• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - 10

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
அன்று பார்ட்டி ஹாலாய் ஜொலிஜொலித்த அதே இடம்..இன்று நிச்சயத்திற்காய் அதற்கான சர்வ அலங்காரத்தோடு காட்சியளித்தது..

அபி உள்ளே இருக்கவும்..முதல் வரிசையில் பவியும் விச்சுவும் அமைதியாய் கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்க்க..சம்முவுக்கு இன்னுமே எதுவும் நம்ப முடியவில்லை..”இவனுங்க அவ்ளோ நல்லவனுங்க இல்லையே..எதுவும் பிளான் பண்றானுங்களோ?..”

அங்கங்கு நின்று வைத்த கண் வாங்காமல் இருவரையுமே பார்க்க...விச்சு பவி காதை கடித்தான்..

“ஏம்மச்சான்...நாம என்ன அந்த சம்மு மாதிரி கிளாமராவா வந்திருக்கோம்..இப்படி வச்சு கண்ணு வாங்காம குறுகுறுன்னு பார்க்குறா.. வயசுப்பையன ஏண்டி இப்படி உத்து பார்க்குறேன்னு போய் அவ சொக்காவ புடிச்சு கேளு மச்சான்..”

பவி லேசாய் எங்கோ பார்ப்பது போல் சம்முவை பார்க்க...அவள் கண்முன்னால் இருவிரலையும் வைத்து இவர்கள் இருவர்புறமும் முறைத்து காட்ட..

“என்னடா கண்ண நோண்டிடுவேன் சொல்றா... அப்ப நம்மள பிச்சை எடுக்க விட்டுடுவாளா?..”

“ச்சேச்சே..இல்ல மச்சி...அவங்க நம்மள வாட்ச் பண்றாங்களாம்”

ஓஹ்..ஓஹ்ஹோஹோஹ்..
அப்படி..”
இருவரும் தலையாட்டி சிரித்து கொண்டார்கள்..

தன்னை பார்த்து சிரிக்கும் இருவரையும் முறைப்பதை தவிர வேறெதும் செய்ய முடியவில்லை சம்முவால்.. அவளுக்கு இந்த நிச்சயம் நடந்தே ஆக வேண்டும்.. ஆம்.. ரத்தினத்தின் பார்ட்னருடைய மகன்தான் இந்த மாப்பிள்ளை.. அவர்களின் பார்ட்னர்ஷிப்பை காரணம் காட்டி தன் மகனுக்கு ரத்தினத்திடம் பெண்கேட்க.. அவனை பார்த்த முதல் பார்வையிலேயே சம்முவுக்கு வெறுத்து போனது..”ஐம் சாரி...ஐ கான்ட்…”இரண்டே வார்த்தையில் சம்மு ஒதுங்கி கொள்ள..என்ன சொல்லி தட்டி கழிக்கவென ரத்தினம்‌ தவித்தபோது வள்ளிக்கு வந்த மகத்தான திட்டம்தான் சின்னவள் அபியை கட்டி வைப்பது..எதை பிடித்து கரையேற என தவித்தவர்கள்... அப்பாவி அபியை கெட்டியாய் பிடித்துக் கொண்டார்கள்.. ஊரில் வைத்து..தொழில் வட்டத்தில் தெரிந்தால் அபியின் பிண்ணனி தெரிய வருமென்று ஊட்டிக்கு மாற்றி விட்டனர்..

இத்தனைக்கும் அந்த பையன் வீட்டு ஆட்கள் தவிர...அங்கு பெரிதாய் யாரும் இல்லை..அபி சைடில் ரத்தினம் வள்ளி சம்மு..பவி விச்சு மட்டுமே..

“ஏண்டா...இந்நேரம் அபிய நம்மளுக்கு யாருன்னே தெரியாம போயிருந்தா..இப்ப அந்த சின்ன பொண்ண…இந்த புசுபுசு நாய்க்கு கட்டி குடுத்திருப்பாங்கள்ள...பார்க்க பார்க்க அவ்ளோ வெறியாகுது.. இரு நா போய் அவன ஏதாவது நல்லா புகழ்ந்துட்டு வர்றேன்.”

பவி தடுக்க தடுக்க...விச்சு எழுந்து போனவன் தனியாய் நின்று எங்கோ வெறித்திருந்த மாப்பிள்ளை கையை பிடித்து குலுக்கோ குலுக்கென குலுக்கினான்..

“வாழ்த்துக்கள் சார்...இந்த மஞ்ச ஜிப்பா சும்மா அள்ளுது சார்..மாப்பிள்ள களைன்னா இப்படித்தான் அழ்…ழ்ழகா… இருக்கணும்...அப்புறம் சார்..அன்னைக்கு அந்த சின்ன ரூம்ல மூனு லேடீஸ் இருக்கும்போதே..கண்ண நல்லா கழுவுனீங்க...இப்ப இங்க வேற நிறைய பொண்ணுங்க இருக்கு... ம்ம்ம்..வாழ்வுதான்... என்ஜாய்..” அதுவரை சிரித்தமுகமாய் இருந்தவன்.. இப்போது கட்டிபிடித்து வார்த்தையை துப்பினான்..

“ஆனா எங்க அபி பக்கம் உன் பார்வ போச்சு...மவனே வகுந்துருவேன்.. என்னடா லுக்கு...செய்ய மாட்டேன்னு நினைக்காத..ஐயா காலேஜ்ல பெரிய கேங்ஸ்டர்..தனியா டீமே வச்சுருக்கேன்...இந்த சூரி சொல்ற மாதிரி..சும்மா இஸ்‌‌இஸ்.. இஸ்னு போட்டு போய்ட்டே இருப்பேன்.. ஓகேவா..ஆங் இப்படித்தான் சிரிச்சா மூஞ்சியா இருக்கணும்..வர்றட்டா..”

அவன் முகம் சுருங்குவதை ஒரு திருப்தியுடன் பார்த்து நகர..பவியோ வாட்சையே பார்த்து கொண்டிருந்தான்..

“எங்கடா இன்னும் காணோம்..”விச்சு கேட்க..

“தெரியலயே..”

“கொஞ்சமாவது கட்டிக்க போற பொண்ணுக்கு..வேற ஒருத்தனோட நடக்குற நிச்சயத்துக்கு கரெக்ட் டைம்க்கு வரணுங்கற பொறுப்பு இருக்கா..நெடுமரம்கு நம்ம ஸ்டைல்ல கொஞ்சம் கிளாஸ் எடுக்கணும் போல..”

“நீ மூடு...அங்க பாரு அபி வர்றா..”

இவர்கள் பார்த்த திசையில் அப்படி ஒரு சிரிப்போடு இவர்களை பார்த்தபடி வந்து கொண்டிருந்தவள் உள்ளுக்குள் அவ்வளவு தீவிரம்..

நேற்றிரவு..மாறனை கட்டிபிடித்து செல்லம் கொஞ்சி...வெகுநேரம் அவனை வம்பிளுத்து... கிளம்ப மனமில்லாமல் போனவன் கையை இழுத்துபிடித்து பவி சொன்னதுதான் இந்த நிச்சய விஷயம்..

அபிக்கே அப்போதுதான் தெரியுமென்பதால் அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவன்..

“விடுடி குள்ளச்சி.. அந்த சம்முவ நா பார்த்துக்கறேன்..நீ அங்கெல்லாம் போக வேண்டாம்..யார் முன்னாடியும் போய் நிக்க வேண்டாம்..”

முடிவாய் சொன்னவனை.. அதைவிட தீர்க்கமாய் பார்த்தவள்..

“இல்ல நா ‌போறேன்..போய் எல்லாத்தையும் மொத்தமா முடிச்சுட்டு வர்றேன்..”

மொத்தமா என்பதை அழுத்தி சொன்னவளை ஆதுரமாய் பார்த்தவன்…”எதுக்கு தேவையில்லாம..உனக்கு வலிக்கும்...வேணாம்டி..”

“இல்ல நெடுமரம்...இப்பவரை நா சுமந்துட்டு இருக்கறதுதான் வலிக்குது..அத இறக்கி வைக்கலேன்னாதான் கஷ்டம்..”

உண்மைதானே..எவ்வளவு பேர் எத்தனை விதமாய் வாய் வார்த்தையில் ஆறுதல் சொன்னாலும்..தோளணைத்து நம்பிக்கை தந்தாலும்.. இதுவரை பட்ட வேதனை..வலி எல்லாமே அவள் மட்டுமே அல்லவா..அப்போது அதற்கான மருந்தையும் அவளே தேடித்கொள்ளட்டும்..தாங்கள் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கலாம் என மூவருமே முடிவு செய்து... பவியும் விச்சுவும் இரவே அவளை கொண்டு வந்து மண்டபத்தில் விட... அதனாலேயே சம்முவால் நம்ப முடியாமல் திரிந்தவள் மனதுக்குள் ரிப்பீட் மோடில் இதேதான் கேட்டது..

“இவனுங்க அவ்ளோ நல்லவனுங்க இல்லையே..”

ஆனால் அபியிடம் சம்மதமென சொல்லி அனுப்பினாலும் மாறனால் அவளை அப்படியே விட முடியாதே.. திரைக்கு பின்னால் அவனும் சிலபல வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தான்.. சம்முவிற்காக ஷங்கர் ஏற்பாடு செய்த டிடெக்டிவ் ஆட்கள் மூலம் வந்த தகவல்கள் அனைத்துமே பார்ப்பதை விட கேட்கவே அவ்வளவு அசிங்கமாய் இருந்தது… திரைத்துறையில் வாணிக்கு இருந்த தொடர்பை வைத்து.. அவர்களுக்கெனவே அடிக்கடி இரவு நேர பார்ட்டிகளை ஏற்பாடு செய்து..அதில் மதுவை விட அதிக போதை தரும் வஸ்துக்களை சகஜமாய் புழங்கவிட…சம்முவின் காட்டில் பணமழைதான்…எல்லா மட்டத்திலும் அவளுக்கும் ஆட்களும் இருக்க..சம்முவின் முகத்திரையை கிழிக்க வேண்டுமென்றால் மீடியா மட்டுமே‌ ஒரு வழியென புரிந்து அதற்கான ஆதாரங்களை திரட்டி… பூஜைக்கான நாளை குறிக்க காத்திருக்க…கடைசியில் அவளே நாளும் நேரமும் குறித்து கொண்டாள் இந்த நிச்சயம் மூலமாக..

நடந்ததை நினைத்து பார்த்த பவிக்கு மனம் அடித்து சொன்னது...இன்று அபியின் ஒரு ஆட்டம் உண்டென.. அன்பாய்‌ தலையை தடவினால்..அடங்கிபோகும் பூனை கூட…எட்டி உதைத்தால் சீறி விழும்...இந்த சின்னபெண் என்ன அதற்கும் மட்டமா... சாவுங்கடா.. மனதுள் நினைத்து கொண்டான்..

மேடையில் வைத்து பத்திரிக்கை எல்லாம் வாசிக்கவில்லை.. அதில் பெற்றோர் பெயரை குறிப்பிட வேண்டுமென்பதால் பொதுவாய் இந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு நிச்சயம் என மட்டும் கூறி கொண்டிருக்க...அங்கிருந்த சலசலப்பிற்கு அபி சட்டென எழுவும் அப்படி ஒரு அமைதி..

“இல்ல எனக்கு புரியல ஐயர் அங்கிள்...ஏதோ குடும்பம்னு எல்லாம் படிச்சீங்களே...அது யாரு எனக்கா..என்பேரா போட்டிருக்கு நல்லா பாருங்க..”

நக்கலாய் வள்ளியை பார்த்தபடி சொல்ல..பவியும் விச்சுவும் பார்த்து சிரித்து கொண்டார்கள்..

“ஆரம்பிச்சுட்டா..”

“உன்பேருன்னுதான் சொன்னாங்கம்மா…அபிநய சுந்தரிதான..”

“ஆமா..ஆனா பின்னாடி ஒரு குடும்ப பேர் சொன்னீங்களே…அது எனக்கில்ல..ஏன்னா எனக்குதான் குடும்பமே இல்லையே..ஏன் வள்ளிமா..”

“ஏய் என்ன..ஏதேதோ தேவையில்லாம பேசிட்டு இருக்க.. போய் உட்காரு போ..ஐயரே நீங்க மேல படிங்க..”

“என்ன படிக்கணும்..ஆமா இவர படிக்க சொல்றீங்களே…இந்த அபி என்ன படிக்கறேன்..எந்த வருஷம் படிக்கறேன்..நா காலேஜ்கு போறேனா இல்லையா..இது ஏதாவது உங்க யாருக்காவது தெரியுமா.. சொல்லுங்க பார்ப்போம்..”

கைகட்டி நின்றவள் கேள்விக்கு இவர்கள் என்னவென பதில் சொல்வார்கள்…அதுதான் தெரியாதே…கிளம்பி போவாள்..இரவிலோ..இல்லை நடு இரவிலோ வருவாள்..அது மட்டும்தான் தெரியும்.. வேறென்ன தெரியுமென இவர்கள் பதில் சொல்ல…பேசாமல் முழித்தார்கள்..

“அபி..பேசாம இரு..என்ன இது மரியாதையில்லாம…”ரத்தினம் முன்னால் வர..

“யாரது…ரத்தினம் சாரா..ஆமா யாரு சார் நீங்க எனக்கு..”

அபி..அவருக்கு மற்றவர்கள் முன்னால் இதென்ன வேண்டாத பேச்சு என்பதுபோல் சுற்றிலும் பார்வையோட்டியவர்..

“என்னையா யாருன்னா கேட்குற..”

“உங்களத்தான் சார் கேட்குறேன்..இப்ப யாரு சார்னேன்..அப்புறம் யாருய்யாம்பேன்..ஆனா அது அவ்ளோ‌ மரியாதையா இருக்காது பாருங்க…அதுனால நீங்களே சொல்லுங்க..”

“நா யாருன்னா கேட்குற..ஏன் உனக்கு தெரியலயா..உங்கம்மா சொல்லிருப்பாலே நா யாருன்னு..”

அம்மா என்றதும் அபி முகம் சட்டென கசங்கி போக.. கலங்கியவள்… இறுக்கமாய் கண்ணைமூடித் திறந்தாள்..

“இல்ல இப்ப நா அழுகக்கூடாது…”
வந்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள்..

“ஓஹ்…சொன்னாங்களே..என் அம்மா அதுல்லாம் கரெக்டா சொல்லி குடுத்துருக்காங்க.. என்ன சொன்னாங்க சொல்லட்டா..”
ரத்தினத்தையே பார்த்தவள்..

“அப்பான்னா நம்பிக்கை…தான் கஷ்டபட்டாலும் தன் குழந்தைங்க அந்த கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கற இன்னொரு கடவுள்தான் அப்பா..தன் குழந்தையோட ஒவ்வொரு வளர்ச்சிலயும் பூரிச்சு போய்..அவ தப்பு பண்ணும்போது தட்டிகுடுத்து…உடைஞ்சு போகும்போது நா இருக்கேன்னு தைரியம் சொல்லி…தோத்தே போனாலும் தோள்குடுக்க நம்ம அப்பா இருக்காருன்னு நம்ப வைக்குற ஒரு நம்பிக்கை..அத நீங்க எனக்கு எப்பவாது குடுத்திருக்கீங்களா.
ஸ்ஸ்ஸா…ர்… அப்புறம் என்ன உரிமைல எனக்கு இந்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா..

வாயடைத்து போய் நின்றார் ரத்தினம்…தரையில் கால் நிற்காமல் எப்போதும்‌ ஓடியபடி இருந்த சின்னவளை மட்டுமே பார்த்து பழகியவருக்கு…தன்முகத்திற்கு நேராய் நின்று நியாயமாய் கேள்வி கேட்டவளை பார்த்து வார்த்தையே வரவில்லை..மொழி மறந்து போய் நின்றார்…

“ஆனா இது எல்லாமே அவங்க எனக்கு குடுத்தானுங்க…” பவியையும் விச்சுவையும் கைகாட்டியவள்..

“நா தப்பு பண்ணும்போது திட்டுவாங்க..அழும்போது ஆறுதல் சொல்வாங்க.. கேக்குறது எல்லாம் வாங்கி குடுப்பாங்க..ஏன் என்னை படிக்க வைக்கறது கூட அவங்கதான்…உடம்பு முடியதப்ப.. அம்மாவ தேடுறப்ப..நா பண்ற எல்லா தொல்லையையும் பொறுத்துக்கறது
அவங்கதான்..நீங்க அப்பான்னா..அப்ப அவங்க எனக்கு யாரு…சொல்லுங்க..”

“சரி நீங்க என்னோட அப்பான்னா.. எனக்கு இதுவரை எத்தனை தடவை உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்திருக்கேன்..எது எனக்கு பிடிக்கும்.. பிடிக்காது.. இவ்ளோ ஏன்..என்னோட டேட் ஆப் பர்த்..இத ஒருதடவ சொல்லுங்க பார்க்கலாம்..அப்ப நீங்க சொல்றத நா பேசாம செய்யறேன்..”
அதுவரை வழிந்த கண்ணீரை நன்றாய் துடைத்துக் கொண்டாள்.


“இப்பவும் நா இங்க வந்தது… நின்னது.. எல்லாமே உங்களுக்கு அடங்கி போய் இல்ல..எனக்காக… இத்தனை நாளா அடக்கி வச்சிருந்த என்னோட வேதனைய.. இத்தோட இனியாவது மொத்தமா இறக்கி வச்சிடலாமேன்னு வந்தேன்.. வச்சுட்டேன்..கிளம்பறேன்..”

“கடைசியா ஒன்னு..பிறந்ததுல இருந்து என்பின்னாடியே வருதே ஒரு கேவலமான அடையாளம்..இவ ரத்தினத்தோட சின்னவீட்டோட பொண்ணுண்ணு… அது எனக்கு இனி வேணவே வேணாம்..ஏன்னா இனி எனக்கும் உங்களுக்கும் எதுவுமே இல்ல.. உங்களுக்கு ஒரே குடும்பம்தான்… ஒரே பொண்ணுதான் சரியா..”

சொல்லியவள் நகர..வள்ளி அப்படி ஒரு ஆட்டம் ஆடினார்....

“நல்ல குடும்பத்துல..நல்ல முறைல பிறந்திருந்தா நல்லது தெரியும்..பின்வாசல் வழியா வந்தவளுகளுக்கு வேறெப்படி போகும் புத்தி…”இன்னும் ஏதேதோ சொல்லி திட்ட..அபி போனவள் அதே வேகத்தில் திரும்பி வந்து அங்கிருந்த தட்டை எட்டி உதைக்க…வள்ளி பயத்தில் ஆவென நெஞ்சை பிடித்து விட்டார்..

“என்ன நீங்கள்ளாம் நிஜமா குடும்பமாத்தான் இருக்கீங்களா.. நீங்க தோ இவரு வேற யாரு பின்னாடியாவது போய்ருவாரோன்னு பயத்துல‌ பாதி சொத்து மாத்தி எழுதி வச்சிருக்கீங்களே..அதெல்லாம் இவருக்கு தெரியுமா..இல்ல உங்க பொண்ணு போற பார்ட்டில எல்லாம் என்னெல்லாம் சப்ளை பண்றான்னு எங்க விச்சு அன்னைக்கு ஏதேதோ பேரு சொன்னான்..அத வேணா கேட்டு சொல்லட்டா…நீங்கள்ளாம் ஒன்னா ஒரே வீட்ல சேர்ந்திருந்தா அது பேரு குடும்பமா..”சொன்னவள் உறுத்து பார்த்து ஒற்றை விரலை மட்டும் ஆட்டி பவியிடம் போய்விட..

வெலவெலத்து போனார் வள்ளி..அவள் சொன்ன அத்தனையும் உண்மை என்பதை வேர்த்து வழிந்த அவர் முகமே காட்டி குடுக்க.. இதற்குமேல் பேசி மொத்தமாய் மானங்கெட வேணாம் என ரத்தினமும் அமைதியை கையில் எடுத்து கொண்டார்..

பவி விச்சு இருவரிடமும் வந்தவளை சம்மு தள்ளி நின்று முறைத்துக் கொண்டிருந்தாள்…இந்த நிச்சயம் நின்றதை விட..தனது மறைவு வேலை வரை உளவு பார்த்து வைத்திருப்பவளை அப்படியே விடுவதா…

“ஓஹ்…அப்ப அது கேவலமான அடையாளம்னா…இப்ப இந்த அபியோட இரண்டு பக்கமும் நிக்கற இவனுங்க கூட சேர்ந்து சுத்தறியே இதுக்கு பேரு என்ன…இதுபோக.. அன்னைக்கு ஒருத்தன் உம்பின்னாடியே வந்தானே அந்த அடையாளம் பேர் என்ன..இதுவும்..”

அதற்குமேல் பேச வாய் வரவில்லை..காரணம் அபியிடம் வாங்கிய அறையில் காதெல்லாம் விண்ணென வலிக்க…கன்னம் தீயாய் எரிந்தது..

மொத்த ரத்தமும் முகத்தில் பாய்ந்தது‌போல் சிவந்துபோய்..கோவத்தில் மேல்மூச்சு வாங்க…ஓங்கி பளாரென அறைந்திருந்தாள்…

“ஏய்..யார..”

மறுபடி ஒரு அறை…இப்போது இருபக்க கன்னமும் சிவந்தது..

“யார..என்ன பேசுற…பிச்சுருவேன்..”

தன்முன் நின்று விரல் நீட்டியவள் உக்கிரத்தில் தானாகவே இரண்டடி தள்ளி போனாள் சம்மு..

“டேய்…நீ‌ ஏண்டாமா இவள அடிச்சு உன்கைய வலிக்க வச்சுக்கற..இவ பேசுறதுக்கெல்லாம் இவ்ளோ ரியாக்ட் பண்ணுவியா…இங்க பாரு அபிமா..”

கோவத்தில் உடல்நடுங்கியவளை ஒரு பக்கமாய் அணைத்து ஆறுதல் சொன்ன பவி..

“இப்ப இதக்கூட நீ கேவலமாத்தான் பார்ப்ப.. ஏன்னா உன் சாக்கடை புத்தி அதுக்கு மேல யோசிக்க தோணாது..எனக்கு தெரியும்..ஆனா இப்படி ஒரு விஷயம் நீ பேசியும் நா கூலா இருக்கேன்னா ஏன் தெரியுமா.. ஏன்னா நீ வாங்கவேண்டிய செருப்படி இன்னும் இருக்கு…ஆனா அது நா குடுக்கமாட்டேன்..தோ அங்க வர்றாரு பாரு..அவரு தருவாரு..”

பவி சொன்ன திசையில் மாறன் செம‌ ஸ்டைலாய் படி ஏறி வந்து கொண்டிருந்தான்..சன்னமான சிரிப்போடு அவன் கையிலிருந்த செல்போன் ஸ்கிரீனை ஆட்டி காட்டி கொண்டே வர..அதில் சம்முவின் பிரேக்கிங் நியூஸ் ஓடி கொண்டிருந்தது..

“போதை மருந்து வழக்கில் நடிகை வாணியுடன்..பிரபல தொழிலதிபர் மகள் சம்யுக்தாவும் சேர்ந்து சிக்கியுள்ளார்… இருவரையும் பிடிக்க தனிப்படை விரைந்தது..”
அந்த போனின் தரத்திற்கு…சத்தம் காதைப் பிளந்தது…

மொத்த இடமுமே அதிர்ச்சியில் அமைதியாகிவிட..மாறனவன் அழுத்தமான நடையில்.. அசத்தலாய் நடந்து வந்து அபியின் அருகில் கைபிடித்து நிற்கவும்…தானாகவே பவியும் விச்சுவும் வந்து அருகில் நின்று கொண்டனர்…காண அந்த காட்சி கொள்ளை அழகாய் இருந்தது..

“ஹ்ஹா…”அதிர்ந்து போய் நின்றிருந்த சம்முவின் கண்ணுக்குள் மாறன் அபியின் உருவம் முழுதாய் வந்து விழ…அவளால் எதுவுமே செய்யமுடியாமல்..செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்திருந்தாள்..

“நா வரும்போது ஏதோ நீ சொல்லி என் காதுல விழுந்துச்சே…ஏதோ அடையாளம் அது இதுன்னு…இதான உன்னோட அடையாளம் சம்யுக்தா..பார்த்துக்கங்க மிஸ்டர் ரத்தினம்..அதுசரி இனி உங்க பொண்ணு கேஸ பார்க்கவே உங்களுக்கு நேரமில்லாம போகப்போகுது.. அதுனால அப்புறம் பொறுமையாவே நியூஸ்ல பார்த்துக்கங்க. இனி எப்பவும் பிஸியாவே வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் சுத்தப் போறிங்க.. ம்ம்ம்..வாழ்த்துக்கள் சார்..

மாறனின் பேச்சில் ரத்தினத்திற்கு அவ்வளவு அவமானம்..அதுவும் அபி மூலமாக மகள் மனைவியின் மறுபக்கம் தெரிந்து கொண்டவருக்கு..தான் இதுவரை இவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வெட்கிப்போனார்..

“அப்புறம் சம்யுக்தா..ஏதோ அபியோட அடையாளம்னு சொல்லிட்டு இருந்தீங்கள்ள..நா சொல்லட்டா அபியோட அடையாளம் என்னன்னு..
கேட்டா நீங்களே ஆடிப்போய் அசந்து போய்டுவீங்க…என்ன சொல்லட்டா.. இவ இந்த நெடுமாறனோட சுந்தரி.. அதியனோட அபி..மொத்தத்துல மிஸஸ்.அபிநயசுந்தரி அதியன் நெடுமாறன்…பிரண்ட்ஸ் ஆப் பவிச்சு…நல்லாருக்கா.. உங்களோட அந்த இத்துப்போன குடும்ப அடையாளத்த விட..எனக்கு இதான் ரொம்ப பிடிச்சுருக்கு..நல்லா நீளமா கெத்தா இருக்கு அப்படித்தானடா..

ஆம் என்பது போல் பவியும் விச்சுவும் தலையாட்டினர்..

*வரட்டா…போலாமா அபி…நா வரும்போதே வெளில சைரன் சவுண்ட் கேட்டுச்சு..இனி சம்மு மேடம் ஆல்வேஸ் பிஸி…நாம ஏன் தொந்தரவு பண்ணிட்டு..வா‌ போலாம்..”

வந்த வேகத்தில் அவளை திருப்பி கூட்டிவர…அவன் அணைப்பிலேயே.. வந்தவளை பவியும் விச்சுவும் சேர்ந்து ஓட்டி எடுத்ததில்..சற்று நேரத்தில் பெண்ணவள் தெளிந்து விட்டாள்..

“இந்தா அபி..”

பவி குடுத்த கவரை பிரித்து பார்க்க..உள்ளே இருந்தது இரண்டு டிக்கெட்..சில பேப்பர்ஸ்…

“என்னடா எல்லாரும் கல்யாணத்துக்கு கிப்ட் பண்ணுவாங்க…நீ என்ன நிக்க போற நிச்சயத்துக்கு கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்க..ஆமா இதென்ன டிக்கெட்…அய்..எல்லாரும்‌ லண்டன் போறோமா.. சூப்பர்டா.. ஆமா இதென்ன எனக்கும் விச்சுக்கும் மட்டும் இருக்கு..உனக்கு கிடைக்கலியா..அப்ப நெடுமரத்துக்கு..ஆமா இதென்ன ஏதோ காலேஜ் அட்மிஷன் போல இருக்கு…”

விச்சு பேய்‌முழி‌ முழிக்க…மாறனும் பவியும் சிரித்து கொண்டார்கள்..
மாறன் அவன் ஸ்டைலில் விச்சு பவியை காட்டி வட்டமடித்து‌… காற்றில் பறப்பது போல் செய்துகாட்ட…அபிக்கு புரிந்து ஊதித்தள்ளினாள்..

“டேய் கடைசில என்னைய இவகூட கோர்த்து விட்டுட்டீங்களாடா…”

விச்சுவின் கதறலில்….அபிதான் அவன் கண்ணை துடைத்து விட்டாள்…

“பயப்படாதடா நா உன்னை பத்திரமா பார்த்துக்கறேன்…பயப்படாம வா..நம்ம ஆறு வேளைக்கும் வெளிலயே சாப்டுக்கலாம்..நம்மள நாடு கடத்துறவங்க பர்ஸ ஹேப்பியா காலி பண்ணலாம்…நீ வாடா..ஐ ஜாலி ஜாலி…அங்க ம்யூசியம் போலாம்…ரிவர் பார்க்கலாம்..பவி திட்டு இல்லாம ஜாலியா நைட் புல்லா ஊர் சுத்தலாம்..ஐ ஐ ஐ..”

தேம்பி தேம்பி அழுதவன் தோளில் சந்தோஷமாய் குதித்து ஆடியவள்..கடைசியில் ப்ளாக் கரெண்ட் வாங்கி குடுத்து அவனை சமாதானம் செய்தாள்…

____________________________

இரண்டு வருடம் கழித்தும் விச்சு அதேபோல் தேம்பி தேம்பி அழுதுகொண்டுதான் இருந்தான்..

“அய்யோ கடவுளே..அப்பவே எங்கம்மாகிட்ட என்னை இவகிட்டருந்து காப்பாத்தி‌ விடுமான்னு கால்ல விழுந்து கதறினேனே… ஃபாரின்ல போய்‌ படிச்சுட்டு வந்தா பொண்ணு வீட்ல எக்ஸ்ட்ரா பத்து பவுன் வாங்கலாம்னு சொல்லி‌ மொத்தமா இவகிட்ட என்னை அடகு வச்சிருச்சே… அடியேய் கதவத்தொறடி…ஏய் அபி பிசாசே..”

வெளியில் அவன் அந்த தட்டு தட்ட..கூலாய் அவனை பார்த்துவிட்டு போனை எடுத்து பவிக்கு அழைக்க…அவனோ அப்போது ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தான்..ஆம் நண்பர்களை மேல்படிப்புக்காய் அனுப்பி வைத்தவன்..மாறன் வழிகாட்டிய பல புது ஐடியாக்களை தொழிலில் புகுத்த..இப்போது இவனது ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிக்கு ஏக டிமாண்ட்… இவர்களது கல்லூரி நட்புகளோடு இன்னும் சிலபேரை சேர்த்து தொழிலிலென்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்து விட்டான்..

உண்மையில் விச்சு அபி..இருவரையும் வெகுவாய் மிஸ் செய்தாலும்..அபிக்காக எடுத்த முடிவானதால் பொறுத்துக் கொண்டான்..ஆம்…அபியின் குடும்பம் குடுத்த அதிர்ச்சி‌ மாறனின் காதலில் கரேயேறினாலும்… உடனேயே திருமணம் குழந்தை என அடுத்தடுத்த நிகழ்வுகளை அந்த குழந்தை பெண்ணால் ஏற்றுக்கொள்ள முடியுமா.. கொஞ்சமாவது அவளுக்கும் ஒரு இடைவெளி வேண்டுமென நினைத்தான்…அதை மாறனிடமும் சொல்லி.. இருவரும் சேர்ந்து செய்த ஏற்பாடுதான் அந்த இருவரின் மேல்படிப்பு..அவர்களை அங்கே அனுப்பிவிட்டு..இங்கே தனிமையை போக்க தொழிலில் தலையை குடுத்துவிட்டான்..

மாறனுக்குமே அபியை பிரிவது உயிர் வேதனைதான்..ஆனால் பவி சொன்னதுபோல் அவள் மனக்காயம் ஆற கொஞ்ச காலமாவது அவளுக்கு‌ ஒரு மாற்றம் வேண்டுமென எண்ணியே அவனும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான்… ஆனால் வெகுவாய் அவளை மனம் தேடும் நாட்களில் எந்த யோசனையுமின்றி அவளிடம்‌ பறந்து விடுவான்..அது வாரமோ‌.மாதமோ.. அடுத்த முறை அவளிடம் போகும் வரையிலும் தாங்குமளவிற்கு அவளோடே தங்கியிருந்து.. அவள் ஞாபகங்களை சுமந்து வருவான்..உண்மைக்கும் இருவருமே எவ்வளவு தூரம் காதலிக்கின்றனர் எனபதை இந்த சிறுபிரிவு அவளுக்கு நன்றாய் உணர்த்தியது..

இங்கு அபி மீண்டும் மீண்டும் அடித்து கொண்டேயிருக்க..”ஒரு நிமிஷம் சார்..”சொல்லி வெளியே‌ போனான்.

“சொல்லு அபிமா..”

“இந்த விச்சுகிட்ட நா செஸ்வான் சாஸ் பீட்சா கேட்டா.. வெறென்னமோ அவனுக்கு பிடிச்சத வாங்கிட்டு வந்துட்டு இங்க பாரு கதவை உடைச்சிட்டு இருக்கான்..இவன வந்து என்னன்னு கேளு பவி..”

பவி திரும்பி அங்கிருந்தவரை பார்க்க....அவர் பெண்ணின் திருமண விழாவுக்கான அட்வான்ஸ் செக்..சில லட்சங்களில் கையிலிருந்தது..

“சார் ஒரு நிமிஷம்..”
சொல்லி வெளியில் போய்..

“அபிமா..நா ஒன்னு சொல்றேன் செய்வியா..”

“ம்ம்ம்..சொல்லு பவி.. உடனே செய்றேன்..”

“அவன அங்க அந்த கதவை உடைக்க வேணாம்..அடுத்த பிளைட் புடிச்சு..இங்க வந்து என்னோட மண்டைய மட்டும் உடைக்க சொல்றியாடாமா..லூசுங்களா..பைத்தியங்களா..ஒழுங்கா படிங்கடான்னு படிக்க அனுப்பினா..எப்ப பார்த்தாலும் தெருநாய்ங்க மாதிரி சோத்துக்கு அடிச்சுகிட்டு.. வந்தேன்னா பாரு..”

மேலும் வண்ணவண்ணமாய் கிழிப்பதற்குள் போனை வைத்துவிட்டு..அவசரமாய் அந்த பீட்சாவை‌ வாங்க போனாள்..
_____________________________

அந்த திருமண மண்டப வாசலில் இருந்த பெயர் பலகையில் அபி வெட்ஸ் நெடுமாறன்.. என்றிருக்க…உள்ளே பவியும் விச்சுவும் ஆளுக்கொரு திசையில் ஆளாய் பறந்து வேலை செய்து கொண்டிருந்தனர்..

ஐயரின் மந்திரங்களை சரியாய் தப்பாய் சொல்லிக்கொண்டிருந்த மாறனை பவியும் விச்சுவும் ஓட்டிக்கொண்டிருக்க…வேர்த்து வழிந்தபடி தன் பெண்ணவளை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்திருந்தான் மாறன்..

குறித்த நேரத்திற்கு அபியை அழைத்து வர..மாறனுக்கு சுற்றமெல்லாம் மறந்து போனது பெண்ணவள் வெட்கத்தில்.

“அய்யய்யோ சிரிக்குறாளே.. அதுவும் என்ன இவ்ளோ வெட்கத்தோட சிரிக்குறா.. என்னால முடியல கடவுளே சீக்கிரமா இந்த முகூர்த்தத்த முடிச்சு அடுத்த முகூர்த்தத்த ஆரம்பிச்சு விடுப்பா.. சேச்சே..என்ன இவ்ளோ கேவலமா வேண்டிக்கறோம்..”

மாறனுக்கு உள்ளுக்குள் ஏதேதோ யோசனை ஓட..அவனை அதே சிரிப்போடு நெருங்கி அமர்ந்தவள்.. சட்டென கண்சிமிட்ட.. இவனுக்குத்தான் வெட்கமாய் வந்தது..

“ஏண்டி..”

“நீ‌ ரொம்ப அழகாயிருக்க நெடுமரம்..அதுவும் இந்த வேஷ்டி சர்ட்க்கும்…சிவக்குற உன் பேஸ்க்கும்..சும்மா அள்ளுற போ..”

சகஜமாய் வாயடித்து கொண்டிருந்தவளை…விச்சுதான் பிடித்து தலையை குனிய வைத்தான்..

“கொஞ்சமாவது அடங்குடி..உள்ள வரும்போது எப்படி வெட்கபடணும்னு யூடியூப்ல பார்த்தியே.. தலைகுனிஞ்சு எப்படி உட்காரணுமின்னு இதையும் சேர்த்து பார்த்திருக்க வேண்டியதுதான..”

“அடிப்பாவி..அப்ப நிஜமாவே நீ வெட்கப்படலியா..”

“இல்ல..அப்ப வரல..ஆனா இப்ப நீ இவ்ளோ பக்கத்துல இருக்கும்போது என்னமோ கன்னமெல்லாம் சூடாகுது.. பேசாம நீ தள்ளிப்..”

அதற்குமேல் பேசமுடியாமல் கையில் மாங்கல்யத்துடன் அவளையே பார்த்திருந்த மாறனை கண்டவள் அப்படியே உறைந்து விட்டாள் அந்த நொடியின் கணம் தாளாமல்..

“இது அபிக்காக..என் குள்ளச்சிக்காக மட்டும்..இப்பவும்..எப்பவும் சரியா..”

சொல்லிய நொடியில் மங்களநாணை பூட்டியிருக்க.. அபிக்கு ஆனந்த கண்ணீரென்றால்.. தள்ளி நின்றிருந்த பவியும் விச்சுவும் அதே ஆனந்தத்தோடு இறுக்கமாய் கட்டிக்கொண்டனர்..

நிமிர்ந்தவள் விழிகளில் அந்த காட்சி விழ..ஆனந்தத்தில் நனைந்தது இப்போது இவர்கள் அன்பில் நனைந்தது..

மாறனின் பெற்றோர் காலில் விழுந்தவர்கள்..பவி விச்சுவிடம் வந்ததும் அபியை பவி லேசாய் அணைத்து விடுக்க…விச்சு பொத்தென மாறன் காலில் விழுந்து விட்டான்..

“தயவுசெஞ்சு இந்த விடாத கருப்ப எங்க தோள்ள இருந்து இறக்கி..எங்களுக்கு சாப விமோசனம் குடுங்க தெய்வமே..என் தெய்வமே.. அன்னைக்கு மாதிரியே எப்பவும் உங்க கால்ல விழுந்து கிடக்கறோம் ஆலம்பனா…பார்த்து கருணை காட்டுங்க ப்ளீஸ் சுத்தமா மிடியல..”

“ஹஹஹா….ஹஹஹா..டேய் விச்சு…அடங்குடா டேய்..”

அங்கிருந்த எல்லோருமே அவன் அலும்பலில் சிரிக்க…அபி முதலில் முறைத்தவள் பின் அவளும் மாறனை கட்டிக்கொண்டு வெட்கத்தில் சிரித்தாள்..


அழகிய மழை இதமான சாரலுடன் நின்றது..
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
180
43
Tirupur
🤣🤣🤣 ஆரம்பத்தில இருந்து கடைசிவரைக்கும் அபி பவி விச்சு மூணு பேரும் சிரிக்க வெச்சே ஒருவழி பண்ணிட்டாங்க 🤣🤣🤣


அபி ❤️ மாறன் லவ்ஸ் 👌
 

Murugesanlaxmi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
5
6
3
Pondicherry
நல்ல கதை. ஆரம்பத்தில் இருந்து நல்ல கலகலப்பாகவே போகுது. நட்பு, காதல் என இரண்டையும் அழகாக நாவல் படுத்தி இருக்கீங்க. இன்னும் தொடரக்கூடாதா? என மனதில் தோன்றியது. உங்கள் கதையை படித்த வாசம் வீசும். மனதில் நினைக்கு எழுதாளரா? என முடிவில் பார்க்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள். உங்கள் எழுத்து பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

அன்புடன்
முருகேசன்.
 
  • Like
Reactions: Vathani

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
65
40
18
Tamilnadu
Achacho மழை நின்றுசே ❣️ lovely story ❤ what a friendship ❣️ vichu sema fun and awesome character ❤ sema friends athay understand pannikura oru lover ❣️❣️ romba romba sirika vaychu lite ah emotional aaga vauchu intha mazha ya stop panniteega ❣️❣️ all the best 👍