• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை-8

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
அபியை தூக்கி குடுத்துவிட்டு உள்ளமெல்லாம் வலிக்க.. நொந்து போயிருந்த நெடுமாறனோ..எதிரில் ஒரு ஆவி வந்தால்கூட கட்டிபிடித்து கதறும் நிலையிலிருந்தான்... ஆனால் ஆவிக்கு பதிலாய் அவன் தகப்பனே இருக்க.. முழுமூச்சாய் கட்டிபிடித்து அழவும்...இளமாறனுக்குதான் அங்கமெல்லாம் பதறியது..

பத்து நீண்ட வருடங்கள்...தான் தொலைத்திருந்த மகன்...தன்னிடமே வந்து சேர்ந்ததில் ஆறுதல் என்றாலும்..அது இப்படியா வரவேண்டுமென உள்ளம் வலித்தது..

"அழாதடா கண்ணா...ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல.."

அதிகம் பேசாமல் முதுகை மட்டும் தட்டி குடுத்திருக்க..அவர் வார்த்தையோ..குரலோ... கொஞ்சம் கொஞ்சமாய் நெடுமாறனை அமைதியாக்கியது..

நேரம் கழிய சுற்றம் உணர்ந்து...ஒரு வெட்கச் சிரிப்புடன் தள்ளிப் போனவன்..
"ஸாரிப்பா..சின்ன புள்ள மாதிரி அழுதுட்டேன்..." சங்கடமாய் சிரித்தவனை மறுபடி இழுத்து அணைத்து கொண்டார்..

கொஞ்ச நேரம் அணைப்பில் வைத்து ஆசுவாசப்படுத்தி.. நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டவருக்கு..அவர்கள் மூவரின்மேல் அவ்வளவு ஆச்சரியம் என்றால்..எதுவும் சொல்லாமல் விட்டுக்குடுத்து வந்து நிற்கும் மகன்மேல் கொள்ளை கோபம்..

அன்று பார்ட்டியில் வைத்து அபியிடம் இளகி நின்றிருந்த மகனின் முகம்..மூவரின் அட்டகாசத்தில் கலகலவென்றிருந்த மனைவியின் சிரிப்பு.. எல்லாமே அவரையுமே அந்த சின்ன பெண்ணிடம் சரணடைய செய்திருக்க...அழும் குழந்தைக்கு சாக்லேட் குடுத்து சமாதானம் செய்வதைபோல்... அபியை குடுத்து வந்த இந்த நல்லவனை என்ன செய்வதென தெரியாமல் முழித்தார்..

"நீ ஏன்‌ அந்த பொண்ண விட்டுக்குடுத்த அதி??..எனக்கு புரியல.."

"விட்டுக்குடுக்காம??..வேற என்ன பண்ண சொல்றீங்க... அவனுங்க உலகமே அவதான்..அவள பிடுங்கி வச்சு..அவனுங்கள உயிரோட கொல்ல சொல்றீங்களா.."
நியாயமாய் கேள்வி‌ கேட்டவனை முறைத்தவர்..

"அதி...நீ ரொம்ப யோசிக்குற..தே ஆர் பிரண்ட்ஸ்.. அப்படித்தான் இப்ப இருப்பாங்க...ஆனா எப்பவும் அப்படியே இருக்கமுடியுமா .."

ஒரு நீண்ட பெருமூச்சு நெடுமாறனிடம்..

"இல்லப்பா..உங்களுக்கு புரியல.. நமக்கு சின்னதா அடிபட்டாலோ இல்ல கீழ விழுந்தாலோ நம்ம என்ன சொல்லுவோம் சொல்லுங்க... அம்மான்னுதான...ஆனா அவ அப்பக்கூட பவி விச்சுன்னுதான் சொல்லுவா...அவளோட அம்மா ஸ்தானத்துல வச்சுருக்கா அவனுங்கள... அவனுங்களும் அவள அப்படி தாங்குறானுங்க... இதுல நடுவுல போன நான் என்ன உரிமைல அபிய எடுத்துக்க முடியும்..அது தப்பில்லையாப்பா.."

"ஓஹ்..காட்..அப்ப அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்காதா.."

கோவமாய் கேட்டவரிடம் பதில் சொல்லுமுன்..அன்று பார்ட்டியில் வைத்து அவள் குடுத்த முத்தமும்..தொடர்ந்து தன்னை பிடிக்குமென சொன்னதும் ஞாபகம் வர..முகமெல்லாம் சிவந்துவிட்டது மாறனுக்கு..அப்படியே மயக்கத்தில்‌ வந்தது பதில்..

"ம்ம்ம்..பிடிக்கும்பா..அவளுக்கும் என்னை பிடிக்கும்..என்னை மட்டும்தான் பிடிக்கும்.."

இப்போது இளமாறன் நேரடியாகவே நெடுமாறனை முறைத்தார்..

"ஓஹ்..அப்ப அந்த பொண்ண போய் கூட்டிட்டு வா போ..மத்தத நா பார்த்துக்கறேன்.."

"இல்லப்பா..நா மாட்டேன்.." உறுதியாய் மறுத்து விட்டான்..

"அதான் ஏன்...உன்னை விரும்பற பொண்ண ஏன் நீ தெரிஞ்சும் விட்டுக்குடுக்கற.."
அபியின் குழந்தைமுகத்தை மனதார கண்ணுக்குள் கொண்டு வந்தவன்... அழுத்தமாய் முகத்தை மூடிக்கொண்டான்...

"ஏன்னா..நா கூப்பிட்டு அவளும் வந்துட்டா...கோவத்துல இவனுங்களும் தள்ளி போய்ட்டா...அவ தாங்க மாட்டாப்பா.. மொத்தமா உடைஞ்சிடுவா...என்னை விட..என் காதலவிட..என் அபிய உயிரோடயும்... உயிர்ப்பாவும் வச்சுக்க அவனுங்கனால மட்டும்தான் முடியும்...அதான் தெரிஞ்சே குடுத்துட்டு வந்துட்டேன்.. விட்டுடுங்கப்பா.."

"இப்ப நீ முடிவா என்ன சொல்ற.."

அதுவரை தலைகுனிந்து நின்றவன்...சில நொடிகளில் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து....

"நா கூப்பிட்டா அவ வருவா..அது என் காதல் மேல நா வச்சிருக்கற நம்பிக்கை... ஆனா நா கூப்பிட மாட்டேன்..இது அவங்க பிரண்ட்ஷிப்கு நா குடுக்கற மரியாதை.. வரட்டும்பா..அவனுங்களே என்கிட்ட.. எனக்காகன்னு வரட்டும்... அதுவரைக்கும் நா வெயிட் பண்ணுறேன்... பண்ணுவேன்.."

நெடுமாறனின் வார்த்தையில் இளமாறனுக்கு அப்படி ஒரு சிரிப்பு..

"என்னடா..எல்லாத்தையும் மூனு பேருக்கும் சேர்த்து மொத்தமா சொல்ற...விட்டா மூனு பேரு கழுத்திலயும் தாலி கட்டிடுவ போல.."

தந்தையின் வார்த்தையில் எதையோ‌ நினைத்து சிரித்தவன்..

"உங்களுக்கு தெரியாதுல்லப்பா.. அபிக்கு முன்னாடி இவனுங்கதான் என்னை அப்படி சைட் அடிச்சானுங்க...எப்ப பார்த்தாலும் சொல்லி வச்ச மாதிரி...மூனு லூசுங்களும் ஒரேமாதிரி குறுகுறுன்னுதான் பார்ப்பானுங்க.. ஒருவேள தாலி கட்டறேன்னு சொன்னாகூட சந்தோஷம்தான் படுங்க பக்கிங்க..ஆனா தாலி எல்லாம் கண்டிப்பா என் அபிக்கு மட்டும்தான்.. இவனுங்களுக்கு மச்சான் முறைக்கு வேணா ஏதாவது செயின் போட்டு விட்டுக்கறேன்.."

தந்தையிடம் பகிர்ந்ததில் சற்றே மனபாரம் குறைய.. சொன்னவன் அதை கனவிலும் காணப் போய்விட... அங்கொருத்தியோ தூக்கமின்றி அழுது கரைந்தாள்..
_______________________________________
"கொஞ்சமாவது இது சாப்பிடு அபி..மாத்திர போடணுமில்ல...ப்ளீஸ்மா.."

எவ்வளவு கெஞ்சியும் வாயை திறக்காமல்..இறுக்கமாய் மூடியிருந்தவள் மேல் அப்படி ஒரு கோவம் விச்சுவிற்கு..

அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து கண்விழித்த அபி முதலில் கேட்டது அவளது நெடுமரத்தைதான்..

"அவன் போய்ட்டான் அபி...நா போக சொல்லிட்டேன்..." என பவி சொன்னதும் ஒரு "ஓஹ்.." என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்து கொண்டவள்...அதன்பின் எதுவும் சாப்பிடவேயில்லை.. கையிலிருந்த மோதிரத்தை வைத்தபடியே அழுது கரைய விச்சுவிற்கு பாவமாய் இருந்தது... பவிக்கு கோபமாய் வந்தது..

இருந்தால் ஏதாவது திட்டிவிடுவோமோ என பயந்தே..பவி வெளியில் சுற்றிவிட்டு வர..அவள்‌ அப்போதும் அப்படியே இருப்பதை பார்த்து..நீண்ட பெருமூச்சுடன் அவர்களிடம் போனான்..

"டேய் இவ சாப்பிடவே இல்ல இவ்ளோ நேரமா.."
விச்சு திட்ட...எதுவும் பேசாமல் பவி‌ கை நீட்ட..அதில் தட்டை வைத்தவன்..

"இரு நீ இன்னைக்கு நீ முடிஞ்ச.." விச்சு விரலை ஆட்ட..அவனை முறைத்தவளிடம்...எதுவும் பேசாமல் உணவை மட்டும் ஊட்டிய பவியையே விடாது பார்த்தவள்...ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் வாய் திறந்தாள்..

"அடிப்..ப்பாவி..இவ்ளோ நேரமா காட்டு கத்து கத்தி..அந்த கெஞ்சு கெஞ்சினேன்..வாயே தொறக்கல..இப்ப இவன் வந்ததும் எவ்ளோ நல்லபிள்ளையாட்ட வாய தொறக்குற...டேய் இவள நம்பாதடா..இவ இந்த லைலா மாதிரி..இப்படி இப்படி சிரிச்சு நம்மள‌ ஏமாத்திடுவா.."

விச்சு சொன்னதும் பவியிடமிருந்த தட்டை வாங்கி விச்சுவிடம் குடுத்து வாயை திறந்து காட்ட... முறைத்தாலும் மறுக்காமல் ஊட்டிவிட்டான்..

"அப்படில்லாம் நம்ம அபி நம்மள ஏமாத்தமாட்டா..இல்ல அபிமா.."

பவி வார்த்தையில் விச்சுவின் கை ஊட்டுவதை சட்டென நிறுத்த...அபியுமே ஒரு நொடி நின்று பின் அவளே கையை பிடித்து ஊட்ட வைத்தாள்.. விச்சுவிற்குதான் பாவமாய் இருந்தது அபியை பார்க்க..

இங்கு வந்தது முதல்..புதிதாய் விரலில் முளைத்திருந்த அந்த மோதிரத்தையே தடவிக் கொண்டிருந்தவள்..விடாமல் அழுவதும்...ஏதாவது கேட்டால் கையில் கிடைப்பதை தூக்கி‌ உடைத்து..மறுபடி அழுவதும்... சாப்பிடாமல் ஒரே இடத்தையே வெறிக்க வெறிக்க பார்ப்பதுமென விதவிதமாய் வித்தியாசமாய் பயமுறுத்தினாள்...இறுதியில் பவியே பொறுமையை இழுத்து வைத்து அன்பாய் பேசி..அவன் வேண்டாமென்றால்...இல்லை அவன் மட்டும்தான் வேண்டுமென குழந்தை போல் அடம் பிடித்தாள்... எல்லோரையும் வைத்து செய்யும் பவியையும் விச்சுவையுமே ஓரே நாளில் தலையால் தண்ணி குடிக்க வைத்திருந்தாள் அபி..

"டேய் பாவம்டா..ஏண்டா.."

"நீ மூடு...இங்க பாரு அபிமா..நீ முதல்ல அவன சைட் அடிக்கறேன்... அவன் அழகா இருக்கான்னு சொல்லும் போதெல்லாம் எப்பவும் போல சொல்ற உன்னோட கிரஷ் லிஸ்ட்ல புதுசா ஒருத்தன சேர்த்திருக்கன்னு நானும் விட்டுட்டேன்..ஆனா இந்த லவ் எல்லாம் வேணாம்டா.. அதுல்லாம் ரொம்ப பெய்ன்...பார்த்தியா அவன லவ் பண்றேன்னு சொல்லி இரண்டே நாள்ள எப்படி அழுதிட்டு இருக்க...இதுவரை எங்ககூட இருந்தவரை ஒருநாளாவது அழுதிருப்பியா.. நாம எப்பவும் சிரிச்சுட்டுதானடா இருப்போம்.. அதுனால இந்த லவ் எல்லாம் வேணாம்..அதுவும் அந்த நெடுமரம் உனக்கு வேணவே வேணாம்... ஓகேவா...நீ நா சொன்னா கேட்டுப்பதான??.."

குழந்தையிடம் சொல்வது போல் பொறுமையாய் சொன்னவனின் கையை பிடித்து கொண்டவள்...

"நீ என்ன சொன்னாலும் கேட்டுப்பேன் பவி...ஏன்னா உன்னை அவ்ளோ பிடிக்கும்.. ஆனா அவன்கிட்டயும் அவன பிடிக்கும் சொல்லிட்டேனே..."

"இது எப்ப?..."
பவியும் விச்சுவும் பார்த்துக்கொள்ள..

"அன்னைக்கு..பார்ட்டில..அங்க வச்சு.."

"அது ஏண்டி லூசே அப்படி சொல்லி தொலைச்ச..."
விச்சு இப்போது நன்றாகவே தலையில் கொட்டினான்..

"ஏன்னா‌ எனக்கு அவன நிஜமாவே பிடிக்குமே.."

"சுத்தம்...மறுபடி முதல்ல இருந்தா.. டேய் நேத்துல இருந்து நீயும் டிசைன் டிசைனா அவள கரைக்க பார்க்குற... வேலைக்காகல..நீ ஒவ்வொரு தடவ சொல்லும்போதும்... அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு.. எம்பொண்டாட்டி வந்து என்னை உசுப்புனான்னு ரோபோசங்கர் சொல்ற மாதிரியே..ஒரே மாடுலேஷன்ல ஆரம்பிக்குறாடா.. பேசாம இந்த படத்துலலாம் வர்ற மாதிரி சோத்துல விசத்த வச்சுட்டுரு.. அப்பவாது ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்.."

"அடங்குடா டேய்..அபிமா இங்க பாரு..இந்த லவ் எல்லாம் வேண்டாம்டா... அது பண்ணா தோ இங்க.. இங்கல்லாம் வலிக்கும்..." இதயத்தையும் தலையையும் தொட்டு காட்டியவன்.."அதுனால அது வேண்டாம்..ஓகேவா..அந்த மாறன் எப்பவும் போல உன்னோட க்ரஷ்..வெறும் க்ரஷ் அவளோதான்.. அவன அப்பிடியே விட்டுடலாம்.. என்னடா ஓகேவா?.."

"ஆனா இப்பவே இங்கெல்லாம் வலிக்குதே பவி...'
இதயத்தை நீவியபடி சொன்னவளை பார்த்து மாறன்மேல் அப்படி ஒரு கோவம் பவிக்கு..

"என் குழந்தபுள்ள மனச எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு..அவன.."
பல்லைக் கடித்து கொண்டான்.

"இங்க பாரு..அபிமா..அதுல்லாம் கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்..அப்புறம் சரியாய்டும்...அது எல்லாமே எங்ககூட இருந்தா மறந்துரும்..நீயே மறந்துருவ.."

"இல்லை..மறக்கமாட்டேன்.."என்பதை போல் இருபக்கமும் தலையாட்ட..

"நா அடிக்கடி சொன்னா உனக்கு பிடிக்குமே..நீதான் என் அம்மா...நா சொன்னா நீ கேட்டுப்ப..கரெக்டா.."


ஆம்..என்பதுபோல் தலையசைத்தவள்..

"சொன்னா கேட்டுப்பேன்..ஆனா அவனும் இதேதான் சொன்னான் பவி.."

"என்னன்னு??."

"நா அவனோட இன்னொரு அம்மான்னு.."

"உறுதியான..நம்பகமான.. நிலையான..ஆண்டாண்டு காலம் தொடரும் நம்பிக்கையான மாறன் சிமெண்ட்டுல...அஸ்திவாரத்த நல்லா பலமா..அந்த நெடுமரம் போட்டுட்டான் மச்சான்..

சொன்ன விச்சுவின் முகத்திற்கு நேராக பறந்து வந்த டம்ளர் நூலிழையில் தள்ளி போனது..

"சாவடி அடிச்சுடுவேன்டா பரதேசி..எதையுமே சீரியஸாவே பேசமாட்டியாடா.."

பவி சொன்னதும் கோவமாய் எழுந்தவன்..

"இப்ப என்னடா நா சீரியஸா பேசல..இப்ப என்னடா உங்க பஞ்சாயத்து...அபி யாரோட அம்மான்னா..ஏய் அபி பேசாம நீ அந்த மாறனுக்கே அம்மாவா இருந்துக்க..உன் கல்யாணம் கேன்சல்.. டேய் பவி இன்னைல இருந்து அபி உனக்கு அம்மா இல்ல ஆயா..சரியாடா..சீரியஸா பேசிட்டேனா..போங்கடா எல்லாம் போய் அடுத்த ‌ஷிப்டுக்கு கன்டெண்ட் புடிச்சு அழுங்க போங்க.."

"நீ இருடி..இங்க பேசிட்டு அங்க வர்றேன்.."

பவியின் தலையசைப்பில் சுதாரித்து கொண்டவன்..."வாய நல்லா தொறடி..இந்தா இப்படித்தான்..." மறுபடி ஊட்ட போய்விட்டான்..

விச்சுவையே கொஞ்ச நேரம் குறுகுறுவென பவி பார்த்து வைக்க..விச்சு பயந்து போனான்..

"அய்யோ இவன் ஏன் இப்படி ரொமான்டிக்கா பார்க்குறான்னு தெரியலயே..இங்க என்னடா லுக்கு..அங்க பாரு.."முகத்தை பிடித்து அபியிடம் திருப்பினான்...

"ஏன் அபிமா..இப்ப நம்ம விச்சுவே யாரையாவது லவ் பண்றான்னு வச்சுக்க... உன்னால அவன இன்னொரு பொண்ணு கூட சேர்த்து வச்சு பார்க்க முடியுமா.."

"ம்ஹூம் கண்டிப்பா முடியாது.."
தலையை அந்த ஆட்டு ஆட்டி வெட்டினாள்...

"அப்ப நீ‌ என்ன பண்ணுவ சொல்லு.."

"அஞ்சு ரூவா காச வெட்டிபோட்டு..அந்த பொண்ணு காலடி மண்ணெடுத்து...ஜண்டா மந்திரம் சொல்லி...இரண்டு பேரையும் பிரிச்சு வுட்டுடுவேன்.. ம்ம்..டேய் விச்சு கண்டிப்பாடா... நா பண்ணுவேன்.."

"பார்த்தியா...கேவலம் இந்த ஓணா பய விச்சுவையே உன்னால வேற‌ ஒரு பொண்ணோட சேர்த்து வச்சு பார்க்க முடியலயே...அந்த மாறன பத்தி ..இப்பவே எத்தனை பொண்ணுங்ககூட சேர்த்து வச்சு எழுதிட்டு இருக்காங்க தெரியுமா.. அதுல்லாம் நேர்ல பார்த்தா நீ தாங்குவியாமா.. அதான் சொல்றேன்..அவன் வேண்டாம்டா..."

சொன்னவன் நாடகத்தில் வருவது போல் அபியை கட்டி அழ..அபியும் சேர்ந்து அழ..விச்சென்ற ஜூவனோ நெஞ்சை பிடித்து பாஸிங்கில் போய் வந்தான்..

"அடடேய்....இந்த குந்தாணிக்கு சொல்லிக்காட்ட உனக்கு நாந்தான் கிடைச்சேனா..ஏண்டா டேய்.. கற்பனைல கூட எனக்கு பிகர செட் பண்ணி விடமாட்டிங்களாடா...அவ என்னமோ ஜண்டா மந்திரங்குறா..நீ என்னமோ ஓணாங்குற...இருங்கடா வர்றேன்.."

வந்த கோவத்தில் பவியை போட்டு பிரட்டி எடுத்துவிட்டான்.. உருண்டு பிரண்டு சண்டையிட்டவர்கள்.. மேல்மூச்சு வாங்க...பிரிந்து உட்கார்ந்து முறைத்து கொண்டார்கள்..

"பார்த்தியா..அதான் சொல்றேன்.. அவன் வேண்டாம்டா..சரியா.."
பவி மூச்சிரைத்தபடி சொல்ல..

"ஆனா அது எல்லாமே அவனே என்கிட்ட சொன்னானே...ஏன் அவன் எக்ஸ் பத்தி கூட சொன்னானே.."

"இது எப்போ?.."

பவி கேட்டதும் அபி சொல்லவர..விச்சு நடுவில் வந்தான்..

"ஸ்டாப்.. அன்னைக்கு பார்ட்டில அங்க வச்சு சொன்னானே..... இதான சொல்ல‌ வந்த..."

"இல்லடா விச்சு.."

"பின்ன.."

"அன்னைக்கு நா ஹாஸ்பிடல்ல தூங்கிட்டு இருந்தேன்ல..அப்ப.."

அபி அன்று மாறன் சொன்னதை முழுதாய் சொல்லவும் பவிக்கு சட்டென மூளையில் பல்ப் எரிந்தது..

"பார்த்தியாடா விச்சு..தூங்கிட்டு இருந்த ஒரு குழந்தைப் புள்ளக்கிட்ட போய் கண்ட கதைய சொல்லி எப்படி ஏமாத்திருக்கான்னு பாரு.."

"இல்ல.பவி.." அபி இழுக்க...

"என்ன இல்ல பவி..."

"நாந்தான் தூங்கவேயில்லையே...அவன் கதை சொல்லும்போதே முழிச்சுட்டேனே...."

"ஏ அபி..நீ எதயுமே முழுசா உருப்படியா பண்ணவே மாட்டியா.." விச்சு வந்து கனனத்தில் இடித்தான்..

"அய்யோ‌ இதுக்கு சட்டுன்னு சொல்ல..பாயிண்டு எதுவும் கிடைக்க மாட்டேங்குதே.."
பவி முழிக்கவும்..

"இரு இரு..இப்ப பாரு ஐயாவோட திறமைய.."விச்சு சொல்லி அபியிடம் திரும்பியவன்..அவள் தாடையை பிடித்து..

"பார்த்தியா அபி..நல்லா தூங்கிட்டு இருந்த குழந்த புள்ளய...மொக்க கதையா சொல்லி எழுப்பி விட்டுட்டிருக்கான்.. இதுக்காகவே அவன கட்டிக்காத..இல்லேன்னா நாளைக்கு நீ அசந்து தூங்கும்போது எழுப்பி..இதே மாதிரி காண்டா கதை சொல்லுவான்.. உன்னை தூங்க விட மாட்டான்.. அதுனால அவன்‌ உனக்கு வேண்டாம்.. எப்படிடா...ரவுண்ட கரெக்டா சுத்தி விட்டு..எப்படி லாஸ்ட்டா பாயிண்ட்டுல வந்து நின்னேன் பார்த்தியா..."

இந்தமுறை தப்பாமல் டம்ளர் விச்சு தலையில் வந்து விழுந்தது..

"அய்யோம்மா..ஏண்டா.."

"டேய் விச்சு..உனக்கு தெரியுமா தெரியாதா...நம்ம பிராபிட்ல அபி கல்யாணத்துக்குன்னு தனியா எடுத்து வச்சிட்டு இருக்கறது.."

விச்சு தெரியுமென தலையாட்டினான்..ஆம் அவனுக்கு நன்றாய் தெரியுமே.. சொல்லப்போனால் அதற்காக ஆரம்பித்ததுதான் அவர்களது ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில்..

ஆரம்பத்தில் அபி..அபியென சுற்றிய இருவரையும்..அவர்கள் வீட்டில் சொல்லி சொல்லி பார்த்து..திருத்த முடியாமல்.. இருந்த இடத்திலிருந்தே.. "அப்படியே அவளோடயே போயிருங்கடா.."என தண்ணி தெளித்து விட்டார்கள்..
இருவர் வீடுமே நல்ல வசதியென்றாலும்...நாளை அபிக்காக யாரிடமும் கையந்தியோ...கைகட்டியோ காசிற்காக நிற்க கூடாதென நினைத்த பவியின் எண்ணத்தில் உதித்ததுதான் அவர்களது தொழில்....

அபிக்கு இருந்த சொத்திற்கு இவ்வளவு மெனக்கெடல் தேவையில்லைதான்..
ஆனால் நிச்சயம் அபியின் பெற்றோரென யாரும் வந்து அவள் திருமணத்தை ‌எடுத்து நடத்த போவதில்லை..அது தாங்கள்தான் செய்யவேண்டும் எனும்போது..அவள் காசை‌ எடுத்தே‌ அவளுக்கு செய்ய இவர்களுக்கு மனதில்லை... அதனாலேயே வருமானத்திற்காய் ஆரம்பித்து.. நன்றாய் போனதில் இப்போது சில லட்சங்களை சேர்த்தும் விட்டனர்..இது எல்லாமே விச்சு மட்டுமே அறிந்த ரகசியம்..

"ம்ம்..நல்லா தெரியும்டா...நா தாய்லாந்து டூர் போக கேட்டப்ப கூட..போடா பேப்பயலேன்னு பாசமா திட்டிட்டு போய் அவ அக்கவுண்டுல ஒன்றரை லட்சம் என்னை கட்டிட்டு வர சொன்னியே...அத எப்படிடா நா மறப்பேன்.."

"பார்த்தியாடா அபி ..உன் கல்யாணத்துக்கு எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணி வச்சிருக்கோம்...நீ ஓக்கேன்னு சொல்லு..நாளைக்கே எவனாவது ஒரு ஃபாரின் மாப்ளயா கூட்டிட்டு வர்றேன்... நீயும் அங்க போய்ட்டா.. நாங்களும் பின்னாடியே வந்துருவோம்...என்னடா விச்சு.."

"வேற வழி..வரலேன்னா நீ விடவா போற...போய் தொலைவோம்.."

"பார்த்தியா..நாம பேசாம அப்படி போய்டலாம்..இங்க இருக்கவே வேண்டாம்..என்னடா ஓகேவா.."

அபிக்கு பவி விச்சுவின் தவிப்பில் அழுகையாய் வந்தது..தனக்காக எதுவும் செய்யும் அவர்களின் அன்பிற்கு முன் தான் ஒன்றுமேயில்லாதவள் போல் உணர்ந்தாள்..ஆனாலும் உயிருக்குள் உறைந்து போனவனை எப்படி எடுத்து வெளியில் போடுவாள்... கண்ணை மூடும் பொழுதெல்லாம்.."விட்டுட்டு போய்டுவியாடி குள்ளச்சி.."இந்த குரலே தவிப்புடன் கேட்க.. ஏற்கனவே உள்ளுக்குள் உடைந்து போயிருப்பவளால்... வாய் வார்தையாய் கூட சரியென சொல்ல முடியாமல் அழுது கரைந்தாள்..

"டேய்...பாவம்டா..இவ ஏன் இவ்ளோ அழணும்..இப்ப என்ன..அந்த மாறன பார்த்தா உனக்கு என்ன தப்பா தோணுது...சும்மா ஏதாவது யோசிச்சு..நீயும் குழம்பி அவளயும் ஏண்டா இப்படி கதற விடுற.. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு நீ அவள வாங்கிட்டு வரும்போது அவன் எப்படி தவிச்சு போய் பார்த்தான் தெரியுமா...பாவமா இருந்துச்சுடா.."
அரிதினும் அரிதாக விச்சு சற்று உணர்ச்சிவசப்பட்டு பேச...பவிக்குமே அது தெரியுமே..

உண்மையில் பவிக்குமே மாறனை அவ்வளவு பிடிக்கும்...என்ன செய்தாலும் தங்களை யாரிடமும் மாட்டிவிடாதது..எப்படி பேசினாலும் கோவப்படாதது.. மூவரின் அலும்பலையும்..ஒரு குழந்தை செய்யும் தவறை...பார்த்து ரசிக்கும் அன்னை போல் சின்ன சிரிப்புடன் கடந்து போவதென... தங்கள் மூவரையுமே நெடுமாறன் என்னும் ஒருவன் அதிகமாய் கவர்ந்திருக்கிறான் எனும் உண்மையை மனதார ஒத்து கொண்டான்...ஆனால் அந்த நிஜம் அபியை மட்டும் குறிவைத்து தாக்கியதும்.. அதனால் அபி‌ சந்தித்த பிரச்சனைகளும் பவி மனதில் மாறனை சற்று தள்ளி நிறுத்தி வைக்க...இவனுமே அதை ஏற்று கொண்டான்..ஆனால் அதை செயல்படுத்தும்போதுதான் உள்ளுக்குள் அவ்வளவு வலி...

"உனக்குமாடா என்னை புரியல...எனக்கும் அந்த நெடுமரத்த அவ்ளோ பிடிக்கும்டா..ஆனா அவன் பணமும்.. அதிகாரமும்...அவன் பின்னாடி சுத்தற பொண்ணுங்களும்... இதெல்லாம் பார்த்துதான் எனக்கு பயம்..ஏண்டா நீயே சொல்லு...அன்னைக்கு அந்த நெடுமரம் இவள உத்து பார்த்தான்னு கேவலம் அந்த சம்மு இவள அந்த கும்மு கும்முனா..நம்மனால ஏதாவது பண்ண முடிஞ்சுதா...நாளைக்கு வேற யாராவது வந்து நேத்து மாதிரி..இவள ஹர்ட் பண்ணா.. ஒவ்வொருத்தர்கிட்டயும் போய் சண்டை பிடிக்க முடியுமா..
இல்ல அவன் இருக்கற அந்தஸ்துக்கு அவன்கிட்ட போய் நியாயம் கேட்க முடியுமா... வேணாம்டா...ஏழைக்கேத்த எள்ளுருண்டை..என் அபிக்கேத்த ஒரு ஃபாரின் மாப்ள..அது போதும்... இன்னைக்கு இவ அழுதாலும்... நாளைக்கு சிரிச்சுடுவா..நா சிரிக்க வைப்பேன்.."
பவி அவ்வளவு உறுதியாய் சொன்னான்.

"இல்ல எனக்கு புரியல..நீ ஏன் எப்ப பார்த்தாலும் அவன் யார் பின்னாடியாவது போய்டுவான்...இல்ல அவன் பின்னாடி யாராவது வருவாங்க இப்படியே சொல்லிட்டு இருக்க...ஏண்டா எதுக்கு அப்படி சொல்லுற..பர்ஸ்ட் இப்ப நீ அதுக்கான ரீசன சொல்லு..என்ன பார்க்குற சொல்லுடா..."

"ப்ச்..விடுடா என்னைய.."

"இல்ல நீ சொல்லு...அப்படி என்ன உனக்கொரு நம்பிக்க..சொல்லுடா.."

"அடங்குடா விச்சு.."

"இன்னைக்கு சொல்லாம உன்னை விடமாட்டேன்.."

"ஆஹ்...இப்ப என்னடா..ஏன் சொல்ற.. ஏன் சொல்றனன்னா... அவன் அவளோ அழகா இருக்கான்...அதான் சொல்றேன்...போதுமா..."

"ஆஆஆஆ..ங்ங்ங்..."

விச்சுவோடு அபியுமே சேர்ந்து வாயை பிளந்திருக்க...பார்த்த பவிக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது..

"என்னடா..என்ன...என்னமோ புதுசா கேக்குற மாதிரி முழிக்குற...நீயும்தான சொல்லிட்டே இருப்ப..அவன் ரொம்ப அழகா இருக்கான்னு.. ஏன் முதல் தடவ நம்மளே வாய பொளந்துட்டுதான பார்த்தோம் அவன..அதெல்லாம் சேர்த்து யோசிக்கும்போதுதான் எனக்கிந்த டவுட்டு..."

"இல்ல இப்ப எனக்கென்னமோ உன்மேலதான் டவுட்...அவன் யார் பின்னாடியோ போய்ருவான்னு வேணாங்கறியா...இல்...ல்ல....நீ ஏதாவது...."

குறுகுறுவென பார்த்த வைத்த விச்சுவின் பார்வையின் அர்த்தம் சற்று தாமதாகத்தான் புரிந்தது பவிக்கு..

"அடடேய்...கடைசில என்னை என்னன்னுடா நினைச்ச நீ...மவனே நீ இன்னைக்கு செத்தடா.."

பவிக்கு தப்பி ஓடிய விச்சுவை துரத்தி போனவன்..திரும்பி வந்து..

"அதுனால அந்த மாறன் நமக்கு வேண்டாம் அபிமா சரியா... எள்ளுருண்டை ஃபாரின் மாப்ளயே போதும்.."

அப்படி சொன்ன பவியே.. எனக்கு அந்த ஃபாரின் எள்ளுருண்டை வேண்டாம்... உள்ளூர் கடலை மிட்டாய் மாறனே போதுமென சொல்லியிருந்தான்...சொல்ல வைத்திருந்தான் மாறன்...

நாளை இடியுடன் மழை வரும்..
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அடப்பாவிங்களா ஒரு குழந்த புள்ளைய எவ்ளோ அழ வைக்கிறீங்க
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இவனுங்களோட 🤣🤣🤣🤣 ஷப்பா முடியலடா 🤣🤣

இடி சம்மு குரூப்புக்கு 🤣🤣 மழையில ரொமான்ஸ் இவங்களுக்கு 🤣🤣
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆத்தி ஆத்தி அபியக்கூட சீக்கிரம் லவ் பண்ண வச்சுட்டான் நெடுமரம் ஆனால் இந்த பவி பையன சரிக்கட்ட முடியாதா 😄😄😄😄😄😄😄😄😄நெடுமாறன் அழகா இருக்காணும் சொல்லிக்கிறான் பவி 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
70
50
18
Tamilnadu
Maran nice character ❤ avangaloda friendship ay romba nalla purunchukitanla appadaiay 3 paerum saythu he is ready to accept ❣️❣️ avan antha wall la 3 paerukum saythu heart draw pannathay romba nalla irunthuchu ❣️❣️ pavi abi vishayathula too caring and romba bayapaduran nice guy 😁😁 intha vichu sema da nee 🤣🤣🤣 ivanga friendship paatha pora nai ya iruku ❣️❣️ final punch super 🤣