• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் 4

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
மலர் - 4

கஸ்தூரி கூற்றில் உள்ள உண்மை அறிவை சுட்டது.

‘இப்படியே வெறுமையாக வாழ்வதற்கு, ஒரு முறையாவது ஜாதகம், பூசாரி, பரிகாரம் அனைத்தையும் உடைத்து வெளியே வரட்டும். ஒருவேளை இவரை பிடித்து இருந்தால் இவருடனே அக்கா வாழட்டும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.’ என நினைத்துக் கொண்டான்.

“என்ன காமாட்சி உன் பொண்ணுக்கு ஜாதகம் பாத்தியே என்ன சொன்னாங்க. காலம் விடிந்ததா? இல்லை இப்படியே முதிர்கன்னியா வாழ வேண்டியது தானா? உன் பொண்ணுக்கு அதுக்குள்ள கிழவி தோற்றம் வந்துடுச்சு. இனி யாரும் கட்டிக்க மாட்டாங்க. ஏதாவது இரண்டாம் தாரமா பார்த்து தள்ளி விடு டி.” காமாட்சி தோழி வாய்க்கு வந்த படி யோசனை என்ற பெயரில் கண்டதை பேசினார்.

மலர் அனைத்தையும் கேட்டுக் கொண்டு திண்ணையில் தான் அமர்ந்து இருந்தாள். உள்ளம் வலிக்கத்தான் செய்தது. அவள் உள்ளுணர்வுகள் துடிக்க தான் செய்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பேசி பேசி வாய் தான் வலிக்கிறது பாவைக்கு. ஊரார் வாய் மற்றும் ஓய்வதாக தெரியவில்லை.

அனுதாபம் பாசம் என்ற பெயரில் கோழிக்கு இரை தூவுவது போல் வருபவர் போவோர் வாய்க்கு வந்ததை நான்கு வார்த்தை பேசி விட்டு தான் சொல்கின்றனர். அனைத்தையும் கடந்து தான் வாழனும் என்று தன்னை பழக்கி கொண்டாள்.

மலர் தனக்காக ஒரு வார்த்தை பேசினால் அவளை காயப்படுத்த எதிரில் இருப்பவர் வாய்க்கு வந்ததை பேசி அவள் உணர்வுகளை உயிரோடு கொன்று புதைத்து விடுகின்றனர்.

“நீ வேற எதுக்கு டி எரிச்சலை கிளப்புற?? நாங்க குழந்தையுடன் இருந்தாலும் பரவாயில்லை னு பேசி பார்த்துட்டோம். கல்யாணம் ஆகி பிள்ளையோடு இருக்கவனுக்கு கூட வயசுல சின்ன பொண்ணா இளம் முகமாக தான் வேணுமாம் டி.” பாரத்தை பகிர்ந்து கொள்வதாக நினைத்து தன் மகளை அல்லவா கேவலப் படுத்துகிறார்.

தாய் வார்த்தைகளை கேட்டு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கோடாக இறங்கியது.

“உனக்கு நான் பாரமா இருக்கேனா சொல்லிடு. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். என் உடம்பில் உயிர் இருக்க வரைக்கும் உழைத்து சாப்பிட்டுப்பேன். கல்யாணம் பண்ணா தான் நம் உயிரோடு இருப்பேன்னு சொல்லவே இல்ல. இன்னொருத்தன் நிழல்ல வாழனும்னு எனக்கு அவசியம் கிடையாது.” என்றாள் தன் கண்ணீரை துடைத்து அழுத தடத்தை மறைத்து.

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் கிடையாது டி. இந்த ஊர்ல 37 வயசு வரைக்கும் யாராவது கழுத்துல தாலி ஏறாமல் கன்னியா இருக்காங்களா டி? எந்த நேரத்தில் பிறந்தியோ உனக்கு கல்யாண கிரகமே அமையவே இல்லை.”

“எனக்கு அமையலையா? இல்லை நீ அமைக்கலையா? எத்தனை பேர் பொண்ணு கேட்டு வந்தாங்க. அத்தனை பெயரையும் ஏதாவது நொட்டம் சொல்லி துரத்தி விட்டது நீ தானே. இப்போ என்னை குறை சொல்றியா? இன்னைக்கு 37 வயசு வரைக்கும் நான் கல்யாணம் ஆகாமல் இருக்க நீ மட்டும் தான் காரணம்.” தாய் முகத்துக்கு நேராக மனதில் உள்ள அனைத்தையும் கொட்டியவள் தான் பின்னிக் கொண்டிருந்த கூடையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

காமாட்சி தோழி தான் நினைத்து வந்த காரியம் சிறப்பாக நடந்த திருப்தியில்
“ உன் பொண்ணுக்கு திமிர் அதிகம் தான் காமாட்சி. அவளுக்காக ரா பகலா நீ அழற ஆனா உன்னையே எப்படி எடுத்தெறிந்து பேசிட்டு போறாள் பாரு. இவள் இப்படி இருந்தால் 50 வயசு ஆனாலும் கல்யாணம் ஆகாது. என்னமோ போ. உன்னை நினைச்சு தான் கவலையா இருக்கு.” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நடிப்பை கொட்டி தள்ளி விட்டு உள்ளே குளிர்ந்த முகத்துடன் தன் நடையை கட்டினாள்.

உண்மையில் கல்லெறிந்து கலங்க வைத்த குட்டையில் நாமும் கொஞ்சம் எரிந்து கலங்க வைப்போம் என்று உயரிய பண்பு கொண்ட நல்லவர்கள் உள்ள மண் இது.

மலர் என்ன தான் வெளியே வீரமாக பேசினாலும் தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவள் மனம் மட்டும் கல்லால் செய்ததா? அதற்கு வலிக்காதா? ரத்தமும், சதையுமாக உயிருடன் துடிக்கும் இதயத்திற்கு வலிக்காமல் இருக்காதே, சத்தம் போடாமல் வாய் மூடி கதறினாள். இதய துடிப்பின் சத்தம் கூட காதுகளை தீண்டி விடும். ஆனால் குருதி வழியும் சத்தம் அவள் கார்ஜிகளையே தீண்டாது. அவளின் தேமல் சத்தம் கூட வெளியே கேட்காமல் சத்தமில்லாமல் தன் வலி தீரும் வரை அழுதாள். அதை தவிர வேறு வழியில்லை. இதுவரை வேறு உபாயமும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வேலை இருந்தால் தன் வேதனையை மறந்து விடுவாள். இரவில் எதுவும் வேலை இல்லாமல் முலையில் சுருண்டு படுத்து கொண்டாள்.

கஸ்தூரி, அறிவு இருவரும் வீட்டில் இதை பற்றி எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவர் வரவில்லை என்றால் என்ன செய்வது. தேவை இல்லாமல் மலர் மனதில் ஆசை வளர்த்து அதை வாடிபோக செய்ய விருப்பம் இல்லை.

அவர் வந்தால் ஏதுவாக இருந்தாலும் நேரடியாக பேசிக் கொள்ளலாம் என்று இருவருமே அமைதியாக இருந்து விட்டனர்.

அடுத்த நாள் கஸ்தூரி சமையலை பார்த்துக் கொள்ள மலர் வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.கோலத்தில் கவனமாக இருந்தவள் தன் அருகே ஒருவர் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கூட உணராமல் ஆர்வமாக ரங்கோலி ரசித்து வரைந்து கோலம் போடுவது மிகவும் பிடித்த ஒன்று மலருக்கு.

அவளின் உள்ளுணர்வு உந்தி தள்ள விழிகளை மெதுவாக திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள். செருப்பு கால் தெரிய, அதுவும் பக்கத்தில் தெரிய கொஞ்சம் கொஞ்சமாக விழிகளை உயர்த்தியவள் வசீகரனின் கம்பீரமான தோற்றத்தில் மெய் மறந்தாள்.

யாரை பார்த்ததும் வியந்தது கிடையாது. எதிலும் மனம் லயித்தது கிடையாது. ஆனால் அவனிடம் பார்வையும், மனமும் குளிரில் உறைந்த ரோஜா போல் உறைந்து போனது.

தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டு கண்களை சிமிட்டியவள் “யார் நீங்க? யாரை பார்க்கணும்?” பொறுமையாக கேட்டாள்.

குளித்து தலைக்கு துண்டு கட்டி பழைய நைட்டி ஒன்று அணிந்து கோலமாவு டப்பாவுடன் நின்று இருந்தவளை மெல்லிய புன்னகையோடு பார்த்தவன் அவளை பார்த்த முதல் பார்வையில் அவளிடம் தொலைந்து போனான்.

“நான் வசீகரன். உன் தம்பியை பார்க்க வந்தேன்.” உரிமையாக பேசினான்.

இத்தனை காலையில் இவ்வளவு நீட்டாக போலீஸ்காரர் மாதிரி ஒருவர் தன் தம்பியை பார்க்க வந்துள்ளாரா? அவளால் நம்ப முடியவில்லை.

“என்னமா அப்படி பாக்குற?”

“உங்களை மாதிரி யாரும் எங்க வீட்டுக்கு வந்தது கிடையாது. அதான் நம்ப முடியல.” உண்மையை மறைக்காமல் கூற, அதற்கும் மென்மையாக சிரித்தவன் “உங்களை மாதிரின்னா புரியலையே?!” அவளிடம் பேச வேண்டும் என்றே வார்த்தையை வளர்த்தான்.

“இல்லைங்க.. எப்பவும் அழுக்கா, குளிக்காமல், பாதி போதை தெளியாமல் தான் யாராவது வந்து என் தம்பியை தேடுவாங்க. அதுவும் சாயந்திரம் தான் தேடுவாங்க. முதல் முறை உங்களை மாதிரி நாகரீகமான ஒருத்தர் என் தம்பியை தேடி வரீங்க. அதான் என்னால நம்ப முடியல.” இயல்பாக தன் தம்பியின் நட்புறவை புகழ்ந்து பேசினாள்.

தன் அக்கா பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டே வந்தவன் வசீகரனை எதிர்பார்க்கவில்லை.

“சார்…!! வாங்க. உள்ள வாங்க.” இன்ப அதிர்ச்சியாக வரவேற்றான்.

“அக்கா… வந்தவங்களை வெளியே நிக்க வச்சு பேசிட்டு இருக்கியே. உள்ள அழைச்சிட்டு வந்தா என்ன?” தன் அக்காவை கடிந்து கொண்டான்.

“அறிவு உண்மையாவே இவரை உனக்கு தெரியுமா?” அப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.

“அக்கா அமைதியா இரு.” கடுப்பில் பல்லைக் கடித்தான்.

“சார். அக்கா அப்படி தான் நீங்க உள்ள வாங்க.” அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றவன் “கஸ்தூரி வசீகரன் சார் வந்து இருக்காங்க.” என சத்தமாக குரல் கொடுத்தான்.

“அவரா…??” நம்பிக்கை இல்லாமல் ஓடி வந்தவள் புன்னகையோடு நின்று இருந்தவரை கண்டு உண்மையில் உள்ளம் குளிர்ந்து போனாள்.

பாயை எடுத்து போட்டவள் “சார் உக்காருங்க. இருங்க சுடு காபி எடுத்துட்டு வரேன்.” என அவசரமாக அடுப்படி நோக்கி ஓடினாள்.

‘என்னடா இது இவுங்க ரெண்டு பேருக்கும் இவரை தெரிந்து இருக்கு. அப்போ இவர் தம்பிக்கு தெரிந்தவர் கிடையாது. கஸ்தூரி உறவு போல.’ என நினைத்துக் கொண்டவள். கஸ்தூரிக்கு உதவி செய்ய சென்றாள்.

பால் வாங்க சென்ற காமாட்சியும் வந்து விட நாடு வீட்டில் மிடுக்காக அமர்ந்து இருந்தவரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே “கஸ்தூரி பால் இந்தா.” என்றார்.

“நல்லது பாலே வந்துடுச்சு.” என வேகமாக டீ போட்டவள் மலர் கையில் கொடுத்து “இதை எடுத்துட்டு போய் அவர் கிட்ட கொடுங்க. போங்க.” என அவரமாக தள்ளி விட்டாள்.

கஸ்தூரி யை வித்தியாசமாக பார்த்த மலர் ஏன் என்று கேள்வி கேட்கும் முன்னே வசீகரன் அருகில் வந்தவள் “சார் இந்தாங்க.” என்று அவரிடம் கொடுத்தவள் தம்பி அருகில் நின்று கொண்டாள்.

வசீகரன் டீயை பார்த்தவன் “ரொம்ப அழகா இருந்துச்சு.” என்றான்.

காமாட்சி வசீகரனை விசித்திரமாக பார்க்க “டீ நான் போடல சார். கஸ்தூரி போட்டது.” அவன் டீயை கூறுகிறான் என நினைத்து மலர் கூறினாள்.

“நான் நீங்க போட்ட கோலம் அழகா இருந்துச்சு ன்னு சொன்னேன்.” என்றான் டீ குடித்தபடி.

மலர் மெல்லிய வெட்கத்தோடு குனிந்து கொண்டாள். முதல் முறை ஒருவரின் பாராட்டை கேட்கும்போது மனம் குதூகலிக்க தானே செய்கிறது.

“எப்பா நீ யாரு? எதுக்கு இப்போ என்ன என்னமோ பேசிட்டு இருக்க?” காமாட்சி இருவரையும் பேச விடாமல் குறுக்கிட்டார்.

“இவுங்களை யார் வாயை திறக்க சொன்னது.” என கஸ்தூரி கடுப்பாக அருகில் வர “நானே சொல்றேன் தங்கச்சி இரும்மா.” கஸ்தூரியை தடுத்தவன்,

“என்னுடைய பெயர் வசீகரன். ஆர்மியில் இருந்து ஓய்வு பெற்றவன். வயது 42 ஆகுது. சொந்தமா சிமெண்ட் கடை வச்சிருக்கேன். உங்க பொண்ணை பொண்ணு கேட்டு வந்து இருக்கேன். எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சு இருக்கு. பார்த்ததும் பிடிச்சு போச்சு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன். இனி நீங்க தான் சொல்லணும்.” காமாட்சி முகத்துக்கு நேராக நெற்றி பொட்டில் அடித்தார் மாதிரி பேசி காமாட்சியை ஆடி போக செய்தான்.

காமாட்சி ஆடி போனாரோ தெரியாது மலர் தான் ஆடி போனாள்.

நம்பிக்கை இல்லாமல். அவள் மனதில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ விளையாடுகிறார்கள் என்றே அவள் மனம் நினைத்தது. அவள் கடந்து வந்த வலிகள் அப்படி அவளை யோசிக்க வைத்தது.

“அறிவு இவர் என்ன சொல்லிட்டு இருக்கார்?”

“அவுங்க சரியா தான் சொல்றாங்க. இவுங்க கிட்ட நேத்து நாங்க பேசிட்டு அட்ரஸ் கொடுத்துட்டு வந்தோம்.” கஸ்தூரி பதில் கூற,

மலர் அமைதியாக நின்று இருந்தாள். மனதுக்குள் ஒரு படபடப்பு, பதட்டம், பயம்.
ஆனாலும் தன்னை சாதாரணமாக தான் காட்டிக் கொண்டாள்.

தொடரும்......
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆஹா மாப்பிள்ளை சத்தமில்லாம வந்து பொண்ணையும் அவ போட்ட கோலத்தையும் ரசிச்சதுமில்லாம நெத்தியில அடிச்ச மாதிரி நேருக்கு நேரா பொண்ணைக் கேட்டுட்டாரே 🤩🤣

மலரும் கண்ணும் கண்ணும் நோக்கியா 🤣🤣 முதல் பார்வையிலேயே விழுந்துட்டா😍

இந்தக் காமாட்சி எதுவும் பேசிக் கெடுத்துவிடாம இருந்தா சரி 🤔
 
  • Like
Reactions: MK9

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
இந்த காமாட்சி எதுவும் சொதப்பாம இருந்தா சரி
 

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
ஆஹா மாப்பிள்ளை சத்தமில்லாம வந்து பொண்ணையும் அவ போட்ட கோலத்தையும் ரசிச்சதுமில்லாம நெத்தியில அடிச்ச மாதிரி நேருக்கு நேரா பொண்ணைக் கேட்டுட்டாரே 🤩🤣

மலரும் கண்ணும் கண்ணும் நோக்கியா 🤣🤣 முதல் பார்வையிலேயே விழுந்துட்டா😍

இந்தக் காமாட்சி எதுவும் பேசிக் கெடுத்துவிடாம இருந்தா சரி 🤔
Tq ka
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
மாப்பிள்ளை நீரு பலே கில்லாடியப்பா