• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் 2

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 2

தனக்கு முன்பு தன் தம்பி திருமணம் நடப்பதில் ஒரு துளி கூட வேதனை இல்லை மலருக்கு.

ஒரு பெண் வாழ்வு தன் வாழ்வு போல் மாறாமல் காப்பாற்ற பட்ட சந்தோஷம்.

ஊரில் உள்ள அனைவருமே ஒன்று கூடி விட்டனர். திருமணம் என்பது வெறும் சடங்காக மட்டுமே நடந்து கொண்டிருந்தது அங்கு. சிம்பிளாக தான் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வந்திருந்த பாதி பேர் “மலர் திருமணம் செய்யாமல் இருக்கும் போது அதுக்குள்ள எதுக்கு தம்பிக்கு கல்யாணம் பண்றீங்க?” இதே கேள்வியை தான் கேட்டு இதில் திருமணத்துக்கு வந்த அனைவரும் மலர், அறிவை நோகடித்தனர்.

“டேய் உனக்கு என்ன டா அவ்வளவு அவசரம்? இந்த கஸ்தூரியை விட்டா ஊருக்குள்ள வேற பொண்ணு கிடைக்காதா? அக்கா இருக்கும் போது அதுக்குள்ள மாலையும் கழுத்துமா வந்து நிக்கிற?” அவனை தாங்க வார்த்தைகளால் குத்தி கிழிக்க அறிவு யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் மேடையில் அமர்ந்து இருந்தான்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்த அறிவுக்கு உறவு காரர்களில் பேச்சில் மேலும் மனம் உடைந்து போனது.

“பெரியம்மா அமைதியா இருங்க. இவன் இன்னைக்கு கஸ்தூரியை வேண்டாம்னு சொல்லிட்டால் நாளைக்கு அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா? அப்படியே பண்ணிகிட்டாலும் நீ வேற ஒருத்தன் கூட பல வருஷம் பழகியவள் தான் னு தினம் தினம் சாகடிப்பான். எல்லாரும் அமைதியா இருங்க. நடக்குற கல்யாணத்தை நிம்மதியா நடக்க விடுங்க. கஸ்தூரி மனசு வேதனை படுற மாதிரி யாரும் பேசக்கூடாது. அவுங்க கல்யாணத்தில் அவர்களுடைய மொத்த சந்தோஷத்தையும் அழிச்சிடாதீங்க.” மலர் தனியொரு பெண்ணாக அந்த கூட்டத்தில் கம்பீரமாக பேச அனைவரும் வாய் மூடிக் கொண்டனர்.

மலர் பெயருக்கு தகுந்தாற் போல் பூவை போன்றவள் தான். ஆனால் கோபம் வந்து விட்டால் விலாசி விடுவாள். புயலுக்கு முன்பு இருக்கும் பேரமைதி போன்றது அவள் குணம்.

கஸ்தூரி, அறிவு இருவரும் மலரை நன்றியோடு பார்த்தனர். காமாட்சி, ஏழுமலை
இருவரும் யார் வீட்டு கல்யாணம் என்பது போல் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தனர்.

தம்பி கல்யாணத்தை முழுக்க முழுக்க மலர் தான் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறாள்.

அறிவு தாலியை கையில் பிடித்தவன் தன் அக்காவை நிமிர்ந்து பார்த்தான்.

“கட்டு அறிவு. எந்த யோசனையும் வேண்டாம்.”
முழுமனதாக கூறினாள்.

அறிவு தன் நீண்ட வருட காதலியை மனைவியாக மாற்றிக் கொள்ளும் தருணத்தில் சந்தோஷமாக இல்லை. கஸ்தூரிக்கு தாலி கழுத்தில் ஏறியதும் சிறு நிம்மதி மட்டுமே தவிர சந்தோஷம் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்ததே போதும் என்ற நிம்மதியில் இருந்தார்களே தவிர நடந்து முடிந்த திருமணத்தை நினைத்து சந்தோஷம் இல்லை இருவர் முகத்திலும்.

“உன் தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி உனக்கு எங்க கல்யாணம் ஆகப்போகுது?.

நீ இப்படியே இருக்க வேண்டியது தான். சாகுற வரைக்கும் கன்னி பொண்ணாவே சாக வேண்டியது தான்.

இனி உன் தலை எழுத்தில் கல்யாணம் என்ற வார்த்தையை இல்லை போல. உன் தம்பி பெத்து போடுற பிள்ளைகளுக்கு ஆயா வேலை பாரு. அதுக்கு தான் நீ 5பிறந்து இருக்க.

உன் முன்னாடியே உன் தம்பியும், தம்பி பொண்டாட்டியும் ஜோடி போட்டு சந்தோஷமா இருக்க போறாங்க. நீ அவுங்களை பார்த்து கண்ணீர் வாசிக்க போற.

எந்த நேரத்தில் பிறந்தியோ உனக்கு இப்படி ஒரு நிலமை.

உன் அப்பா, அம்மா என்ன பாவம் பண்ணாங்களோ தெரியல.

ஒரு பய உன்னை கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டேங்குறான். நீ பிறந்த நேரம் சரி இல்லை போல.”

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையால் மலரை துடிக்க வைத்தனர். பத்து பேர் சேர்ந்து அடித்தால் கூட அந்த காயம் சீக்கிரம் ஆறிவிடும். ஆனால் வார்த்தைகள் கொடுக்கும் காயம் தான் மனிதனை கோழையாக்குகிறது.

புது திருமண ஜோடிகளை ஆசிர்வாதம் பண்ணுவதை விட்டு ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் மலரிடம் கொட்டி அவளை நெருப்பில் நிற்க வைத்தனர்.

“இனி உன் வாழ்க்கையில் கல்யாணம் நடக்காது. மலர்னு பெயர் வச்சதுக்கு பதில் துரதிஷ்டம்னு பெயர் வச்சி இருக்கலாம்.” மனசாட்சியே இல்லாமல் அவள் அத்தை வார்த்தையை விட,

இதயத்தில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் துடி துடித்து போனாள். தன் வலியை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே நின்று இருந்தாள். கண்ணீர் கரைபுரண்டு ஓட காத்திருந்தாலும் லாவகமாக கண்ணீரை மறைத்து பொய்யாக சிரித்தபடி தன்னை கேலி கிண்டல் செய்தவர்களை கூட சிரித்த முகமாக பேசி சமாளித்தாள். அன்பாக உபசரித்தாள்.

அனைவரையும் அடக்க வேண்டிய பெற்றவர்களோ யார் வீட்டு கல்யாணமோ என்பது போல ஒரு மூலையில் நின்று இருந்தனர்.

மலரை பேசிய வார்த்தைகள் அனைத்தும் அறிவு, கஸ்தூரி காதிலும் விழுந்தது. நாம் ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு அவர்கள் பத்து வார்த்தை பேசுவார்கள். அதனால் அமைதியாக இருந்தனர்.

எது எப்படியோ திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

மலர் வீடு சிறிய ஓட்டு வீடு என்பதால் தங்குவது பிரச்சனையாக அமைந்தது. அந்த வீட்டின் சிறு பகுதியை பிரித்து ஸ்கிரீன் போட்டு மூடி தான் மலர் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

இரவு அனைத்தையும் ஏற்பாடு செய்தவள் “கஸ்தூரி நம்ம வீட்ல ரூம் கிடையாது. அது உனக்கும் தெரியும். இந்த இடத்தில் நீயும், அறிவும் தங்கிக்கோங்க. நான் வெளியே படுத்துகிறேன்.” கஸ்தூரியை அதே இடத்தில் விட்டு விட்டு தனக்கு ஒரு போர்வை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் கொண்டாள்.

காமாட்சி, ஏழுமலை இருவரும் அங்கு தான் படுத்து இருக்க மகளை கண்டதும் காமாட்சி வெடுக்கென எழுந்து அமர்ந்தவர்,

“வந்த அன்னைக்கே உன்னை வெளியே துரத்தி விட்டுட்டாளா?” என்றார் அலங்காரமாக.

“அப்பா தேவை இல்லாததை பேசாமல் தூங்க சொல்லுங்க. சத்தம் போடாதீங்க.” தாயை விட்டு தந்தையிடம் கூறி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

“காமாட்சி இன்னைக்கு ஒரு நாள் உன் வாய மூடிட்டு படு டி. இல்லனா நான் மனுசனா இருக்க மாட்டேன்.”

கணவன் அதட்டலில் அவர் அமைதியாக இருந்து கொண்டார்.

மலர் நல்ல தூக்கத்தில் இருக்க அவள் அருகில் யாரோ படுப்பது போல் உணர்ந்தவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

“கஸ்தூரி நீ எதுக்கு இங்க படுக்குற?” அதிர்ச்சியாக கேட்டாள்.

“நானும் உங்க கூடவே தூங்குறேன். உங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு நான் மாமா கூட தூங்குறேன்.” என்றவள் தன் கையை தலையணையாக்கி படுத்துக் கொண்டாள்.

மூவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

“அக்கா கஸ்தூரியை அழைச்சிட்டு போய் நீ உள்ள படு. நான் திண்ணையில் வழக்கம் போல படுத்துகிறேன்.” என அறிவு வந்து நின்றான்.

நேரங்கெட்ட நேரத்தில் பேச்சை வளர்க்க விரும்பாதவள் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அறிவு மல்லாக்க படுத்தவன் முகத்தில் ஆத்மார்த்தமான நிம்மதி.

இருவரும் நடந்த உரையாடலை நினைத்து சிரித்தான்.

“மாமா உங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நம்ம தனி தனியா இருக்கலாம்.
அவுங்களை வெளியே படுக்க வச்சிட்டு நான் உள்ள படுத்து இருக்குறது எனக்கு அசிங்கமா இருக்கு. நமக்காக அவுங்க நிறைய நல்லது செய்து இருக்காங்க. அவுங்களுக்கு ஒரு நல்லது நடக்கட்டும். அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையை தொடங்குவோம்.” கஸ்தூரி தயங்கியபடி கூறினாள்.

கணவன் பதில் என்னவா இருக்கும் என்று கூட கஸ்தூரி எதிர்பார்க்கவில்லை. தகவலை கூறி விட்டு வெளியே வந்து விட்டாள்.

அறிவும் அவளிடம் இதையே தான் கூற நினைத்தான். அவளே கூறியதில் ஆத்மார்த்தமான நிம்மதி.

கஸ்தூரி செய்த செயலில் காமாட்சி அமைதியாகவே இருந்தார். கஸ்தூரி பொறுப்பாக வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே செய்தாள். மலருக்கு எந்த வேலையும் வைக்கவும் இல்லை. விடவும் இல்லை. காலை, மதியம் இரண்டு வேலைக்கும் சமைத்தவள் மூவருக்கும் சாப்பாடு கட்டி வைத்து “மாமா வேலைக்கு நேரமாச்சு கிளம்பலாமா?”

“போகலாம் டி” என்றவன், “அக்கா வா.”

“அறிவு நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் பின்னாடியே வர்றேன்.”

“நீங்களும் வாங்க அண்ணி. எதுக்கு பின்னாடி வரணும். மாமா நீங்க கிளம்புங்க. நான் அண்ணி கூட வரேன்.”

“உங்க விருப்பம்.” இருவரையும் விட்டு விட்டு அறிவு கிளம்பி விட்டான்.

“நீ அவன் கூட பேசிகிட்டே போவன்னு தான் நான் பின்னாடி வர னு சொன்னேன். நீ அவனை அனுப்பிட்ட.” ஆதங்கமாக கூற,

“நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு போகலாம் வாங்க. மாமா போய் வேலையை பார்க்கட்டும்.” சிரித்தபடி கூறியவள் மலருடன் நடந்தாள்.

காமாட்சி கஸ்தூரி யை வியப்பாக பார்த்தாள்.
காமாட்சி மகளிடம் பாசமாக பேசி பல வருடங்கள் ஆகி விட்டது. அவளின் திருமணம் தடைப்பட்டு போனதில் இருந்து அந்த கோபத்தை முழுக்க அவளிடம் காட்டி மகள் மொத்தமாக பேச்சை நிறுத்திக் கொண்டாள். நீண்ட நாட்களுக்கு பிறகு மலர் சிரித்து பார்க்கிறார்.

அறிவு வேலை செய்யும் இடத்திற்குள் நுழைய “என்ன டா புதுமாப்பிள்ளை. அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட? நீ வர பத்து நாள் ஆகும் னு நினைத்தோம்.” அவன் நண்பர்கள் அவனை கிண்டல் செய்ய,

“பத்து நாளைக்கு என் குடும்பத்துக்கு யார் சோறு போடுறது?.”

“உன் அக்கா இருக்கே. அது வேலைக்கு வர போகுது. இப்போ என்ஜாய் பண்ணல னா எதிர்காலத்தில் நீ வருத்தப்படுவ டா.”

“எந்த வருத்தமாக இருந்தாலும் நான் பாத்துக்குறேன். மூடிக்கிட்டு போய் உங்க வேலையை பாருங்க. உங்களை மாதிரி இல்ல டா நான். என் அக்கா எங்களுக்கு எதுக்கு சம்பாரித்து கொடுக்கணும்? காலையிலேயே வம்பு இழுத்து என் கிட்ட அடி வாங்காமல் போய் பொழப்ப பாருங்க.” என விரட்டி அனுப்பி விட்டவன் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

இதே கதை தான் கஸ்தூரி இருக்கும் இடத்திலும். அவளையும் அவள் தோழிகள் வேண்டும் என்றே கிண்டல் செய்ய அவர்களை திட்டி துரத்தி விட்டுவிட்டாள்.

திருமணமாகி இரண்டு வாரங்கள் ஓடியது. தாய் வீட்டில் இருந்து விருந்துக்கு அழைத்ததற்கு கூட கஸ்தூரி வர முடியாது என்று மறுத்து விட்டாள்.

“கஸ்தூரி நீங்க ரெண்டு பேரும் மாசாணி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க. நான் எல்லா வேலையும் பார்த்துக்கிறேன்.” மலர் கூறவும்,

“நீங்களும் வாங்க.” என அவளையும் அழைத்தாள்.

“நான் எதுக்கு லூசு சிறுக்கி. நீயும் அறிவும் மட்டும் போயிட்டு வாங்க. கிளம்புங்க. பூ வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன். எடுத்து வச்சுக்கோ.” என கூறியவள் பாத்திரங்களை கழுவி கவுத்தாள்.

“அக்கா நாங்க போயிட்டு வரோம்.” இருவரும் கிளம்பி செல்ல, “மலர் ஏதாவது வாங்கிட்டு வரணுமா? நான் கடை பக்கம் தான் போறேன்.” என அவளிடம் கேட்டபடி அவள் தந்தை வந்து நின்றார்.

“இல்ல அப்பா போயிட்டு வாங்க.” என்றவள் ஈரக் கையை புடவை முந்தானையில் துடைத்தபடி துடைப்பத்தை தேடினாள்.

அறிவு, கஸ்தூரி இருவரும் முதல் முறை வெளியே வந்து இருக்கின்றனர். மனதார அம்மனை வழி பட்டவர்கள் கோவிலை சுற்றி விட்டு வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்.

“கஸ்தூரி இப்படி உட்கார்.”

“மாமா பஸ் வருது பாருங்க. வாங்க கிளம்பலாம்.”

“வரட்டும் நம்ம பொறுமையா போகலாம். கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம். முதல் முறை ரெண்டு பேரும் வெளியே வந்து இருக்கோம் டி.”

“ஆமா மாமா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதே மாதிரி உங்க அக்காவும் அவுங்க புருஷன் கூட சந்தோஷமா இருக்கணும் மாமா.”

“நானும் அக்காவுக்கு தெரிஞ்ச எல்லா இடத்திலும் மாப்பிள்ளை பாத்துட்டு தான் இருக்கேன். எதுவும் சரியா அமையல.”

“நம்ம உள்ளூரிலேயே தேடுறோம் மாமா. இனி வெளியூர் ல தேடுவோம். கண்டிப்பா அவங்க நல்ல மனசுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்.” கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோவில் மணி அடித்தது.

“மாமா பாருங்க நான் சொன்னது தான் சரி. சாமி கூட சொல்லிடுச்சு.” ஆனந்தமாக கூறினாள்.

அதே நேரம் “எனக்குன்னு ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்காமல் விட்டது என் தப்பு தான் டா. நேரா நேரத்தில் எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி இருந்தேனா இன்னைக்கு எனக்குன்னு ஒரு குடும்பம் இருந்து இருக்கும்.
இன்னைக்கு 42 வயதில் தனி மரமாய் நிக்கிறேன்.” என ஒருவர் போனில்
பேசியபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார்.

அறிவு ஆரம்பத்தில் கேட்டவன் அதன் பிறகு வேடிக்கை பார்க்க தொடங்கினான். ஆனால் கஸ்தூரி காதை கூர்மையாக்கி கேட்டாள்.

தொடரும்......
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இந்த ஊர் வாயை என்ன சொல்ல... பேசியே கொன்னுடுவாங்க 😬

யாருடா இது புது என்ட்ரி 🧐

இவன் தான் மலருக்கான ஜோடியா 🤔

இவனோட பின்புலம் என்னவா இருக்கும் 🤔

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK9

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
ச்சே ச்சே என்ன ஜென்மம் இந்த மக்கள்
மலர் அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல என்ன அம்மாவோ
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
மனுஷனங்கள போல கேவலமான ஜந்து வேற எதுவும் இல்லை 😑😑. அவ மனசு என்ன பாடுபடும் பாவம் மலரு