• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை-9

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
14
54
18
Tamil nadu
தனித்திருந்த அபிக்கு அந்த அறையின்...அமைதியைகூட உணரமுடியாமல் உள்ளுக்குள் பெரும்புயல் வீசிக் கொண்டிருந்தது.

"ம்ம்மா..." கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்...

கண்களை‌ மூடினால் மாறன் முகமே கலங்கி போய் வர...அவசரமாய் விழிகளை திறந்து கொண்டாள்..

"மா..நா என்னம்மா பண்ணட்டும்..உள்ளுக்குள்ள உயிரா நினைக்கறவன என்னால விடவும் முடியல.. என்மேல உயிர வச்சிருக்கறவங்கள விட்டுக் குடுக்கவும் முடியல...இப்ப நா என்னம்மா பண்றது..ரொம்ப வலிக்குதுமா.."

கண்களை மூடி...உடலை குறுக்கி படுத்தவள் அழுகையில் கரைந்தாள்..

வெளியில் விச்சுவை துரத்தி ஓடிய பவி...நெருங்கி அவன் தோளை தொட்டு திருப்பிய நிமிடம் ஓங்கி பளாரென அறைந்திருந்தான் விச்சு..

"டேய் விச்...ச்சு.."

பவிக்கு விச்சு அடித்ததை விட...பழகிய நாள்முதல் சுற்றியுள்ள அனைவரிடமும் சிரித்து... சிரிக்கவைக்கும் முகம் இன்று கோவத்தில் வந்த கண்ணீரை சுண்டிவிட்டு சிவந்து நிற்க...விச்சுவை கண்டு பேரதிர்ச்சி..‌

"என்ன..என்னடா விச்சு..ஆமா நாந்தான் அடிச்சேன்.....உள்ள இருக்கறவ இதுக்கு மேல அழுகறத பார்க்க பிடிக்காமத்தான் உள்ள ஏதேதோ பேசி வச்சேன்..ஆனா நிஜமா அவ்ளோ வலிக்குதுடா அவ அழுகுறது பார்த்து.. எனக்கே அப்படின்னா...உனக்கு கஷ்டமா இல்ல.."

"டேய் நா அவ நல்லதுக்குதான்.."

"போடாங்க..அபிக்கு நல்லது நல்லதுன்னு சொல்லி...அவள இப்படியே அழுக வச்சு.. மொத்தமா அவ மனச கொன்னுட்டு...நீ எவனயோ ஒருத்தன மாப்பிள்ளன்னு கொண்டு வருவ..அவளும் கட்டிப்பா.. இவ்ளோதான் உனக்கு அபிய தெரியுமாடா... அவ விளையாட்டு புள்ளதான்.. ஆனா காதல கூட அவ விளையாட்டா எடுத்துப்பான்னு எப்படி நீ நினைச்ச......வந்ததுல இருந்து அவ கைல இருக்கற அந்த மோதிரத்த பார்த்து பார்த்து அழுகுறது.. அவனுக்காக நம்மளயே எதிர்த்து சண்டை போடுறது... இதுல இருந்தே உனக்கு தெரியல...அவன்மேல அவ எவ்ளோ உயிரா இருக்கான்னு.."

எதற்குமே கலங்காத விச்சுவே அவர்கள் காதலுக்காக கொடிபிடிக்க..பவிக்கு உள்ளுக்குள் எதுவோ தடம் புரண்ட உணர்வு அந்த நொடியில்...

"குடுத்துடேன்டா..அவ கேக்காதத கூட வாங்கி குடுப்பேல்ல..இப்ப அவ ஆசைப்பட்டு கேக்குற அவன குடுத்துடேன்...நம்ம அபிக்காகடா..உண்மையிலேயே அந்த நெடுமரம் நல்லவன்தாண்டா..நம்ம எவ்ளோ அவன கிண்டல் பண்ணிருப்போம்.. எவ்ளோ மென்டல் டார்ச்சர் குடுத்திருப்போம்..எப்பவாது நம்மள யார்கிட்டயாவது விட்டுகுடுத்தோ.. போட்டுகுடுத்தோ இருக்கானா..ஏன் அன்னைக்கு சம்மு அடிக்க வந்தப்பகூட... என்னை அடிச்சதுல நீ அவனுக்கு வந்த கோவத்த பார்த்த.. நான் அவனுக்கு அபிமேல இருந்த அக்கறைய பார்த்தேன்.. நம்புடா..அவன் நிஜமாவே நல்லவன்தாண்டா.."

அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் சம்முவிடமிருந்து இருவருக்குமே ஒரே நேரத்தில் மேஸேஜ் வந்தது...எடுத்து பார்க்க..

"காலை பத்துமணிக்கு நிச்சயம்.."

வந்த தகவலில் விச்சு பல்லை கடிக்க...பவியோ

"நாங்க நிச்சயம் வருவோம்.."

பவி அனுப்பிய பதிலை பார்த்து வந்த கோவத்தில் விச்சு போனை வாங்கி தூக்கிப்போட..பவியோ சிரித்து கொண்டான்..

"டேய் ஏண்டா...அதுல்லாம் நடக்காதுடா...அவளே ஒரு காமெடி பீஸூடா..."

"போடா..ஏதாவது சொல்லிடப்போறேன்...அவகிட்ட அன்னைக்கு எவ்ளோ நம்பிக்கையா சொல்லிட்டு வந்த...அபி வந்து நிச்சயத்த நிறுத்துவான்னு...அது மாதிரி அபியோட மாறன்கிட்டயும் ஒரு நிஜம் இருக்கும்னு ஏண்டா உனக்கு நம்பிக்கை வரமாட்டேங்குது..."

புரிந்து கொள்ளேன் எனும் தவிப்புடன் பேசுபவனிடம்... சட்டென ஒன்றும் சொல்ல முடியாமல் உள்ளே போக..அபியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்த நெடுமாறனை பார்த்ததும் மூச்சை இழுத்து பிடித்தான் அதிர்ச்சியில்..பின்னால் வந்த விச்சுவும் பார்த்து அருகில் போக...இழுத்து பிடித்து மறைவில் நிறுத்தியவனுக்கு.. சற்று தள்ளி ஷங்கர் நின்றிருக்க...அவன் எப்படி வந்திருப்பான் என புரிந்து போனது...

"டேய் நெடுமரம்டா.."

"ஷ்ஷ்...பேசாம அமைதியா இரு.."

அங்கு அபியோ மாறன் வந்ததிலிருந்து தலைகுனிந்து நெடுமரம்..நெடுமரம் என்றே அழுது கரைய...தொட்டு துடைக்க கூட முடியாமல் கை முஷ்டியை இறுக்கி கொண்டான்..

"அழாதடி குள்ளச்சி...நா உனக்கு உடம்பு நல்லாயிடுச்சான்னு பார்க்கத்தான் வந்தேன்...நா வரும்போது யாரும் வெளில இல்ல..பயப்படாத..அழாத கண்டிப்பா போய்டுவேன்.. அழாத.."

"நெடுமரம்...ப்ளீஸ்..."

"என்ன விட்டுட்டு போன்னு சொல்றியா.."

இல்லை என்பதுபோல் தலையாட்ட..

"போகாதன்னு சொல்றியா.."

அதற்கும் இல்லையென தலையாட்டினாள்.

"என்னை உயிரோட கொல்றியா.."

சட்டென நிமிர்ந்து அவன் விழியினில் வலையை வீசி தேடியவள்...ஒரு முடிவுடன் முகத்தை அழுத்தி துடைத்து கொண்டாள்..

"ஏன் நெடுமரம்..நீ அன்னைக்கு எனக்கு ஒரு கதை சொன்னேல்ல..இன்னைக்கு நா உனக்கு ஒரு கதை சொல்லட்டா..."

அவளின் தவிப்பில்...சொல்லு என்பதுபோல் தலை தன்னால் ஆடியது மாறனுக்கு..

"ம்ஹ்..உனக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்ல..எங்கம்மா என் அப்பாவோட செகண்ட் வைப்னு..நா சின்ன பொண்ணா இருக்கும் போது எனக்கு விவரம் தெரியும் முன்னாடியே..என்னை எல்லாருமே ஏதேதோ சொல்லி கிண்டல் பண்ணுவாங்க.. அப்பல்லாம் ரொம்ப அழுவேன்..அப்புறம் அம்மா திடீர்னு செத்து...அப்பா வந்து தனியா இருந்து படிக்க சொன்னாரு...அப்ப அம்மா போனது அப்பா சொன்னது எல்லாம் சேர்ந்து பயத்துல அழுவேன்...ஏன் அப்படி சொல்லணும்..நான் பாவம்தான.."

"ஆமாடா..என் அபி எப்பவும் பாவம்தான்..."சொன்னவன் அவள் கண்ணாடியை‌ ஒருமுறை கழற்றி துடைத்து... மறுபடி மாட்டிவிட்டான்...அவன் செய்ததில் நெகிழ துவங்கிய மனதை இழுத்து பிடித்து பேசினாள் பெண்..

"அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு..சம்மு வீட்டுக்கு போனேன்..அங்க அந்த வள்ளிமா..என்னை பார்த்து பார்த்து திட்டும்போதெல்லாம் அவ்ளோ கஷ்டமா இருக்கும்.. அப்புறம் அந்த சம்மு என்னை அவ்ளோ அடிப்பா..அடி தாங்க முடியாம விட்டுட சொல்லிகூட அழுதிருக்கேன்..கடைசியா இரண்டு நாள் தொடர்ந்து சாப்பாடு குடுக்காம வேணும்னே பட்டினி போட்டாங்க..அப்பதான் பசி தாங்க முடியாம இவங்ககிட்ட போய் ஏதாவது ஒரு ஆஷ்ரமத்துல சேர்த்து விட சொல்லி கேட்டு அழுதேன்.. ஆனா நெடுமரம் அதுக்கப்புறம் நா எதுக்குமே எப்பவுமே அழல..ஏன்னா இவங்க என்னை அழ விட்டதேயில்லை... ஏதாவது பண்ணி என்னை சிரிக்க வைக்கத்தான் பார்ப்பானுங்க.. தோ கொஞ்ச நேரம் முன்னாடி கூட அப்படித்தான் விச்சு பண்ணான்.."

"அவ கண்டுபிடிச்சுட்டா என்னை.."
விச்சு நினைத்து கொண்டான்..

"உனக்கு தெரியுமா..அந்த வீட்டுக்கு போன புதுசுல.. அம்மாவ நினைச்சு அப்படி அழுவேன்..ஏம்மா விட்டு போனேன்னு கேட்டு மனசுக்குள்ள சண்டையெல்லாம் போட்டிருக்கேன்..அப்புறமா இவனுங்கள பார்த்தப்புறம் நினைச்சுப்பேன்...எங்கம்மா மேலபோயி எனக்காக சாமிகிட்ட சண்டை போட்டு..ஒன்னுக்கு இரண்டு பேரா..பவியையும் விச்சுவையும் அனுப்பி வச்சிருக்காங்க நினைச்சுப்பேன்...அவனுங்க அவ்ளோ முக்கியம் எனக்கு.."
சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்க்க..

தெரியும் என்பது போல் தலையாட்டினான்..

"இப்ப அந்த இரண்டு பேரும்..என்கிட்ட ஆளுக்கு ஒரு விஷயம் கேட்குறாங்க... விச்சுக்கு நா எப்பவும் சிரிக்கணும்....பவிக்கு நா உன்னை மறக்கணும்...ஆனா இதுல இரண்டுமே என்னால பண்ண முடியலயே...ஏன்னா உள்ளுக்குள்ள உன்னை நினைச்சிட்டு...வெளில என்னால நடிக்க முடியலயே..

முடியவில்லை என்பது போல் கையை விரித்து காட்ட..அங்கு பார்த்திருந்த பவிக்கும் விச்சுவிற்கும் கண்ணை நீர் மறைத்து கொண்டது..

"அதுனால பவி சொன்ன மாதிரி நீ போய்டு நெடுமரம்...எங்க லைஃப்ப விட்டு நீ போய்டு.. உனக்கு தெரியுமா..எனக்காக பவி ஃபாரின் மாப்ள பார்க்குறானாம்..கண்டிப்பா நா கட்டிக்க மாட்டேன்...அது அவனுக்கும் நல்லா தெரியும்.."

இதை சொல்லும்போது பவியை விச்சு பார்க்க.."ஆம் தெரியும்.." என்பதுபோல் தலையாட்டினான்..

கொஞ்ச நேரம் முன்பு பவி சொன்னதை நினைத்து சிரித்தவள்..

"அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நெடுமரம்...ஆனா பவிக்கு பயம்..உன் பணம்.. பதவி இதெல்லாம் பார்த்து அவனுக்கு பயம்..எங்க இதுனால நீ என்னை விட்டுட்டு போய்டுவேன்னு பயம்.. ஏன்னா எங்கம்மாவயும் என் அப்பா அப்படி விட்டு போய்ட்டாருதான...அதான் அப்படி எதுவும் எனக்கு ஆகிடக் கூடாதேன்னு பயம்.."

அதுவரை எங்கோ பார்த்து பேசியவள் இப்போது மாறனின் கண்ணை நேராய் பார்த்து வைத்தாள்..

"ஆனா அவனுக்கு நா எப்படி சொல்லி புரியவைப்பேன்... என்னை ஆசயா பார்க்குற இந்த கண்ணுல..என்னை குள்ளச்சின்னு கூப்பிடுற உன்னோட குரல்ல..அப்பப்ப பாசமா தலையை தடவி குடுக்கற உன்னோட விரல்ல.. என்கூடவே இருந்திருன்னு சொல்ற உன்னோட தவிப்புல எதுலயுமே பொய்யில்ல...அது உண்மைன்னு என்னால எப்படி அவனுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்...அது தானா உணர்ற விஷயமில்லையா..நா உணர்ந்துட்டேன்..ஆனா அவனுக்கு அது தெரிய நாளாகும்..அது வரைக்கும்..."

"கண்டிப்பா உன்னை வந்து பார்க்க மாட்டேன்..."

சட்டென வந்து விழுந்த மாறனின் குரலில் அபியின் இதழில் ஒரு விரக்தி சிரிப்பு..அங்கு பவிக்கு அப்படி ஒரு தவிப்பு...

"கடைசியா எனக்காக ஒன்னே ஒன்னு செய்வியா நெடுமரம்.."

"இன்னும் என்னடி..."

"இப்பல்ல...எப்பவும்..எந்த காரணத்துக்காகவும்..எந்த சூழ்நிலைலயும் இவங்கள விட்டு வந்திடுன்னு என்னை கூப்பிடக்கூடாது..எப்பவும் கூப்பிடக்கூடாது...சரியா... ஏன்னா.."

மேலே சொல்ல வந்தவள் வாயை அடைத்தவன்..

"தெரியும்..நா கூப்பிட்டா..நீ வந்துருவ..."

அவளை அவ்வளவு புரிந்து வைத்திருப்பவனின் காதல் மிகுதியில்..அவன் கைகளில் அவளின் கண்ணீர்தடம்..

"நா போயிடுறேண்டி..நீ அழாத..உன்னை எப்பவும் இவனுங்கள விட்டு வான்னு நா கூப்பிட மாட்டேன்..அழாதடி குள்ளச்சி.."

"உனக்கு அவனுங்க மேல எதுவும் கோவமில்லயா.."

"ம்ஹூம்...எதுக்கு கோவம்..நா தப்பு பண்ணும்போதெல்லாம் என்னை அவ்ளோ நம்புன என் அப்பா...அதுக்கப்புறம் என்னை எப்பவும் நம்பல..நா மறுபடி ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயம்.. பெத்த அப்பாவே இப்ப வரை என்னை நம்பல..அப்புறம் இவனுங்க எப்படி நம்புவாங்க சொல்லு..எனக்கு புரியுது... ஆனா நீ நம்புறல்ல.."

"ம்ம்ம்ம்...சத்தியமா.."தலையை மேலும் கீழும் ஆட்டியவள் தலையை முட்டிக்கொண்டான்...

"அதுபோதும்...இனி என் லைஃப் புல்லா இது ஒன்ன வச்சுட்டே... நீங்க கிறுக்கன அந்த சுவத்த பார்த்துட்டே நா இருந்துப்பேன்... நீ என்னை நினைச்சு கவலைப்படாம..எனக்காக நா கேட்கிறத செய்வியா.."

"ம்ம்ம்.."

"எனக்கு என் அபி..பழையபடி மாறணும்.."

"நா எப்படி...என்னால.."

"ப்ப்ச்...எனக்காக செய்யணும் சொன்னேன்ல.."

"ம்ம்ம் சொல்லு.."

"நீ எப்பவும் போல காலேஜ் போகணும்...

"ம்ம்ம்.."

"நல்லா ஆறு நேரம் சாப்பிடணும்.."

"ம்ம்ம்.."

"அப்புறம் ஆங்..எப்பவும்‌ போல டிராயிங் பண்ணனும்..அத மட்டும் விட்டுடாத என்ன.."

சரி என்பதாய் அழுகையுடன் சிரித்தாள்..

"அவனுங்கள நல்லா இன்னும் டார்ச்சர் பண்ணிட்டே இருக்கணும்..அப்பதான் பசங்க நீ நார்மலா இருக்கேன்னு நம்புவாங்க.. இல்லேன்னா எங்கயாவது பேய் புடிச்சுடுச்சுன்னு பயந்து போய் மந்திரிக்க கூட்டிட்டு போய்டுவானுங்க சரியா.."

"ம்ம்ம்.."இப்போது சிரித்தாள்..

"ம்ம்..இப்படித்தான் எப்பவும் சிரிக்கணும்..நீ சொன்ன மாதிரி அபி அழுததெல்லாம் போதும்..இனி அழுகவே கூடாது..உனக்கு வலிய குடுத்த நானே அத திருப்பி என்னோட எனக்காக எடுத்துட்டு போய்டறேன்...சரியா.."

இப்போது முகம் கசங்கி போய் பார்க்க..

"இப்படி பார்க்காதடி..அப்புறம் என்னால போக முடியாது..."

சரி என்பதாய் அவசரமாய் முகத்தை மூடி அழுந்த துடைத்தவள்..மறுபடி பார்க்கும்போது மூக்கு நுனி.. கன்னமெல்லாம் சிவந்து.. அழுகையிலும் அவ்வளவு அழகாய் இருந்தாள்..அன்று அபி குடுத்த இதழ் ஒற்றல் போல் லேசாய் இதழை ஒற்றி எடுத்தவன்..அவள் கண்மூடியிருக்க.... அவளை பார்த்தபடியே...எழுந்து திரும்பி நடந்தான்..

"டேய்...இவ்ளோ நடந்தத பார்த்த பிறகுமாடா நீ இப்படி கல்லு மாதிரி நிக்குற...ஏதாவது பேசுடா..."விச்சு பிடித்து உலுக்கிய சட்டையை உதறிவிட்டு பவி‌போன வேகம் என்பது அசாதாரணம்... இரண்டே எட்டில் அறைக்குள் நுழைந்து விட்டான்..

சட்டென எதிரில் பவியை பார்த்ததும் உடனே திரும்பி..அபியை பார்க்க..அவளோ பவி எதுவும் திட்டி விடுவானோ என பயத்தில் இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள்..

"பயப்படாதே..." ஒருமுறை கண்ணை மூடி திறந்து பார்வையால் தைரியம் சொன்னவன்..நேராய் பவியை நிமிர்ந்து பார்த்தான்..

"பவி ப்ளீஸ்...அபிய திட்டாத..நாந்தான் அவள பார்க்குற ஆசைல ஏதோ அவசரப்பட்டு வந்துட்டேன்..நா போயிடுறேன்...அபிகிட்ட கூட அதான் சொல்லிட்டு இருந்தேன்..இல்ல அபி.."

"ம்ம்ம்.."அவள் அங்கு ஆம் என்பது போல் பாவமாய் தலையாட்ட..

"பத்திரமா பார்த்துக்கங்க.. அவள திட்டாதீங்க சரியா.."

சொன்னவன் மீண்டும் அபியை ஒருமுறை திரும்பி பார்த்து அவளை பார்வையால் நிரப்பி...கிளம்பறேன் என்பது போல் தலையாட்ட..அவளும் அங்கு தலையாட்டினாள் இவனைப்போலவே பார்த்து கொண்டு..

இருவரின் தவிப்பையும் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பவி..

"அவ எங்க அபி..நாங்க பார்த்துக்குவோம்..வேற ‌யாரும்..புரிஞ்சுதா..புதுசா வந்து யாரும் எங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்ல.."

"டேய்.."

"பவி ப்ளீஸ்.."

விச்சு அபி இருவருமே ஒன்றுபோல் குரல் கொடுக்க..இருவரையும் ஒரு பார்வையால் அடக்கியவன்.. மாறனை பார்க்க..முயன்று சிரித்தவன்..

"ஆமா அவ உங்க அபிதான்...நான் எதுக்கு சொல்லணும்...நீ சொன்னது கரெக்ட்தான்.."

வலியை ஒரு சிரிப்பில் அடக்கி..சிறு தலையசைப்போடு நகர்ந்தவன் கையை பவி எட்டி பிடித்து நிறுத்தினான்.

"இப்பக்கூட இவ உன் அபின்னு சொல்ல மாட்டல்ல.."

"ம்ம்ஹூம்..மாட்டேன்.."என தலையசைத்தவனை பார்த்து விச்சு பேச்சிழந்து நிற்க..

"அப்ப இவ உனக்கு யாரோவா... சொன்னா விட்டுட்டு போய்டுவியா..நாளைக்கு இதே மாதிரி யாராவது ஏதாவது அபிய சொன்னா அப்ப என்ன பண்ணுவ..அப்பவும் விட்டுட்டு போய்டுவியா.."

"பவி ப்ளீஸ் விடு..அவரு போகட்டும்.."

அபி அங்கு அப்படி அழுதாள்.

"நீ சும்மாயிரு அபிமா..சொல்லு மாறா..போய்டுவியா.."

வாளென வார்த்தையை வீசுபவனை என்ன சொல்லி புரிய வைக்க..மாறனுக்கு மலைப்பாய் இருந்தது..

"டேய் நா எப்படிடா போவேன்...அவள என் உயிருக்கும் மேலன்னு..அப்படி வச்சுருக்கேன்.. வேற யாருக்காகவோ என் உயிர நானே தூக்கி போடுவேனா..இல்ல அபி சொன்ன அந்த குப்பை ‌கதைக்காக நா அவள விட்டு குடுப்பேனா.."

"அப்புறம் இப்ப மட்டும் ‌ஏன் விட்டு போற..சொல்லு.."

"பவி பீளீஸ் விடு.."அபிதான் அப்படி கத்தினாள்...

"ப்ச்..நீ சொல்லு மாறா.."

கேட்டவனை நேராய் திரும்பி பார்த்தவன்..
"ஏன்னா..என் அபிக்காக என்னை விட அதிகமா துடிக்கற இந்த இரண்டு பைத்தியங்களுக்காக.. உனக்கு..அவனுக்கு..தோ அவளுக்கு...உங்க நட்புக்காக.. என் காதல...உங்க அபிய விட்டு குடுக்கறேன்...வேற எதுக்காகவும்...
எவ்..வ்வனுக்காகவும் இல்ல..சரியா..."

ஒவ்வொரு வார்த்தையாய் உணர்ந்து சொன்னவனை...

"ஸாரி நெடுமரம்.."

சொன்ன அடுத்த நிமிடம் பவி இறுக்கி அணைத்திருந்தான்... பவியை பார்த்து விச்சுவும் வேகமாய் ஓடிவந்து கட்டிக்கொள்ள... ஆளுக்கொரு புறமிருந்து மாறனை அணைத்ததில்.. மாறனுக்கு அவர்கள் பாரம் தாங்க முடியாமல் இரண்டடி நகர்ந்து..பின் அவர்கள்‌ அணைப்பை ‌உணர்ந்து..என்னவென புரியாமல் பயந்து போனான்..

"டேய் என்னடா.. என்னாச்சு.. இப்ப எதுக்கு அழறீங்க.டேய் என்னாச்சுடா...டேய் விச்சு எதுனா சொல்லுங்கடா..." எவ்வளவு தள்ளி விட்டும் மீண்டும் மீண்டும் அவனையே கட்டிக் கொள்ள... மாறனுக்கு சட்டென எதுவும் புரியாமல் குழம்பி போனான்...

"உங்கிட்ட இருந்து அபிய தள்ளி வைக்கணும்னு நான் நினைச்சேன்.ஆனா நீ எங்ககிட்ட இருந்து அபிய பிரிக்க கூடாதுன்னு எங்களுக்காக யோசிச்ச பார்த்தியா...உண்மையிலேயே உன் மனசும் உசரம்தான் நெடுமரம்..."

சொல்லி சொல்லி கட்டிக்கொண்டு பவி அப்படி அழ...அவனை எவ்வளவு தள்ளிவிட்டும் முடியாமல் போய் கடைசியில் மாறனும் ஒரு சிரிப்போடு சேர்த்து கட்டிக்கொண்டான் இருவரையும்..

வழியும் கண்ணீரோடு.. இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போய் நின்றிருந்த அபியை...புருவம் தூக்கி‌ பார்த்தவன்..

"லவ்‌யூடி குள்ளச்சி..."

முதல்முறையாய் வாய் வார்த்தையில் ஆசை ஆசையாய் சொன்னான்...

காட்சி இங்கு அப்படியே முடிய...அடுத்தநாள் நிச்சய வீட்டில் அபி முழு அலங்காரத்தில் உக்கிரமாய் மேல்மூச்சு வாங்க நின்றிருக்க... சம்முவோ எதிரில் கோணிப்போய் நின்ற கன்னத்தை ஒருபக்கமாய் பிடித்தபடி சிலையென உறைந்திருந்தாள்...

காரணம் அபி சம்முவை அப்போதுதான் சுடச்சுட அறைந்திருந்தாள்...

மழை வரும்...
 
Last edited by a moderator:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
180
43
Tirupur
🤣🤣🤣 பவிச்சு நெடுமரத்தை லவ்விட்டானுங்க 🤣🤣 இனி மூணு வானரங்களும் மாறனை லவ்வோ லவ்வு தான் 🤣🤣

அபி அடிச்சு சம்மூ வாய் கோணிக்கிட்டது சந்தோஷம் தான் 🤣🤣

அபிக்கு பாத்தவனை இந்த சம்மூக்கு கட்டி வெச்சிடுங்கப்பா 🤣🤣
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
65
40
18
Tamilnadu
Too emotional epi ❣️❣️ I can feel their friendship and love oh my god too touching ❣️❣️ how understanding they are ❤ romba romba pudichuruku intha epi ❣️❣️ appadi podu abi 😍😍