• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை-7

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
ஹாஸ்பிடல் காரிடரில் ஆங்காங்கு கேட்ட சத்தம்கூட அந்த அறையில் இல்லாமல் படு அமைதியாய் இருந்தது..

காட்சி மறைக்கும் கண்ணீரை அவ்வபோது துடைத்தபடி மாறன் பார்த்தது...பெட்டில் படுத்திருந்த அபியைதான்.. கையில் டிரிப்ஸ் மெதுவாய் இறங்கி கொண்டிருக்க.. முழு மயக்கத்தில் இருந்தாள் பெண்..

"
என்னை மன்னிருச்சுருடி..நா உன்னை விட்டுட்டேன்..எனக்கு தெரிஞ்சே விட்டுட்டேன்.."

பெட்டில் அவள் முகமருகில் முகம் வைத்து படுத்திருந்தவனுக்கோ ஒருமணி நேரம் முன்பு நடந்தது மனக்கண்ணில் ஓட..பல்லை நறநறவன கடித்து கொண்டான்..


சரியாய் ஒருமணி நேரம் முன்பு..

"
ஸாரிடா விச்சு..

விச்சு கன்னத்திலிருந்த கைதடத்தை மெதுவாய் தடவி விட்டவளை.. வழக்கம் போல் தலையில் கொட்டியே சரிசெய்தான் விச்சு..

"
அவன் உன்னை ஏண்டா அடிச்சான்..நீ ஏண்டா சும்மா விட்டா..இரு நா போய் என்னன்னு கேட்டு வர்றேன்.."

வீரமாய் கிளம்பிய பவியையும் விச்சு தடுத்துவிட்டான்..

"
விடுடா..அவன் வேணும்னா அடிச்சான்..அப்ப அங்க வச்சு அவன் என்னை அடிக்கலன்னா அந்த சம்முவும் அடங்கிருக்க மாட்டா..விடு.. இந்த லூசுக்காகத்தான வாங்கினேன்..ப்ரீயா விடு.."

ஆனாலும் பவி முகம் கடுகடுவென்றுதான் இருந்தது.. அதுதான் பவி...விச்சுவை தர்ம அடி அவன் சாத்தினாலும்.. அடுத்தவர் சின்னதாய் முறைத்தாலே பொங்கிவிடுவான்..அபிக்கு என்றால் சொல்லவே வேண்டாம்.. அடித்துவிட்டுதான் பேச்சே..

"
போடாங்க...அவன் அந்த சினிமா ஸ்டார் வாணி முன்னாடி சீன் போட உன்னை அடிச்சிருப்பான்...இரு இங்க இருந்து போறதுக்குள்ள அந்த சம்முக்கு ஒரு கும்மு..இவனுக்கு ஒரு சம்பவம்...பண்ணாம போறதில்ல...

முடிவெடுத்தபின்தான் நகர்ந்தான்.

சம்முவிடம் பேசிய பத்து நிமிடத்தில் பவி விச்சுவிடம் வந்த ரத்தினம்..

"
தம்பி..வந்த கெஸ்டுங்களுக்கு குடுக்கற ரிடர்ன் கிப்ட் பாக்ஸ் என் ரூம்ல இருக்கு..கொஞ்சம் எடுத்துட்டு வாங்கப்பா...அது கோல்ட் ஐட்டம்ஸ்ங்கறதால வேற யாரயும் நம்ப முடியாது.. அதான்.."
சொல்லி சாவியையும் தர.. ஒத்துக்கொண்டவர்கள் அபியிடம் வந்து நின்றனர்..

"
இங்க அந்த சம்மு இன்னும் இருக்கா...நீ இருந்தா மறுபடி எதுனா வம்பிளுப்பா..நீ வா..மேல ரூம்ல கொண்டு போய் விடறோம்.."

பவி அழைக்கவும்..அபிக்குமே விச்சு அடிவாங்கியதில் மனது மிகவும் கஷ்டமாகிவிட... சம்மதமாய் அவர்களுடன் போய் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

இங்கு அபி போய் வெகுநேரமாகியும்..நெடுமாறன் எங்கும் நகரவில்லை... விச்சுவை அடித்தது..அபியின் அழுத முகம் இரண்டுமே அவனை கலங்க வைக்க..எதுவும் தோன்றாமல் அப்படியே இருந்து கொண்டான்.. கண்ணை நன்றாய் திறந்து வைத்து அபிக்காக காத்திருக்க அவள் வரவேயில்லை..

பொறுத்து பார்த்தவன்..நீண்ட தயக்கத்திற்கு பிறகு போனை கையிலெடுத்தான்..அபியின் எண் எப்போதோ இவனிடம் ஷங்கர் மூலமாக வந்திருந்தது..ஆனால் இதுவரை அழைத்ததில்லை... நேரில் பார்ப்பதற்கே இவனால் அவளை விட்டு இருக்கமுடியவில்லை..இனி போனிலும் பேசி அதை ஒரு வழக்கமாக்கினால் அவளை சுத்தமாய் விட முடியாது என்பதாலேயே அதை தவிர்த்திருந்தான்..ஆனால் இன்று வேறு வழியில்லாமல் போக ஒரு தயக்கத்துடன் எடுத்து அடித்துவிட்டான்.. அங்கு ரிங் போக போக..இவனுக்கிங்கு படபடப்பில் வேர்த்து பூர்த்தது..

"
ஹலோ..."

.......

"
ஹலோ யார் பேசுறது?.."

...........

"
ஹலோ ...."

..........

"
நெடுமரம்??.."

கேள்வியாய் கேட்டவளுக்கு எதிர்பக்கமிருந்து வந்த மூச்சு சத்தமே தெளிவாய் சொன்னது இது அவன்தானென..

"
நெடுமரம்தான??..."

"ம்ம்..."

"ப்ளீஸ் பேசுங்க..."

"ம்ம்..அபி ஓகேவா.."

"ஓஹ்..நா ஓக்கேதான்.. எனக்கென்ன..விச்சுக்குதான் பாவம் கன்னம் வீங்கிடுச்சு.."

அதற்கு பதில் சொல்லாமல் சிரிக்க..

"
நீங்க எங்க இருக்கீங்க?.."

"நீ என்னை எங்க விட்டுட்டு
போனியோ அங்கயேதான் உனக்காக இருக்கேன்.."

அவன் சொன்னதும் ஓடிவந்து ஜன்னல் வழி பார்க்க... அங்குமிங்கும் தேடியபடி இருந்த மாறன் தெளிவாய் தெரிந்தான்..அவன் தேடலில் இதமான சாரல் உள்ளுக்குள்..

"
எங்க இருக்க நீ.."

"ம்ம்..இப்ப இந்த குள்ளச்சி உங்களவிட உயரமா இருக்கா.."

சொன்னதும் சட்டென அண்ணாந்து பார்க்க..இப்போது அவனுக்கும் அபி தெரிந்தாள்..சிரித்து கொண்டார்கள் இருவரும்..

"
இங்க வா.."

"ம்ஹும்..பவி கீழ வரக்கூடாது சொல்லிட்டான்..அங்க சம்மு இருக்கா.."

"நா இருக்கேன்ல வா.."

"மாட்டேன் பவிக்கு தெரிஞ்சா கோவப்படுவான்.."

அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை..ஆனால் அவனுக்கு அவளிடம் பேசி..அல்ல குடுத்தே ஆக வேண்டிய விஷயம் ஒன்று இருந்தது..அதை நேரில் குடுக்கவே இவ்வளவு நேரமும் காத்திருந்தான்..

"
டீ குள்ளச்சி..."

"ம்ம்.."

"உன்கிட்ட ஒன்னு குடுக்கணும்..
இன்னைக்கே..இப்பவே.."


சொன்னதும் அவள் அங்கு முகம்சிவப்பது இவனுக்கிங்கு மணக்கண்ணில் வந்து போனது..

"
என்ன குடுக்கணும்.. என்ன..என்ன குடுக்கணும்.. சொல்லு..சீக்கிரம்…"

அதற்குள் அயிரம் முறை என்ன போட்டவளை...

"அடங்குடி ஒரு நிமிஷம்.."
அவளுடன் பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க..குடிக்க வரிசையாய் வைத்திருந்ததில் வாட்டர்மெலன் ஜூஸை கையிலெடுத்தவன் இரண்டு சிப் குடித்து திரும்பி கொண்டான்..

"
நெடுமரம் என்ன பண்றான்..இங்க இருந்து தெரியமாட்டேங்குதே...என்ன குடிக்குறான்??.."

அபிக்கு எதிர்புறம் வேண்டுமென்றே திரும்பி நின்றவன்...மெதுவாய் உள் பாக்கெட்டிலிருந்த பெட்டியை எடுத்து வலிக்காமல் திறக்க..அபிக்காக வாங்கியிருந்த அந்த வைர மோதிரம் கண்ணை பறித்தது..மூன்று பவளங்களுக்கு நடுவில் இருந்த ஒற்றை வைரக்கல் டாலடிக்க..ஆசையாய் அதை வருடிக்கொண்டவன்..பாதி ஜூஸை கீழே கொட்டி கொஞ்சமாய் இருந்ததில் உள்ளே போட்டான்..


அதற்குள் அபி அங்கு பலதடவை அவன் பேரை ஏலம் விட்டிருக்க..அவளிடம் விளையாடி பார்க்க நினைத்தவன்...திரும்பி நின்று..

"
என்னடி.."

"ஆஹ்..இல்ல ஏதோ குடுக்கணும் சொன்னீங்க.."

"ம்ம்ம்..அதா..அப்படியா சொன்னேன்..அது என்னன்னா இங்க இந்த ஜூஸ் நல்லாருக்கு..இப்பதான் நா குடிச்சு பார்த்தேன்..அதான் குடுத்து விடறேன் சொன்னேன்.."

"ம்ம்ஹ்ம்..இல்ல நீங்க குடுக்கணும் சொன்னீங்க.."

"ப்ப்ச்..இல்லடி குள்ளச்சி... குடுத்து விடறேன்னுதான் சொன்னேன்..இப்ப
என்ன இந்த ஜூஸ் வேணுமா வேணாமா?.."

அவன் இரண்டு வாய் குடித்தை பார்த்ததால்.."வேணும்.."என வாய் தானாகவே சொல்லியிருக்க..

"அ
து..இரு குடுத்து விடறேன்..இத பார்த்ததும் உனக்கே தெரியும் நா ஏன் குடுத்து விடறேன்னு..மெதுவா குடிமா..மொத்தமா விட்டு அடிச்சிடாத சரியா..இத பார்த்ததும் பிடிச்சு நீயே கீழ வருவ.."

ஒரு நக்கலுடன் சொன்னவன்..அங்கிருந்த வெயிட்டரை அழைத்து அபியிடம் அதை பத்திரமாய் சேர்க்கும்படி சொல்லி.. அவளுக்காக ஆசையுடன் காத்திருக்க..இடையில் சம்முவின் சதியால் வாட்டர்மெலன்.. ஸ்ட்ராபெரியாய் மாறிப்போனது..

ஒரு வெறியுடன் அங்கேயே சுற்றி கொண்டிருந்த சம்முவின் விழிகளில் மாறன் கையிலிருந்த மோதிரமும் அவன் அதை குடுத்த விதமும் கண்டு..வேட்டையாடும் சிறுத்தையின் பளபளப்பு..

ஆம் சிறு வயதிலிருந்தே அபிக்கு ஸ்ட்ராபெர்ரி என்ற ஒரு வஸ்து சேரவே சேராது..கொஞ்சமாய் எடுத்தாலே உடலெல்லாம் தடித்து சிவந்து..சிலசமயம் நீண்ட மயக்கத்துடன் காய்ச்சலிலும் விழுந்திருக்க.. அதை கண்டாலே பேயை பார்த்தது போல் அலறுவாள். அதை எந்த வகையிலும் அவள் உடல் ஏற்றுக்கொள்ளாது..

"
நானா கண்டவ..இன்னைக்கு உன் ஆளுதான் கண்டமாகப்போறா பாருடா"

போய்க்கொண்டிருந்த வெயிட்டரை மிரட்டி..ஜூஸை மாத்தி வைத்தவள்..அந்த மோதிரத்தை பார்த்து வயிறெரிந்து போனாள்..


"விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சமாம்.. இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்.."

அல்ப்பமாய் அவள் விரலில் போட்டு‌ பார்க்க..தடித்திருந்த அவள்‌ விரலுக்குள்..மெலிதாய் அபியின் அளவிலிருந்த மோதிரம் போகாதததால் கோவத்தில் அந்த ஸ்ட்ராபெர்ரி ஜூஸூக்குள்ளேயே போட்டு..."அவ தலைல கொண்டு கொட்டு.."என கத்தியிருந்தாள்‌‌..

கொழுகொழுவென தன்னறைக்கு வந்த ஸ்ட்ராபெர்ரி ஜூஸை பார்த்ததும்...அபிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி..முகமெல்லாம் வேர்த்து கண்கள் கலங்கிய அந்த சின்னவளை பார்த்து முதலில் அந்த வெயிட்டருக்கே பாவமாய் போனது..ஆனால் சம்மு பலமாய் மிரட்டியிருந்ததால்..

"நீங்க கடைசி வரை மிச்சமில்லாமல் குடிக்கணுமாம் மேடம்..இருந்து என்னை வெயிட் பண்ணி வாங்கிட்டு வர சொன்னாரு.."

தலைகுனிந்தபடி சொன்னவரிடம் ஒரு சிரிப்பை குடுத்தவள்..


"எம்மேல இவ்ளோதான் நம்பிக்கையா நெடுமரம்...நீ சொன்னா இதென்ன..விஷமா இருந்தாலும் நா சந்தோஷமா குடிப்பேன்.."

நடுங்கும் விரலோடு எடுத்தவள் பின் ஒரு முடிவுடன் மடமடவென குடிக்க தொடங்கினாள்... கண்ணை இறுக்கமாய் மூடி...மூச்சை இழுத்துபிடித்தபடி வேகமாய் குடிப்பவளை தடுக்கமுடியாமல் அங்கிருந்தவர் கையை பிசைந்து கொள்ள... பாதிக்குமேல் குடிக்கும்போதே அந்த மோதிரம் அவள் வாயில் மாட்டிவிட.. என்னவென எடுத்து பார்த்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது அவன் பேச்சின் அர்த்தம்....

"
பார்த்துட்டு நீயே வருவ…"

அவன் மோதிரத்தை வைத்து பேசியதை தான்தான் தவறாய் அர்த்தம் எடுத்து கொண்டோமோ என யோசித்தவளுக்கு வேறெங்கோ தவறு நடந்திருப்பதாய் புரிந்தது..

"
இந்த ஜூஸ் நிஜமாவே அவருதான் குடுத்தாரா..உண்மையா சொல்லுங்க அங்கிள்.."

பாவமாய் கேட்ட சின்னவளிடம் மறைக்க முடியாமல் உண்மையை சொன்னவர்..

"
என்னை மன்னிச்சிருமா..நா பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இது எதுக்காக மாத்தி குடுத்தாங்கன்னு தெரியல.. நாகூட ஏதோ விளையாட்டுன்னுதான் முதல்ல நினைச்சேன்...ஆனா இது நீ குடிக்க பயந்தப்பதான்... அய்யோ அம்மாடி என்னாச்சு..இரும்மா..எனக்கு பயமாயிருக்கு..நா யாரயாவது கூட்டிட்டு வர்றேன் இரு..."

அவர் பாதி பேசுவதற்குள் தொப்பலாய் நனைந்து போனாள் வேர்வையில்.. மங்கலாய் பார்வை மறைந்து மயக்கம் வருவது போலிருக்க.. காதுக்குள்.."இத பார்த்துட்டு நீயே கீழ வருவ..." என்ற மாறனின் குரல் கேட்க... நன்றாய் முகத்தை தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டாள்..

கண்ணாடியில் தெரிந்த முகத்தில் ஆங்காங்கு சிவப்பு தடிப்பு தொடங்கியிருக்க... அவசரமாய் கீழே போனாள்..

மெல்லிய நாணம் ..வெட்கத்தில் சிவந்த கன்னமென அழகிய கற்பனையில் அபியை வைத்து மிதந்து கொண்டிருந்த மாறனுக்கு கண்கள் இடுங்கியது அவள் வரவில்..

"
இவ ஏன் இப்படி தள்ளாடிட்டு வர்றா...இதென்ன இந்த க்ளைமேட்க்கே இவ முகம் இப்படி சிவந்திருச்சா.. என்னாச்சு?.."

சற்று தடுமாறிய நடையில் மாறனை நெருங்கியவள்... மறைவிலிருந்த கையை எடுத்து மெதுவாய் விரிக்க..அதற்குள் அழகாய் இருந்தது அந்த மோதிரம்..

"
நெடுமரம் ப்ளீஸ் இத போட்டு விடுங்க.."

"ஏய் அபி... இதென்னடி.. என்னாச்சு உனக்கு ..உன் முகமெல்லாம் ஏன்?.."

"ம்ம்ம்..ப்ளீஸ் போட்டு விடுங்க.."

அவள் சொன்ன விதத்திலும் அவள் நின்றிருந்த தோற்றமும்...எதுவோ செய்ய..அவசரமாய் அதை எடுத்து போட்டு முடிக்க...


"நிஜமா உன்னை பிடிக்கும் நெடுமரம்..உன்னை மட்டும்.."

சொன்னவள் அவனே எதிர்பாராத நொடியில் மெலிதாய் இதழை ஒற்றியவள்..அடுத்த நொடி அவன்மேலேயே மயங்கி சரிந்திருந்தாள்..


"அ...பி.."

சர்வமும் நடுங்கி போனது அவனுக்கு..அவள் பிடிக்குமென சொன்னதுகூட அதிர்ச்சியில் பின்னே போய்விட...கையில் வந்து விழுந்தவளை அப்படியே அள்ளிக்கொண்டான்..


அன்று அவளை முதல்முறை தூக்கும்போது ஆசையுடன் பார்த்த முகத்தை இன்று கண்ணை மறைத்த கண்ணீரோடு பார்த்தவனுக்கு தாளவேயில்லை..உடைந்து அழுதவன் நொடிகளில் சுதாரித்து கொண்டான்…இல்லை இது தான் உறுதியாய் இருக்க வேண்டிய நேரம்.. நீண்டதொரு மூச்சை விட்டவன்..அவசரமாய் அவளை அள்ளி காரில் போட்டு ஓடினான்..

அவள் முத்தம் கொடுத்த போது வந்த ஸ்ட்ராபெர்ரி வாசனையில் அவனுக்கு எல்லாம் மொத்தமாய் புரிந்து போனது..

"ஸ்ட்ராபெர்ரி உனக்கு சேராதில்ல அது வேணாம்.." அன்று பவி சொன்னது காதில் கேட்க...எப்படி மாறியது என தெரியாமல் போனாலும் பிண்ணனியில் யார் இருப்பார் என நன்றாய் தெரியுமே அவனுக்கு..கையை மடித்து ஆத்திரத்தை ‌அடக்கினான்..

புயல்வேகத்தில் காரை ஓட்டி.. ஓட்டும்போதே அத்தனைமுறை "ஸாரிடி அபி..ஸாரிடி.."என கண்ணீரோடு கதறி... ஹாஸ்பிடலில் "என் வைப்ங்க...சீக்கிரம் பாருங்க.. சீக்கிரம்..பார்த்து...அவ வலிதாங்க மாட்டா.."என ஆயிரம் பத்திரம் சொல்லி..அவளை அவசரமாய் உள்ளே கொண்டு செல்லும் வரையிலும் அவன் நிமிடம் நிமிடமாய் செத்து பிழைத்தான்...

டாக்டர் வந்து.."அவங்க மயக்கத்துல இருக்காங்க.. அவங்களுக்கு சாப்பிட்டா அலர்ஜி ஆகுறத கொஞ்சம் அதிகமாவே எடுத்துட்டாங்க போலருக்கு..சோ ரியாக்ஷ்ன் கொஞ்சம் ஹெவியா இருக்கு... ஆன்ட்டி டோஸ் இன்ஜெக்ட் பண்ணிருக்கோம்.. ட்ரிப்ஸ் இறங்குது...பயப்படாதீங்க.. மேக்ஸிமம் ஒரு டூ டேஸ்ல ரெக்கவர் ஆயிடுவாங்க.."

அதை சொல்லும் வரையிலும் அவன் உயிர் அவன் கையிலில்லை.. நடு இரவில் தனியறைக்கு மாற்றிதர...எங்கும் நகரமால் அவள் அருகிலேயே அவள் முகத்தை பார்த்தபடி இருந்துவிட்டான்..

நடந்ததை நினைத்தவனுக்கு கண்ணை மறைக்கும் ஆத்திரம் சம்முவின் மேல்.. இவள் இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால்..இருந்த ஆத்திரத்திற்கு அடி வெளுத்திருப்பான்...பெண்ணாய் போனவளை கைவைத்து அடிக்க ஏனோ கூசியது.. ஆனால் அப்படியே விட்டால் அது மாறன் அல்லவே...அப்போதே ஆட்டத்தை தொடங்கியிருந்தான்.. ஷங்கரை அழைத்து சில வேலைகளை சொல்லி வைக்க...அபி லேசாய் அசைவது தெரியவும் அவளிடம் ஓடினான்..

"
அபி..அபிமா..டேய் குள்ளச்சி கேக்குதா.."

அவன் எப்படி அழைத்தும் அவள் மறுபடி தூங்கியிருக்க... சிவந்திருந்த முகத்தையே பார்த்திருந்தான்..

"
நீங்கதான் இவங்க ஹ்ஸ்பெண்டா இந்த ஆயிண்ட்மெண்ட் கொஞ்சம் போட்டு விடுங்க சார்..."

நர்ஸ் குடுத்து போய்விட..அதை வலிக்காமல் மெதுவாய் பூசிவிட்டான்..அன்று லேசாய் தொட்டதற்கே கையை தட்டிவிட்டவள்..இப்போது அசையாமல் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு உள்ளமெல்லாம் வலித்தது.. ஒவ்வொரு இடமாய் போட்டு கைக்கு வந்தவன்.. கையிலிருந்த மோதிரத்தை பார்த்ததும் அதையே சிலநொடிகள் பார்த்திருந்தான்..மெதுவாய் அவள் கையை தூக்கி தனக்குள் வைத்துக்கொண்டவன்..

"பைத்தியமாடி நீ..நா சொன்னேன்னு ஒரே காரணத்துக்காக உனக்கு சேராதத ஏண்டி குடிச்ச..அவ்ளோ பிடிக்குமா உனக்கு என்னை.."

வலிக்காமல் அவள் இதழை‌ ஒருமுறை வருடியவன்..

"
அபிக்கு என்னை பிடிக்குமா.. பிடிக்குமான்னு கேக்கும் போதெல்லாம் சொல்லாம.. இன்னைக்கு ஏண்டி சொன்ன.. என்னை உயிரோட கொல்லவா.. நீ சொல்லிட்டு என்கையில விழுந்ததும் என் உசுரே என்கிட்ட இல்ல...மனுசன உயிரோட கொல்றடி நீ.."

"உன்னை என் பேரண்ட்ஸ்கிட்ட நாளைக்கு இவதான் உங்க மருமகன்னு சொல்லணும்னு ஆசப்பட்டேன்..ஏன்னா இதுக்கு மேல என்னால உன்னைவிட்டு இருக்க முடியும்னு தோணல... அதான் இன்னைக்கு உன் மனச தெரிஞ்சே ஆகணும்னு ஒரு வெறி...இந்த மோதிரத்த உன்கிட்ட குடுத்து ப்ரபோஸ் பண்ணி உன் பதில வாங்கிடணும்னு ஒரு அவசரம்.. ப்ப்ச்... ஆனா இந்த மோதிரத்த குடுத்தோ...இல்ல வேற ஏதாவது செஞ்சோதான் உன்மனசு எனக்கு புரியணுமா..அதுதான் எனக்கு எப்பவோ தெரியுமே.."

"எப்படி கேக்குறியா..ஒவ்வொரு தடவ என்னை நெடுமரம்னு கூப்பிட்டு என்னை குறுகுறுன்னு பார்ப்ப..நா கோவப்படலேன்னா அப்ப உன் கண்ணுல வர்ற ஒரு சந்தோஷம்..நா குள்ளச்சின்னு கூப்பிடும்போது சிரிப்ப அடக்குற உன் உதடு..அந்த போட்டோல விட்ட ஹார்ட்டு.. என்னை பார்த்தாலே கீழ இறங்குற உன் கண்ணாடி... இதெல்லாமே எனக்கு சொல்லாம சொல்லிடுச்சு உன் மனச..ஆனாலும் ஏன் கேட்டேன் தெரியுமா..அது என் அப்பாவுக்காக...அவருக்கு நா பண்ண ஒரு தப்புக்காக...என்ன தப்பு கேக்க மாட்டியா.."

மயக்கத்திலிருந்தவளிடம் பாவமன்னிப்பு கேட்பதுபோல் தன் கதையை கூறத் தொடங்கினான்..
 

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
"பத்து வருஷம் முன்ன நானும் அப்பாவும் செம க்ளோஸ் அபி.. பயங்கர திக் பிரண்ட்ஸ்.. அப்பல்லாம் நா இப்படி இருக்கமாட்டேன்‌....உன் அளவுக்கு இல்லேன்னாலும் நல்லா வாயடிச்சுட்டு...நிறைய பிரண்ட்ஸ்..ஜாலியா டூர்..நினைச்சா கோவா...லைப் ஒருமாதிரி கலர்புல்லா போய்ட்டு இருந்துச்சு..

இப்போது அபி லேசாய் இரும...எழுந்து லேசாய் தட்டிவிட்டு போர்வையை நன்றாய் போர்த்திவிட்டு தொடர்ந்தான்..

நா காலேஜ் செகண்ட் இயர் படிக்கறப்ப .. பர்ஸ்ட் இயர் நியூ ஜாயின் பண்ணா ஒரு பொண்ணு பேரு ஸ்வேதா.."

இப்போதும் இதை சொல்லும்போது அபியை ஒரு பயத்துடன் பார்த்தவன்.

"
அந்த பொண்ணுக்கு அப்ப காலேஜ்ல பயங்கர கிரேஸ்..பாட்டு..ஸ்போர்ட்ஸ் எல்லாத்துலயும் அவதான்.. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல போய் ஏதேதோ ப்ரைஸ் வாங்குவா... எப்பவும் காலேஜ்ல அவபேர் தொடர்ந்து கேட்டுட்டே இருக்கும்...அப்படி மொத்த காலேஜூம் பின்னாடி சுத்தற ஒரு பொண்ணு என்கிட்ட வந்து அவளே ப்ரப்போஸ் பண்ணா நா என்ன பண்ணிருப்பேன் சொல்லு.."

அபி அங்கு மெளனமாயிருக்க..

"
ஐயாவுக்கு ஏக குஷி..நா அக்செப்ட் பண்ணிட்டேன்.. என்கிட்ட அவ எப்பவும் சொல்ற வார்த்தை.."யூ ஆர் சோ மேன்லி..." அத கேக்கும்போதெல்லாம் ஒரு போதை...அந்த போதைல அவ கேக்குறதெல்லாம் வாங்கி குடுத்தேன்..அவ கண்ணு பார்க்குறதெல்லாம் உடனே அவ கைல இருக்கும்...அப்படி இருந்தேன்..ஆனா வாங்கி குடுக்கறது மட்டும் முக்கியமா தெரிஞ்ச எனக்கு அதோட விலையோ.. மதிப்போ தெரியல..விளையாட்டுத்தனமா இருந்தேன்.."

"திடீர்னு ஒருநாள் அவ அப்பாக்கு ஏதோ பிசினஸ் லாஸ்..அதுனால பார்ட்னரோட பையனுக்கு அவளை கட்டி வைக்க போறாங்க...வாங்க போய் உடனே கல்யாணம் பண்ணலாம்னு வந்து நின்னா..எனக்கு யோசிக்க கூட டைம் குடுக்கல.. நானும் உடனே என் பிரண்ட்ஸ் கூட எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸூம் பண்ணிட்டு காலேஜ் டூர்னு சொல்லி கோவா போய்ட்டேன் கல்யாணம் பண்ண..ஆனா என்னதான் அப்பா பிள்ளைன்னாலும் அம்மாவோட வளர்ப்புன்னு ஒன்னு இருக்குல்ல..அது என்னை நீ தப்பு பண்றடான்னு சொல்லிட்டே இருந்துச்சு... பயந்துபோய் கடைசி நிமிஷத்துல அப்பாக்கு போன் பண்ணிட்டேன்..மனுஷன் பதறி அடிச்சுட்டு ஓடி வந்தாரு..இந்த வயசுல கல்யாணமெல்லாம் வேணாம் தப்பு..இந்த பொண்ண விட்டுடு சொன்னாரு..முடியாதுன்னேன்..சொத்து தரமுடியாதுன்னாரு... இவ போதும் எனக்கு உங்க சொத்து வேணாம் சொன்னேன்... பதட்டத்துல மயங்கி விழுந்தாரு... ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணி..அட்டாக்னு சொல்லவும் எனக்கு உயிரே போயிடுச்சு..அய்யோ நல்லா இருந்தவர வரவச்சு இப்படி பண்ணிட்டமேன்னு அவ்ளோ அழுதேன்..இதுக்கு நடுவுல அந்த பொண்ணு..நடக்க இருந்த கல்யாணம் எதுவுமே ஞாபகத்துல இல்ல..ஆனா விழுந்தது எங்கப்பா மட்டுமில்ல...எங்க கம்பெனி ஷேர்ஸூம் தான்னு..அடுத்த நாள் அவ வந்து சொல்லும் போதுதான்...எனக்கு எல்லாமே முகத்துல அறைஞ்ச மாதிரி புரிஞ்சது.."ஏற்கனவே உங்கப்பா சொத்து தரமாட்டேன்னு சொல்லிட்டாரு..இதுல உங்க கம்பெனியும் காலி ஆயிடும் போல..இப்ப உன்னை கட்டிகிட்டு நா என்ன டைப்பிஸ்ட் வேலைக்கா போய் குடும்பம் நடத்த முடியும்னு.." கேட்டுட்டு திரும்பி பார்க்காம போய்ட்டா... ஆனா அப்ப எனக்கு நிஜமாவே வலிக்கல அபி…ஏன்னா மொத்தமா எல்லாமே மரத்து போயிடுச்சு.."

"மனச விட காசுதான் பெரிசா போச்சான்னு என்னால அவகிட்ட போய் நியாயம் கேட்க தோணல.. ஏன்னா அது அப்படித்தான்னு செயல்லயே காட்டிட்டு போய்ட்டாலே... அப்புறம் எதுக்கு கேட்கணும்.. அத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டேன்..என்னால நொந்திருந்தவர்கிட்ட மன்னிப்பு கேட்டு..இனி அப்படி ஒரு தப்பு நடக்காதுன்னு சத்தியம் பண்ணி..அவர மறுபடி தொழில பார்க்க வச்சு..அவருகூடவே நானும் மேல ஏறி வந்தேன்..கீழ விழுந்தவன் சுதாரிக்கற வரைதான் தள்ளி விட்டவனுக்கான நேரம்..ஏன்னா விழுந்தவன் எழுந்தா அது முன்னவிட பலமடங்கு அதிகமா இருக்கும்..அதுமாதிரிதான் எங்க தொழிலும் பலமடங்கு வளர்ந்துச்சு..எதுவரைன்னா விட்டு போனவ மாதிரி பல ஸ்வேதாங்க என் பின்னாடி வந்து என்னை தொல்லை பண்ற அளவு வளர்ந்துச்சு.. ஆனா ஒருதடவ கீழ விழுந்ததால மறுபடி அந்த தப்ப பண்ணக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன்..உன்னை பார்க்கிற வரை..நீ வந்து என் கால்ல விழற வரை.."

"துறுதுறுன்னு இருந்த உன்னை பார்த்ததும் ஏதோ எனக்கு அவ்ளோ பிடிச்சது..உன் குழந்தைதனம்..உங்க மூனு பேரோட குறும்பு.. பிரண்ட்ஷிப் எல்லாமே..நா தள்ளி நிக்கணும் நினைச்சும் விடல...உள்ள மொத்தமா இழுத்து போட்டுட்ட.."

"அந்த பிரச்சனைக்கப்புறம் என் அப்பாகிட்ட நா கூட்டிட்டு போய்.. இதுதான் என் வைப்னு காட்டுற பொண்ணு..அவ முழு மனசா என்னை ஏத்திருக்கான்னு ஒரு ப்ரூப்போட கொண்டு போய் உன்னை நிக்க வைக்கத்தான் அந்த மோதிரத்த குடுத்தேன்..ஆனா.. அதுவே இப்படி உன்னை..."

மேலே பேசப்போனவன் கையை எதுவோ சுரண்டியதில்.. அனிச்சையாய் நிமிர..விழித்திருந்த அபியை பார்த்து பேச்சிழந்து போனான்..தொடர்ந்து அவள் கேட்ட கேள்வியில் சித்தமும் இழந்து போனான்..

"
ஆங்..என்னடி கேட்ட?.."

"இல்ல..கோவா போனேன் சொன்னியே அங்க மேட்டர முடிச்சுட்டியான்னு கேட்டேன்..ஏன்னா சம்முதான் பையனும் பொண்ணும் சேர்ந்து போனா மேட்டர் முடிஞ்சிடும் சொல்லுவா…"

அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு…அதுவரை வலியில் வந்த கண்ணீர்..அவள் குணமாகி விழித்ததிலும்..பின் கேட்ட கேள்வியின் குழந்தைதனத்திலும் இப்போது சந்தோஷமாகவே வர சத்தமாகவே சிரித்தான்..

"
உனக்கு கோவம் வரல.."

"இல்ல."

"இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண போனேன்னு…"

"ம்ஹூம்..அது கனவு...நீ நிஜம்.."
அவள் பதிலில் அதுவரை இழுத்து பிடித்த மூச்சை மொத்தமாய் விட்டது போல் அப்படி ஒரு ஆசுவாசம் அவனுக்குள்..


"ஆனா நா ரொம்ப பயந்தேன்..உன்னை பார்த்த நாள்ள இருந்து இதுக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா.."

ஒன்றும் சொல்லாமல் சிரிக்க..

"
நா சின்ன பையனா இருக்கும்போது தப்பு செஞ்சா..எங்கம்மாவும் உன்னை மாதிரிதான் திட்டாம சிரிக்கும்..இப்ப நீயும் அதே மாதிரி அழகா சிரிக்குற..அப்ப நீயும் எனக்கொரு அம்மாதான… மன்னிச்சிருடி..இனி நா எந்த தப்பும்..எப்பவும் பண்ணமாட்டேன்.."

அவளிடம் எல்லா உண்மையும் சொன்ன களிப்பில் இருந்தவன்…முக்கியமான இருவரை‌ மறந்து போனான்..
_______________________________________

 

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
அந்த முக்கியமான இருவருமான பவியும் விச்சுவும் அங்கு கொலைவெறியில் சம்மு முன்னால் நின்றிருந்தனர்..

"அவ திடீர்னு கார்ல எறி அந்த மாறன்கூடப் போனா..நீங்க இரண்டு பேரும் வந்து ஏன் என்னை கொய்ஸ்டீன் பண்றீங்க.. எனக்கு புரியவேயில்ல.."

நின்ற நிலையில் தனக்கு எதுவும் தெரியாதென சாதிப்பவளிடமிருந்து அபியை பற்றி எப்படி கேட்க..தண்ணி காட்டினாள் இருவருக்கும்..

"அப்படில்லாம் எங்க அபி..எங்களுக்கு தெரியாம போயிருக்க மாட்டா..நீதான் ஏதோ பண்ணிருப்ப..."

"என்ன..என்ன பண்ணிட்டா என்‌ பொண்ணு..நாங்களே நாளை மறுநாள் அவளுக்கு வச்ச நிச்சயம் நின்னுப்போயிடுமோன்னு பயத்துல இருக்கோம்.."

சேலையை இழுத்து சொருகியபடி வள்ளி சடைக்க..அடுத்த அதிர்ச்சி
இருவருக்கும்..

"நிச்சயமா..யாருக்கு.."

"ஏன் அபிக்குதான்..என் பொண்ணுக்கு பிரச்சனை இல்ல.. குடும்பம்னு நாங்க எல்லாம் இருக்கோம்.. எப்படி இருந்தாலும் மாப்பிள்ள கிடைக்கும்..ஆனா உங்ககூட சேர்ந்து ஆம்பிள மாதிரி ஊர் சுத்தறாளே அவளுக்கு யாரு வருவா..தோ இவருதான் வந்து ஆசயா கேட்டாரு..அதான் சரின்னு சொல்லிட்டோம்.."

"நா சொல்லல.."பவி ஜாடை காட்ட விச்சு புரிந்து கொண்டான். வந்திலிருந்து ரத்தினம் வாயே திறக்காமல் இருக்க.. இருவருக்குமே வெறுத்து போனது..

வள்ளி கைகாட்டிய திசையில் இருந்தவன்..ஆள் பார்க்க ஒன்றும் களையில்லை..வெகு சுமார்தான்.
வாணியும் சம்முவும் அவனுக்கு எதிரிலிருக்க …பார்வையாலேயே அவர்களை துகிலுரித்தவன்.. வள்ளியையும் கொஞ்ச நேரம் பார்த்து வைத்து..பின் அங்கிருந்த போஸ்டரிலிருந்த பெண்களிடம் பார்வையை கொண்டு வைத்து கொண்டான்.

"அதுசரி..டேய் இவனுக்கு அபில்லாம் வேண்டாம்..எதுனா ஒரு லேம்ப் போஸ்ட்டுக்கு சேலை கட்டிவிட்டாலே போதும்.. கடைசிவரை கண்கலங்காம வச்சு காப்பாத்துவான்..எனக்கு முழு நம்பிக்கையிருக்கு.."விச்சு சொல்ல..

"டேய் என்னடா பிரச்சனை பண்றீங்களா??.."

"யாரு நாங்களா?.."

"ஆமா நீங்கதான்..கல்யாணத்த நிறுத்ததான நீங்க இரண்டுபேரும் இப்படில்லாம் பண்றீங்க.. புரியுதுடா.."

"ஹெஹேய்…என்ன மேடம் அப்ப நிச்சயம்..இப்ப கல்யாணமா..எங்க நாங்க எதுவுமே பண்ணல..ஆனா இந்த கல்யாணம்..ஸாரி நிச்சயத்த பண்ணிக்காட்டுங்க பார்க்கலாம்.."
சம்முவின் முகத்திற்கு நேராய்...பவி கைகட்டி நின்று கேட்ட தோரணையே...அடித்து சொன்னது ஆனதை பார்த்துக் கொள் என..

"இப்ப சொல்றேன்..அபி வருவா..நானே அவள கூட்டிட்டு வர்றேன்..நீங்க அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணுங்க..வந்து அவளும் பண்ணுவா.."

"ஆமா..ஏய் சம்மு..நீ அடிக்கும்போது அடி வாங்குற அபியத்தான தெரியும்..இப்பிடி இப்பிடி நகத்த‌வச்சு மூஞ்சுல பிராண்டுற அபிய உனக்கு தெரியாதுல்ல..அது எங்களுக்குதான் தெரியும்..மூஞ்சு பத்திரம்டியோவ்.."
விச்சு அப்போதும் நக்கலடித்தான்..

"வர்றேன்..போய் அவள கூட்டிட்டு போனவன முதல்ல செஞ்சிட்டு அப்புறம் உங்கிட்ட வர்றேன் வாடா போலாம்.."

வெறி வந்தவன் போல் அபியை தேடி அலைந்தவன்..ஷங்கரை பிடித்து உலுக்க…அவன் சொன்னதை வைத்து அபிக்கு நடந்ததை தெரிந்து கொண்டாலும்…கோவம் மொத்தமும் மாறன் மேல்தான் திரும்பியது..

வேகவேகமாய் காரெடுத்து அவர்கள் ஹாஸ்பிடல் போக… டிஸ்சார்ஜ் செய்து தூக்கத்திலிருந்த அபியை எப்போதும் போல் கையில் தூக்கி வந்து கொண்டிருந்த மாறனை கண்டதும்..முகம் சூடாகிப்போக…கொத்தாய் பிடித்து உலுக்கிவிட்டான் பவி..

"உன்னை பார்க்கற வரை எங்க கைக்குள்ள இருந்தவரை..இவ சந்தோஷமாத்தான் இருந்தா..எப்ப உன்பக்கமா ஒரு எட்டு எடுத்து வைக்க நினைச்சாலோ..தோ எப்படி வந்து கிடக்குறான்னு பாரு..அந்த சம்முவும் வாணியும் உன்னாலதான இவள இப்படி செஞ்சிருக்காங்க.. வேண்டாம்.. உன்னால.. உனக்காக.. யாரு எப்ப இவள என்ன பண்ணுவாங்கன்னு எங்களால பயந்துட்டே இருக்க முடியாது…எங்க லைப்ல இப்படி ஒருத்தன் எப்பவும் வேண்டாம்…நீ போய்டு மாறா..இவள விட்டு..எங்கள விட்டு தயவுசெஞ்சு போயிடு.."

பேசும்போதே…அபியை வலிக்காமல் கரம் மாற்றியவன்... ஒரு முறைப்புடன் போய் காரில் அபியை ஒரு குழந்தை போல் கிடத்த..விச்சுவிற்குதான் மாறனை பார்த்து பாவமாயிருந்தது..

"ஸாரி சார்..ஸாரி‌...ரொம்ப ரொம்ப ஸாரி..இவன் எப்பவும் அம்பிதான்..ஆனா எங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா இப்படித்தான் அந்நியனா மாறிடுவான்..அதுவும் அபின்னா அந்நியன் ஸ்கொயரா மாறிடுவான்..சோ நீங்க எதுவும் நினைக்காதீங்க ப்ளீஸ்…ப்ளீஸ்‌.."
அவசரமாய் சொல்லி போய் காரில் ஏறிக்கொள்ள…

"விளையாட்டு பையன்னு நினைச்சவன் விவரமா பேசிட்டு போறான்…விவரமானவன்னு நினைச்சவன்...என் பொம்மைய திருப்பி குடுன்னு புடுங்கற குழந்தை மாதிரி அபிய பிடுங்கிட்டு போறான்..இப்ப நா என்ன பண்றதுன்னே தெரியலயே.."

அவர்கள் சென்ற திசையையே வெகுநேரம் பார்த்திருந்தவன்…பத்து வருடங்களுக்கு பிறகு..தன் அப்பாவை கட்டிக்கொண்டு அப்படி அழுதான்..

"அவ போய்ட்டாப்பா..வரமா வந்தவ என் லைஃப்ப சாபமாக்கிட்டு என்னை விட்டு போய்ட்டாப்பா…"


மழை வரும்…
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அடிபட்டு நல்லபடியா தெளிஞ்சு வந்திருக்கான் மாறன் 😍

ஓ.. ஊட்டி டிரிப்புக்கான காரணம் இதோ வெளில வந்திருச்சே 😢

எப்படியும் மூணு வானரங்களுமே இதை நடத்த விடாதுங்க ஆனா மாறனுக்கு தெரிஞ்சதும் என்ன பண்ணுவனோ 🧐

ரொம்ப வருஷம் கழிச்சு அப்பாவோட தோள் சாஞ்சு அழுவுற பையனை அப்பாவும் அப்படியே விடப் போறதில்ல 🤩

சம்முக்கு கும்மு கன்ஃபார்ம் 🤣🤣
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
70
50
18
Tamilnadu
I like their friendship ❤ so cute love ❤ rendu paerukum feel good epi ❤ mass hero nu naynacha ippadi kolanthai maadiri irukay