாவிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது. பிள்ளை இல்லை என்ற கவலை எப்படிப்பட்டது என்பது இவர்களுக்கு எங்கு தெரிய போகிறது.
என நினைத்தவள் அதை ஒதுக்கி விட்டு,

"என்னாச்சும்மா.... எதுக்கு அண்ணாவை கிணத்துக்க தூக்கி போட்டாரு அப்பா?"

"அப்பாவுக்கு எங்களை பிடிக்கவே பிடிக்காது ஆன்ட்டி! என்க கிட்ட ஒரு நாள் பாசம இருந்ததில்லை. எப்பவுமே இப்பிடித்தான் குடிச்சிட்டு வந்து, எங்களை போட்டு அடிப்பார். நாங்க வயிறார சாப்பிடுறதே இரவில மட்டும் தான். அதைக்கூட தட்டி விட்டுட்டாரு.

இன்னைக்கு அம்மாவை கத்தியால வெட்டப்போனாரு. அவரை அண்ணா தள்ளி விட்டுட்டான் எண்டு தான், அண்ணாவை கத்தக்கத்த தூக்கிட்டு வந்து கிணத்துக்குள்ள போட்டுட்டு ஓடிடாரு." என்று அழுத சின்னவளை தன் மார்புக்குள் ஒழித்து வைக்க வேண்டும் போலிருந்த தனது தாய்மை உணர்வினை அடக்கியவள்.


"சரிடா சரி! அழக்கூடாது சரியா? பாரு உன்னை பாத்து மத்தவங்க அழப்போறாங்க பாரு."


"அண்ணணுக்கு எதுவும் ஆகாதே!. அவன் உயிரோட வருவான் தானே. அவன் இல்லனா எங்களுக்கு யாரு குளிப்பாட்டுவா, யாரு உடுப்பு தோய்ச்சு போடுவா?" என கூறி மீண்டும் அழுதவளை அவளாள் ஆறுதல் படுத்த முடியவில்லை.

ஒரு வழியாக சமாதானம் செய்தவர்கள், அவர்களது தாயும், மூத்தவனுடன் கொஸ்பிடல் சென்றதனால், தங்கள் வீட்டு விறாந்தையில் படுப்பதற்கு ஒரு இடம் கொடுத்தனர்.

காலையிலேயே எதுவும் கூறாமல் தங்கள் பாட்டில் எழுந்து சென்று, பள்ளிக்கு சென்று விட்டனர்.
அதன் பிறகு நடந்த எதையும் அவளும் அறியாள்.

ஆனால் அந்த சம்பவம் மட்டும் அவள் கண்ணிலிருந்தும், கருத்திலிருந்தும் மறையவில்லை.

அவற்றை இப்போது வனிதாவிற்கு கூறும்போதும், கண்கள் கண்ணீர்கட்டி கன்னமதை நனைத்திருந்தது.

அவளையே ஆச்சரியாமக பார்த்திருந்தவள், இந்த இறுகிய முகத்திற்கு பின்னால் இத்தகைய இளகிய மனம் இருக்கும் என்று அவள் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை.

வனிதா கண்ணிற்கு உமா சிறு குழந்தையை போல்த்தான் இப்போது தெரிந்தது.
அவள் கண்ணீரின் தாக்கம் வனிதாவையும் தாக்க, அவள் கண்களும் கண்ணீர் கண்டிருந்தது.




 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
"அந்த குழந்தைங்க யாரு தெரியுமா? உங்க கிளாஸ்ல படிக்கிறாளே தருணிகா. அவளே தான்.

எல்லா பசங்களும் இந்த பள்ளியில தான் படிக்கிறாங்க.? என்றாள்.

அந்த சின்ன பெண் அப்பா அடித்தார். குடிச்சிட்டு வந்தார் என்று சொல்வது எல்லாம் உண்மை தானா? எவ்வளவு மனிதாபாமானமில்லாமல் நடந்து கொண்டாேம் என தன்னை தானே நினைக்கும் போது, அருவருப்பாக இருந்தது.

"சாரி மிஸ்! நான் நான்..." என்று தடுமாறி அவள் போக

"சாரில்லாம் தேவையில்ல மிஸ். நானும் கரன இதே போல தான் நினைச்சன். பட் நேரில பாக்கும் போது தான், உண்மை புரிஞ்சிது.
அதை விடுங்க. தருணிகாவை பத்தி சொல்லுங்க." என்றாள்.


"அவளை பத்தி சொல்ல எதுவுமில்லை. ரொம்ப பயந்த பொண்ணு... அது அவங்கட அப்பாவினால வந்திருக்கலாம். மத்தம்படி நல்ல பிள்ளை தான்."


"சந்தோஷம் மிஸ்... உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன? அவளை நான் தத்தெடுக்க போறேன். அவங்க அம்மா கூடவும் பேசிட்டன்.
அவங்க அம்மாவிக்கு, ஒரு பிள்ளையாவது எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும் என்டு ஆசை. இப்பிடி எல்லா பிள்ளைய கேட்டாலும் நான் கொடுக்க தயார் தான். என்டு அந்தம்மா கண்கலங்கி சொல்லுறப்போ, பெத்த வயிறு என்ன பாடு பட்டிருக்கும்.

எல்லாம் வறுமையும், பொறுப்பற்ற கணவனும் தான்." என்றவள்.


"டைம் ஆச்சு மிஸ்... போகலாம்." என்றவாறு விடைபெற்றாள்.

ஒரு வாரம் கழிந்திருந்தது. அனைவருக்கும் புது உடையுடன் தருணிகா வீட்டிற்கு சென்ற உமாவும், அவள் தாயிடம் அதை கொடுத்து,

"இன்னைக்கு நல்ல நாள்ம்மா... அதனால தருணிகாவை கூட்டிட்டு போகலாம்னு வந்தோம்."

"தாரளாமா கூட்டிட்டு போங்கம்மா." என்றவாறு விளையாடிக்கொண்டிருந்த தருணிக்காவினை அழைத்தவர்,


"இவங்க யாரு தெரியுமா தரு?" என்றார்.


"ஓ... தெரியுமேம்மா! ஸ்கூல்ல எனக்கு சாக்லட் தந்த மிஸ்" என்றாள்.

இவளை இறுக அணைத்து முத்தம் வைத்தவர்.
"இவங்க மிஸ் இல்லடா! உன்னோட அம்மா.. இவர் அப்பா!" என்றவரை, புரியாது பார்த்தவள்.

"நீ தானேம்மா எனக்கு அம்மா! அப்புறம் அப்பாவே எனக்கு வேண்டாம்.... அப்பா நல்லதே இல்ல" என்றாள் தந்தைமேல் உள்ள விரக்தியில்.


"இங்க பாருடா செல்லம்... இனிமேல் நான் அம்மா இல்ல. இவங்க மட்டும் தான் உனக்கு அம்மா " என்று கூறும்போது அவர் குரலானது உருக்குலைந்தே வெளிவந்தது. எங்கு தான் அழுதால், பிள்ளையின் நல்ல வாழ்க்கையினை தானே கெடுத்ததை போலாகிவிடும். என நினைத்தவளாய்,


"உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கி தருவாங்க! புது சட்டை.... பெரிய ஸ்கூல், சாக்லட், நீ என்ன கேக்கிறியோ எல்லாமே மறுக்காமல் வாங்கி தருவாங்க.... அப்புறம் இவரு பழைய அப்பா போல இல்ல... நல்ல அப்பா. உன்னை அடிக்கல்லாம் மாட்டாரு.... உன்னை கொஞ்சிட்டே வளப்பாரு."


"அப்பிடின்னா, நீயும் என்கூட வா!" என்றவளை பாவமாக பார்த்தவர்.

"நானும் வருவேன்டா... இங்க அண்ணா அக்கால்லாம் இருக்காங்கல்ல... அவங்களை வெளிக்கிடுத்தி கூட்டிட்டு வரணும்ல்ல.... நீ இவங்ககூட முன்னாடி போ! நாங்க பின்னாடியே வாரோம் சரியா?"


"ஹ்ம்ம்" என சம்மதமாக தலையாட்டியவள் கன்னங்களை, இரு கைகளாலும் தாங்கி, தன் இறுதி முத்தத்தினை அந்த பிச்சின் முகமெங்கும் வைத்தவள்,

"அம்மாக்கும் ஒண்டு தாடா செல்லம்" என்றார் வகஞ்சலாய்.

அவளது கலங்கிய கண்களை பார்த்தவள், தாயின் ஆசைப்படி அவள் இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டு,

" போதுமாம்மா!" என்றாள்.

"போதும்டா" என கண்ணீர் கலந்த புன்னகையோடே கூறியவள், கரனை அழைத்து,

"உனக்கு அம்மா சொல்லிருக்கேன்லடா....! " என தன் மகனுக்கு கண் காட்டியவள் பேச்சு புரிந்தவனாய், தானும் தன் தங்கைக்கு தன் இறுதி முத்தத்தினை பதித்து பிரியாவிடை அழித்தவன்,


"ஸ்கூல்ல பேசிக்கிறாங்களே மிஸ்! நீங்க ஊரை விட்டு போகப் பாேறதா... உண்மையா?"


"ஆமாப்பா! இனி இங்க இருக்கிறது சரி வராது.... யாருக்கும் தெரியாத ஊருக்கு போறோம்." என்றதும், தன் தங்கைய இனி பார்க்க மாட்டேனா என ஏக்கம் கொண்டவனாய். மீண்டும் அவளை வாரி அணைத்து முத்தம் வைத்தவன்,

"போயிட்டு வா தரு... அண்ணாவை மறந்திடாதடா!" என கையசைத்து விடை கொடுதவனை வாரி அணைத்து கதறத்தொடங்கினாள் அவன்
அன்னை.



பிள்ளைச்செல்வம் என்பது எத்தகைய விலை மதிப்பில்லாத செல்வம். ஒரு சமுதாயத்தில ஒருவரது மதிப்பே அவர்களது பிள்ளை செல்வத்தினை வைத்து மதிப்படப்படுகிறது.

அப்படிப்பட்ட செல்வத்தை உங்கள் குடி போதையினால் அவர்களது எதிர்காலத்தினை சிதைத்து விடாதீர். இந்த தருணிகாவினைப்போல் குழந்தைக்கு, உமா போல் அன்னை எல்லோக்கும் அமைத்து விடாது.


முற்றும்.....
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
அருமையான கதை..
குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது
 
  • Like
Reactions: Balatharsha

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
128
43
Tanjur
சூப்பர் மா.. நெகிழ்ந்து போய் விட்டேன்..
இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் கதை மேலும் அருமையாக இருந்திருக்கும்
வாழ்த்துக்கள் மா
 
  • Like
Reactions: Balatharsha

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
சூப்பர் மா.. நெகிழ்ந்து போய் விட்டேன்..
இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் கதை மேலும் அருமையாக இருந்திருக்கும்
வாழ்த்துக்கள் மா
நன்றி டியர்
சூப்பர் மா.. நெகிழ்ந்து போய் விட்டேன்..
இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் கதை மேலும் அருமையாக இருந்திருக்கும்
வாழ்த்துக்கள் மா
 

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
அருமையான கதை..
குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது
நன்றி ஓனர்
அருமையான கதை..
குடிப்பழக்கம் ஒரு குடும்பத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது
நன்றி ஓனர்