• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை-6

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
அந்த வரலாற்று சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும்..."தோ இப்ப போலீஸ் வந்துரும்.. இன்னைக்கு கண்டிப்பா ஜெயிலுக்கு போயிருவோம்.. நாளைக்கு களி சாப்பிட்டுடுவோம்..." என உறுதியாய் நம்பியவர்களை பெரிதாய் ஏமாற்றியிருந்தான் மாறன்..

பவியும் விச்சுவும் கை விலங்கோடு... கால்சங்கிலியோடு அவர்களை தரதரவென கோர்ட்டுக்கு இழுத்து போவது போல் தூக்கத்தில் கனவு கண்டு அலறி..உளறி...வீட்டினரை எப்போதும் ஒரு பயத்திலேயே வைத்திருக்க... அபியோ வேறொரு கனவிலிருந்தாள்..

அன்று மாறனின் கண்கள் சொன்ன செய்தியில் உள்ளுக்குள் எப்போதும் ஒரு குறுகுறுப்பு...அவனுக்கு தன்னை அவ்வளவு பிடிக்குமென்பதை விட... தன்னையும் ஒரு பெண்ணென உணரச்செய்யும் அவன் ஒவ்வொரு அசைவிற்கும் பதில் வினையாய்...தன்மனமே தனக்கெதிராய் அவனிடம் சாய்ந்து போனதை முழுமனதுடன் ஒத்துக்கொண்டாள்..

ஆனால் அந்த நிஜமெல்லாம் அவளுடன் மட்டுமே..தன் பிறப்பை வைத்து ஏற்கனவே ஒரு தாழ்வு மனப்பான்மையில் இருந்தவளுக்கு..சமூகத்தில் அவன் உயரமும்..கவுரமான அவன் குடும்ப அமைப்பும்... அவனிடமிருந்து அவளை எட்டியே நிற்க சொல்ல...அதை அப்படியே செய்தாள் பெண்ணவள்..

"
ஆசையா பார்க்குற அந்த கண்ணுல..என்னை பத்தின விஷயம் தெரிஞ்சு...நீ இப்படியான்னு ஒரு கேள்வி வந்து பார்த்தா...அத என்னால தாங்க முடியுமா..வேணாம்.. அதுக்கு நா இப்படியே அவன்கிட்ட இருந்து தள்ளிப்போயிடுறேன்..."

ஆம்..அதனாலேயே அன்றிரவு அவன் வீட்டில் வைத்து அவன் அவ்வளவு உருகிக்கேட்டும் வாயை திறக்காமல் மெளனத்தை கையிலெடுத்தாள்...

கல்லூரியில் சிலபேர் இவளை வம்பிழுப்பதற்காக வேண்டுமென்றே.. "நீ செக்ண்ட் வைப் டாட்டரா... உங்கம்மா நிஜமா மேரேஜ் பண்ணிருந்தாங்களா...உனக்கு தெரியுமா?.." என கேட்டு பலமுறை இவளை கலங்க வைக்க...பவியும் விச்சுவும்தான் இவளுக்காக சண்டைக்கு போவர்..சிலமுறை அடிதடி வரை விஷயம் சென்று சஸ்பெண்ட் கூட ஆயிருந்தனர்...
அந்த காயமெல்லாம் ஞாபகத்தில் வடுவாய் தங்கிவிட.. தன்பிறப்பை வைத்தே தனக்கு மாறன் வேண்டாமென முடிவுக்கு வந்திருந்தாள் அபி..ஆனால் முடிவை செயல்படுத்துவதுதான் இவளுக்கு உயிர்வேதனையாய் இருந்தது.. அவனுமே அதன்பின் இவள் கண்ணில்படாமல் போக..
"ஒருவேள நெடுமரம் நம்மகிட்ட சும்மா விளையாண்டானோ..." அப்படியும் யோசித்து குழம்பி தள்ளினாள்..


நடுவில் அபி வீட்டில் சட்சட்டென காட்சிகள் மாறியது போல்...வள்ளி கொஞ்சம் அக்கறையாய் கவனிப்பதும்.. சம்யுக்தா இவளை அடிக்காமல் அடிக்கடி பேசி வருவதும் இவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது..

"
இதுக்கு இவங்க எப்பவும் போலயே இருக்கலாம்..எனக்கு என்னமோ பயத்துல அல்லு விடுதுடா பவிச்சு..."

"
ப்ப்ச் விடு பார்த்துக்கலாம்.."என விக்ரம் பட கமல் போல் இதையும் விளையாட்டாய் எடுத்து இவளை சமாதானம் செய்தாலும் அவர்களுக்குமே யோசனையாய்தான் இருந்தது... ..

ஆனால் அது விளையாட்டல்ல.. பெரிய வினையென..
"3 டேஸ் ஏதோ பங்ஷனாம்... ஊட்டிக்கு வர சொல்றாங்க.. எனக்கு பயமாயிருக்கு... நீங்களும் வாங்கடா.." என்றபடி அபி வந்து நின்றபோது புரிந்தது..

"
நீதான் அவங்க வீட்டு ரேஷன் கார்டுலயே இல்லையே அப்புறம் என்னவாம்?.." கடுகடுத்தாலும் சத்தமில்லாமல் கிளம்பினர் பவியும் விச்சுவும்..

இடையில் ரத்தினமே நேரில் வந்து "அந்த பங்ஷன் அரேஞ்ச்மெண்ட்ஸ் டீம்கூட நீங்களும் சேர்ந்து கொஞ்சம் பண்ணி குடுங்கப்பா..நீங்களும் எங்க வீட்டாளுங்கதான.."என்று கேட்க...அபிக்காக வேறுவழியின்றி சம்மதித்தனர்..

"
அங்க ஊட்டில சூசைட் பாயிண்ட் பார்க்க கண்டிப்பா உன்னை கூட்டிட்டு போகணும்னு நா முடிவே எடுத்துட்டேன் அபி.."
விச்சு சொல்ல..


"
எதுக்கு என்னை புடிச்சு தள்ளிவிட்டுட்டு நானே சூசைட் பண்ணிட்டேன்னு அடிச்சு விடவா...அடங்குங்க தம்பி..சூது எங்களுக்கும் தெரியும்.."

வழக்கம்போல் ஆட்டம் போட்டபடி சென்ற மூவரையும் ஊட்டி அன்போடு வரவேற்றது..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமென்று ரவுண்டு கட்டி சுற்றியவர்கள்..அவ்வபோது பங்ஷன் வேலையும் பார்த்து கொண்டனர்..

"
ஊரவிட்டு வந்தா உன்னை கொஞ்சமாவது மறந்துரலாம்னு நினைச்சேனே நெடுமரம்.. ஆனா எங்க பார்த்தாலும் ‌எனக்கு நீதான் தெரியுற..லூசு லூசுன்னு நிஜமாவே என்னை உன்மேல லூசாக்கிட்டடா.."

உள்ளுக்குள் அவ்வளவு வலித்தாலும் வெளியில் சிரித்து வைத்தாள்...

ரத்தினம் சமீபமாய் நடந்த ஒரு கிளப் எலெக்ஷ்னில் ஜெயித்திருக்க.. அதற்கான சக்ஸஸ் பார்ட்டி முதல் நாளிலும்..அடுத்த நாள் அவர்களின் அறுபதாம் திருமண விழா..என இரண்டுநாளுக்கான நிகழ்ச்சி நிரலை மட்டும் பவியிடம் குடுத்தவர்கள்..மூன்றாம் நாள் என்ன பார்ட்டியென சொல்லவில்லை... கேட்டதிற்கும் ஏதோ குடும்பவிழா என முடித்துவிட்டனர்..

"
னக்கென்னமோ டவுட்டாவே இருக்குடா..."பவிகூட விச்சுவிடம் புலம்பி தள்ளினான்...

"
விடுடா...நாம இருக்கும்போது என்னாய்டும்...பார்த்துக்கலாம்.."

______________________________________

"
இல்ல எனக்கு புரியல..இந்த சாதாரண கிளப் பங்ஷன்கு எதுக்கு நம்மள சென்னைல இருந்து ஊட்டிக்கு...அதுவும் ஏதோ பொண்ணு பார்க்க போறது மாதிரி குடும்பத்தோட கூட்டிட்டு வந்திருக்கான் உன் புள்ள..எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு கலை.."

நெடுமாறன் வண்டியை நிறுத்தி வரும் கேப்பில் இளமாறன் புலம்ப... புடவை தலைப்பை சரிசெய்தபடி நின்றிருந்த கலையரசியோ சிடுசிடுத்தார்..

"
அவன் அப்படி பார்த்துட்டானோ என்னவோ.. நீங்க எதையும் காலா காலத்துல ஒழுங்கா பண்ணலேன்னா அவனும் பாவம் என்ன பண்ணுவான்.."

"
யாரு நா...உம்பையன் பண்ண கூத்து தெரிஞ்சா நீ இப்படி பேசமாட்டடி.." மனதுக்குள் நினைத்தவர் வெளியில் சிரித்து வைத்தார்..

இளமாறன் சொன்னது கேட்டும் சிரித்துக்கொண்டே வந்த நெடுமாறனை பார்த்தவர்கள்..

"
ஏங்க எம்பையன் சிரிக்கறாங்க.. அங்க பாருங்களேன்... அட நிஜமாவே சிரிக்குறாங்க.. அய்யோ என் கண்ணே பட்டுடும் போல.."
பூரித்து போனார் கலையரசி..

"
நா பேசுனது கேட்டும் சிரிக்குறானா வாய்ப்பில்லையே..." யோசித்தபடி நெடுமாறனை பார்த்தவர் அவன் பார்வை சென்ற திசையில் பார்க்க..இருந்தது அபி கையில் ஒரு ஜூஸோடு..

"
சரிதான்..கலை கன்பார்மா‌ நாம பொண்ணுதான் பார்க்க வந்திருக்கோம்...எனக்கு தெரிஞ்சிடுச்சு.."

"
உங்க வாய் முகூர்த்தம்‌ பலிக்கட்டும்.."

அப்போதே மணக்கோலத்தில் மகனை வைத்து கனவு காண போய்விட்டார் மாறனின் அம்மா..

"
அபி..அபி..ப்ளீஸ் ஒருவாய் ஜூஸ் கொண்டு வந்து தா டி...அப்ப இருந்து கேட்டுட்டே இருக்கேன்..இவன் என்னை இதவிட்டு போகவும் விடமாட்டேங்குறான்..வேணுமா வேணுமான்னு...இதோட நாலு கிளாஸ் உன் வயித்துக்குள்ள மட்டும்தான் போயிருக்கு.. போமா போய் எனக்கு மட்டும்னு நினைச்சு ஒரு கிளாஸ் கொண்டு வாமா..."

அங்கிருந்த சுவரில் பல்லி போல் ஒட்டியிருந்த விச்சு.. கடைசி நேர அலங்கார ஸ்டிக்கர்களை ஒட்டியபடி கதறிகொண்டிருக்க...


"வேணுமா.. இது வேணுமா விச்சு..நிஜமா வேணுமா.."
வேலை செய்பவனை வெறுப்பேற்றி கொண்டிருந்தாள்..



"
ஸ்டாப்..எனக்கு வேணாம்...போற உசுரு இப்படியே போகட்டும்..உன் அக்கறை சக்கரைல்லாம் வேணாம்..பேசாம எழுந்து போய்டு.."


"ஓ
ய் குள்ளச்சி.."

திடீரென வந்த மாறனின் குரலில் புளிச்சென வாயில் இருந்ததை துப்பிவிட..


"
அட லூசே..உன்னை குடிக்க கேட்டேன் சூஸூ..மூஞ்சுல ஸ்ப்ரே பண்ண இல்ல..அடச்சீ எந்திருச்சு போ..அதான் துப்பிட்டல்ல..அப்புறம் என்னவோ பெருசா ஷாக் ரியாக்ஸனு குடுத்துட்டு இருக்கா..ஆமா அங்க எங்க பார்க்குற.."

அவள் சேரை எட்டி உதைத்த விச்சுவும் நிமிர்ந்து மாறனை பார்த்து பிரீஸ் ஆகி நிற்க..பக்கத்திலிருந்த ஏணியில் நின்றிருந்த பவியின் காலை சுரண்டினான்..


"
அடடேய்...ஏணியில நிக்கறவன் காலையா சுரண்டுற..விழுந்தா நீயாடா வந்து பொறுக்குவ பரதேசி.." பவி அப்படியே எட்டி இரண்டு விட..

"
டேய் நெடுமரம்டா.."

சொன்ன நொடி மேலிருந்து தொப்பென குதித்திருந்தான் பவி..

"ஏண்டா
என்னடா இது...நாம என்னமோ டான் லெவல்ல வச்சு நம்ம நெடுமரத்த யோசிச்சா..இவன் சின்ன புள்ளங்க மாதிரி அவங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்திருக்கான் கம்ப்ளெய்ண்ட் பண்ண..இப்ப என்னடா பண்ண.."
கேட்ட விச்சுவையே பவி குறுகுறுவென பார்த்தவன்..

"
வாட்ச எப்படி மிதிச்ச?.."

"
அய்யோ அந்த பிளாஸ்பேக் இப்ப என்னத்துக்கு..வா பேசாம போய் கால்ல விழுந்தரலாம்..டீ அபி நீயும் வா.."

"
போடா நா வரலை..அவன் கேஸ் போட்டா போட்டுக்கட்டும்.. அங்க பாரு எப்படி நக்கலா சிரிக்குறான்.."

"
ஏய் பேசாம வா லூசே... ஒரு போர்ஸா போய் கால்ல விழுந்தா எல்லாம் மொத்தமா மறந்துரும்..பேசாம வாங்க.."

இருவரையும் தரதரவென இழுத்து போய் படாரென காலில் விழ..அதை எதிர்பார்க்காத கலையரசி பதறிப்போய் இரண்டடி தள்ளிப்போனார்...


"
என்ன ராஜா இதெல்லாம்.."

"
அது..அது எங்க ஈவண்ட் மேணேஜ்மெண்ட்ல இப்படித்தான் கால்ல விழுந்து பெரியவங்கள வெல்கம் பண்ணுவோம்..ப்ளீஸ் மதரம்மா...நாங்க தெரிஞ்சே வேணும்னு பண்ண எங்க பாவமெல்லாம் எங்களுக்கு தெரியாம அடிச்சுட்டு போக...ப்ளீஸ் பிளஸ் மீ மதர்.."

"
நல்லாருங்க நல்லாருங்க.. எந்திரிங்கப்பா.."

"
என் கால்ல விழுந்து முடிச்சு...இப்ப என் அம்மா காலா... விளங்கிடும்.." மாறன் நொடித்துக்கொண்டான்..

"
ம்ம்..ம்மா இந்த புது வாட்ச் நல்லாருக்கா.." மாறன் வேண்டுமென்றே கேட்க...

"
அய்யோ..அய்யய்யோ..யம்மா..சும்மா அள்ளுது சார்..உங்க கைக்குன்னே அளவெடுத்து செஞ்ச மாதிரி அப்படி இருக்கு..சான்ஸே இல்ல..ஏ அபி.."

பவி வந்து கையை பிடித்துக்கொள்ள அபி பலமாய் தலையாட்டினாள்.

"
ஆமாமா.."

"
அப்புறம் அந்த யானை..."

"
யானையெல்லாம் காட்டுக்குள்ள பத்திரமா இருக்கும்..உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க... நானே அரேன்ஞ் பண்ணி சைட் சியிங்கு உங்கள பார்க்க கூட்டிட்டு வர்றேன்.."
விச்சு வந்து தலைகொடுத்தான்..


"
வேற..."

"
அய்யோ சார் இதுக்கு மேல எங்கனால முடில சார்..அறியாப்புள்ளங்க சார்...பாவம் பார்த்து வுட்டுடுங்க சார்..."

விச்சு பெருங்குரலெடுத்து பவியோடு அபியையும் கட்டிக்கொண்டு அழ....

கலையரசி அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார்..

"
என்ன ராஜா இதெல்லாம்.."

"
அதுங்க அப்படித்தான் நீங்க வாங்கம்மா.."

அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நொடி மூவரின் அழுகையும் சுவிட்ச் போட்டது போல் நின்றுவிட...நிமிர்ந்து பார்த்து கையடித்து கொண்டனர்...


பவியும் விச்சுவும் வேலையை பார்த்துக்கொண்டு மாறனிடமும் ஒரு கண் வைத்திருக்க..அபியோ இரண்டு கண்ணையும் மொத்தமாய் அவன்மேல் வைத்து பச்சையாய்
சைட்டடித்து கொண்டிருந்தாள்..

அந்த ஓப்பன் கார்டனில் ஆங்காங்கு

வட்ட மேஜையில் அமரும் செட்டப்பிருக்க...மாறன் குடும்பம் போய் ஒன்றில் இருந்து கொண்டது.. இளமாறனும் கலையரசியும் போய் மரியாதை நிமித்தமாய் ரத்தினத்திடம் பேசிவிட்டு வர..நெடுமாறன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.. ரத்தினம்தான் நேரடியாய் வந்து உபசரித்தார்...தொழிலில் மாறனின் உயரம்..நன்கு தெரிந்தவர் என்பதால் இந்த தனி கவனிப்பு அவனுக்கு.. வெறும் ஒரு தலையாட்டலோடு அவரையும் எட்டி நிறுத்தினான் நெடுமாறன்..

"
பாரேன் உங்கப்பன..விட்டா நெடுமரம் கால்ல விழுகுறதுல நமக்கே டஃப் குடுப்பாரு போல..."

ஆம்...அபி இருந்த இடத்திலிருந்து மாறனையே விழியகற்றாமல் பார்த்திருந்தாள்...அங்கிருந்த எல்லோருமே அவனிடம் வந்து வந்து மரியாதையாய் பேசுவதும்...அதை அவன் சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொள்வதையும் பார்த்தவளுக்கு ஏனோ கர்வமாய் இருந்தது..



"
என் நெடுமரம் உண்மையாவே ஹூரோதான்..ஆனா அந்த ஹூரோ பக்கத்துல நா இருந்தா அவன் ஜீரோ ஆய்டுவானே..என்ன பண்ண.. அவங்கம்மா கூப்பிடற மாதிரி இந்த ராஜாவுக்கேத்த ராணியே வந்து இவன கட்டிக்கட்டும்..நா வேணா இவனுக்கு.."

உள்ளுக்குள் எடுத்த முடிவுக்கு மாறாக..அவன்பின்னாலேயே சுற்றும் கண்களை அடக்க முடியாமல் திண்டாடிப்போனாள் பெண்..

அவன் பார்க்கும் திசையிலெல்லாம் போய் நின்று அவனையே பார்த்து பார்த்து வைக்க.. வேண்டுமென்றே அவனும் வேறுவேறு பக்கம் பார்க்க.. கோவத்தில் கையில் இருந்த பூஜாடியை போட்டு சத்தமாய் உடைத்ததில்..அங்கிருந்த எல்லோரும் மொத்தமாய் அவளைத்தான் பார்த்தனர் அவனைத்தவிர..

"
மஹீம்..இவன் வேணும்னே பண்றான்.."

கொஞ்ச நேரம் பொறுத்தவள்.. "ஆன்ட்டி இது வேணுமா... ஆன்ட்டி அது நல்லாருக்கா... ஆன்ட்டி உங்களுக்கு சுகர் இருக்கா..." ஆயிரம் ஆன்ட்டி போட்டு...அவரை படுத்தி வைத்தாள்..

"
தம்பி என்னை பார்த்தா பாவமாயில்ல..அவகிட்ட பேசி விட்டுறேன்..இல்லேன்னா இத்தனை ஆன்ட்டி போட்டு என்னை வித்திரும் இந்த பொண்ணு.."

அவன் அம்மா சொன்னதும் புதிதாய் பார்ப்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்து ஒற்றை விரலை ஆட்டிக்கூப்பிட..

"
என்னையா..நானா..இல்ல பின்னாடி இவங்களாயா..இல்ல நாந்தானா.."
வேண்டுமென்றே அவனை கடுப்படிக்க..


"
நீதாண்டி குள்ளச்சி இங்க வா.."

நேராய் வந்தவளிடம் ஏதோ சொல்வதை போல் குனிய..ஆசையாய் அவளும் நெருங்கினாள்..

"
பத்து நாள் கழிச்சு உன்னை பார்த்துட்டு நானே என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்... அடிக்கடி கண்ணு முன்ன வந்த..இருக்கற க்ளைமேட்க்கு இழுத்து வச்சு கிஸ் அடிச்சுடுவேன்..ஓடிப் போய்டு.."

வாயசைத்ததே தெரியாமல் முனுமுனுவென சொன்னவனை "ஆஆஆ...ஹஹ்.."
என வாயை பிளந்து பார்க்க... அவள் வாயை மூடியவன்.. "ம்ம்ம்..ஆமா..போய் ஜூஸ் கொண்டு வா போ.."

அவன் தொட்டதும் கோவத்தில் தட்டிவிட்டவள்..

"
நா ஏன் எடுத்துட்டு வரணும்..போய் பங்ஷன் பண்றவங்கள கேளுங்க.."

"
ஏன்..இது உன் வீட்டு பங்ஷன்தான..நீ இந்த வீட்டுப் பொண்ணுதான?.."

கேள்வி கேட்டவனை கண்ணில் வலியோடு ஒரு அடிபட்ட பார்வை பார்த்தாள்.

"
ஓஹ் அப்ப..இந்த வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சதாலதான் வந்தீங்களா..."

"
இல்ல...அபி..அபிக்காக மட்டும்தான் வந்தேன்...ஊட்டி இல்ல உலகத்துல எங்க இருந்தாலும் அபிக்காக மட்டும்.. அவள தேடி வருவேன்.."

மனதார உணர்ந்து சொன்னவனை கண்கள் பளிச்சிட பார்த்தவள்...

"
தேங்ஸ் நெடுமரம்....ரொம்ப ரொம்ப தேங்ஸ்..ஹேப்பி...அபி ரொம்ப ரொம்ப ஹேப்பி.."

அதே மலர்ச்சியோடு உள்ளே போனாள்..

"
இந்த ஊட்டி க்ளைமேட்க்கு எனக்கு காது ஏதோ அடச்சிருச்சு போல..அந்த பொண்ணு நெடுமாறன்னு சொல்றப்பல்லாம் எனக்கு ஏதோ நெடுமரம்னே கேக்குது.."

கலையரசி சீரியஸாய் கணவரிடம் புலம்பியபடி ஹோட்டலுக்கு கிளம்பிவிட..மாறன் சற்று தள்ளி நின்று அபிக்காக காத்திருந்தான்..

"
ஹாய்...மாறன்...யூ லுக் சோ ஹேண்ட்சம்.."

ஸ்ரீவாணியுடன் சேர்ந்து வந்து நின்றது சம்யுக்தா..

அதுவரை சிரித்திருந்த முகம்..சட்டென கடினமுற...ஒரு முறைப்போடு நகர்ந்தவனை வாணி தோளில் கையிட்டு நிறுத்திக்கொண்டாள்..

"
ஸாரி டார்லிங்..அந்த மேகஸின் போட்டோ நா குடுக்கல..அது யாரோ வேணும்னே பண்ணது.. நீங்க ஓகே சொல்லாம நா பப்ளிக் பண்ணுவேனா நம்ம ரிலேஷன்ஷிப்ப.."
அதிகத்திற்கும் நெளிந்து குழைந்தாள்..


"
ஸ்டே அவே ப்ரம் மீ..உன் நல்லதுக்குதான் சொல்றேன்.."
பல்லிடுக்கில் வார்த்தையை கடித்து துப்பியவன்...திரும்ப கண்டது இவர்களையே பார்த்திருந்த அபியைத்தான்..


அவள் பார்வை வாணி பற்றியிருந்த அவன் தோளில் சென்றுவிட்டு... நேராய் இவனிடம் வர..அவன் நாசூக்காய் தோளிலிருந்த கையிலிருந்து நகர்ந்தபடி...
"நா இல்லடி.."என தலையை மட்டும் ஆட்டினான்.

அவன் பார்வையை தொடர்ந்து வந்த சம்யுக்தா...

"
ஹே அபி..என்ன ஜூஸ கையிலயே வச்சிட்டு..கமான் வந்து கெஸ்ட்க்கு குடு வா.."

அபிக்கு அதுவரை இருந்த கடுகடுத்த முகம்..சட்டென புன்னைகையை பூசிக்கொள்ள..மாறன் சுதாரித்து தள்ளி நின்று கொண்டான்..

"
இந்தாங்க மேடம் சூஸூ.." நீட்டியவள் அப்படியே தட்டோடு பொத்தென கையைவிட...அது வாணியை பாதி நனைத்து காலில் போய் நங்கென விழுந்தது..

"
ஸ்ஸ்ஸ்..ஆஹ்ஹ்..இடியட்.. அறிவில்ல..மைகாட் என் காலு.."

வாணி வலியில் கத்த...சம்முவோ
"யூ டர்ட்டி..." என்றபடி அடிக்க கை ஓங்கியிருந்தாள்..

"
டேய்...விச்..சு.."

அந்த இடமே அதிர்ந்து போய் கேட்ட
மாறனின் உறுமலில் அடித்து பிடித்து ஓடிவந்தான் விச்சு.. முகமெல்லாம் சிவந்து நின்றிருந்த மாறனை கண்டதும் என்னவென புரியாமல் கேள்வியாய் பார்க்க...அடுத்த நொடி ஓங்கி பளாரென அறைந்திருந்தான்..

"
அய்...ய்யோ..அம்..ம்மா...."

விச்சுவிற்கு காதெல்லாம் அடைத்து கண்ணெல்லாம் இருட்டி வர..குத்துமதிப்பாய் அபியின் கையை ஆதரவுக்கென பற்றிக் கொண்டான்..

"
கண்டவங்க கிட்ட அடி வாங்கத்தான் இவள பொத்தி பொத்தி பார்த்துக்கறீங்களாடா அறிவு கெட்டவனுங்களா.. இவள கூட்டிட்டு போங்கடா..."


அவன் முகச்சிவப்பும்... ஆத்திரத்தில் வந்த வார்த்தைகளும்.. சம்யுக்தாவிற்கு நன்றாய் உணர்த்தியது இது அவளுக்கு விழுந்திருக்க வேண்டிய அறையென்று..
"நா கண்டவளா... இருடா நா யாருன்னு காட்டறேன்.."



மனதில் நன்றாய் வஞ்சமேற்றி கொண்டவள் அவள் அப்பாவிடம் தள்ளி போய் பேசிவிட்டு வந்தாள்..

"
டேய் விச்சு..டேய் ஏண்டா நா பேசுறது கேக்குதா..இங்க பாருடா..அபிடா..அது முட்டுசந்து அங்க எங்க‌ போற.."

"
அபிமா...நானே வாங்குன அடில கண்ணுமண்ணு தெரியாம போய்ட்டு இருக்கேன்..உனக்கு வழி தெரிஞ்சா நீ‌ பர்ஸ்ட் என்னை நல்லபடியா கூட்டிட்டு போய் பவிக்கிட்ட சேர்த்துருமா...."

"
ம்ம்..சரி வா போலாம்.." இறுதியில் அபிதான் விச்சுவை கைபிடித்து சென்றாள்..

அவர்கள் சென்றதை உறுதி செய்தவன்..வாணி சம்யுக்தா இருவரையும் பார்வையால் எரித்து நகர..இருவருமே ஒரு வெறியுடன் அவனை பார்த்து வைத்தனர்..

மழை வரும்....
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
மூணு வானரங்களோட அட்டகாசம் சூப்பர் 🤣🤣🤣

சம்யுக்தாக்கு பளார்ன்னு குடுக்கிற நாளும் வரும் 🤩 இப்ப அவ அப்பாகிட்ட போயி இவனைக் கல்யாணம் பண்ண கேட்டுருப்பா 🤣🤣 அத்தனை பேர் முன்னாடியும் மாறன் மூக்குடைக்கப் போறான்🤣🤣

வெயிட்டிங் ஃபார் தட் மொமண்ட் ❤️