• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மலர் 7

MK9

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
16
20
18
Tamil nadu
- 7

“அண்ணா நீ பண்ணிட்டு இருக்கது கொஞ்சம் கூட நல்லா இல்ல. முடி நரைத்து போச்சு. இனி எதுக்கு உனக்கு கல்யாணம்? அப்படி என்ன கல்யாண ஆசை உனக்கு?”மூத்த தங்கை கேள்வியில் விரக்தியாக சிரித்தவன்,

“நீங்க மூன்று பேரும் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” அவனோ எதிர் கேள்வி கேட்டான் கண் மூடியபடி.

இதை கேட்க விருப்பம் இல்லை தான். ஆனால் அவர்கள் நேரடியாக கூறவில்லை என்றாலும் அண்ணன் திருமணம் உடல் சுகத்துக்காக மட்டும் தான் என்று அல்லவா மறைமுகமாக குறிப்பிடுகின்றனர்.

அண்ணன் கேள்வியில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அக்கா எதுக்கு தேவை இல்லாதது பேசிட்டு இருக்க? அவருக்கு சாகுற நிலைமையில் படுத்த படுக்கையாக கிடந்தாலும் கல்யாண ஆசை விட்டு போகாது. பொம்பளை துணை வேண்டும்.” இரண்டாவது தங்கை நாராசமாக கூறினாள்.

“வந்த வேலை முடிஞ்சு போச்சு கிளம்புங்க.” என்றவன் பாயில் துவண்டு போய் அமர்ந்தான்.

“நாங்க வந்த வேலை முடியல. நீ கல்யாணம் பண்ணிக்க பண்ணிக்காமல் போ. அது எங்களுக்கு தேவை இல்லை. ஆனா அம்மா அப்பாவுக்கு நீ மட்டும் பிள்ளை கிடையாது. நாங்களும் தான் பிள்ளை. எல்லா சொத்தையும் நீயே சுருட்டிக்கிட்டு போக பாக்குறியா? சொத்துல எங்களுக்கும் பங்கு தரணும் நீ.” மூன்றாவது தங்கை அதிகாரமாக கேட்க, ஆமா இந்த வீடு, சொத்து எல்லாத்தையும் நான்காக பிரி.” மூன்றாவதாக பிறந்தவள் அதிகாரமாக கேட்டாள்.

அண்ணன் மொத்த சொத்தையும் தனி ஒரு ஆளாக எடுத்து கொண்டு ஓடுவது போல் குற்றம் சாட்டினார்கள்.

“இப்போ இவ்வளவு அதிகாரமாக பேசுறவங்க அவுங்க அவுங்க 21 வயதில் கல்யாணம் பண்ணிட்டு போகும் போதே எங்களுக்கு சீர் வேண்டாம், நகை வேண்டாம், ஆளுக்கொரு கார் வேண்டாம், மாப்பிள்ளைக்கு வரதட்சணை பணம் வேண்டாம் சொத்தை நான்கு பங்காக பிரித்து ஆளுக்கொரு பங்கு எடுத்துக்கிறோம் சொல்ல வேண்டியது தானே? எதுக்கு சொல்லல?” கோபமாகவோ சத்தமாகவோ கேட்கவில்லை… வலியோடு கேட்டான்.

19 வயதில் இருந்து மூவருக்கும் ஓடி கொண்டிருந்தான். 42 வயது வரை ஓடி அவன் வாழ்வை இழந்து நிற்கிறான். அதை பற்றிய வேதனையோ? நன்றியோ கொஞ்சமும் இல்லாமல் பேசுபவர்கள் என்ன மாதிரி ஜீவனோ?

“அது எல்லாம் உன் கடமை நீ செய்யனும்.” மூத்தவள் சத்தமாக கூற,

“சரி செஞ்சதை கெஞ்சி காட்ட விரும்பல. உங்களுக்கு எல்லாத்தையும் நான் கொடுப்பேன். ஆனால் வாழ்வா சாவான்னு கிடக்கும் போது நீங்க யாரும் எட்டி பாக்க மாட்டீங்க. பொண்ணு பாக்குறோம் சொன்ன கதை மாதிரி இருக்கும். எனக்குன்னு எந்த சேமிப்பும் இல்லை. என்னை நம்பி வந்தவளை நடுத்தெருவில் விட முடியாது. என் பென்ஷன் பணத்தை ஆளுக்கு கொஞ்சமா ஒவ்வொருத்தரும் 5 லட்சம் வாங்கிட்டு போனீங்களே அதை எடுத்துட்டு வாங்க. சொத்தை நான்கா பிரிப்போம்.” என்றவன் வேறேதும் பேசாமல் அப்படியே சுவரோரம் சாய்ந்து படுத்துக் கொண்டான்.

மூவரும் அண்ணனை விரோதி போல் பார்த்தனர். இப்போது அந்த பணம் இல்லை என்பதால் அவர்களால் வேறேதும் பேச முடியவில்லை.

“எங்க பாவம் உன்னை சும்மாவே விடாது. நீ நல்லாவே இருக்க மாட்ட. சாக போற காலத்தில் உனக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடு.” என்று சபித்து விட்டு கிளம்பினர் மூவரும்.

வசீகரன் தன் நிலை எண்ணி சிரித்தான். இது ஆனந்த சிரிப்பு கிடையாது. வலியால் உருவானது. பாரத்தால் உருவானது. விரக்தியால் உருவானது.

உடன் பிறந்தவர்களின் பிரிவு அதீத பேராசையால் மனசாட்சி இல்லாத செயலால் உருவாகிறது. இது பல குடும்பங்களில் நடப்பது தான்.

வசீகரன் விழியோரம் கண்ணீர் பெருகி உருண்டு வழிய அதே நேரம் அவன் ஃபோன் ஒலித்தது.

‘எனக்கு யார் இருக்கா ஃபோன்ல பேச? கம்பெனி காரனாக தான் இருப்பான்.’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் கூறியது “உனக்காக உன்னை போலவே ஒருவள் இருக்காள்.” என்று.

வேகமாக போன் திரையில் மின்னிய நம்பரை பார்த்தவன் கண்களும் சிரிப்பில் சுருங்க உடனே பச்சையை அழுத்தி விட்டான்.

“என்ன பண்றீங்க? அப்பா என்ன சொன்னாங்க?” எடுத்ததும் நேரடியாக கேட்டாள் மலர்.

“நீ அவுங்க கிட்டேயே கேட்க வேண்டியது தானே?”

“உங்க கிட்ட தான் கேட்க முடியும்? அவுங்க கிட்ட கேட்க முடியாது.” அவர்கள் அவள் மனம் வருந்தும் படி ஏதேனும் கூறுவார்கள் என்பதால் இவனிடம் உரிமையாக கேட்கிறாள்.

மனமோ ஜிவ்வென்று இருந்தது. ‘இந்த கண்கள் தான் அழுததா?’ அவன் மனசாட்சி கேள்வி கேட்டு துப்பியது.

அதை வேகமாக துடைத்து தள்ளி விட்டவன் “கல்யாண தேதி குறிச்சிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பி இருக்காங்க மா.” மென்மையாக கூறினான்.

“உங்க தங்கச்சிகள் உங்க கிட்ட சண்டை போட்டாங்களா?”

என்ன சொல்வான்.. “கல்யாணத்துக்கு பிறகு சொல்றேன் மா. அவுங்க யாரும் கல்யாணத்துக்கு வர மாட்டாங்க.” மொட்டையாக கூறினான்.

அவன் குரல் சாதாரணமாக காட்ட முயன்றாலும் தங்கைகள் பணத்துக்காக உறவையே ஒதுக்கி செல்வது தாங்க முடியாத துயராக இருந்தது. பாசம் கொட்டி வளர்த்து அவர்களுக்காக வாழ்க்கையை அற்பணித்தவனுக்கு வலிக்காமல் எப்படி இருக்கும்.

தன்னவன் வலியை நன்றாக உணர முடிந்தது மலரால். ‘பெயரில் இருக்கும் வசீகரம் அவர் வாழ்வில் இல்லையே? என்ன ஆறுதல் சொன்னாலும் அவர் வேதனை தீராதே…’ அவன் வலியை தன் வலியாக தாங்கியவள் கலங்கி போக,

“உங்களுக்காக நான் இருக்கேன். நீங்க எதுக்கு கலங்குறீங்க? பெண்கள் உறவு அவுங்க கல்யாணம் ஆகுற வரைக்கும் தான்.”

வசீகரன் கண்கள் மின்னியது. “இனி கவலை பட மாட்டேன் மா. நம்ம இப்படியே போன்லேயே குடும்பம் நடத்த வேண்டியது தான் போல.” ஏக்கப் அம் பெருமூச்சுடன் கூறியவன் வேதனைகள் காணாமல் போன இடம் தெரியவில்லை.

“அப்பா சீக்கிரமே தேதி முடிவு பண்ணிடுவாங்க. அவுங்க பாரமும் குறையனும் இல்லையா?” அவள் குரலிலும் வலி தெரிய,

பேச்சை திசை திருப்ப எண்ணியவன்
“வேலை முடிந்ததா மா?”

“முடிந்து வீட்டுக்கு வந்துட்டேன். இன்னைக்கு ஷிஃப்ட் தான் போனேன்.”

இருவருக்கும் முடிவில்லா வார்த்தைகள் வளர்ந்து கொண்டே சென்றது.

அன்றிரவு காலண்டர் பார்த்து தேதி முடிவு செய்தனர்.

“அப்பா கல்யாண செலவுக்கு நான் ஐந்து பைசா வட்டிக்கு ஒரு இடத்தில் கடன் கேட்டு இருக்கேன்.” அறிவு கூற,

“எவ்வளவு டா?”

“3 லட்சம்.”

“அவ்வளவு வாங்கி அடைக்க முடியுமா டா? மாதா மாதம் வட்டியே கட்ட முடியாதே?”

“அதுக்காக என்ன பண்ண முடியும்? அக்கா சின்ன வயதில் இருந்து நமக்கு சம்பாதித்து தான் நம்ம வாழ்க்கை ஓடுச்சு. இப்போ அக்காவுக்கு செலவு பண்ண முடியலனா தப்பு இல்லையா?”

“அறிவு, கஸ்தூரி கிட்ட கேட்டுக்கோ டா…”
காமாட்சி கவலையாக கூற,

“என் கிட்ட கேட்க என்ன இருக்கு அத்தை? நாங்க பேசி தான் முடிவு பண்ணோம். இப்போ எங்க ரெண்டு பேர் வருமானம் இருக்கு. அப்பா வீட்டில் போட்ட நகை கொஞ்சம் இருக்கு. அதை வச்சு கடனை அடச்சிடுவோம்.” திருமண செலவு பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க,

ஒரு மஞ்ச பை கொண்டு வந்து மலர் அனைவருக்கும் நடுவில் வைத்தாள்.

“நீங்க யாரும் எந்த கல்யாண செலவும் பண்ண வேண்டாம். இதுல 2 லட்சம் பணம் இருக்கு. இதை வச்சு கல்யாண செலவு பண்ணுங்க. எக்காரணம் கொண்டும் என் கல்யாணத்துக்கு கடன் வாங்க கூடாது. எனக்காக என் தம்பி கடன் வாங்கி கஷ்டப்பட கூடாது. நகை என் கிட்ட இருக்கிற வரைக்கும் போதும். நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது. இருக்குறத வச்சு நிறைவாக கல்யாணத்தை நடத்துங்க.” என்றவள் அமைதியாக தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

இதற்கு மேல் வளவளன்னு பேச ஒன்றும் இல்லை என்பது போல் இருந்தது மலர் நடவடிக்கை.

கஸ்தூரிக்கு மலர் குணத்தை கண்டு வியப்பாக இருந்தது. ஓ டி பார்த்த பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது நன்றாக புரிந்தது.

எங்களுக்கு சுமையாக இருக்க விரும்பாமல், நாங்கள் கடன் சுமக்க கூடாது என்று நினைத்து பணம் கொடுத்தவளை கண்டு உயர்வாக இருந்தது.

திருமண வேலைகள் தொடங்கியது. தன்னை தூற்றிய யாரையும் அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டாள். திருமணத்துக்கு அழைத்து வயிறு நிறைய சோறு போட்டாலும் அவர்கள் நல்ல மனதுடன் வாழ்த்த போவது கிடையாது. அதிலும் குறை கூறி இன்பம் காண்பார்கள். அதற்கு அவர்கள் இல்லாமல் நடப்பது மேல் என்பதால் அவர்களை முற்றிலுமாக தவிர்த்தாள்.

காலம் வேகமாக சுழலும், நிலை மாறும். முப்பது வயது தாண்டியும் திருமணம் ஆகாததால் முதிர்கன்னி அவள் என்று தங்களின் சுபநிகழ்ச்சிகளில் ஒதுக்கி வைத்தனர்.

இன்று அவளோ மற்றவரை ஒதுக்கி வைத்தாள். பத்திரிக்கை கூட தேவைக்கு தகுந்தாற் போல் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.

இன்று புடவை எடுக்க கிளம்பினர்.
வசீகரன் வாடகைக்கு கார் எடுத்து வந்தான்.

“எதுக்கு இப்போ கார்? பஸ்ல எல்லாரும் போய் இருக்கலாமே?” திருமணத்துக்கு முன்பே உரிமையாக கடிந்து கொள்ள,

“பஸ் நேரத்துக்கு வராது மா. முதன் முதலாக ஒரு நல்ல விஷயத்துக்கு கிளம்பும் போது எதுக்கு டென்ஷன் ஆகனும்? அதான் கார் எடுத்துட்டு வந்தேன். வாங்க.” அவள் கோபத்தை தவறாக புரிந்து கொள்ளாமல் தன்மையாக கூறினான்.

ஆனால் மற்றவர்களுக்கு தான் ஆச்சரியமாக இருந்து. யாரிடமும் உரிமையாக பேசாதவள், கோபமாக கூட பேசாதவள் வசீகரன் முன்பு உரிமையுடன் நடந்து கொள்வதும், அதற்கு வசீ தணிந்து போவதும் ஆச்சர்யமாக இருந்தது.

இவர்கள் இப்போது தான் பழகுகிறார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

சின்ன சிரிப்புடன் அனைவரும் காரில் ஏறினர்.

“மாமா நீங்க அக்கா கூட உட்காந்துக்கங்க. நான் டிரைவர் கூட உக்காந்துகிறேன்.”

வசீகரன் கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் அவள் அருகில் அவளை உரசியபடி அமர்ந்தாலும் இருவரும் கண்ணியமாக பார்வையால் மட்டுமே பேசிக் கொண்டனர்.

மற்றவர்கள் கண்டும் காணாதது போல் ஏசி காற்றில் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

புடவை கடையில் வசீகரன் விலை அதிகம் உள்ள புடவைகள் பார்க்க “எதுக்குங்க இவ்வளவு விலை? ஒரு முறை கட்டினால் அதுக்கப்புறம் வருடத்துக்கு ஒரு முறை தான் கட்டுவேன். நமக்கு பிடித்திருந்தால் போதும். ஆடம்பர செலவு வேண்டாம்.”

இருவரும் புடவை பார்க்க 3000 மதிப்பில் இளஞ்சிவப்பு நிற பட்டு புடவை கோல்டன் பார்டர் வைத்த பட்டுப் புடவை இருவருக்கும் மிகவும் பிடித்து போனது.

“கஸ்தூரி இந்த புடவை நல்லா இருக்கா?”

“செம்மையா இருக்கு அண்ணி. உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும்.”

“தங்கச்சி வாங்க உங்க எல்லாருக்கும் துணி எடுங்க.” சும்மாவே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மலர் குடும்பத்தை அழைக்க,

“மாப்பிள்ளை உங்க ரெண்டு பேருக்கு மட்டும் எடுங்க. எங்களுக்கு வேண்டாம். கஸ்தூரி கல்யாணத்துக்கு எடுத்த துணியே அப்படியே இருக்கு. நாங்க அதையே கட்டுகிறோம்.”
காமாட்சி அவசரமாக மறுத்தார்.

“சும்மா வேடிக்கை பார்க்க உங்களை அழைச்சிட்டு வரல. கஸ்தூரி கல்யாணத்துக்கு எடுத்த துணியை அவங்க குழந்தை முதல் பிறந்த நாளுக்கு கட்டிக்கோங்க. இப்போ துணி எடுங்க.”
சற்று அதட்டலாக கூற, அதற்குள் மலர் தன் அம்மா கஸ்தூரி இருவருக்கும் புடவை எடுத்து இருந்தாள்.

கூடவே வசீகரன் தங்கச்சிகளுக்கு எடுத்தாள். அவர்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. திடுதிப்பென்று வந்து நின்று விட்டால் அதனால் அவர்களுக்கும் சேர்த்து எடுத்
தாள்.

அழகாக யாருக்கும் வருத்தம் இல்லாமல் அன்றைய நாள் சென்றது.

வசீகரன் தன்மையான வசீகரிக்கும் பண்பு மலர் குடும்பத்தை மொத்தமாக ஈர்த்தது.

தொடரும்.....
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வசீயோட தங்கைகளுக்கு எவ்வளவு தவறான புரிதல்... கேவலமான எண்ணங்கள் 😢

வசீ ❤️ மலர் ஜோடி இதமா இருக்கு அவங்க புரிதல் 😍
 
  • Like
Reactions: MK9

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
மலரு... இந்த பொண்ணு எம்புட்டு க்ளீயரா இருக்கு...